Featuredஏனைய கவிஞர்கள்கவியரசு கண்ணதாசன்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு..

கவிஞர் காவிரி மைந்தன்

· பூந்தோட்டக் காவல்காரன் திரைப்படத்தில் கங்கை அமரன் இயற்றிய பாடலிது. வரிகள் எல்லாம் வசந்த விழா எடுத்து.. தாய்மையை வரவேற்கும் தலைவனையும் ..

· தாய்மையைச் சுமக்கும் தலைவியையும் திரையில் விஜயகாந்த் மற்றும் ராதிகா இவர்தம் பண்பட்ட நடிப்பில் பூத்த நந்தவனம் இந்தப் பாடல். செந்தில்நாதன் இயக்கத்தில்

· உருவான இப்படம் விஜயகாந்த் அவர்களுக்கு சிறந்த நடிகர் என்கிற பட்டத்தை வாங்கி தந்தது.

· கணவன் மனைவி தாம்பத்ய வாழ்வில் மிக முக்கிய கட்டமான தாய்மைப்பேறு நிலையில் இருவரின் அன்பு பரிமாற்றங்களை அழகாக அற்புதமாக படம் பிடித்து காட்டியமைக்காக இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

· கண்ணைக் கவரும் குளிர்ந்த காட்சிப்படுத்தியமைக்காக ராஜ ராஜனும் (ஒளிப்பதிவாளர் ) கவனத்திற்கு வருகிறார்.

· ஒவ்வொரு வரியிலும் உன்னத சொற்களைப் பயன்படுத்தி பாடலுக்கு உயிர் கொடுத்துள்ள கங்கை அமரன் .. எழுதிய பாடல்களிலேயே மிகவும் சிறப்பான பாடல் என்று இதனைச் சொல்லலாம்.

· இசை ஞானி என்று ஏன் அழைக்கிறோம் என்றால் .. இது தான் இசை.. இதுதான் இதயத்தை தொடும் இசை.. என்று இப்படம் முழுவதும் ஆறு பாடல்களிலும் ராஜாங்கம் நடத்தி இருக்கும் இளையராஜா இசையின் ராஜாவாகத் தெரிகிறார்.

· மொத்தத்தில் இந்தப் பாடல் என்றைக்கும் சுகம் தரும் ரகம் .. ராகம்.. இதை தனது காந்தர்வ குரலில் வழங்கியிருக்கும் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி.சுசீலா குரல்கள் ஒரு புதுவித அனுபவத்தை தருகின்றன என்றால் அது மிகையில்லை.

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண் என்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்.

அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்

இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கதில்
இன்பத்தை வர்ணிக்கும் என் உள்ளம் சொர்க்கத்தில்

மெல்லிய நூலிடை வாடியதேன்
மன்மத காவியம் மூடியதேன்
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பெனும்
கீர்த்தனை பாடியதேன்.

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

வீட்டுக்கும் நாட்டுக்கும் நாம் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே!
என் உயிர் தேசத்து காவலனே!

வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும்
மானிடம் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்…
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

படம்: பூந்தோட்ட காவல்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: யேசுதாஸ். சுசீலா

 

Sinthiya venmani from Poonthotha Kaavalkaran
Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  பூந்தோட்டக் காவல்காரன் திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களும் கங்கை அமரன் அவர்கள் எழுதியதுதான் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  அன்புடன்
  காவிரிமைந்தன்

 2. Avatar

  நீங்களாகட்டும்,நானாகட்டும்,காவிய வாலியாகட்டும் எல்லாரும் காவிரியில்
  நீந்தி கவிவரியில் சங்கமித்தவர்கள்…அந்த அனுபவம், பாடல் வரிகளின் சொற்களின் கருத்துகளின் கோர்வைகளை ஆளுமைகளை வைத்து இந்தக் குழந்தைக்கு 
  இவள் தான் தாய் என்பதை ஊகிக்க வைக்கும். அப்படி தான் இதுவும்.  கங்கை அமரனின் வரிகளுக்கும் தனி மகத்துவம் உண்டு .தவறாமல் தவறாக எழுதியிருக்கும் இணையத் தலங்களுக்கு சுட்டி காட்டுகிறேன். நன்றி. 

Leave a Reply to kavirimaindhan Cancel reply