பவள சங்கரி

அன்பினிய நண்பர்களுக்கு,

வணக்கம். கடந்த 220 வாரங்களாக வல்லமையாளர் தேர்வை மிகச் சிறந்த முறையில் நடத்தியுள்ள நம் வல்லமை ஆலோசனைக் குழு உறுப்பினர் திரு.திவாகர்,  முனைவர் தேமொழி, உயர்திரு செ.இரா. செல்வக்குமார் அவர்களையும் மனமார வாழ்த்தி, அடுத்து வல்லமை ஆசிரியர் குழு உறுப்பினர் பேரா. செல்வன் அவர்களை இப்பொறுப்பை ஏற்று நடத்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். மேலும் இப்பணியில் உதவிய திரு. இன்னம்பூரான், பேராசிரியர் நாகராசன் அவர்களையும் பாராட்டி மகிழ்கிறோம். இதுவரை 220 வல்லமையாளர்களை நாம் பாராட்டி மகிழ்ந்திருக்கிறோம். மேலும் பல வல்லமையாளர்களை திருமிகு பேரா. செல்வன் அவர்கள் தெரிவு செய்ய உள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

selvan

பெயர்: செல்வன்

தொழில்: கல்லூரி பேராசிரியர்
கல்வித்தகுதி: முனைவர் (வணிகவியல் மேலாண்மை)

எழுத்துகள் பிரசுரமான தளங்கள்: வல்லமை, திண்ணை, தமிழோவியம், குமுதம், தினமணி, ஆனந்த விகடன், தினகரன்

எழுதிய நூல்கள்: பேலியோ டயட் (கிழக்கு பிரசுர வெளியீடு)

நல்லுணவு நான் சொல்லுவேன் (மல்லிகை மகள் பிரசுரம்)

நிறுவனர்: ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமம். இது மூன்றரை லட்சம் பேர் கொண்ட தமிழின் முதன்மையான உடல்நலம் சார்ந்த குழுவாகும்

இவரது பேலியோ டயட் நூல் 2016ஆம் ஆண்டின் புத்தகக் கண்காட்சியில் விற்பனையில் இரண்டாமிடம் பிடித்தது. தினமணியில் வெளியான பேலியோ டயட் தொடர் தினமணி வலைதளத்தில் ஒவ்வொருவாரமும் தொடர்ந்து அதிகம் படிக்கப்பட்ட பக்கங்களின் வரிசையில் முதலிடத்தை பிடித்தது.

தற்போது இவர் குமுதத்தில் “வாழ்க கொழுப்புடன்” எனும் தொடரையும், மல்லிகை மகள் இதழில் “நியாண்டர் செல்வனின் கேள்வி-பதில்கள்” எனும் பகுதியையும் தொடராக எழுதி வருகிறார்.

இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால்,  holyape@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வல்லமையாளர் விருது பொறுப்பேற்கும், ‘பேலியோ டயட்’ புகழ் பேரா. செல்வன்

  1. ஜ்ன்று ஹோசூர் நண்பர் ஒருவர் எனக்கு பேலியோ டயட் பற்றி பரிந்துரைத்துடன் நில்லாமல், ஒரு அரை மணி நேரம் நியாண்டர் செல்வனை புகழ்ந்து தள்ளினார். தன்னுடைய குடும்பம். கூட்டுக்குடும்பம், பேட்டை, கிராமம், மாவட்டம் எல்லாம் பேலியோ டயட்டில் மிளிருவதாக கூறினார். எனக்கு பெருமையாக இருந்தது. செல்வன் நம்ம வீட்டுப்பையனப்பா என்று மார் தட்டினேன். நான் செல்வனிடன் எனக்கு நல்ல ஆலோசனை கேட்கப்போகிறேன். போனமாதம் எங்கள் குடும்பத்தில் கொழுப்பை கரைக்க வேண்டிய நபர் ஒருவருக்கு டாக்டர் பேலியோ டயட் பரிந்துரைத்தார். செல்வபெருந்தகையே! நீடூழி வாழ்க.
    இன்னம்பூரான்

  2. பேரா. செல்வனுக்கு நல்வரவு!

    அன்புடன்,
    மேகலா

  3. தின்ன (பேலியோ டயட்)

    என்ன கொடுப்பார்

    எவை கொடுப்பார்

    எம்மவர்கள் அறியுமுன்னே

    இனி….எழுத்தால்

    அயராப் போராளிகளுக்கு

    பேரா செல்வன் கொடுக்கும்

    வாராந்திர வல்லமை விருது..

    பேரானந்தம் கொடுக்கும்..

    என வாழ்த்துவோம்…

Leave a Reply to Innamburan

Your email address will not be published. Required fields are marked *