அன்பின் இருப்பிடம் அம்மா…!

1

-முகம்மட் ஜரூஸ்

பத்துமாசம்தான்
கருவிடம்
தருவாளவள்
பத்தியங்களும்                                 amma and child
சுகமென்று
சுமப்பாளவள்…!

கருவிலே
கணுக்காலால்
நீ
இடித்தாலும்
கதறாது
சிரிப்பாளவள்…!

உன்னுருவம்
காணவே
உறக்கமிழப்பாள்
உறக்கத்திலும்
உன்னையே
நினைப்பாளவள்…!

இடுப்பு வலியைக்
கொடுத்துப்
பிறப்பாய் நீ
மூச்செடுக்கவே
உயிரையும்
கொடுப்பாளவள்…!

அகலவிழித்து
அகிலம்
பார்ப்பதற்கு
அலாதித்
துன்பங்களைச்
சகித்துக்
கொள்வாளவள்…!

அசதியும் மறையும்
அகிலமும்
தூங்கும்
அன்னையிவள்
ஆராரோ
தாலாட்டுக் கேட்க…!

இன்னும் ஒரு
ஜென்மம்
எடுத்தாலும்
இவளுக்கு
ஈடு
செய்யலாகுமா…?

எத்தனை சேவை
புரிந்தாலும்
இவள் அன்புக்கு
நிகராகுமா..?
இவளின்றிதான்
அந்த
அன்பும் நிறைவாகுமா…?

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அன்பின் இருப்பிடம் அம்மா…!

  1. மிகவும் 
    அருமை நண்பா !

    அகல விழித்து 
    அகலம் காண 
    அவள்கண்ட 
    அலாதி துன்பம் 
    ஏராளம்…………

    கவிஞனில் 
    கரைபுரண்ட 
    வரிகளில் 
    என் 
    விழி திரண்ட  
    துளிகளில் 
    வாழ்த்துக்கள் நண்பா !

    கவிப்ரியன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *