அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

Padak kavithai pOtti

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (160)

  1. கனவின் நிதர்சனம்!!
    ==================
    மருத்துவர்..பொறியாளர்..
    மகத்துவப் படிப்புக்கள் என
    மாரடிக்கும் நவீன காலத்தில்
    மாடுவளர்ப்பும் விவசாயமும்
    மாண்புமிக்கவை என்பதை
    மாணவியின் நிமிர்ந்த நடை
    மனிதருக்குணர்த்துகிறது!!
    மட்டில்லாப் படிப்பினிடையே
    மாலைதோறும் கிடாரியோடு
    மாறாத அன்பைப்பொழிந்து
    மற்றவர்க்கு உதாரணமாய்
    மகிழ்விக்கும் பெண்பிள்ளை
    மதியாலே விதி வெல்லும்
    மார்க்கமதை அறிந்தவரே!!
    மண்வாசம் மறந்துவிட்டால்
    மற்றெதுவில் வளர்ந்தாலும்
    மறுமலர்ச்சி கிடைத்திடுமா??
    மழலையைப்போல் கால்நடை
    மவுனமாய் குலம் காக்கும்..
    மாயவனின் கோத்திரமுதித்த
    மடிப்பால் பசு வளர்த்திட்டால்
    மனை வளரும்..நம் மரபுயரும்
    மங்காத செல்வம் தங்கும்!!!
    மக்களுக்கு வளம் பெருகும்!!
    =========+====+==========
    ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
    பவானி…ஈரோடு…
    9442637264….
    ==========================

  2. விசித்தவொன்றெனப் பூட்டிய கயிறு
    அசித்தையேறா சித்திநன்றிருந்தும்
    வசித்தவாறே வசப்படும் விலங்கு
    தசித்தவாறே அது அசைபோட்டயரும்!
    நாசினிகளின் அங்குலப் (போ)பார்வை
    பசிக்கு என் போகம் நீ என்றாள
    துசிவெறியிம்சையில் இசியும் நல்தேகம்
    தூசி நீயென சொற்செயல் ரோதனை
    ஊசித்தைதனம்; பாலியலிடுக்கண்
    உசித்தம் வாலைப் பசுவெனப் பகர்ந்து
    பூசித்தவாறே புசிக்கும் மும்மாமிசம்
    ருசித்து ருசித்து ருசுவேறியதால்
    ரசித்து ரசித்து ரணகள வன்முறை
    ஏசித்து வேசித்து தொழுவினம் தாழ்முறை!
    பிரசித்துக் கன்னிகை பசுபதிபாச முழக்கு
    நிசித்தபடியே திருமகள் பசுவதை வழக்கு
    ஒசித்துப்போட்ட அவளாசைகள் ஆயிரம்
    மசித்துமசித்து விழுங்கிய பதிநாயிரம்
    முசித்த நெல்லின் வைக்கோற்பிரியென
    திசித்த அவள் குஞ்சத்து வரள்முடி ஊசல்
    கசித்தவாறே அவளெடுத்த வெறும்பாதம்
    பிசித்தமனதுடன் கால்நடைப்பா(ர்)வை
    ஓசித்து ஓசித்து உள்ளுள் உதிர மகோசம்
    ரோசித்துச் சேர்ந்த இத்தோழமை நெகிழுதே!

  3. பெண்ணே பெண்ணே…

    பள்ளிசெலினும் பசுமாட்டை மறவாப் பெண்ணே
    பண்பிதுதான் பேர்சொல்ல வைக்கும் உன்னை,
    உள்ளம்நிறை அன்புடைய பசுவைப் பேணல்
    உன்வாழ்வின் வழிகாட்டி யாவதைப் பாராய்,
    கள்ளமில்லை கபடமில்லை கன்றுக் கூட்டும்
    கருணையது உன்வாழ்வின் வழியைக் காட்டும்,
    எள்ளளவும் வெறுப்பின்றி இதையே செய்வாய்
    ஏற்றமுந்தன் வாழ்விலுண்டு காண்நீ பெண்ணே…!

    செண்பக ஜெகதீசன்…

  4. பெண் பிள்ளையும், பெண் கன்றும்

    விவசாயத்தின் இன்றியமையாத பிரியாணிகள் எருதும் பசுவும்

    விவசாயின் பெண்ணே தன் இளம் கிடேரி கன்றை அழைத்துச் செல்கிறாள்

    அவள் பச்சை நிற சீருடையுடன் பச்சை புல் மேய கூட்டிச் செல்கிறாள்

    எதிர்காலத்தில் கன்று ஈந்து நன்மை பயக்கும் என் எண்ணிச் செல்கிறாள்

    பச்சை உடை அணிந்து பசும் புல் மேய்ப்பதற்கு அழைத்து செல்கின்றாள்

    அது அவளுக்கும் நடை பயிற்சி, கூட வரும் கடேறிக்கோ மேய்வதற்கு முயற்சி

    பின்னே வருபவன் போறாளே, போறாளே,பள்ளிக்கூட பெண் மேய்க்க போறாளே !

    அவள்,அக்கடேறி எதிர்காலத்தில் பால் தருமே நினைந்து ஒட்டிக்கொண்டு செல்கிறாளே !

    மனிதனை நம்புவதை விட ஐந்தறிவு பிராணியை நம்பலாமே

    நாயும், பசுவும் செய்ந்நன்றிக்கு என்றும் ஓர் உதாரணமே

    இன்னும், ஓராண்டில் பசுவும், கன்றுமாய் அழகாய் காட்சியளிக்குமே

    ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் நிறைந்து தோன்றுமே !

    ரா.பார்த்தசாரதி -8148111951

  5. ஆய்க்குலப் பெண்ணும் ஆநிரையும்..!
    ==============================

    திருமூர்த்தி மூவரின் தெய்வத் தன்மையை
    ……….தன்னுள் கொண்டுள்ள தெய்வீகப் பசுவாம்..!
    திருப்பணிகள் நடக்கு மிடத்தில் தர்மத்தின்
    ……….உருவாய் உனக்கு உண்டு முதல்மரியாதை..!
    திருமூலரும் சொன்னார் அறம் வளர்க்கவே
    ……….அருகம்புல் கொடுங்கள் பசுவுக் கென்றார்..!
    திருக் கோவிலுள் தெய்வத்திற் கிணையாக
    ……….திருமகளாம் பசுவுக்கு மங்கே இடமுண்டு..!

    வசுதேவன் மகனால் பசுவுக்குப் புகழதன்
    ……….வால்முதல் தலைவரையில் தெய்வீக முண்டு..!
    பசுவென்றால் பெண்பாலே!அது கொடுக்கும்
    ……….பெருங் கொடையதுவாம் பாலும் நெய்யும்..!
    அசுத்தத்தைச் சுத்தமாக்கும் அதன் சாணம்
    ……….அது கழிக்கும் சிறுநீரும் அருமருந்தாகும்..!
    விசுவாசம் கொண்டே அதனை வளர்ப்பார்
    ……….வீட்டில் அதுவுமொரு செல்லப் பிராணியே..!

    மாநிலம் தழைக்க மாடுகன்றைக் காக்கவும்
    ……….மகத்தான திட்டமொன்றை வகுக்க வேணும்..!
    ஆநிரை அழித்தலைத் தடுத்திட நீங்களும்
    ……….அறிவுப் பூர்வமாய்ச் சிந்தித்திடல் வேணும்..!
    கைநிறையப் பொருளீட்ட ஒரு வகையில்
    ……….கால்நடை அபிவிருத்தியும் மிக வேணும்..!
    ஆநிரை மேய்க்கப் போகுமிளம் பெண்ணே
    ……….ஆய்ச்சிய ராவதற்கு ஆனாயனருள் வேணும்..!

  6. மடியில் தனம் புடைக்கும் காம்பில் வகிர்ந்தளிக்கும்
    முடியில் கொப்புடைக்கும் காலில் பிள்ளை விளையாடும்
    கெடிவாலைத்தெய்வமென்பர் உணர்வில் வசப்படுமே
    துடி நங்கை காமதேனு வெனவோது

Leave a Reply to R.Parthasarathy

Your email address will not be published. Required fields are marked *