-மலர் சபா

மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை

கோவலன் தான் கண்ட கனவைக் கூறல்

கோவலன் மாடலனிடம் கூறலானான்:
கீழ்மகன் ஒருவன் செய்த சூழ்ச்சியால்
காவல் காப்பதில் வல்லவனாம் பாண்டியனின்     kovalan kannagi
இம்மதுரை நகர்தன்னில் ஐந்து பிரிவுகளாய்ப் பிரிக்கப்பட்ட
மணம் மிக்க கூந்தலையுடைய கண்ணகி
நடுங்கும் வண்ணம் துயரடைந்தாள்.

நான் உடுத்திருந்த ஆடை
பிறரால் பறித்துக்கொள்ளப்பட்டுக்
கொம்புகள் உடைய எருமையின் மீது
ஏறிச் சென்றேன்;
அழகான சுருண்ட கூந்தலையுடைய
கண்ணகியும் நானும்
பற்றுகளைத் துறந்த சான்றோர் பெரும்
பேற்றினைப் பெற்றோம்.

தன் மலரம்புகளை நிலத்தில் வீசிவிட்டு
மன்மதன் ஏக்கம் கொண்டுச் செயலற்று நிற்கும்படி,
மாதவி அழகுமிக்க மணிமேகலையைப்
போதி மரத்தின் அடியில் உள்ள
புத்தர் முன் துறவியாக்கினாள்.

நள்ளிரவு யாமத்தில்
நனவேதான் போல் தோன்றும்
இக்கனவினைக் கண்டேன்
அதன் பயன் விரைந்து வந்து சேரும்
என நினைக்கிறேன்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 95 -106

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>
pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–
<http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-adaikalakathai–>

படத்துக்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *