முனைவர் அண்ணாகண்ணன்

தமிழில் முனைவர்ப் பட்ட ஆய்வேடுகளைச் சமர்ப்பித்த பிறகு, பொது வாய்மொழித் தேர்வுக்கு முன், அதனைப் பொதுவில் பார்வைக்கு வைப்பர். அதனைப் படித்து, அதன் மீது யாரும் கேள்வி எழுப்பலாம் என்பது எதிர்பார்ப்பு. ஆனால், நடைமுறையில் இவற்றைப் படிப்பாரும் இல்லை; ஆராய்வாரும் இல்லை. கேள்விகள் அனைத்தும் பொது வாய்மொழித் தேர்வு அரங்கில் ஆய்வாளர் பேசுவதை அல்லது தலைப்பை வைத்தே கேட்கப்படுகின்றன.

சமர்ப்பிக்கப்பெறும் ஆய்வேடுகளின் மென்படி ஒன்றினை இணையத்தில் வைத்தால், அதனை உலகில் எங்கு உள்ளவரும் படித்துக் கருத்துக் கூறலாம். இதற்குக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழக மானியக் குழுவும் முன்முயற்சி எடுக்க வேண்டும்.

அதற்கு முன்னதாக, இப்போதுள்ள நடைமுறைப்படியே, நூலகத்தில் வைக்கப்படும் ஆய்வேடுகளை அந்தக் கல்லூரியிலோ, பல்கலைக்கழகத்திலோ பயிலும் சக மாணவரோ, வழிகாட்டி அல்லாத வேறு பேராசிரியரோ ஆராய்ந்து ஒரு கட்டுரை அளித்தால், ஆய்வின் தரம் இன்னும் மேம்படும்.  ஆய்வின் சிறப்பம்சங்களையும் உலகறியச் செய்யலாம்.

இத்தகைய கட்டுரைகளை வெளியிட, வல்லமை மின்னிதழ் (https://www.vallamai.com) அணியமாக உள்ளது. ஆய்வாளர்கள் உள்ளிட்ட மாணவர்கள், பேராசிரியர்களின் ஒத்துழைப்பினை நாடுகிறோம். ஆய்வேடுகளின் மீதான திறனாய்வினை அனுப்ப வேண்டிய முகவரி: vallamaieditor@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஆய்வேடுகளின் மீதான திறனாய்வு

  1. +AnnaKannan K Your suggestion is very appropriate. In this socially highly connected world, we should be providing more reviews and feedback to the researchers.

Leave a Reply to Sowmyan

Your email address will not be published. Required fields are marked *