ஆச்சிக்கு ஒரு அஞ்சலி
க. பாலசுப்பிரமணியன்
நெருப்புக்கும் கொஞ்சம் சிரிப்பூட்ட
நீ இன்று சென்றாயோ?
நிலையாத வாழ்க்கையைக் கண்டு சிரிக்க
இன்னொரு வேடம் கொண்டாயோ ?
ஜில்லென்ற ரமாமணியை இன்று
நெருப்பும் சுட்டிடுமோ ?
ஜாம்பஜாரோடு இணைந்த ஜக்குவின்
காதலியை நாடு மறந்திடுமோ ?
முத்துக்குளிக்க நீ அழைத்த
தூத்துக்குடியின் நல் முத்தே !
சிரிப்பின் இமயமே! உனக்குச்
சிலை ஒன்று போதாது!
மிக அழகு.
மீ.வி.