-எம். ஜெயராம சர்மாமெல்பேண்

பகலவன் வந்துநின்றால்
பாரி
னுக்கு விடுதலை
பசித்தவர்க்கு
உணவுஅளித்தால்
பசிக்கெலாம்
விடுதலை

உழைத்துமே நிற்பார்க்குஎலாம்                   KrishnaArjunaKarna
ஓய்வுநல்
விடுதலை
ஒன்றுமே
செய்யாவிட்டால்
உமக்குமேன்
விடுதலை

கார்முகில் கண்ணன்பார்க்கக்
கர்ணனுக்கு
விடுதலை
போர்முனை
வந்தகீதை
புவிக்கெலாம்
விடுதலை

தாயொடு பிள்ளைசேரின்
தனிமைக்கே
விடுதலை
வாய்தனைக்
காப்போமாயின்
வம்புக்கே
விடுதலை

கண்டதைப் பார்க்காவிட்டால்
கண்ணுக்கு
விடுதலை
காதினைக்
காத்துவிட்டால்
கயமைக்கே
விடுதலை

சிண்டுகள் முடிக்காவிட்டால்
சிக்கலுக்கே
விடுதலை
சின்னத்தனம்
காப்போமாயின்
சிதைந்திடுமே
விடுதலை

ஸ்ரீராமன் வந்துநின்றான்
சீதைக்கு
விடுதலை
கார்நிறத்தான்
கால்பட்டுக்
கல்லுக்கே
விடுதலை

பேரறிவு வளரவிட்டால்
பேதமைக்கே
விடுதலை
பெம்மானின்
கழல்பற்றி
பெறுவோம்நல்
விடுதலை

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “விடுதலை

  1. அறிவின் கண் திறந்தால்
    அகிலத்திற்கே விடுதலை…

    பழுத்த நல் வார்த்தைகளைப்
    பக்குவமாய் இட்டுநிரப்பி

    பாங்குடனே விடுதலைக்கு
    படைத்துவைத்த கவிதையிது..

    பாராட்டுகள்

    விரிமைந்தன்

Leave a Reply to காவிரிமைந்தன்

Your email address will not be published. Required fields are marked *