கிரேசி மோகன்

 
தனந்த தானனத்த தனந்த தானனத்த
தனந்த தானனத்த-தனதான….

 

100_8808

 மாசி மகத் திருவிழா - குடந்தை மகாமகக் குளம்
மாசி மகத் திருவிழா – குடந்தை மகாமகக் குளம்

“அகந்தை வேரறுத்தவ் விழந்த வான்கிடைத்திங்

கும்பகோணம் தெப்ப உற்சவர்
கும்பகோணம் தெப்ப உற்சவர்

கிருந்த வாறிருக்க -ரமணேசர்
புகன்ற வாசகத்தை உணர்ந்து மாதவத்தை
நெருங்க ஞானவித்தை -அருள்வாயே
அகன்ற சாகரத்தில் அனந்தன் மேலிருக்கை
அமைந்த யோகநித்ரை, -வனமாலி
சுகந்தம் வீசலக்மி பதங்கள் மேவநித்ய
இனங்கள் சூரிநிற்க -பயில்வோனே
தகுந்த வாறளிப்பு ,சினந்த மாமனுக்கு
இகழ்ந்த பாலனுக்கு -முறைவாசல்,
தினங்கள் போயெமர்க்கை விழுந்து சாவதற்குள்
முகுந்த வாவகத்துள் -குடியேற
புகுந்த ஆழிவிட்டு பருந்து வாகனத்தில்
பறந்து வாயெனக்கு -துணையாக
உயர்ந்த கோபுரத்துள் கிடந்து வாழவைக்கும்
குடந்தை மாநிலத்து -பெருமாளே”

பின்-குறிப்பு… அல்ல அல்ல எனது பின்-கோட்-குறிப்பு ‘’குடந்தை’’ எனப்படும் கும்பகோணம்…. என் சொந்த ஊர்….

 

படங்களுக்கு நன்றி

http://enthamizh.blogspot.in/2013/03/blog-post_5203.html

http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2137&Cat=3

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *