The ravens caw -அண்டங்காக்கையின் கரைவு

2

பவள சங்கரி

 

கொரிய தமிழ் கலாச்சார உறவு!

 

நம் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்ற கொரிய கவிஞர் கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச் சிறந்த கொரியக் கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநர், சியோல், சர்வதேச கொரிய எழுத்து மையம் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் போன்ற பல சமூக, இலக்கிய அமைப்புகளில் உற்சாகமான பங்கேற்பாளர். வல்லமையாளரான [https://www.vallamai.com/?p=78004] அவர்தம் கவிதையும் என் மொழிபெயர்ப்பும்… [https://www.vallamai.com/?p=84392 – நூல் வெளியீட்டு விழா]

The ravens caw

In swooping, metallic cacophony
the ravens caw.
With primary colors
flowers bloom on the thick branches.
Yet they appear as countless
hungry eyeballs.

From the beginning,
holding firm to the inevitable cycle of life,
millions of souls shall come into being
as already have been in the world.

In my worldly forties
I stepped on the land of karma.
Only by stepping out of this parched land
will I extinguish my burning sentiment of wrath.

 

அண்டங்காக்கையின் கரைவு

 

திடீர்த் தாக்குதலால் அண்டங்காக்கைகள்
அசூயையான உலோகக் குரலில் கரைகின்றன.
ஆரம்பக்கால வண்ணங்களுடன்
அடர்ந்த கிளைகளில் அழகாக மலரும் மலர்கள்.
இருப்பினும் அவை எண்ணற்ற
பசித்த கருவிழிகளாகவே காட்சியளிக்கின்றன.

ஆரம்பக் காலத்திலிருந்தே,
வாழ்வின் தவிர்க்க இயலாத சுழற்சியிலும் உறுதியைக் கடைப்பிடிப்பது,
ஏற்கனவே உலகில் இருந்து கொண்டிருப்பதைப்போன்று
மில்லியன் கணக்கான ஆன்மாக்கள் வரக்கூடும்.

என் உலகின் நாற்பது வயதில்
கர்மாவின் களத்தில் நுழைந்தேன் நான்.
இந்த வறண்ட நிலத்திலிருந்து வெளியேறுவதன் மூலமே
கொழுந்து விட்டெரியும் என் கோபத்தை அணைப்பேனோ நான்.

 

பி.கு. கவிஞர் முக்கியத்துவம் கொடுத்துக் குறிப்பிட்டுள்ள அண்டங்காக்கை எனும் பறவை நம் புராணக் காலந்தொட்டு இன்றுவரை மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகளைப் பரவவிடுவதாகவே உள்ளது. மனிதருக்குக் கோபம் என்ற குணம் எத்தகைய மோசமானது என்பதன் குறியீடாகவே இக்கவிதையைக் காண முடிகின்றது.

காகங்கள், புத்திக் கூர்மையுடைய பறவைகள். தமது இரையை, உணவைப் பெறுவதற்காகக் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் வாய்ந்தவை. நாம் தெருவில் வீசியெறியும் மாமிசக் கழிவுகள், இறந்து போன உயிரினங்களை உட்கொண்டு நமது சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இதனாலேயே இவை இயற்கைத் துப்புரவாளர்களாகக் கருதப்படுகின்றன. நம் வாழ்வோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த ஒரு பறவையினம் இது. நம் வீட்டு வாசலில் காகம் கரைந்தால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது நமது நம்பிக்கை. “விருந்து வரக் கரைந்த காக்கை” எனும் குறுந்தொகைப் பாடலின் மூலம் இதை அறியலாம். இப்பாடலை இயற்றிவர், சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்களில் ஒருவரான காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என்பவர். காகத்தைப் பற்றிப் பாடியதாலேயே அவர் இப்பெயரைப் பெற்றார். இதுபோன்றே அண்டங்காக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கவிஞர் வரைந்துள்ள கவியும் சுவை ஊட்டுகின்றது. அன்றாடம் காகங்களை அழைத்து உணவிட்டு, பின் உணவருந்தும் பழக்கம் நம்மூரில் பலருக்கு உண்டு.

புனைவுகள் மற்றும் இலக்கியங்களில் அண்டங்காக்கைக்கு பல குறிப்புகள் உள்ளன. இதன் கருப்பு நிறம், பற்கள், கரகரவெனும் குரல், உணவுப் பழக்கம் ஆகியவற்றின் காரணமாக, காகம் தொன்மங்கள் மற்றும் புனைவுகளின் படைப்பாளர்களுக்குத் தீய சக்தியின் குறியீடாகக் கருதப்பட்டு வருகிறது.

அண்டங்காக்கை மரணம் மற்றும் இறப்புக்கு இடையே ஒரு இடைத்தரகராக இருந்தது என்று பிரெஞ்சு மனிதவியல் அறிஞர் கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் ஒரு கட்டமைப்புவாத கோட்பாட்டை முன்வைத்தார். காகம் இறந்தவர்களுடனும் இழந்த ஆத்மாக்களுடனும் தொடர்புடையதாக ஆனது என்று சுவீடன் நாட்டுப்புறத்திலும் நம்பப்படுகின்றது.

இந்து மதத்தில் காக்கைகள் உருவில் மூதாதையர்கள் அமாவாசை, திதி சமயங்களில் அவர்களுக்காகப் படைக்கும் உணவு அல்லது தின்பண்டங்களை எடுக்க வருகின்றன என்ற நம்பிக்கை இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. தென் கொரிய நாட்டிலும் மூதாதையர்களுக்கு படையல் இட்டு நீர் விளவி வழிபாடு செய்யும் வழமை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மிகுந்த சக்தி வாய்ந்த இந்து தெய்வமான சனி பகவானின் வாகனம் காகம் என்றும் குறிப்பிடப்படுகிறது. மாபெரும் கலைகள் என்ற பத்து தாந்தரீகக் கடவுள்களின் குழுவில் ஒன்றான தூமாவதி, இந்து தாய் தெய்வத்தின் அச்சமூட்டும் அம்சத்தைப் பிரதிபலிக்கின்றது. அவலட்சணமான விதவையாகச் சித்திரிக்கப்படும் இத்தெய்வம், பொதுவாகக் கல்லறைகள் நிறைந்த, பிணங்களைத் தகனம் செய்யும் பூமியில் காகத்தின் மீது சவாரி செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “The ravens caw -அண்டங்காக்கையின் கரைவு

  1. விருந்து என்றால் புதியவர்கள் என்று பொருள். நம் முன்னோர்கள் கடவழிப் பயணம் மேற்கொள்ளும் பொழுது காக்கையைத் தங்களுடன் வைத்துக் கொள்வார்களாம். காரணம் கரையை அறிய காக்கையைப் பறக்க விட்டு அதன் பின் கலத்தைச் செலுத்துவார்களாம். நெய்தல் நில மக்கள் காக்கை கடற்பக்கமிருந்து பறந்து வந்தால் புதியவர்கள் வருகிறார்கள் என அறிந்துகொள்ளுவார்களாம். அதுவே பின்னாள்களில் காக்கை கரைந்தால் விருந்தினர் வருவர் என்னும் நம்பிக்கையாயிற்று. புத்தர் ஓரிடத்து, கலன்களுக்கு வழிகாட்டும் காக்கையைப் போன்றது என் உபதேசம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply to கல்பனாசேக்கிழார்

Your email address will not be published. Required fields are marked *