திருமால் திருப்புகழ் (5)

 
கிரேசி மோகன்

ananthapadhmanaba
தத்தத் தனதத்தத் தனதன
தத்தத் தனதத்தத் தனதன
தத்தத் தனதத்தத் தனதன-தனதான….
———————————————————————————————————————
“பெற்றப் பிணிமுற்றப் பிணமென
பக்கத் தினில்சுற்றத் தினரழ
முற்றத் தினில்வைத்துக் கிரியைகள் -நிறைவேற
சத்தத் தொடுவொற்றைப் பறையெழ
பச்சைப் பனைமெத்தைத் துயிலுற
இட்டுச் செலும்பெற்றப் பயலுகள் -இடுகாடு
சிற்றப் பனகத்துப் புறமதில்
இக்கட்டு டல்கட்டுக் கதையென
புத்திக் கறிவித்தக் கிரிவளர் -ரமணேசர்
உற்றச் சுகமுற்றுச் சரணுற
பக்திப் புனலிட்டுப் பயமற
வெட்டிச் சமநிட்டைப் பொருளினை -அருள்வாயே
ஒற்றைக் கரம்வெற்ப்புக் கடிதனில்
வைத்துச் சுரர்கொட்டுத் துயரதில்
திக்கற் றுழல்மக்கட் குடிமகிழ் -முகிலோனே
கற்றைக் குழல்பற்றித், துருபதை
துட்டர்க் கரம்பட்டுச் சபைதனில்
நிற்கத் திரைபட்டுப் புடவைகள் -இடுவோனே
உற்றக் கலிதப்பச் சரணுற
உத்ரத் தினிலுச்சிச் சபரியில்
பெற்றுப் பதினெட்டுப் படிதனில் -விளையாட
விட்டுச் செலும்பித்தர்க் கொருகணம்
இச்சைத் தருபத்னிப் பெருமையை
உற்றத் திருவுற்றத் திரள்புய -பெருமாளே”….
—————————————————————————

4 thoughts on “திருமால் திருப்புகழ் (5)

  1. “முத்தைத் தரு பத்தித் திருநகை ” பாடலின் மெட்டில் பாடலாமே.
    மிக்க நன்று, பாடல் அருமையாக எழுதப்பட்டுள்ளது, பாராட்டுகள் தங்களுக்கு.

  2. ஆதிமூலமே என்று அழைக்க  வாய் வராத வேளையிலும் அவனை நினைக்கவாவது மனம் வேண்டும்..  செம்மையான்  தமிழில் எளிமையாக அப்போதைக்கிப்போதே   சொல்லிவிட்டீர்கள். திரு மோஹன்.

  3. அருமை! ஒவ்வொரு சந்தமும் மிக அழகாகப் பொருந்தி வருகிறது. வாழ்த்துக்கள்.

Leave a Reply to Su.Ravi Cancel reply