திருக்கண்டியூர்-அருள்மிகு ஹரசாப விமோசனப் பெருமாள்

ag

அஞ்சுதலை பிரம்மனின் அடிபணிந்த உமையுமே

வஞ்சகமோ இதுவென்று நெஞ்சமதில் துவண்டு

அஞ்சுதலும் நீங்கிட அஞ்சிலொன்றைக் கேட்டிட

நஞ்சுண்ட நாயகனும் நான்முகனைப் படைத்தான் !

 

கொன்ற பாவம் கொண்டசாபம்  கூடிநிற்க

கொய்த தலை கையேந்திக் கூத்தனுமே

செய்தவினை சீரடையக் கையேந்தி நின்றான்

சிதம்பரத்துச் சீமான் பிச்சைக்கேட்ட பெரியோன் !

 

கைநின்ற கபாலத்தை விலக்கிடவே  கயிலனும்

வேண்டி நின்றான் வேங்கடனை வினைதீர்க்க

அஞ்சுதலை நாகத்தை அணிகொண்ட அரங்கனும்

நஞ்சுண்ட நாதனைக்  காத்திடவே  நலமுற்றான் .

 

மண்ணுக்குச் சாபம் மலரில்லா நிலமன்றோ

மலருக்குச் சாபம் மணமில்லா வாழ்வன்றோ

மலராத வாழ்வே மாந்தருக்குச் சாபமன்றோ

மந்திரம் ஏதுமின்றி மாற்றுவதே நீயென்றோ ?

 

சாபங்களை விலக்கிடும் சாந்தனே சடகோபா   

பாவங்கள் அளவின்றிப் பயிராகும் காலத்தில்

காலங்கள் கலியினில் கடைபோடும் நேரத்தில்

காத்திட வருவாயோ ! கண்ணனே! கருணாமூர்த்தி !

 

வேதனைகள் வென்றிடவே வேங்கடவா என்றிடுவேன்

சிந்தனைகள் ஒன்றாக்கி சீதரனே என்றழைப்பேன்

சோதனைகள் வரும்போது சொந்தமென இருப்பவனே

நர்த்தனமே நித்தியமும் நினைவுனதே நாரணனே  !

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *