பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

 வனிலா பாலாஜி எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (09.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (164)

  1. தஞ்சாவூரு பொம்மையிது… தலையாட்டும் பொம்மையிது…
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ.செந்தில் குமார்.
    தஞ்சாவூரு பொம்மையிது…
    தலையாட்டும் பொம்மையிது…
    தொட்டுவிட்டால் போதுமே…
    தைதையென ஆடுமே…!

    தலைமைப்பதவி வகித்திட…
    தகுதியிது போதுமா…?
    ஆட்டுமந்தைக் கூட்டமாய்…
    ஆகிடுதல் நியாயமா…? (தஞ்சாவூரு…)

    தனதுபதவி நிலைத்திருக்க…
    தாழ்பணிதல் ஆகுமா…?
    தலைநிமிர்ந்துப் போராடும்…
    துணிவிருக்க வேண்டாமா…? (தஞ்சாவூரு…)

    காசுவாங்கி ஓட்டுப்போடும்…
    கயமைத்தனம் ஒழியனும்…!
    டாசுமாக்கு கடையெல்லாம்…
    தமிழ்நாட்டைவிட்டு ஓடனும்…! (தஞ்சாவூரு…)

    நீட்டுத்தேர்வு என்பதெல்லாம்…
    நாட்டிற்குத் தேவையா…?
    நியாயமானப் போராட்டத்தை
    நசுக்கிடுதல் நல்லதா…? (தஞ்சாவூரு…)

    நாதியற்ற மக்களுக்கு…
    நல்லவழி பிறக்குமா…?
    நேர்மையற்ற ஆட்சி நாட்டில்…
    நிலைத்திடுதல் ஆகுமா…? (தஞ்சாவூரு…)

  2. தலையாட்டும் நடன பொம்மை

    நாடகமே உலகம், ஆடுவதோ ஓர் நாட்டியமாடும் பொம்மை

    ஒருகை மேலே, ஒரு காய் கீழே நின்று ஆடும் நடன பொம்மை

    இன்றைய ஆட்சியும் மேலிடத்திற்கு கீழ்ப்படிந்து நடக்குதே

    தன்னாட்சி கவிழாமல் இருக்க மேலிடத்திற்கு பணிந்து நடக்குதே!

    இன்றைய அரசியல்வாதிகளே தலையாட்டும் பொம்மைகள்

    ஆட்சி கவிழாமலிருக்க ,மேலிடத்து உறவை நாடும் மனித பொம்மைகள்

    கொடுமைகள் புரிந்துவிட்டு பூசி,மழுப்பி நிற்கும் கொடுங்கோலர்கள்

    ஜனங்களை ஆட்டுமந்தையென நினைத்து செய்யும் கொடுமைகள்!

    தன் பதவி நிலைக்க தன்மானத்தை அடகு வைக்கும் கூட்டம்

    மக்கள் நலனை துன்பத்தையும் கண்டும் காணாத ஆட்சிக் கூட்டம்

    பணத்தை சுரண்டி அதனை மறைக்க, எடுபிடி செய்யும் கூட்டம்

    மக்கள் குறைகளை தீர்ப்பதுபோல், பொய்ப்பிரச்சாரக் கூட்டம் !

    பணத்திற்காக வோட்டு போட்டு மண்டியிடும் ஒரு கூட்டம்

    அக்ஷிய பாத்திரத்தை கொடுத்து பிச்சை எடுக்கும் கூட்டம்

    புதிய மது பான கடைகளை எதிர்த்து போராடும் கூட்டம்

    நடுத்தெருவில் கூடி நடத்தும் போராட்ட கூட்டம் !

    ஆளுநரும், மந்திரிகளும் கைபொம்மையாய் செயல் படுத்தே

    இப்பொழுதும் மக்களின் குறைகளை தீர்க்க தயக்கம் காட்டுதே

    மக்கள் எதிர்த்தாலும், அடக்கு முறையை தயக்கமுமின்றி செய்யுதே

    ஜனநாயக நாடா, எதேச்சதிகாரம் கொண்ட அரசாக விளங்குதே !

    மக்களே! பணத்திற்காக தன்மானத்தை அடகு வைக்காதீர்

    தண்ணீருக்காகவும், மணல்கொள்ளைக்கும் எதிர்த்து போராடுவீர்

    தமிழனின் தனித் தன்மையை உணர்ந்து உயிருள்ளவரை போராடுவோம்

    மக்களின் துயர் துடைக்காத அரசை பதவியில் இருந்து இறங்குவோம் !

    ரா.பார்த்தசாரதி

  3. ஆட்டம்…

    ஆடும் பொம்மை ஆட்டமென
    ஆடியே அகில வாழ்வினிலே
    நாடும் நன்மைகள் நமக்கெனவே
    நாளும் தலையை ஆட்டிடுவர்,
    கேடு சூழ்ந்து வருவதையே
    கருத்தில் யாரும் கொள்வதில்லை,
    தேடு வாழ்வில் நல்லதையே
    தெரிந்து நடந்தால் இடரிலையே…!

    செண்பக ஜெகதீசன்…

  4. பொம்மை சொன்ன உண்மை ::::::::: நான் நடனம் ஆடுகின்ற பொம்மை!
    காற்றிலாடும் பொம்மை!
    சொல்வதெல்லாம் உண்மை!
    இதை செவிமடுத்தால் விளையும் என்றும் நன்மை!
    பயனில்லா நிகழ்வு தானே மனிதனின் ஆட்டம்!
    நூல் இருக்கும் வரையில் தானே பட்டத்தின் ஆட்டம்!
    இலக்கில்லா பயணம் தானே மனிதா உன் ஆட்டம்!
    உயிர் இருக்கும் வரை தானே மனிதா உன் ஆட்டம்!
    ஆணவத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் வாழ்வை அழித்து விடும் ஆட்டம்!
    மது அருந்தி நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் குடும்பத்தை அழித்து விடும் ஆட்டம்!
    ஆடம்பரத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
    உன் அடுத்த தலைமுறையை அழித்து விடும் ஆட்டம்!
    கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாகும்!
    காற்றின் ஆட்டம் புயலாகும்!
    பூமியின் ஆட்டம் பூகம்பமாகும்!
    ஆற்றின் ஆட்டம் வெள்ளமாகும்!
    அளவிற்கு மீறிய ஆட்டமென்றும் அழிவாகும்!
    அடங்கி நடந்தால் உன் வாழ்க்கை இனிதாகும்!

  5. கலைக்கு அழகு
    ==============

    வாடாது முகம்மலர வந்தவரை
    ……….வரவேற்பதில் ஒரு மகிழ்ச்சியாம்..!
    ஆடாது நிற்குமொரு காட்சியிலே
    ……….அருமை நடனமாடும் மங்கையாம்..!
    மூடாது கண்ணிமை விழித்திருக்கும்
    ……….முந்தானை இல்லாத பொம்மைதான்..!
    கூடாது மற்றொன்றுடன் தனிநின்று
    ……….கொலுவிலே வீற்றிருக்கும் நாயகி..!

    வீட்டுக்குள் உள்ள அலமாரியில்
    ……….வியக்கு மாறுநீயும் அலங்கரிப்பாய்..!
    பூட்டுப் போடவும் அவசியமில்லை
    ……….பொம்மைதானே எங்கே ஓடுவாய்..!
    ஆட்டுவிப்போர் இல்லாமலே நீ
    ……….ஆட்டம் போடுவது கடினம்தான்..!
    கூட்டுக் கொள்ளை அடிப்போரை
    ……….கண்டு விட்டால் கூத்தாடுவாயா..?

    தலையாட்டும் செய்கையைத் தானே
    ……….தன்னிச்சையாய்ச் செய்ய முடியாது..!
    விலை கொடுத்து வாங்கியபின்னே
    ……….விளையாடத் தட்டுவார் தலையை..!
    சிலைபோல நின்றாலும் உனக்குச்
    ……….சிங்காரச் சிற்றுடையும் அழகுதான்..!
    கலைப் பொருளாக உன்னையாக்க
    ……….களிமண்ணும் கொடுக்கும் கொடை..!

  6. அசையாதசையும் நினதிசயம் என்னென்பேன் என்னென்பேன் பாவாய்
    ஆசைபடுமனம் தேடும் புனைவேடம் ஒழியெனக் காட்டுகிறாய் எம்பாவாய்
    இசைவதுவசையாதென்றோ ஏதொன்றும் பேசாயடி எந்தன் பாவாய்
    ஈசைவாழ்த்து ஈசை வாழ்த்துவெனவோ நின்வலக்கரம் வாழ்த்துது எம்பாவாய்
    உசைத்தாலும் விசைத்தாலும் நிலைநடுங்காது நில் என்பாய் எம்பாவாய்
    ஊசைமேனிமினுக்குள் மின்னமாய் ஞானம் சேரெனப் பார்க்குமென் பாவாய்
    ஒசித்தயோசனை பின்னி நிமிர்நெஞ்சுகொள்ளெனப் பணித்தனை எம்பாவாய்
    ஓசையொழிந்த உன்னாடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே எம்பாவாய்
    ஒளவியம் கூடாதென பயனில பழுதென இதழ்பூட்டி இறுக்குமென் பாவாய்
    அஃ றிணைக்குயர்திணை சார்பெனவோ அபிநயநடை எடுத்தனை எம்பாவாய்?

Leave a Reply to Shenbaga jagatheesan

Your email address will not be published. Required fields are marked *