குடியரசு கொண்டாடும் பாரத மாதாவுக்கு வாழ்த்துக்கள்

1

 

பறக்கின்றது !

தேசிய சுதந்திரக் கொடி

பறக்கின்றது !
சுதந்திரமான தென்றலதன்

சுந்தரமான தாலாட்டில்

தன்னை மறந்தின்று

சோதரரின் மேன்மை பரப்பிடும்

இந்தியத் தேசியக்கொடி

பறக்கின்றது.
அந்நிய ஆதிக்கத்திலிருந்து

அன்னை பாரதமாதா

முற்றாக தன்னை விடுவித்த

பெருமை சாற்றுமிந்த

குடியரசுத் தினத்தில்

கொடி பறக்கின்றது.
முன்னை எம் பாட்டன்

முத்தமிழ்க் கவிஞன்

முப்பெரும் புலவன் பாரதியின்

முழுமுதற் கனவு மெய்ப்படவே

பாரத தேசியக்கொடி

குடியரசான தினத்தை

உலகிற்கியம்பிய வண்ணம்

வண்ணக்கொடி பறக்கின்றது
ஜயன் வ.உ.சி, சுபாஷ் சந்திரபோஸ்

சுப்பிரமணி சிவா, திருப்பூர் குமரன்

வ.வெ.சு ஜயர் என எத்தனையோ

சுதந்திரப் போராட்ட வீரர்களின்

தாயகக் கனவுகளின் ஆதாரமாய்

குடியரசு நாமடைந்தோம் என

கும்மியடித்திங்கு பாரதக் கொடி

நிமிர்ந்தே பறக்கின்றது
உலக அரங்கிலே

தனக்கென ஓர் தனியிடத்தை

தன் மக்கள் உழைப்பின்

திறன் கொண்டு பெற்றிட்ட

பாரத அன்னை இக்குடியரசு தினத்தில்

ஏற்றமுடன் நிமிர்ந்தே நின்று

தேசியக்கொடி மூலம் தன் பெருமை

பறைசாற்றும் வகையிலின்று

கொடி பறக்கின்றது.
குடியரசு தினத்தில் என் இனிய

அன்பு தமிழக, மற்றும் இந்திய

சோதர, சோதரியர்க்கு அன்பான

வாழ்த்துக்கள் கூறி வாழ்த்துகிறேன்
அன்புடன்

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குடியரசு கொண்டாடும் பாரத மாதாவுக்கு வாழ்த்துக்கள்

  1. இருந்தாலும் இந்தியா!!
    ==========+=========
    குடியரசு அணிவகுப்பு
    கோட்டை கொத்தளத்தில்
    குதூகலமாய்நடக்க
    கொடியேற்றம் நாடெங்கும்!!
    பிரசங்கங்கள் எல்லாம்
    பீரங்கிகளாய் எங்கெங்கும்!!
    சாகசங்கள்..சாதனைகள்…
    சாமானியவேதனைகள்…
    நாடென்றிருந்தால்
    நாலும் இருக்குந்தான்!!
    குடியானவன் வாழ்க்கை
    கொஞ்சநஞ்சதுயரமா??
    விவசாயி இந்நாட்டில்
    விசங்குடித்துசாவது
    திசைக்கொன்று கிடையாது..
    தினசரி நடப்பது…
    படிப்பிலே ஏற்றதாழ்வு _
    பணத்துக்குகல்வி காவு!!
    பசியாற்றும் உணவு
    பாசானமாகிதருகிறதுநோவு!!
    இயற்கையைத் தொலைத்து
    இயந்திரத்தோடு
    இயந்திரமானோம்!!
    இருந்தாலும் உலகத்தில்
    இந்தியா முந்தியாய்
    வந்திட வேணுமென
    வட இமயம் முதல்
    வளமிகுகுமரி வரை
    ஒருகுரலில் ஒலிப்பது தான்..
    ஒருமைப்பாட்டின் உதாரணம்!!
    இன்னும் பல நூறாண்டு
    இயங்குவோம் இதே பெருமையோடு!
    (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி..
    பவானி…ஈரோடு…
    9442637264..)

Leave a Reply to Ar.muruganmylambadi

Your email address will not be published. Required fields are marked *