விவேக பாரதி 

 

கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து….இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் நான் கேட்ட ஒரு கிராமியப் பாடலின் மெட்டில்….

unnamed

வானம்விட்டு வந்தானோ ? மண்ணுக்குள்ள நின்னானோ ?
வார்த்தையால கட்டிப்போட்டு அவுக்காம போனானோ ?
ஞானஞ்சொல்லித் தந்தானோ யாருகிட்ட கேட்டானோ ?
ஞாலமெலாம் வாய்பொளக்க நாளும்பாடி வெச்சானோ ?

ஊனமுற்ற பேர்கள உசுப்பிவிடும் பாட்டுல,
ஊருக்குள்ள கேக்குற உற்சாகக் கூத்துல,
தானும்வந்து நிக்குறானடி – என் கண்ணம்மா
தமிழால சொக்குறோமடீ !

பாட்டுபாடி வந்தானே பாடமெலாஞ் சொன்னானே
பக்குவமா பக்தியோடு பலசேதி தந்தானே !
ஆட்டம்போட வெச்சானே அமையாக வெச்சானே !
ஆடி அடங்கிப்போகும் அர்த்தமெலாஞ் சொன்னானே !

கூட்டஞ்சேக்க பாக்கல ! கொள்கயெதும் பேசல !
கூட்டாளி யாகல ! குடுக்காம போகல !
நாட்டுக்குள்ள நிக்குறானடி – என் கண்ணம்மா
நாமபாத்து சொக்குறோமடீ !

கண்ணனுக்கு தாசனா ! கவிதைக்கெல்லாம் ராசனா !
கதசொல்லும் பாட்டுகளக் காலமெலாம் வீசுனான் !
வண்ணத்தமிழக் கொஞ்சுனான் ! வரிவரியாக் கொஞ்சுனான் !
வாழ்க்கையோட தத்துவத்த வாழ்ந்துகிட்டே பாடுனான் !

கிண்ணத்தையும் மறக்கல ! கீதையையும் மறக்கல !
கீழிருந்து வந்தவன் மறுபடியும் விழுகல !
எண்ணத்துல நிக்குறானடி – என் கண்ணம்மா
எழுத்தால சொக்குறோமடீ !

https://soundcloud.com/vivekbharathi/nlb3dghekzqg

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கவியரசர் கண்ணதாசன்

  1. நெஞ்சைத் தொடுகின்ற
    மனம் நிறைந்து நிற்கின்ற
    கண்ணதாசனின் புகழ்பாடும்
    அருமைக் கவிதை…

    இளங்கவி விவேக் பாரதிக்கு வாழ்த்துக்கள்….

  2. மிக்க நன்றி பெருவை பார்த்தசாரதி அவர்களே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *