நாகை அம்பாள் நீலாயதாக்‌ஷி பிரார்த்தனை பாடல்

4

நாகை வை. ராமஸ்வாமி

images

ஒம் ஶ்ரீ சாய்ராம்

அன்பே, அமுதே, அகிலலோக நாயகி நீலாயதாக்ஷியே

வித்திலே விருட்சம் வைத்தாய் மேகத்தில் வெள்ளம் வைத்தாய்

என்னுள்ளே நின்னை வைத்தாய் கருணாகடாக்ஷி காரோண நாயகியே

 

அன்பே, அமுதே, அகிலலோக நாயகி நீலாயதாக்ஷியே

அருளே, அழகே, ஆதிஅந்தமில்லா அனந்தமே

அசைந்தாடும் மயிலழகன் அம்மையே ஸ்ரீசக்ரவாஸினியே

 

சப்த சாகரமும் சப்த ஸ்வரங்களும்

சப்த கன்னிகைகளும் சப்த ரிஷிகளும்

பஞ்ச பூதம் பணிந்து சந்ததம் நின் துதி பாடிட

பஞ்சமின்றி அருளும் மந்தஹாஸ முகம் மகிழும் வேளை

சுந்தர வதனமும் கமலத்திருவடியும் நெஞ்சத்தே வந்தமர

நின் திருவடி போற்றி என்றும் மகிழ்ந்திட

அருளிடுவாய் மலரடி தரிசனம் அடைக்கல சரணம்

அன்பே, அமுதே, அகிலலோக நாயகி நீலாயதாக்ஷியே

35/2015 நாகை வை. ராமஸ்வாமி

                                                                                 

  1. Listen to Nagai Sri Neelayadakshi Ambal Devotional songs MUSIC INDIA ON LINE   
  2. http://mio.to/album/Kalakkad+R.+Srinivasan%2C+Kalakkad+R.+Thyagarajan%2C+Lata+Ramchand%2C+Praveena+Avanthikrishan/Nagai+Sri+Neelayadakshi+Ambal+Devotional+Songs+-+Vol+1
  3. RADIOSAI http://www.ecatering.irctc.co.in/
  4. Rcom http://play.raaga.com/tamil/album/Nagai-Sri-Neelayadakshi-Ambal-Devotional-Songs-Vol-1-songs-TD02593

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நாகை அம்பாள் நீலாயதாக்‌ஷி பிரார்த்தனை பாடல்

  1. மிக மிக நன்றாக உள்ளது. படிக்கும் பொழுது ஒவ்வொரு வார்தையும் அன்னைக்கு பூட்டிய அணிகலனாய் உள்ளது.

    படித்து மகிழ்ச்சியுற்றேன்.

  2. மிக்க நன்றி திரு ஜி. எஸ். அய்யர் அவர்களே.  உங்கள் மறுமொழி நான்ஆன்னைக்கு பூட்டிய அணிகலன்களை மிளிரச்செய்கிறது.  வணக்கம்.

  3. காரண நாயகியாம் காரோண நாயகியை
    வாரணமாய் வார்த்தைகளில் வடித்ததிந்தச்
    சீரானப் பாமாலையைப் படைத்தவரை
    தாராளமாய் வணங்கு நெஞ்சே!

  4. பாமாலை படைத்தவரை வணங்கும்  பண்புடையோரே
    எழுத்தோலையில்   நன்றி தொடுத்திந்த
    பூமாலை சமர்ப்பணம் அன்புடன் ஏற்பீர்
    காளை அமர் காரோணன் மனமகிழ்
    கருந்தடங்கண்ணி உமை காலமெல்லாம் காத்திடுவாள் 

     
    யாய் இதை ஏற்று எம் அன்பையும் நன்றியும் நவிலும் வண்ணம்

Leave a Reply to VSK

Your email address will not be published. Required fields are marked *