-சேஷாத்ரி பாஸ்கர்

ஒரு சின்னப் பந்து
கருஞ்சிவப்பில்
சுற்றி வெள்ளை முகப்பூச்சு
பெண் பார்க்க செல்லும் பையன் போல்!

குவியலாகக் கிடக்கும்
நாம் நினைத்த இடத்தில்
பார்த்தோர் செல்வார் பத்து வருடம் பின்பு
சூரியன் போல் அனைவருக்கு பொது!

அது உள் இருக்கையில் வராது பேச்சு
சுரக்கும் அளவில்லாமல்
சுழற்றியபடி பந்தாடும், வாய்
உடைக்கத் துடிக்கும் மனம்!

தடுக்க நினைக்கும் மறு கணம்
மென்மை ஆக்கி நா உறிஞ்சும்
பொறுக்க மாட்டா(து) பல் கடிக்கும்
உடைந்திறங்கும் தேன் மிட்டாய்!

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “வாயுள் உலகம்!

  1. நன்று. இன்னும் பல கவிதைகளை எதிர்பார்க்கிறேன் 
    வி சீனுவாசன் 

  2. Seshadri Baskar,

    Are you our dear SISUBARAN?

    Are you a regular contributor in VALLAMAI?

    I see your writings in VALLAMAI group mail chains!

    Su.Ravi
    Pune

  3. அண்ணா , நான் தான் பாஸ்கர் என்கிற சிசுபரன் .திரு கே ரவி , மோகன் சார் மற்றும் நீங்கள் யாவரும் எழுதியதை படித்த வருகிறேன் .நீங்கள் வரைந்த பாபா படம் நன்கு பிரேம் செய்யப்பட்டு கவிதையுடன் உள்ளது .

Leave a Reply to SU.RAVI

Your email address will not be published. Required fields are marked *