180122 -Saraswati -lr watercolour 24x32cms
180122 -Saraswati -lr watercolour 24x32cms

 

வந்தனம் பாரதி வாணி சரஸ்வதி
மந்தனென் மூளை முடுக்கினில் -வந்துநுண்
ஆன்ம தரிசன ஆர்வம் பெருக்கிடு
நான்மகன் அன்றோ நினக்கு….!

நாள்செல்ல நாள்செல்ல, நாம்செல்ல வேண்டுமே
ஆள்கொல்லி கூற்றன் அழைப்பானே! -கேள்நல்ல
வார்த்தைக்(கு) அதிபதி வாணியைப் போற்றிடப்
பூர்த்தியா கும்பார் பிறப்பு….!

”சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
வெண்பாவாம் அன்னம்(தாமரை), வஸந்தருது பஞ்சமியில்,
பெண்பாவாய் பாடிப் பற”….!

பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
காவியம் கொட்டும் களிப்பு….!

‘’நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….

படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
வேலொத்து பாய்ச்சும் வசவு….!
”சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
துங்கையின் தீரத்தில் தேவிதன்,ச -தங்கையின்
சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
வித்தை சிருங்கேரி வாய்த்து”….கிரேசி மோகன்….!

’’வஸந்தருது கேசவ், வரைந்த விதத்தில்
அஸந்தயென் மூளைக்குள் அன்னம்(அன்னமயகோஸம் -ஆன்மா)-பிஸைந்தூட்டு-
பாரதி சாலப் பரிந்துநீ ,பஞ்சமியில்,
வேறெதிர் பார்ப்பெலாம் வீண்’’….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *