பெண்கள் மீது மநு

5

 

 

பெண்கள் மீது மநு விதித்ததை அறிந்து கொள்க


குழந்தைப் பருவத்தில் பெண்ணின் தந்தை (அவளைப்) பாதுகாக்கிறார்; இளமையில் அவளுடைய கணவன் பாதுகாக்கிறார்; முதிய வயதில் அவளுடைய மகன்கள் பாதுகாக்கிறார்கள். ஒரு பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருப்பவளல்ல.

தீய மன இசைவுகளுக்கு எதிராக – அவை எவ்வளவு அற்பமாகத் தோன்றியபோதிலும் – பெண்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கெதிராகத் தற்காப்பு செய்து கொள்ளப்படவில்லையெனில், அவை இரண்டு குடும்பங்களுக்குத் துயரத்தை ஏற்படுத்தும்.

எல்லாச் சாதிகளின் உயர் கடமையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது, பலவீனமான கணவர்களும்கூடத் தமது மனைவிகளைப் பாதுகாப்பதற்கு முயல வேண்டும்.

ஒரு சிறுபெண்ணோ, ஓர் இளம் பெண்ணோ அல்லது வயதான பெண்ணும்கூட – தனது சொந்த வீட்டிலும்கூட – எதையும் சுதந்திரமாகச் செய்யக்கூடாது. (IX3,5) (V147, 148)

அவள் தனது தந்தை, கணவன் அல்லது மகன்களிடமிருந்து பிரிந்து செல்வதற்கு முயலக்கூடாது; அவர்களை விட்டுப் பிரிந்து செல்வதன் மூலம் அவள் இரு (தனது சொந்த மற்றும் தனது கணவனின்) குடும்பங்களையும் இகழ்ச்சிக்குள்ளாக்குவாள். (ங149)

பெண்ணுக்கு விவாகரத்து செய்து கொள்வதற்கு உரிமை இருக்கக்கூடாது. கணவன், மனைவியுடன் ஒன்றிணைவதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன் பொருள், ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளப்பட்டுவிட்டால், அதற்குப் பிறகு பிரிந்து செல்ல முடியாது என்பதே (IX45). பல இந்துக்கள், மநுவின் விவாகரத்து தொடர்பான முழுக்கதையுமே இவ்வளவுதான் என்று இத்துடன் நின்று விடுகிறார்கள். திருமணத்தை ஒரு புனித சடங்காக மநு கருதினார்.அதனால் விவாகரத்தை அனுமதிக்கவில்லை என்ற சிந்தனையுடன் தமது மனசாட்சியைத் திருப்திப்படுத்திக் கொள்வதோடு இதைத் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். இது, உண்மைக்குப் புறம்பானது என்பதை கூறத் தேவையில்லை. விவாகரத்துக்கு எதிரான அவருடைய சட்டம் மிகவும் வேறுபட்ட உள்நோக்கத்தைக் கொண்டிருந்தது.

இஃது, ஓர் ஆணை ஒரு பெண்ணுடன் பிணைத்து விடுவதற்கல்ல. ஆனால் இது, பெண்ணை ஓர் ஆணுடன் பிணைத்து வைப்பதற்கும், ஆணை சுதந்திரமாக விடுவிப்பதற்குமாகும். ஏனெனில், மநு ஓர் ஆணை தனது மனைவியைக் கைவிடுவதைத் தடுப்பதில்லை. உண்மையில் தனது மனைவியைக் கைவிடுவதற்கு அவர் அவனை அனுமதிப்பதோடு மட்டுமன்றி, அவன் அவளை விற்பதற்கும் அனுமதிக்கிறார். ஆனால், அவன் செய்வது என்னவெனில், மனைவி சுதந்திரமடைவதைத் தடுக்கிறார். விற்பனையோ அல்லது நிராகரிக்கப்படுவதன் மூலமாகவோ ஒரு மனைவி தனது கணவனிடமிருந்து விடுதலையாவதில்லை (IX46).

இதன் பொருள், தனது கணவனால் விற்கப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட ஒரு மனைவி, அவளை விலைக்கு வாங்கிய அல்லது நிராகரிக்கப்பட்ட பின் அவளைத் தன் வசப்படுத்திக் கொண்ட மற்றொருவருக்கு – ஒருபோதும் சட்டப்பூர்வமான மனைவியாக முடியாது என்பதேயாகும்.

சொத்து தொடர்பான விஷயத்திலும் மனைவியை ஓர் அடிமையின் நிலைக்கு மநு தாழ்த்திவிட்டார். ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை – இம்மூவருக்கும் சொத்தில்லை என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பாதிக்கும் செல்வம், அது யாருக்கு சொந்தமானதோ அவருக்காகப் பெறப்படுகிறது (IX416).

ஒரு மனைவி விதவையாகும்போது, அவளுக்கு பராமரிப்புச் செலவையும் வாழ்வாதாரத்தையும் மநு அனுமதிக்கிறார். அவள் அவளுடைய குடும்பத்திலிருந்து தனித்திருந்தாளேயானால், அவளுடைய கணவனின் சொத்தில் அது விதவையின் பாதுகாப்புக்குரிய சொத்தாகிறது. ஆனால், சொத்தின் மீது அவளுக்கு எந்த ஆதிக்கத்தையும் மநு ஒருபோதும் அனுமதிப்பதில்லை.

ஒரு பெண், கொடிய உடலுக்கு ஊறுவிளைவிக்கும் தண்டனைக்குரியவளாகிறாள். தனது மனைவியை அடித்துத் துன்புறுத்துவதற்கு அவளுடைய கணவனை மநு அனுமதிக்கிறார். தவறுகள் செய்த ஒரு மனைவி, ஒரு மகன், ஓர் அடிமை, ஒரு மாணவர், ரத்த சம்பந்தமுடைய ஒரு இளைய சகோதரர் ஆகியோர் ஒரு கயிற்றினாலோ அல்லது ஒரு மூங்கில் கழியினாலோ அடிக்கலாம்.

அறிவு பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு உரிமை இல்லை. வேதம் படிப்பதற்கு அவளுக்கு உரிமை இல்லை.

எந்த ஒரு பெண்ணுக்கும் சமஸ்காரங்களை நிறைவேற்றுவது அவசியமாகும், ஆனால் அவள் வேத மந்திரங்களைக் கூறாமல் அவற்றை நிறைவேற்ற வேண்டும். பலியிடுவது மதத்தின் உள்ளார்ந்த ஆத்மாவாகும்.

 

தகவல் : மறவன்புலவு  க.சச்சிதானந்தம்

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “பெண்கள் மீது மநு

  1. இது மின் தமிழில் ஜூலை 21 அன்று இடுகை இடப்பட்டது, திரு, மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களால். அன்றே மின் தமிழில் திரு. விஜயராகவனும் கீழ்க்கண்டபடி குறிப்பு அளித்திருந்தார்.
    —–
     பெண்கள் மீது மநு விதித்ததை அறிந்து கொள்க

    நல்லது, அறியலாம்

    அத்யாயம் 3
    55. பெண்கள் தந்தைகளாலும், சகோதரர்களாலும், அத்திம்பேர்களாலும்,
    மைத்துனர்களாலும் மதிக்கப் பட வேண்டும்

    56. எங்கே பெண்கள் மதிக்கப் படுகின்றானரோ, அங்கே கடவுள்கள்
    மகிழ்ச்சியடைகின்றனர்

    57. எங்கே பெண் உறவினர் துக்கத்தில் வாழ்கின்ரனரோ, அந்த குடும்பம்
    அழிகின்ரது. எங்கெ பெண்கள் துக்கம் அடையாமல் இருக்கின்ரனரோ , அங்கு
    குடும்பம் சுபிட்சம் அடைகின்றது

    58. எந்த குடும்பங்களின் மீது பெண்கள் மதிக்கப்படாதலால் சாபம்
    வைக்கின்றரோ, அவை முழுதுமாக அழிகின்ரன.

    59.தங்கள் நலனுக்கு ஆண்கள் பெண்களுக்கு விழாநாட்களிலும், விடுமுறைகளிலும்
    வஸ்த்ர, ஆபரண தனங்களை கொடுக்க வேண்டும்

    60. எந்த குடும்பத்தில் கணவன் மனைவினுடன் சந்தோஷம் ஆகிரானோ, மனைவி
    கணவனால் ஸந்தோஷம் ஆகிறாளோ , அந்த குடும்பத்தில் எப்போதும் ஸந்தோஷம்
    நிரந்தரமாக இருக்கும்

    61. மனைவி கனவனுக்கு அழகாய் பிரகாசிக்காவிட்டால், கணவனை ஈர்க்க மாட்டாள்,
    அப்படி ஈர்ப்பு இல்லாவிட்டால் குழந்தைகள் பிறக்காது.

    62. மனைவி அழகுடன் பிரகாசித்தால், குடும்பம் பிரகாசிக்கின்றது; அவல்
    அழகுடல் இல்லாவிட்டால் எல்லாம் தோய்வாக இருக்கும்

    அத்யாயம் 9

    2. நாளும் இரவும் ஒரு பெண் வீட்டு ஆண்கள் மேல் நம்பியிருக்க வேண்டும்,
    அவர்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டால், அது கட்டுப்பாடுக்குள் இருக்க
    வேண்டும்

    3. ஒரு பெண்ணை தந்தை குழந்தை பிராயத்திலும், கனவன் இளமையிலும், மகன் கிழ
    வயதிலும் காப்பாற்றுகின்ரனர்

    4. சரியான வயதில் தன் பெண்ணை மனம் முடிக்காத தந்தை கண்டிக்கத்தக்கவர்
    தன் மனைவியை சரியாக (சரியான நேரத்தில்) அருகாத கனவன் கண்டிக்கத்தக்கவன்.
    கனவன் இறந்தவுடன், தன் தாயை காப்பாற்றாத மகன் கண்டிக்கத் தக்கவன்

    5. பெண்கள் தீய செயல்களிலுருந்து காப்பாற்றப்பட வேண்டும்

    6.எல்லா ஜாதிகளுக்கும் மிகச் சிறந்த கடமை, கணவன் எவ்வளவு பலஹீனமானாலும்
    மனைவியை காப்பாற்ற வேண்டும்

    அத்யாயம் 9

    89. (மண வயதில் இருக்கும் பெண், நல்ல குனங்கள் இல்லாத கணவனை மணப்பதே விட,
    தந்தையுடன் இருப்பது மேல்

    90. மண வயது பெண்கள் 3 வருடங்கள் காக்க வேண்டும். அதன் பிறகு அவள் தன்
    நிலைக்கேற்ற கனவனை தானே தேர்ந்தெடுக்கட்டும்

    91. அவளை மணம் கொடுக்காவிட்டால், அவள் தானே கணவனை வரிந்தெடுத்தால்
    அவளுக்கோ, அந்த கணவனுக்கோ ஒரு குற்றமும் சாராது.

    92 தன் கணவனை தானே தேர்ந்தெடுக்கும் பெண், தன் தந்தை அல்லது சகோதரன்
    கொடுத்த நகைகளை எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி செய்தால் அது திருடு.

    93. அப்படி ஒரு பெண்ணை மணந்தவன் பெண்ணின் தந்தைக்கு ஒரு திருமண செலவும்
    கொடுக்க வேண்டாம்

    94.  30 வயது ஆண் 12 வயது பெண்ணை பிடித்திருந்தால் மணக்கலாம். அல்லது 24
    வயது ஆண் 8 வயது பெண்ணை மணக்கலாம்

    95. கணவன் மனைவியை தெய்வங்களிடமிருது பெறுகிறான், தன் சுய ஆதீனத்தினால்
    அல்ல. மனைவியை ஆதரிப்பது கடவுளர்க்கு பிடித்தது.
    ——-
    இனி உங்கள் கருத்துக்கள் உதவும்.
    இன்னம்பூரான்
    25 07 2011

  2. பெண்களுக்குக் கல்வி மறுக்கப் படுவதும், வேதம் ஓதுவது
    மறுக்கப் படுவதும் மனு நீதியில் சொல்லப்பட்டுள்ளது
    வேதனைக்குரிய செய்தியே. நம்முடைய மக்கள் தொகையில்
    சம அளவு இருக்கும் பெண்கள், கல்வி அறிவு பெறாதவர்களாக
    இருந்தால் நம் நாடு எப்படி உருப்படும்? பாரதியார் பெண்கள்
    விடுதலைக் கும்மிப் பாட்டில்,
    ” ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று
    எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
    வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற
    விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்” என்று சாட்டைஅடி
    கொடுத்துவிட்டார். “பெண்மை அடிமை யுற்றால் மக்களெல்லாம்
    அடிமையுறல் வியப்போன்றாமோ? வீட்டிலுள்ள பழக்கமே
    நாட்டிலுண்டாம்” என்று மரபணு(genes) நோக்கில் ஒரு புதுமையான
    கருத்தையும் பாரதியார் சொல்லியிருப்பது சிந்திக்கத் தக்கது.
    இரா.தீத்தாரப்பன், இராஜபாளையம்.

  3. ’56. எங்கே பெண்கள் மதிக்கப் படுகின்றானரோ, அங்கே கடவுள்கள்
    மகிழ்ச்சியடைகின்றனர்.’
    ~ இதை கண்டீரோ, திரு.தீத்தாரப்பன்?

  4. உங்களுக்கு வசதியானதை மட்டும் போட்டுள்ளீர்கள். இப்படி ஒரு தவறானக் கட்டுரை வல்லமையில் வந்துள்ளது வருத்தமளிக்கிறது.

  5. மநு எழுதியதானதை என் பெயரில் வெளியிட்டுள்ளீர்கள்.
    யாரோ மொழிபெயர்த்து மின் உலாவிகளில் வந்தவற்றை உங்களுடன் பகிர்ந்தேன்.
    நான் அனுப்பிய செய்திகளைத் தொகுத்து நீங்கள் எழுதி உங்கள் கட்டுரையாக்குமாறு கேட்டிருந்தேன்.
    அந்தக குறிப்புகளின் சொந்தக்காரன் நானல்ல.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *