கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – ”நரசிம்ஹ ஜெயந்தி’’

0

 

83bced9d-551a-40c3-9f0c-54000921af23

 

ந்ருஸிம்ஹ மந்த்ரராஜம்
——————————–
“உக்ரம், வீரம் ,மஹாவிஷ்ணும் ,ஜ்வலந்தம் ,ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம்,பீஷணம் ,பத்ரம் ,ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

“வீரியன், வீரன் , வியாபகன் , சைதன்ய
சூரியன் சூக்கும காரியன் -சீறிடும்
சிங்கன் ,எதிரிக்கு சொப்பனம் ,காலகாலன்
மங்களம் சேர்த்திடும் மால்”

கேசவ், நீங்க சொன்னத வச்சு எழுதினது….நன்றி கிரேசி மோகன்….
——————————————————————————————————————-

f8e361de-abbf-4931-bb3b-0016b981f64b
”வரம்கேட்டு வந்த வணிகனாநான்!, என்பக்தித்
தரம்பார்க்க வந்தாயோ தூணில்! -நரனெனக்கு
வேறேதும் வேண்டாம், வினையால் அணையாத,
தீராத பக்தியைத் தா’’

“நானார் வினவ நரசிம்மம் ஆணவத்
தூணார்வம் தட்டித் தகர்த்திடும், -மீனாமை
ஏனசீய வாமன மூணுராம கண்ணனாய்
ஆன ஜெயவிஜயம் அஃது”

“தனயன் அழைக்க
துரும்பும் அசையவில்லை
தகப்பன் உதைக்க
தூண் பிளந்தது
இரண்ய கசிவு”
’’முரணெனப் பட்டாலும் மூலமே நின்னை
வரவழைக்கக் கண்டேன் வழியை -இரணியன்போல்
இல்லை இறையென்று சொல்லி இரையாக
மல்லுக்(கு) அழைப்பேன் முனைந்து’’

’’அனன்யபக்தி கொண்டு இரண்ய அவுண,
இனன்யன் பிரகலாதன் ஈஷ, -சினன்யமாய்,
தூண்பிளந்த சிங்கம் , துரும்பாய் மனமிளகித்
தான்குளிர்ந்து, தீக்‌ஷை தலைக்கு’’

”நானகங் காரத்தூண் நைந்திடச் சுக்குநூறாய்
கானக சிங்கமுச்சி, கட்டுடல் ,-மானுடமாய்,
பான கநரசிம்மம் பாயும் பிரகலாதன்,
பூணக பக்திக்குப் பார்’’
“நாவால் ருசித்து நரசிம்மம் கொண்டாட்டம்,
பூவாய் அமர்த்தி பிரகலாதன், -மோவாயை;
நாரத பக்திக்கு, நாவுக்(கு) அரசராய்
மீறிடும் சிங்கம் மியாவ்”….

செல்லமியாவ் பூனையாய் சிங்கமதம் மாற்றிஅதை
புள்ளைஆண்டான் பக்தியால் பார்”
’’எங்(கு)ஹரி என்று எதிலும் தேடவொளி
மங்கிடும் மாலையில் மாலோல, -சிங்கம்
குதித்துன் அகந்தைக் குடலை உருவி
கொதிப்படங்கி பூணும் கழுத்து’’

நரசிம்மாவதாரம்….
———————————-

பாகவதம் ஸ்ரீமத் நாராயணீயம் வாசித்து வெண்பாக்களாக்கிக் கொண்டிருக்கிறேன்….நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு
நரசிம்மாவதாரத்தை பகிர்ந்து கொள்கிறேன்….

இரணியன் பெற்ற வரம்
——————————————-
’’அல்லில், பகலில், அகத்துள், அதன்வெளியில்,
புல்புழு, பூச்சி, பறவையால், -கொல்லும்
மனிதனால், காட்டு மிருகத்தால், சாகா
தனதுயிர் கேட்டுத் தவம்….(1)
பிரகலாதன் ஜனனம்
————————————-
இரணியன் வேள்விக்(கு) இரங்கி அயனும்
வரனெனத் தந்தனன் வாக்கு -தரணிகள்
மூன்றையும் வென்றஅம் மூர்கன் மகனாக
தோன்றினன் நாரணத் தொண்டு….(2)

”நாரா யணஓம் நமஹவை நாள்தோறும்
பாரா யணம்செய் பிரகலாதா” -பூரண
கர்ப வதிகயாது காதுவழி சேய்க்குரைத்தான்
நற்கதியை நாரதன் நன்கு….(3)
*கயாது-பிரகலாதன் தாயார்
பிரகலாதனை தன் வழிக்கு கொண்டு வர இரணியன் வழிகள்
——————————————————————————————————–
அச்சுதன் நாமம் அனவரதம் ஓதுவோனை
அச்சுறுத்தி தன்வழிக்(கு) ஆட்படுத்த -அச்சன்
இரணியன் போட்ட இடர்களைத் தாண்டி
மறையென நின்றான் மகன்….(4)

முட்டவந்த ஆனைககள் எட்டு திசைகளிறும்
முட்டியிட்டுச் சுட்டி மழலையை -வட்டமிட்டு
காட்டியபின் கூறும் கஜேந்திர மோட்ஷத்தைக்
கூட்டியவன் பக்தனுக்கு காப்பு….(5)

பக்தீயில் மூழ்கும் பிரகலாத சாமியை
பத்தி எரியும்தீ பூவாகி -சுத்திவரும்
மீறிய நஞ்சும் மிதமாய் அமிழ்தாகும்
சூரியன்மேல் வைப்பாரோ சூடு !….(6)

விண்முகடு கொண்டுபக்தி வீரத்தை வீசிட
மண்மகள் ஏற்றாள் மலர்மகளாய் -பின்முதுகில்
பாறையைப் பாம்பால் பிணைத்தாழி போட்டிட
பேரலை போலெழுந்தான் பிஞ்சு….(7)

கோவிந்தா என்றுரைக்க குத்தவந்த ஈட்டியின்கண்
நாவின்தன் மென்மை நலிந்தது, -சாவிந்த
பிள்ளைக்கு இல்லையென போயுரைத்தார் மன்னனிடம்
நொள்ளையான ஆட்கள் நமுத்து….(8)
இரணியன் -பிரகலாத சம்வாதம்
—————————————————————————
ஆருனக்குத் தந்தார் அதிசிய சக்தியை
கூறெனக்கு என்று கொதித்தஅப -சாரனுக்கு
நாரண சக்திக்கு பூரண பக்தியே
காரணம் என்றான் கொழுந்து….(9)

காட்டடா அந்தக் கருநீலப் பூதத்தை
போட்டடைப்பேன் இத்தூணில் பூச்சியாய் -வேட்டையை
ஆடத் துவங்கிய அப்பனுக்குக் காட்டினான்
கூடத்து தூணுக்கே கை….(10)
நரசிம்மர் தூணில்
——————————-
பக்தப் பிரகலாதன் பேச்சை ருஜுப்படுத்த
சக்திக்கு மீறிய சங்கடமாய் -திக்கெட்டை
தேகமாய்க் கொண்டவன் ஏகினான் தூண்வேக
வேகமாய் வைகுண்டம் விட்டு….(11)
இரணிய வதம்
—————————–
கள்ளத் தனம்செய்தென் பிள்ளை பிடித்தவனே
உள்ளத் துணிவிருந்தால் ஊர்ந்துவா -முள்ளிட்ட
பாதுகையால் தூணுதைக்க பாதிநர பாதிசிங்கம்
காதுசிகை கோதி குதிப்பு….(12)

 
சாயங்கா லம்வரை சண்டை புரிந்தந்த
சீயங்கா லைமடித்து, சோர்ந்தெழுந்து -பாயும்
இரணியனை தூக்கி இடைவாசல் வைத்து
கரநுனியால் கீறிக் கிழிப்பு….(13)….

 
பிரகலாதன் நரசிம்மர் உக்ரம் தணித்தல்
————————————————————————
ஆவேச மான அரியை அடக்கிட
பூவாசத் தாயே பயந்திட -சாவாச
மாகவந்த பிள்ளை மடியமர்ந்து சிங்கத்தின்
தேகம் தழுவத் தணிவு….(14)

கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
குளிர்ந்தவன் உச்சியைக் கோதிய சிங்கம்
மெலிந்துகர் ஜிக்க மியாவ்….(15)
லக்‌ஷ்மியுடன் சாந்த நரசிம்மர்
———————————————————
ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
களைத்தல் கதையின் கருத்து….(16)
———————————————————————————————————————

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *