நவராத்திரி நாயகியர்   (4) -சமயபுரம் – மாரியம்மன்

1

 க.பாலசுப்பிரமணியன்

images (6)

 

திரிபுரத்தைக் காப்பவளுக்குத்

தேரிழுக்க ஓர் புரம் சமயபுரம் !

தீராத நோய்களையும் தீர்த்திடுமே

தேவியவள் தெய்வவரம்!

 

தீச்சட்டி ஏந்தி வந்தாலும்

தீந்தமிழில் பாடி வந்தாலும்

திருவுள்ளம் அவளுக்கு ,

தீமைகள் போக்கிடுவாள் !

 

மாவிளக்கு மனதில் ஏற்றி

மாரியவள் பெயர் போற்றி

மனமுருகி நின்றாலோ

மனமிரங்கி வந்திடுவாள் !

 

ஆத்தாவென அழைப்போருக்கு

அடைக்கலமே தந்திடுவாள் !

அங்கங்கள் சந்நிதியில்  தரைபுரள

அருள்புரிய எங்கெங்கும் வந்திடுவாள் !

 

கூழெடுத்துக் கொடுத்திடுங்கள்

கூடவந்து  அவள் நிற்ப்பாள் !

கூடிவந்த ஊழ்வினையைக்

கூறாமல் விலக்கிடுவாள் !!

 

கல்லாக இருந்தாலும் கருணைக்கடலே

சொல்லுக்குள் அடங்காத சொற்சுவையே

கண் கொடுத்த  தெய்வமன்றோ !

காலமெல்லாம் அவளை மறப்பதுண்டோ  ?

 

பகலென்ன, இரவென்ன,

பார்ப்பதற்கு நேரமென்ன?

திருமுகத்தை கண்டவர்க்கு

தினந்தோறும் நவராத்திரி !

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நவராத்திரி நாயகியர்   (4) -சமயபுரம் – மாரியம்மன்

  1. ஆழ்ந்த பக்தியும் அதன் அநுபவமும் தெள்ள தெரிகிறது துள்ளி அளிக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *