கவலைகள் நீக்கும் கணபதி யாகம்

0

வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்

தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு

கவலைகள் நீக்கும் கணபதி யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 28.09.2018 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் உலக நலன் கருதி “கவலைகள் நீக்கும் கணபதி யாகம்” நடைபெறுகிறது.

32 கணபதியின் பெயர்கள்:

நாம் காலம் காலமாக நமக்கு தெரிந்த 32 கணபதியை வழிபட்டு வருகிறோம். மேலும் 33 ஆவது கணபதி கண்திருஷ்டி கணபதியையும் வழிபட்டு வருகிறோம். அவை முறையே பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி, ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ருணமோசன கணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி, த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பவை ஆகும்.

ஹோமங்களின் சிறப்பு :

பல முகவரிகளுக்கு எழுதிய கடிதங்களை ஒரே தபால் பெட்டியில் போடுகிற மாதிரி, பல தேவதைகளுக்கு பலவிதமான திரவியங்களை மந்திரப் பூர்வமாக அக்னியில் விடுவதைத்தான் ஹோமம் என்கிறோம். அக்னி இவற்றை தானே எடுத்துக் கொள்ளாமல் இவற்றின் சாரத்தை அந்தந்த தேவதைக்கு அனுப்பி வைக்கின்கிறன என்பது காஞ்சி மகாப் பெரியவரின் மகாவாக்கு. நாம் செய்கிற ஹோமங்களில் திருப்தி அடைந்து நமக்கு அனுக்கிரகத்தை அள்ளித் தருகின்றனர், தேவர்கள். கடலிலுள்ள நீர் ஆவியாகி மீண்டும் மழையாகப்பொழிந்து வரும் சுழற்சியைப் போன்றதுதான் இந்த ஹோமங்கள்.

நமக்கு அருகேயுள்ள சக்திகளை தொடர்பு கொள்ள வைக்கும் விதம்தான் மந்திரப்பூர்வமான ஹோமங்கள். மந்திரங்களால் நிறைந்த பிரதேசங்களின் அலைவரிசை நம் மனதிற்கு பலத்தைக் கொடுக்கிறது. எங்கேயோ தடைபட்டிருந்த சக்திகளை மந்திர ரூபமாக உள்ள தேவர்கள் அகற்றுகின்றனர். பூமியில் உட்கார்ந்து கொண்டு அண்டத்திலுள்ள செயற்கைகோளை சரி செய்வதுபோன்ற ஒரு செயலை ரிஷிகள் எளிதான முறையில் அன்றாட வாழ்க்கைக்கு உபயோகமாகும் விதமாக ஹோமங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளனர். இந்திராய ஸ்வாஹா… என்றால் அங்கு இந்திரன் வரவேண்டும், இது வேதத்தின் சத்தியக் கட்டளை. அழைக்கும்போதே அனுக்கிரகத்தோடு வரும் கருணை. இது, மனிதர்கள் தாங்கள் தனித்தவர்கள் அல்ல. தங்களைச் சுற்றிலும் பல்வேறு சக்திகள் இயக்கியும், இயங்கியபடியும் உள்ளன என்பதன் சூட்சுமமும் உள்ளது. எனவே, இன்ன ஹோமம் செய்தால் இன்ன பலனை கொடுத்தே தீருவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கணபதி ஹோமத்தின் சிறப்பு :

ஹோமங்களில் முதன்மையானதுதான் கணபதி ஹோமம். தனக்கு மேல் எந்த நாயகரும் இல்லாததாலேயே அவருக்கு வி – நாயகர் அதாவது விநாயகர் என்று பெயர். எனவே அவரே ஆதிநாயகரும் ஆவார். தேவர்களிலிருந்து மகாதேவனான ஈசன் வரை அவர் மகனே ஆனாலும் வழிபட்டுவிட்டுத்தான் காரியத்தை தொடங்குகின்றனர். அப்படி தொழாது திரிபுர சம்ஹாரம் செய்ய புறப்பட்ட ஈசனின் தேர் அச்சாணியை விநாயகர் உடைத்தார். தேரே ஸ்தம்பித்து நிற்கும்போது ஈசன் விநாயகரை வணங்காது புறப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.

கணபதி ஹோமம் என்பது எல்லா சுப நிகழ்ச்சிகளுக்கும் செய்யப்படுவது. மக்கள் அனைவரும் எந்த செயலை தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்தபிறகு துவக்குவது மிகச்சிறந்த பலனைத்தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. மேலும் வீடுகளில் கிரகப்பிரவேசம் நடைபெறும் பொழுது கணபதி ஹோமம் செய்து, புதுமனை புகுவது எக்காலமும் நன்மை தரும். குடும்பத்தில் தொடர்ந்து உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் கணபதி ஹோமம் நடத்தி உடல்நிலை நன்றாகப் பெறலாம். ஒரு கடிதம் எழுதும்போதும் கூட பிள்ளையார்சுழியுடன் துவங்குவது இந்துக்களின் மரபு .

கணபதி ஹோமத்தை விநாயகர் வேள்வி என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் ஜபம் செய்து, அவரை ஆராதித்து, மனமுருகிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். நம் வீடுகளில் நடக்கும் காதணி விழா, பிறந்தநாள், திருமண நிகழ்ச்சி, தொழிற்சாலைகளில் நடக்கும் பவள விழா, முத்துவிழா ஆகிய நிகழ்ச்சிகளிலும் கணபதி ஹோமம் செய்வது உத்தமம். மேலும் புதிய இயந்திரங்கள் வாங்கினால் அவை பழுதின்றி இயங்க விநாயகர் ஹோமம் அவசியம். நல்ல காரியங்களில் மட்டுமின்றி மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்து மிகச்சிறந்த பலனை பெறலாம்.

மகாகணபதி ஹோமம் மிகவும் சூட்சுமங்கள் நிறைந்தது. அது நம் புத்தி, மனம், உடல் என்று சகல இடங்களுக்கும் பாயும். செயலில் திறன் கூடினால் வெற்றி எளிதாகும். ஆகவே, கணபதி ஹோமம் என்பதே வாழ்வின் இக பரலோகத்தின் வெற்றியைக் கொண்டுவரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கணபதி ஹோமத்தை, வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் யாகத்தில் அனைவரும் கலந்துகொண்டு கவலைகள் நீங்கவும், கஷ்டங்கள் விலகவும், கர்மவினை, ஊழ்வினை அகலவும், காரியங்களில் வெற்றி பெறவும் மஹா கணபதியை வணங்கி வாழ்வில் நலம் பெறுவோம்.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், அஷ்ட திரவியங்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

Email: danvantripeedam@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *