பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

13874994_1059936904060508_1239459592_n

32535581@N07_lபிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (13.08.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி .. (76)

  1. முதல் பலி
    நீயா ? நானா ?
    தெரியாது.
    ஆனால்
    அவர்கள் வரம் பெற
    நமக்கு சாபம் !
    வெட்டத்தான் வளர்கின்றார்கள்
    என நினைத்து
    இவர்களிடம் பாசம்
    காட்ட நாம் மறந்ததில்லை !
    நம்மை வெட்டுவதால்
    இவர்கள் கவலைகள்
    மறைகிறதென்றால்
    நாம்
    மீண்டும் பிறப்போம் !

  2. இறைவா சக்தி கொடு

    அட……
    நீயும் இங்கு இருக்கிறாயா
    மரணத்தின் ப்யணத்தில்
    துணையாக வந்த உனக்கு
    என் கடைசி வாழ்த்துக்கள்

    நாமிருவரின் ஐம் புலனில்
    ஒரு புலனான வாய் உண்பதற்கே உள்ளது
    மனிதனைப்போல் பேச இயலாது
    பேசும் சக்தியினை கொடுக்காத‌
    இறைவனை என்ன சொல்ல…

    மனிதர்களே வளர்த்து நம்மை
    கொல்வதை யாரிடம் சொல்ல‌
    பேசும் சக்தியிருந்தால்
    கூட்டம் கூடி குரல் எழுப்பலாம்
    அறுவாளால் அறுபடும் பொழுது……..

    இவர்கள் வாழ
    நம்மவர் பலி
    தனியாக என்னை அழைத்து வரும் போதே
    புரிந்தது இவர்களின் கரிசனம்
    தலையில் தண்ணீர் விடும் போதே
    கண்ணீர் வருகிறது

    சாவை நினைகாதிருக்க‌
    சமாதானம் நடக்கிறது
    மாலை போட்டு பொட்டு வைத்து
    பாவத்தை மறைக்க‌
    இவர்கள் ஓதும் மந்திரச்சொல்
    குலதெய்வத்திற்கு பலி

    எந்த சாமி பலி கேட்டு
    உண்டு களிக்கிறது…
    உண்டு களித்து
    ஊனைப் பெருக்கி வாழுமிவர்களும்
    மாள்வது நிச்சியமே

    புத்தனும் வள்ளுவனும் போதித்தது
    புவியில் காணாமல் போய்விட்டது
    புலம்பி பயனில்லை
    பேசும் சக்தி
    மறுக்கப் பட்டது ஏன்.
    கண்ணீர் வடிக்கிறேன்
    மௌனமாக‌

    அனுப்புனர்
    ராதா விஸ்வநாதன்

  3. தெய்வம் இருப்பது…

    ஆடும் கோழியும் பலிகேட்டே
    ஆண்டவன் என்றும் வருவதில்லை,
    தேடும் இறைவன் வெளியிலில்லை
    தேடிப் பாராய் உன்னிடமே,
    கூடும் கூட்டமும் துணையில்லை
    கூறும் வார்த்தையும் உண்மையில்லை,
    வாடும் மாந்தர்க் குதவிடுவாய்
    வந்து சேரும் பரம்பொருளே…!

    -செண்பக ஜெகதீசன்…

  4. பலசாலிகளை பலியிடுவதில்லை
    • நம்பிக்கை வைத்தே
    நம்பி தான் வந்தோம்
    நம்பிக்கை நமக்கு
    மூடநம்பிக்கையோ அவா்களுக்கு
    • தழையிட்டவரென நம்பிடாதே
    தலைமுடி காணிக்கை அவா்களுக்கு
    தலையெடுத்தலோ நமக்கு
    • விரதம் இருப்பதும்
    விரதம் முடிப்பதும்
    வலியவன் சாத்திரம்
    • சாத்திரநீதியும் சூத்திர நீதியும்
    சாதுவான நம்மை
    நோ்த்திக் கடன் சொல்லியே
    நேரத்தில் முடிக்கும்
    • புகழ்ச்சியில் மயங்காதே
    மாலையிட்டு வீழ்த்துவது
    மனிதா் தம் மரபு
    • காத்திருக்கும் பலிபீடம்
    காலங்காலமாய்
    கதைமுடிப்பது
    கட்டுண்டவா்களை மட்டுமே
    • கொன்றால் பாபம்
    தின்றால் தீரும்
    நன்றாய் வகுத்தான்
    நரனுக்கான நீதியென்று
    • வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
    புல்லை காட்டி
    எல்லை தீட்டினான்
    • பலியிட்டு மகிழும் மனிதா்கள்
    பலசாலிகளை பலியிடுவதில்லை

  5. ஆத்தூரு சந்தையிலே
    ஆசைப்பட்டு வாங்கியது
    அனுதினமும் அன்பாக
    அனுசரித்து காப்பாற்றியது
    தான் செய்த பாவத்துக்கு
    மன்னிப்பு வேண்டி
    ஆட்டின் உயிரை
    அர்ப்பணிக்கும் சடங்கு
    கருப்ப சாமிக்கு பலி
    மறுப்பு தெரிவிக்கத்
    தெரியாத வாயில்லா ஜீவன்
    சாமியா சாப்பிடுகிறது
    ஆ சாமிஅல்லவா சாப்பிடுகிறான்
    தழைகளையும் இலைகளையும்
    சளைக்காமல் அறுத்துப்போட்டு
    தலையையே வெட்டப்போகும்
    தலையாய சடங்கு
    கழுத்தில் மாலைகளை போட்டு
    கழுத்தறுக்கும் சடங்கு
    மஞ்சள் நீர் தெளித்து
    கொஞ்ச நேரத்தில் பலி
    தன்னில் உறையும்
    விலங்கு குணத்தை
    அழியச்செய்வதாக எண்ணி
    இறைவனை எட்டுகிறார்களாம்
    தன் நிலை தெரியாதஆடு
    தன் எஜமானனின்
    கட்டளைக்குபட்டு நிற்கிறது
    ஆம் ஒரு சந்தேகம்…….
    வெள்ளை நிறஆட்டை
    காவு கொடுப்பார்களா ?
    கருப்பசாமிக்கில்லை
    இது வெள்ளைச்சாமிக்கு
    இடப்படும் பலியாக இருக்குமோ?
    இருக்கலாம்

    சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply to Mrs, Radha

Your email address will not be published. Required fields are marked *