ராஜி வெங்கட்

தாயக நினைவில்
தவிக்கும் நெஞ்சங்கள்

தவமாய் உழைத்து
தவற விட்ட நொடிகள் எதுவோ?

அன்னை கைச்சோறும்
அவளது ஆதரவுமோ?

அப்பாவின் அறிவுரையும்
அவரது கருத்துக்களுமோ?

மனையாளின் மகிழ்வும்
மனம் பெருகும் அரவணைப்புமோ?

உடன்பிறந்தோனின் 
உடன்பிறந்த சீண்டல்களோ?

தங்கையவளின் தர்க்கமும் 
தடையற்ற பாசமுமோ?

மழலையின் மொழிகளும்
மயக்கும் சிரிப்புமோ?

என்னென்ன விலைகள்
எல்லாம் நீ தந்தாய்?

இவையெல்லாம் இழந்து
இன்னொரு நாட்டில்
இயந்திர வாழ்விலே நீ !

 

படத்திற்கு நன்றி.

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தாயகத் தவிப்பு

  1. அந்நிய நாட்டில் வேலைக்காகவும் பணத்துக்காகவும் மட்டுமே இயந்திர வாழ்க்கை வாழ்ந்துவரும் நம்மவர்களின் இழப்பு கொஞ்ச நஞ்சமல்ல, அதற்காக அவர்கள் தரும் விலை மிக மிக அதிகம் என்பதை வெகு அழகாகவே சொல்லியுள்ளீர்கள். அத்தனையும் உண்மை தான்.

    எழுத்து வல்லமையுள்ள தங்களை ”வல்லமை” அடையாளம் கண்டு கொண்டு அங்கீகரித்துள்ளதை நினைத்து பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
    அதற்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.
    தொடர்ந்து எழுதுங்கள்!
    எழுத்துலகில் ஜொலியுங்கள்!!
    ஆசிகளுடன் vgk

Leave a Reply to வை.கோபாலகிருஷ்ணன்

Your email address will not be published. Required fields are marked *