மறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி

1

சு. ரவி

வணக்கம்,வாழிய நலம்

ar

இந்த பிறவிக் கலைஞனை என் நண்பன் க்ரேஸிமோஹன் வீட்டு விழாஒன்றில் சிறுபாலகனாகக் கண்டு கேட்டு பிரமித்திருக்கிறேன். ஏழெட்டு வயது இருக்கும்.. விரல்களின் வழியே வாணியின் வீணை இசையைப் பொழிந்த அச்சிறுவனுக்கு அப்போது வரைந்த காஞ்சி மஹாபெரியவரின் கோட்டோவியத்தைப் பரிசளித்துவிட்டு நெஞ்சம் நிறைய இசையோடு வீடு திரும்பினேன்.

பிறிதொரு நாளில் என் MBA வகுப்பில் “Relevance of Western Corporate Culture to Indian Management” என்ற தலைப்பில் உரையாற்றிய போது, அவ்வுரையின் இறுதியில் சுவாமி விவேகானந்தரை மேற்கோள்காட்டி, ” உங்கள் உடலுறுதியில் மேலைநாட்டினராகவும், ஆன்ம நிலைப்பாட்டில் இந்தியராகவும் இருங்கள்” எனச் சொல்லி, India needs to adapt the western Corporate Management Style & build it around OUR Indian Value Systems என்று நிறைவு செய்தேன்.

“இது சாத்தியமா என சந்தேகமிருப்பின், இதோ நிரூபணம் மேலைநாட்டின் மாண்டலின் இசைக்கருவியில் ஆன்மாவாக ஒலிக்கிறது நமது கர்நாடக இசை” என முத்தாய்ப்பாக மாண்டலின் ஸ்ரீநிவாஸ் அவர்களின் “வாதாபி கணபதிம்” இசை நாடாவை ஒலிக்க வைத்தேன்.

அரங்கம் அதிர்ந்தது.

இன்று இளம் வயதிலேயே தன் இசைப்பயணத்தை நிறைவு செய்து மறைந்த அந்த மாபெரும் இசை மேதைக்கு என் ஓவிய அஞ்சலி!

நாதப்ரம்மத்துடன் இரண்டறக் கலந்துவிட்ட அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்!

சு.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மறைந்த இசை மாமேதை மாண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி

  1. ரவி அண்ணா , என் முக நூலில் இதனை பதிவேற்றி இருக்கிறன் . நன்றி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *