பவள சங்கரி

10410743_284757875043571_8764516859868651313_n

ஆடிப்பூரத்தில் அங்கமெல்லாம் மின்னும் பொன்னாய்
 ஆடிப்பாடி வருகிறாள் மின்னிடையாள் ஆனந்தமாய்
கொஞ்சுதமிழும் பஞ்சு மெல்லடியும் பாந்தமாய்
பொருந்திவர நஞ்சுண்ட கண்டனின் நாயகியாய்
அபயமளிக்கும் நற்றுணை வேதமே அன்னையாய்
பட்டொளிவீசும் பரிமளமாய் பயத்தில் பக்கத்துணையாய்
நித்தமும் நின்னை நினைந்துருகும் வரமருள்வாய்
வாரணாம்பிகையே! வாயுதேவியே! வாகீசநாயகியே!
போற்றி போற்றி!! அன்னையே அகிலாண்டநாயகியே!!
அஞ்சேலெனும் மந்திரமருளும் மாதவச் செல்வியே!!
வணங்குகிறேன் நிதம் நின்னையே! எனதன்னையே!!

படத்திற்கு நன்றி

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஆடிப்பூர நாயகியே!

  1. அண்டமெல்லாம் காக்கின்ற அருள்சுரக்கும் நாயகியின் 
    பதம்பணிந்து தொழுவோர்க்கு வரமருளும் தாயவளே..
    ஆடிப்பூரத்தில் அலங்காரம் பூண்டிருக்கும் அன்னையின் 
    திருக்கோலம் காண்கையில் கோடியின்பம் கூடிடுமே!

    உள்ளமலரெடுத்து உணர்ந்து தாள் பணிந்தால் 
    நன்மைகள் நாளும் வரும்! நலமெலாம் சூழவரும்!
    மண்ணில் உயிர்க்கெல்லாம் மாதாவாய் விளங்குபவள்..
    மலரடி நாம்பற்றி பிறவிக் கரையேறுவோம்!

    காவிரிமைந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *