வணக்கம்,வாழிய நலம்

1.ஸர் ஐஸக் நியூட்டன் ( 1643-1727)

issac

வரலாற்றில் சொல்வோமே- “இன்னார் உலகத்தை ஒருகுடையின் கீழ் ஆண்டார்” என்று, அதுபோல விஞ்ஞானம் குறிப்பாக இயல்பியல் மற்றும் கணிதத் துறைகளில் தன்னிகரில்லாமல் கோலோச்சிய ஒரு சக்கரவர்த்தி உண்டென்றால் அது ஸர்.ஐஸக் ந்யூட்டன் மட்டுமே!

விழுகின்ற ஆப்பிள் தொடங்கி, வியனுலகெங்கிலும் வியாபித்த ஈர்ப்புவிசை, ஓளித்துகளின் இயல்பு ,’ கால்குலஸ் என்ற கணிதத் துறை, நிலை மற்றும் இயக்கத்திற்கான விதிகள் என ந்யூட்டனின் காலடிச் சுவடுகள் பதியாத துறை கிடையாது.1685 ஆம் ஆண்டு இவர் பதிப்பித்த ” Principia Mathematitia” என்ற ஆய்வுத் தொகுப்பே அறிவியல் வரலாற்றில் முதலாவதாக வெளிவந்த முழு அறிவியல் நூல் எனலாம்.

2. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

albert

நியூட்டன் போலவே, இவரது இளமைக் காலமும் சொல்லிக் கொள்ளும் படி பிரமாதமாக இல்லை.

ஒரு சாதாரண மாணவனாகவே இருந்த ஐன்ஸ்டைன், எந்த உபகரணங்களோ, சோதனைச் சாலையின் உதவியோ இன்றி, 1905 ஆம் ஆண்டு, தனது மூன்று ஆய்வுக் கட்டுரைகள் மூலம் அறிவியல் உலகைப் புரட்டிப் போட்டார்.

” Max Plank இன் Quantum கொள்கையின் அடிப்படையில் Photo electric effect பற்றிய கட்டுரை அவருக்கு நொபெல் பரிசைப் பெற்றுத்தந்தது.

இரண்டாவது கட்டுரை Brownian Movement என்றநிகழ்வின் அடிப்படையில், அணுக்களின் அளவு குறித்தது;
மூன்றாவது உலகைப் புரட்டிப் போட்ட சார்புக்கொள்கை.( முதலில் சிறப்பு சார்புக் கொள்கையும், பின்னர் பொதுச் சார்புக் கொள்கையும் வெளியிட்டார்).

இந்த இரு இமயங்களையும் வரைவதில் பெருமை அடைகிறேன்.

பி.கு:

1. “PHYSICS” என்ற வார்த்தையைத் தவறாக “இயற்பியல்” என்று மொழிபெயர்ப்போருக்கிடையே ” இயல்பியல்” என்ற சரியான பதப் பிரயோகம் செய்த என் இனிய நண்பன் க.ரவிக்கு இப்ப்படங்கள் காணிக்கை).

2. இடம் பற்றாது என விரிவஞ்சி, மேற்படி குறிப்புகள் சுருக்கமாகத் தரப் பெற்றன. முழுமையாக அறிய ந்ண்பன் க.ரவியின் ” இருபதாம் நூற்றாண்டில் இயல்பியல்” ( வானவில் பதிப்பகம்) புத்தகத்தைப் படிக்கவும்

சு.ரவி

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இரு இமயங்கள்

  1. இரு இமயங்களை அழகாக ஓவியம் வரைந்ததோடல்லாமல் அவர்களின் இயல்பியல் தத்துவங்களை முன்வைத்த திரு. சு. ரவி அவர்களுக்கும், “இருபதாம் நூற்றாண்டில் இயல்பியல்” படைத்த திரு. க. ரவி அவர்களுக்கும் என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். ஓவிய-இயல்பியலாளர் சு. ரவி அவர்களின் ஓவியங்களளை கூகுள் வலைத் தளத்தில்  (Google Image) இணைத்தால் அனைவரும் பயன்பெறுவர் என நம்புகிறேன்.

    –சேஷா சீனிவாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *