Advertisements
Featuredhome-litஇலக்கியம்கவிதைகள்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி (144)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

26553007_1529077150479812_1199028853_n

லோகேஷ்வரன் ராஜேந்திரன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (20.01.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

Print Friendly, PDF & Email
Download PDF
Advertisements
Share

Comments (7)

 1. Avatar

  மாலை சூட நான் ரெடி!
  மணமகளே நீ எங்கடி??
  சலிச்சுப்போனேன் தேடி
  களச்சுப் போனேன் போடி!!
  கேக்குறாங்க வேல வெட்டி
  விரட்டுறாங்க விவசாயிங்காட்டி!!
  பட்டம் படிச்சுப்புட்டு
  பட்டணத்திலுக்காந்துட்டு
  பத்தாத சம்பளம்னாலும்
  பரிசம் போடுறாங்க!!
  பட்டிக்காட்டு பூமியில
  பக்குவமா உழுது
  பணம்நிறையசம்பாதிச்சாலும்
  மணம் முடிக்க மார்க்கமில்லே!!!
  பொண்ணு ஒண்ணு கொடுத்தா
  பூமாதிரி பாத்துக்குவேன்!!
  பொறுப்பான பையனுக்குப்
  பொண்ணுக்கொடுக்க யாரிருக்கா???.
  (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி..பவானி..
  ஈரோடு..9442637264..armurugan666@gmail.com….

 2. Avatar

  வல்லமை..மின்னிதழுக்காக..படக்கவிதைப்போட்டி(144)க்காக..மாலை சூட நான் ரெடி..எனும் கவிதை யைப்பதிவேற்றியுள்ளேன்.நன்றி..ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…9442637264..armurugan666@gmail.com….

 3. Avatar

  மாலை சூடும் மணாளன்
  ***************************

  இல்லறம் நடத்த உரியப் பருவமெய்தி
  இல்லாள் ஆகக் காத்திருக்கும் நங்கை!
  இதயத்தைக் கவர்ந்த நாயகனைக் கண்டு
  இனிய முகம் நாணுகின்ற மங்கை!
  நல்லெதிர் காலமதை மனதிற் கொண்டு
  நல்லாளை மாலையிடும் நாயகனின் செங்கை!

  நல்லோர் காட்டிய அறவழியில் பொருளீட்டி
  நல்வழியில் காத்து நின்றால்தான் உவகை!
  தான்தேடிக் கண்டவுணவுப் பண்டம் சிறிதெனினும்
  தன்னினத்தை மறவாது அழைக்கின்ற காக்கை!
  போற்றப்படும் நற்பண்பாம் என்றும் அது
  போன்றிருக்க வேண்டும் உங்கள் வாழ்க்கை!

  பெற்றோரை மறந்து பிறந்தகத்தை துறந்து
  பெற்ற பேறாக உனைக்கருதும் பதுமை!
  உறுதியுள மனமோடு இறுதிவரை உன்னோடு
  உற்றத் துணையென இருப்பது அருமை!
  பிறழாத நெறியோடு மாறாத அன்போடு
  பிரியாமல் வாழ்வதே என்றும் இனிமை!

  இல்லாத நிலையென்று ஒன்று வந்தாலும்
  இயன்றவரை வைத்துத் தாங்கட்டுமுனது அங்கை!
  தள்ளாத நிலையென்று ஒன்று வந்தாலும்
  தோள் கொடுத் துதவுவதே இயற்கை!
  கள்ளமற்ற முகத்தாளை மறவாமல் ஒருபோதும்
  காப்பதுவே உன் தலையாயக் கடமை!

   -ஆ. செந்தில் குமார்.

 4. Avatar

  முதலில் வேலை…

  வேலை தேடிடும் வயதினிலே
  வெற்றி காண எண்ணாமல்,
  மாலை தன்னைக் கையிலேந்தி
  மணமகள் தேடி யலைந்தாலே,
  சோலை யாகும் வாழ்வதுவும்
  சொல்ல வியலா வகையினிலே
  பலை யாகிப் பயன்தராதே
  போயிடும் படித்த வாலிபனே…!

  -செண்பக ஜெகதீசன்…

 5. Avatar

  யாருக்கு இந்த மாலை ! புன்னகையுடன் ஒரு இளங் காளை!
  கையில் கட்டி வைத்த மலர் மாலை!
  யாருக்குச் சூட்டப் போகிறாய் இந்த மாலை!
  உனக்கு படிப்பு சொல்லிக் கொடுத்த!
  ஆசிரியருக்கா இந்த மாலை!
  அவர் சொல்லித் தந்தபடி வாழுகின்ற வேளை!
  தேவையில்லைஅவருக்கு இந்த மலர்மாலை!
  நாம் வாழ, தன் வாழ்வை தியாகம் செய்த!
  தலைவருக்கா இம் மாலை!
  அவரைப் போல பிறருக்கு நன்மை செய்யும் வேளை!
  தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
  நமக்கெல்லாம் உணவு தரும்!
  உழவருக்கா இம் மாலை!
  விளை நிலத்தை,மனை நிலமாய் மாற்றாத வேளை!
  தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
  உனை கருவில் சுமந்து உடலும்,உயிரும் தந்த!
  உன் அன்னைக்கா இம் மாலை!
  உன்னோடு அம்மாவை வைத்திருந்து சீராட்டும் வேளை!
  தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
  உடலாலும், மனதாலும் உனைச் சுமந்த!
  உன் தந்தைக்கா இம் மாலை!
  அவர் சுமையை நீ சுமக்கும் வேளை!
  தேவையில்லை அவருக்கு இந்த மலர் மாலை!
  அன்னை, தந்தை, தன் சுற்றம், தன் வீடு!
  அத்தனையும் உனக்காக விட்டு வரும்!
  மணப் பெண்ணுக்கா இம் மாலை!
  மலர்களால் சரம் தொடுத்த இந்த மாலை!
  நீ தரப் போகும் அன்பு, பரிவு, காதல், புரிதல்,
  நட்பு என்ற மலர்களை சுட்டிக் காட்டும் அழகு மாலை!

 6. Avatar

  மலர்மாலையின் பாமாலை..!
  ==========================

  மாலையிலே வானில்மறையும் கதிரவனின் மதிமயக்கும்..
  .
  ……….மனதைக்கவரும் சிவப்பழகைக் கண்குளிரக் காண்பீர்.!
  .
  காலையிலே மறைகின்ற வெண்ணிலவின் வெளிச்சமும்..
  .
  ……….கருநீலத்தில் விடை பெறுமழகையும் கண்டுகளிப்பீர்.!
  .
  ஓலைக்கீற்றுகள் ஒன்றோடொன்று உரசியெழுப்பும் கீத..
  .
  ……….ஒலியில் புள்ளினங்கள் சேர்ந்து பாடுவதை ரசிப்பீர்.!
  .
  மாலையிலே சேர்கின்றபல வண்ணமிகும் மலர்களின்..
  .
  ……….மனமீர்க்கும் வாசனையைக் கண்டுணர்ந்து நுகர்வீர்.!
  .
  .
  .
  .
  ஒருசோலையிலே பலவண்ண நிறத்தில் மலர்ந்தாலும்..
  .
  ……….ஒன்றான மாலையாகச் சேர்ந்தால்தான் மதிப்பாகும்.!
  .
  பெருமானின் தலையிலோ காலடியிலோ கிடந்தாலும்..
  .
  ……….பெருமை தானெங்களுக்கு சிறுமையில்லை அவனின்..
  .
  கிருபையால் எமக்கெங்கு சென்றாலும் பெருமைதான்..
  .
  ……….கருணைக்கும் அன்புக்கும் அடையாளச் சின்னம்!யாம்
  .
  தரும் சுகத்திற்கோர் எல்லையுமுண்டோ இவ்வுலகில்..
  .
  ……….தாரணியில் நிகழும் எவ்விழாவிற்கும் யாம்தலைமை.!

 7. Avatar

  யாருக்கு மாலை?

  மாலையிடு தம்பி மாலையிடு
  மணவாட்டி கழுத்தினிலே மகிழ்வோடு மாலையிடு
  ஆலயத்தில் இறைவனை நீ அர்ச்சித்து மாலையிடு
  கோலமிடு விளக்கேற்று குப்பை களைப் பொறுக்கு.

  வீரனாய் வெற்றி பெற்று விளையாட்டுப் போட்டிகளில்
  வீதி வலம் வருகின்ற விண்ணர் களைப் போற்றி
  மாலையிடு தம்பி மாலையிடு – அவரை
  மகிழ்வித்து ஊக்குவிக்க மாலையிடு.

  ஆத்தா இடுப்பிருந்த அரைக்காசை முடிச்சவிழ்த்து
  கூத்தாடி படம் ஓட, குடத்திலே பால் வாங்கி
  ஊத்தாதே கட்டவுட்டில் ஒரு முழமும் பூ வாங்கிச்
  சாத்தாதே கண்ணா! வீண் தறுதலையாயாகாதே.
  கூத்தாடிக் குந்தி நெளிப்பவரைச் சேவித்தல்
  ஆத்தாதவர் தொழிலாம் அவரையெலாம் போற்றி
  ஏத்தாதே ஐயா! எமக் கெதற்கு வீண் வேலை.

  படம்நூறு நாளோட பக்திப் பரவசத்தில்
  மண்ணிலே சோறிட்டு மடையனைப் போல் உண்ணாதே
  கண்ணா உனக்காகக் காத்திருக்கு உன் குடும்பம்
  எண்ணு அதை! மூட இரசிகனெனும் பேர் வேண்டாம்.

  கோயில் சிலைகளுக்குக் குடம் குடமாய்ப் பாலூற்றும்
  கொடுமைதனை ஆண்டவனே சகிக்க மாட்டான்
  கூத்தாடிக் கட்டவுட்டைக் கும்பிட்டு மாலையிடும்
  கோமாளித் தனந்தன்னை மன்னிப்பானா?

  மாலையிடு தம்பி மாலையிடு
  மணமகளாம், வரப்போகும்
  மனைவிக்கு, மாலையிடு
  ஆலயத்தில் இறைவனுக்கு,
  அழகு செய்ய மாலையிடு
  அசகாய சூரர்களாம்
  விளையாட்டு வீரருக்கு
  அழகான மாலைகட்டி
  அகமகிழ மாலையிடு.

Leave a Reply to Ar.muruganmylambadi Cancel reply