அறிவிப்புகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ..

அன்புச் சகோதரர், அருமை வெண்பா வித்தகர், ஆழ்ந்த மனப்பக்குவம் கொண்ட நம் கிரேசி மோகன் அவர்களின் அன்புத் தந்தையார் திரு ரங்காச்சாரி அவர்கள்
இப்பூவுலகை விட்டு இறையடி நிழலை நாடிச் சென்றுள்ளார். அன்னார் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளர் பொறுப்பில் எண்பதுகளில் பணி நிறைவு செய்தவர். அவர்தம் ஆன்மா சாந்தியடையவும்,  குடும்பத்தினர் அனைவரும் மன அமைதி பெறவும் உளமார பிரார்த்திக்கிறோம்.

 

 

ஆன்மனுக்குச் சாவில்லை சேதாரம் மேனிக்கேயென
 ஆதாரத்துடன் அங்கம் துலக்கி மீளாத
 சோகத்திலும் மாளாத பக்குவம் நிறைத்
தவமாய் உதித்த தனயன்!

சித்தின் விளையாட்டை ஆனந்தத்தின் சத்தாய்
வேடிக்கைப் பார்க்கும் ஆன்மீகப் புத்தி
உலகே மாயம் இவ்வாழ்வும் மாயம்
எதுவும் நிரந்தரமில்லை சோகமிலைகாண்!

மனத்தெளிவே உளத்துறவு வரவும் செலவுமே
உறவும் பகையும் எனும் மாசற்ற மனம்
அழிவற்ற ஆன்மா பயனற்ற கூடுவிட்டு 
பண்ணோடு மீண்டு வாழும்!

முடிவற்ற உயிர் வானமேறி வைகுந்தமேகி
அரியையும் அரனையும் பாதாரவிந்தம் துதித்து
பரமனின் பக்கத்தில் பதவிசாய் ஆனந்தமாய்
பக்குவமாய் இறைநிலை இன்பமடையுமே!!

 

படத்திற்கு நன்றி  : திரு இசைக்கவி ரமணன்

 

 

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

 1. Avatar

  ஐந்து பூதங்கள் பிரிந்து சென்றாலும் மனதால் என்றும் பிரியாது இருக்க எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 2. Avatar

  பிரிவு என்பது உடலுக்கே
  உள்ளத்திற்கு அல்ல..
  தமிழுக்குத் தொண்டு செய்ய
  தன்மகவை ஈந்தமையால்
  தமிழுக்குத் தொண்டு செய்வோன்
  சாவதில்லை…

 3. Avatar

  இந்தியன் பாங்கில் மேலாளாராகவும், மயிலாப்பூர் நகைச்சுவை
  மன்றத்தின் தலைவராகவும், எனது தந்தையின் நண்பருமான
  திரு.ரங்காச்சாரி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  இப்படிக்கு

  பார்த்தசாரதி ராமஸ்வாமி – மயலப்பூரில் வசித்தவர்
  8148111951 ஈமெயில்: parthasarathyramaswamy51@gmail.com

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க