ஆசிரியர் தினம்- என் தந்தையின் நூற்றாண்டு வருடம்

3

சு. ரவி

ஓவியம்  சு. ரவி
ஓவியம் சு. ரவி



என் தந்தையார் திரு. A.சுப்ரமணியன் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மயிலை P.S. உயர்நிலைப் பள்ளியில் கணிதம் மற்றும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி, அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், தாளளராகவும் பொறுப்பேற்றுத் தமது 58 ஆம் வயதில், 1973 ஆம் ஆண்டு மறைந்தார்.

இவ்வருடம் அவருடைய நூறாவது பிறந்த ஆண்டாக அமைகிறது.

கணிதப் பாடத்தையே கவிதை போலச் சொல்லிக் கொடுக்கும் அவருடைய ஆங்கில இலக்கிய வகுப்புகள் எப்படி இருக்கும் என அவரிடம் பயின்ற மாணவர்கள் வியந்து பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

ஆழ்ந்த இறைபக்தி, அமைதியும் சாந்தமும் தவழும் முகம், அதிநுட்பமான கணித அறிவு, அற்புதமான குரல்வளம், இணையிலா இசைஞானம், ஒவ்வொரு கடைநிலை மாணவனும் உயரவேண்டும் என்ற உண்மையான அக்கறை,
தூய வெண்ணிற வேட்டி, அரைக்கைச் சட்டை, மேல்துண்டு என எளிமை…

மானவர்களுக்கு மட்டுமல்ல, உடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கூட முன் மாதிரியாக இருந்து வழிகாட்டியவர்.

வீட்டிலோ எங்கள் நினைவுக்கு எட்டியவரையில் அன்பு என்கிற சூழலன்றி வேறு நாங்கள் கண்டதில்லை. விளையாட்டாக என்னைச் சீண்டுவது போலக் கணக்குகளைக் கொடுத்து, சமயோசிதமாகவும், Out of the box &
Lateral சிந்தனைகள் மூலமாகவும் நான் தீர்வு கண்கிறேனா என்று சோதித்துப் பார்ப்பார்.

நான் வரையும் ஓவியங்களுக்கும், எழுதும் கவிதைகளுக்கும் முகத்தெதிரே பாராட்டாமல் என் தாயிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வார்.

பிற்காலத்தில், நான் ஒரு பகுதி நேர ஆசிரியனாகச் சில அமைப்புகளில் பணியாற்ற எனக்கு அவரே உந்துசக்தியாக இருந்தார்.

இப்படிப் பட்ட ஒரு ஆசிரியப் பெருந்தகைக்கு மகனாகப் பிறந்ததை எண்ணிப் பெருமையோடு எந்தந்தையின் எண்ணெய் வண்ண ஓவியத்தை அவருடைய நூற்றாண்டு வருடத்திய இந்தத ஆசிரியர் தினத்தில் பகிர்ந்து கொள்கிறேன்!

சு.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஆசிரியர் தினம்- என் தந்தையின் நூற்றாண்டு வருடம்

  1. நெகிழ வைத்த நினைவுகள். எண்ணை வண்ண ஓவியமும், எண்ண வண்ண ஓவியமும் இரண்டுமே அருமையாக உள்ளன. “மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்.” ஆற்றி விட்டாய் நண்பா. கே.ரவி.

  2. இந்த ஆசிரியர் தினத்தில் ஆசிரியரான உங்கள் தந்தையை, நீங்களே வரைந்த அவரது ஓவியத்துடன் நினைவு கூர்ந்து அவருக்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள். பாராட்டுக்கள். உங்களை நினைத்து நிச்சயம் அவரது உள்ளம் பெருமையில் பூரித்திருக்கும். வாழ்த்துக்கள்!

  3. Dear ka.Ravi,

    Thanks.

    I recall on this day the wonderful time we had at Ambattur camp listening to your father Sri Viswam’ s lecture sessions on “rhyme of the ancient mariner”… Our A.Babu used to tell how your father used to teach accountancy n commerce.. Solving problems after problems ,pouring them with closed eyes out of his memory!

    Similarly I have seen the whole class spellbound when my dad solves most complicated riders and
    When he is explaining classics like treasure island, Tomsawyer whitewashes the fence,tale of two cities , forsaken merman, shorab n Rustum etc..

    Our pranams to those selfless souls!

    Madam,

    Thanks for your encouraging words..

    Su.Ravi

    Su.Ravi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *