டிசம்பர் 28, 2015

இவ்வார வல்லமையாளர்கள் 

தனய் டாண்டன் மற்றும் தீபிகா போடபட்டி 

Deepika and Tanay3

வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளர்களாக சிறப்பிக்கப் படுபவர்கள் இளம் தொழில் முனைவோர்களான, ‘அதிலாஸ்’ (Athelashttp://getathelas.com/) நிறுவனத்தின் நிறுவனர்கள் திருமிகு ‘தனய் டாண்டன்’ (Tanay Tandon ) மற்றும் ‘தீபிகா போடபட்டி’ (Deepika Bodapati) ஆகியோர். கலிஃபோர்னியா மாநிலத்தின் இந்த இரு இளம் தொழிலதிபர்களும் கல்லூரி மாணவர்கள், இருபது வயதைத் தாண்டாதவர்கள், இந்த ஆண்டு பலகலைக்கழகத்தில் முதலாண்டில் அடியெடுத்து வைத்துள்ளவர்கள். மாணவர்கள் இருவரும் அறிவியல் துறையில் ஆர்வம் மிக்கவர்கள். உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே இருவரும் பல அறிவியல் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளும் பெற்றுள்ளனர். தனய் டாண்டன் சிலிக்கான் பள்ளத்தாக்குப் புகழ் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் (Stanford University’) கணிதத்தில் பட்டப்படிப்பையும், தீபிகா போடபட்டி தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of Southern California) பயோமெடிக்கல் என்ஜினியரிங்கில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்கள் துவக்கியுள்ள அதிலாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள எளியமுறை இரத்தப் பரிசோதனைக் கருவியை வணிக அளவில் சந்தைப்படுத்தும் திட்டத்தை, இருவரும் தங்களது பல்கலைக்கழகங்கள் நடத்தும் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் போட்டியில் சமர்ப்பித்து பரிசுத் தொகையை வென்று, தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கான நிதியையும் பெற்றுள்ளார்கள். இவர்களது இந்தச் சாதனைக்காக தனய், தீபிகா ஆகியோரை வல்லமை விருதுக்குப் பரிந்துரைத்தவர் வல்லமையின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள்.

கணினி நிரல்கள் (Computer Programming) உருவாக்குவதில் ஆர்வமிக்க தனய் தொடங்கும் இரண்டாவது தொழில் நிறுவனம் இது. இவருடைய மற்றொரு நிறுவனம் “கிளிப்ட்” (http://clipped.me/). ஆப்பிள் ஐஃபோன் அலைபேசியின் செயலியான ‘கிளிப்ட்’, செய்திகளைச் சுருக்கி முக்கியமான கருத்துகளைப் பட்டியலிட்டுப் படிக்க உதவும் ஒரு மென்பொருள். இந்த இலவச செயலியை ஆப்பிள் (https://itunes.apple.com/us/app/clipped/id583616193) தளத்தில் இருந்து தரவிறக்கிப் பயன்பெறலாம்.

பள்ளி நாட்களில் இருந்து தனய் மருத்துவப் பரிசோனையில் உதவக்கூடிய இரத்தப் பரிசோதனைக் கருவியை வடிவமைத்து வருகிறார். இதற்காகப் புகழ் பெற்ற அறிவியல் போட்டிகளான கூகுள் நடத்தும் அறிவியில் போட்டியிலும் (Google Science Fair), இன்டெல் அறிவியல் போட்டியிலும் (Intel Science Talent Search) பரிசுகள் பெற்றுள்ளார். கூகுள் போட்டியில் வெற்றி பெற்றதனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றார்.

obamamefinal

இக்காலத்தில் அனைவருக்கும் இன்றியமையாததாகிவிட்ட திறன்பேசியில் (ஸ்மார்ட்ஃபோன்), மலிவான விலையில் தயாரிக்கக் கூடிய நுண்ணோக்கி வில்லையை (லென்ஸ்) இணைத்துப் பயன்படுத்தி, அதனை ஒரு சக்திவாய்ந்த நுண்பெருக்கியாக (மைக்ராஸ்கோப்) மாற்றுவது கையடக்க இரத்தப்பரிசோதனைக் கருவியின் (பிளட் டெஸ்டிங் கிட்) அடிப்படை. இந்தியாவில் மருத்துவராகப் பணிபுரிந்த தனது தாத்தா பற்றியும், இரத்தப்பரிசோதனைக்காக ஆய்வகத்தின் வாசலில் வரிசையாக நிற்கும் நோயாளிகளையும், அதற்கு எடுக்கும் நேரம் பற்றிய தகவல்களைத் தனது தாய் மூலம் அறிந்த தனய் இக்கருவியை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டார்.

இக்கருவி இயங்கும் விதம்; மலேரியா போன்ற ஒட்டுண்ணி நோய்க்கிருமியால் பாதிப்பா என்பது போன்ற இரத்தப் பரிசோதனை செய்ய, இரத்தத் துளிகளை ஆய்வகத்தின் கண்ணாடிப் பட்டையில் சேகரித்து, சோதனைக்குத் தயார் செய்து கைபேசியை நுண்பெருக்கியாகப் பயன்படுத்தி அதன் வழியாக ஆராய வேண்டும். பரிசோதனைக் கருவியாக மாறிய கைபேசி அதனை 350 முதல் 400 மடங்குவரை உருப்பெருக்கி ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை, இரத்த அணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிடும். இந்தத் தகவலை கைபேசியில் உள்ள செயலியின் மென்பொருள் பிற இரத்தப்பரிசோதனை தரவுகளுடன் ஒப்பிட்டு நோயினால் பாதிப்பா என்பது போன்ற தகவலை அளிக்கும். இந்த சோதனைமுடிவை மிகத் துல்லியமாக்கும் முறையில் இப்பொழுது தனய் மேற்கொண்டு கவனம் செலுத்தி வருகிறார். இந்தச் செயல்முறையை இவர் விளக்குவதைக் கீழ்காணும் காணொளி மூலமும், படம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

Athelas
காணொளி: https://youtu.be/lxBoZVJJdis

https://youtu.be/lxBoZVJJdis

இந்த மாதம் (டிசம்பர் 2015), தனய் பயிலும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஒரு கிளையான, ‘கார்டினல் வென்ச்சர்’ (Cardinal Ventures) என்ற புதுமுறை தொழில்களின் முனைவோர்களை ஊக்குவிக்கும் நிதி முதலீடு செய்யும் (venture capitalist) நிறுவனம் நடத்திய போட்டியில் 60 தொழில் முனைவோர் குழுவினர் பங்கேற்றார்கள். அதில் தனய் டாண்டனின் கண்டுபிடிப்பான எளிய இரத்தப் பரிசோதனைக்கருவி உபயோகத்திலும், சந்தைப்படுத்துவதிலும் நம்பிக்கை தரும் ஒரு முயற்சி என்று பாராட்டப்பட்டு தேர்வு பெற்று பரிசும், நிதி உதவியும் பெற்றது. கூகுளும் இதுபோன்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக தொழில் முனைவோர் உருவாக்கியது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தைத் தேர்வு செய்த மூன்று நடுவர்களில் ஒருவரான ‘ஆனி காடவி’ (Annie Kadavy), இது வணிக முதலீட்டாளர்களைக் கவரும் நல்லதொரு தொழில் முயற்சி எனப் பாராட்டியுள்ளார்.

Athelas3

Athelas2

சென்ற அக்டோபர் மாதம் ‘தீபிகா போடபட்டி – தனய் குழு, அதிலாஸ் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனரான தீபிகா போடபட்டி படிக்கும் தென்கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோருக்கான ஸ்டீவன் மாணவ கண்டுபிடிப்பாளர் போட்டியில்’ (Stevens Student Innovator Showcase) 24 மாணவர்கள் கொண்ட குழுக்களுடன் போட்டியிட்டனர். தேர்வு செய்யப்பட்ட 6 குழுக்களில், சிறந்த புத்தாக்கத்திற்கான சிறப்புப் பரிசையும், $7,000 பரிசுத் தொகையையும் வென்றனர். மேலும் அதே மாதம், அதே பல்கலைக் கழகத்தின் ‘சிலிக்கான் பீச் தொழில் முனைவோருக்கான நான்காவது ஆண்டு போட்டியின் பரிசாக’ (4th Annual Silicon Beach Awards Venture Competition) $25,000 பரிசையும் பெற்றனர். இந்த பரிசுத் தொகைகளின் உதவி கொண்டு தங்கள் இரத்தப் பரிசோதனைக் கருவியை மேம்படுத்தி, மருத்துவதுறையினர் பயன்படுத்தும் வகையில் உருவாக்கி, ‘அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்தக நிறுவனத்தின்’ (U.S. Food and Drug Administration) அங்கீகாரம் பெறும் வகையில் வடிவமைக்கப் போவதாக தீபிகா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Athelas1

Deepika and Tanay

தனய், தீபிகா இருவரும் தங்களது அதிலாஸ் நிறுவனத்திற்காக இதுபோல போட்டிகளில் வெற்றி பெற்ற பரிசுத் தொகைகளாகவே $50,000 வரை நிதி சேகரித்துள்ளனர். இந்த இளம் தொழில் முனைவோர்களின் முயற்சி வெற்றிபெற்று, மருத்துவத்துறையினருக்கு பெரிதும் உதவி புரிந்து, அதன் மூலம் பல்லாயிரம் உயிர்களைக் காக்க வேண்டும் என்று வாழ்த்தி வல்லமைக் குழுவினரின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

__________________________________________________________________________

மேலும் தகவலுக்கும் தொடர்புக்கும்:

Athelas:
http://getathelas.com/

கையடக்க இரத்தப் பரிசோதனைக் கருவி பற்றி தனய் டாண்டன் வழங்கும் செயல்முறை விளக்கக் காணொளி:
https://youtu.be/lxBoZVJJdis (https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA)

Tanay Tandon:
http://tanaytandon.com/
http://clipped.me/
https://www.facebook.com/tanay.tandon.5
https://www.linkedin.com/in/tanaytandon

https://www.youtube.com/channel/UCIghdhdj3GY3n0P_IYUZBNA

Deepika Bodapati:
https://www.facebook.com/deepika.bodapati
https://www.linkedin.com/in/deepika-bodapati-10229773
http://www.huffingtonpost.com/deepika-bodapati/

__________________________________________________________________________

தகவலும் படங்களும் தந்துதவிய தளங்கள்:

(1)
The college freshman looking to shake up blood tests
Athelas CEO Tanay Tandon has developed a blood-testing kit
Tuesday, 8 Dec 2015
http://video.cnbc.com/gallery/?video=3000463731

(2)
Stanford University’s on-campus incubator Cardinal Ventures
Dick Costolo’s advice to entrepreneurs
Harriet Taylor, Tuesday, 8 Dec 2015
http://www.cnbc.com/2015/12/08/dick-costolos-advice-to-entrepreneurs.html

(3)
Next generation of entrepreneurs shines at USC Stevens Student Innovator Showcase
The ninth annual event awards startups that create viable solutions to global problems
BY Peijean Tsai, NOVEMBER 2, 2015
https://news.usc.edu/88158/next-generation-of-usc-entrepreneurs-shines-at-student-innovator-showcase/

(4)
USC Stevens Student Innovator Showcase Awards $25K to Student Startups
https://stevens.usc.edu/usc-stevens-student-innovator-showcase-awards-25k-to-student-startups/

(5)
Intel Science Talent Search finalist, vying for thousands of dollars in scholarships.
http://googleforeducation.blogspot.com/2015_08_01_archive.html

(6)
ABC7 STAR SCHOLAR: TANAY TANDON
https://www.googlesciencefair.com/projects/en/2015/fd6ac2f5d877cecc8705915021b5fc3e5a15f5feb8bde09d0c2f6be1559c2d65

(7)
This teenager could revolutionize malaria testing with a cheap smartphone attachment
by Pavel Curda PAVEL CURDA — 18 Aug 2014
http://thenextweb.com/insider/2014/08/18/teenager-revolutionize-malaria-testing-cheap-smartphone-attachment/

__________________________________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளர்கள் தனய், தீபிகா இருவருக்கும் வாழ்த்துகள். சிறப்பாகத் தகவல்களைத் திரட்டித் தந்துள்ள தேமொழிக்குப் பாராட்டுகள். இது போன்ற புத்தாக்கப் போட்டிகளை நம் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிலும் நடத்த வேண்டும். பல்லாயிரம் புதிய கண்டுபிடிப்பாளர்கள் தோன்ற வேண்டும். இவர்களின் வாயிலாக, உலகில் மகத்தான மாற்றங்களை உருவாக்கலாம்.

    வல்லமை வாயிலாகவும் இத்தகைய புத்தாக்கப் போட்டிகளையும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் புதிய தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என்பது என் அவா. நிதி, ஆலோசனை, பயிற்சி உள்ளிட்ட ஆதரவுகள் கிட்டினால், முதல் கட்டமாக ஏதேனும் ஒரு பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகத்தில் இதனைத் தொடங்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *