நிர்மலா ராகவன்

நலம், நலமறிய ஆவல் – 146

வாழ்க்கைப் பாதையில் கல்வி, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று படிப்படியாகக் கடந்தபின், `இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என்ற விரக்தி பிறக்கிறது பலருக்கும். அவர்களின் போக்கிற்கு நிச்சயம் வயது மட்டும் காரணமாக இருக்க முடியாது. உடல் முதுமை அடைவதற்கு முன்பே மனம் தளர்ந்துவிட, நடப்பதே ஒரு பெரிய காரியம் என்பதுபோல் இருப்பவர்களைப் பார்த்தால், `நாமும் ஒரு வயதுக்குமேல் அப்படி ஆகிவிடுவோமோ!’ என்ற அச்சம் ஏற்படுகிறது.

`அவள் எவ்வளவு தைரியசாலி!’ என்று வெகு சிலரைப் பார்த்து மலைப்பு எழுகிறது. அந்த பெண்மணிக்கு அச்சமே கிடையாது என்று அர்த்தமில்லை. அவ்வப்போது எழுந்த அச்சங்களை எதிர்கொண்டவள் என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த வயதிலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டுமானால், அச்சத்தை விலக்குவது அவசியம். `அனுதினமும் உன்னை அச்சப்படுத்தும் ஒரு காரியத்தைச் செய்!’ என்கிறார் ஓர் அனுபவசாலி.

ஏன் அச்சம்?

ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும்போது மலைப்பு எழலாம் – இதை எப்படித்தான் முடிக்கப் போகிறோமோ என்று. ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்வதற்கு ஒரு காலை மற்றொன்றின் முன்னே வைத்து, ஒவ்வோர் அடியாகத்தான் எடுத்து வைக்கிறோம். இதோ, நீங்கள் படிப்பதைக்கூட ஒவ்வோர் எழுத்தாகத்தான் எழுதினேன் — `பிறர் என்ன நினைப்பார்களோ!’ என்ற அச்சத்தை ஒதுக்கிவிட்டு.

`இந்த காரியத்தைச் செய்தால் பணமோ, புகழோ கிடைக்கப் போகிறதா!’ என்ற அவநம்பிக்கையோடு எதிலும் ஈடுபட்டால் முன்னேறுவது எப்படி? எந்த ஒரு (நல்ல) காரியம் செய்தாலும், அதன்வழி கிடைக்கும் அனுபவத்தால் தன்னம்பிக்கை மட்டுமல்ல, தைரியமும் எழும். இது புரிந்தால், புதியதாக எதிலாவது ஈடுபடத் தயங்கமாட்டோம் – அது எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும்.

பல துறைகளில் ஈடுபாடா?

ஒரே நேரத்தில் பலவித உணவுகளை அதன்முன் வைத்தால், நாய் எல்லாவற்றையும் நக்கிவிட்டு, எதையும் முழுமையாகச் சாப்பிடாது வீணடித்துவிட்டுப் போய்விடும். அதேபோல், பேராசையாகப் பல காரியங்களைச் செய்ய முயன்றால், எல்லாமே அரைகுறையாகிவிடும். ஒரே சமயத்தில் வெவ்வேறு காரியங்களைச் செய்ய நாம் அனைவரும் அஷ்டாவதானிகளா, என்ன?

காலையில் படிப்பு, மாலையில் பாட்டு, விளையாட்டு என்ற முறையைப் படிக்கும் வயதில் கடைப்பிடித்திருப்போம். அது போலவே, ஒரு தினத்தை இரண்டு, மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு காரியத்தைச் செய்யலாம். எடுத்துக்கொண்ட ஒன்றில் முழு மனத்துடன் ஈடுபட்டு, ஓரளவு செய்து முடித்தபின், இன்னொன்றில் கைவைக்கலாமே!

சிதறாத கவனம்

பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எளிதில் கவனம் சிதறும். அதைக் கட்டுப்படுத்த ஓர் ஆசிரியை கண்டிப்புடன் அவர்களிடம் சொன்னது: “உங்கள் பக்கத்தில் டைனசோர் வந்து நின்றாலும், அணுகுண்டு வெடித்தாலும் திரும்பிப் பார்க்கக் கூடாது!”

அக்குழந்தைகள் அறியவில்லை, அணுகுண்டு வெடித்தால் அதைப் பார்த்து வியக்கவோ, ரசிக்கவோ அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது. தற்காலத்தில் டைனசோர் ஏது! இருந்தால் மட்டும் வகுப்பறைக்குள் நுழைந்துவிடுமா? ஆனாலும், ஆசிரியையின் திட்டம் பலித்தது. செய்யும் காரியத்தில் முனைப்பாக இருக்கும் பழக்கம் அவர்களுக்கு வந்தது.

தோல்வி எழுந்தால்

ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கும்போது,  எதிர்பாராத விதமாக நமக்குப் பிடிக்காத விளைவுகளும் ஏற்படக்கூடும். தோல்விகளைப் பொறுக்க முடியாது, `இப்படித்தான் நிம்மதியும் இன்பமும் கிடைக்குமோ?’ என்ற அற்ப ஆசையுடன் தீய வழிகளில் ஈடுபட்டால் சலிப்புதான் அதிகரிக்குமே தவிர, நிம்மதி கிடைக்காது. நமக்குப் பிடித்த, பிறருக்கும் உபயோகமானவற்றில் ஈடுபடுவதுதான் புத்துணர்ச்சியைத் திரும்பப் பெறும் வழி.

இலக்கு வேண்டும்

`அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற தூரநோக்கு இருக்கும்வரை வாழ்க்கை பயனுள்ளதாகத்தான் தென்படும். தள்ளாடியபடி நடக்கும் பெண்மணிகள்கூட கூட்டுக் குடும்பத்தில் சமையல் வேலையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதன் ரகசியம் இதுதான்.

“கடைகண்ணிக்குப்போய் சாமான்கள் வாங்கி வருவது என் மாமனார்! சமையல் பூராவும் என் மாமியார்தான். இருவரும், `எங்கள் ஆட்சி இது!’ என்பதுபோல் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!” நாற்பது வயதை எட்டிக்கொண்டிருந்த ஒரு மருமகளின் புலம்பல் இது.

தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் போய்விட்டதே என்பது அவள் வருத்தம். மூத்தவர்கள் செய்துவந்தது, அதிகாரத்திற்காக மட்டுமில்லை, அவர்களுக்கென்று சில வேலைகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் பிடிப்பே இல்லாது போய்விடும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

எந்த விஷயத்திலும் பற்றும் ஆர்வமும் இருந்தால், வாழ்வில் பிடிப்பு குறையாது – எத்தனை வயதானாலும்.

கதை

என் தோழியின் தந்தைக்கு தொண்ணூற்றிரண்டு வயதாக இருந்தபோது, நான் அவ்விருவருடனும் பயணம் செய்தேன்.

வழியில், ஆறு வயதுக் குழந்தைக்கான விளையாட்டுச் சாமான் ஒன்றை வாங்கினேன். தாத்தா அதை சுவாரசியத்துடன் பார்த்ததைக் கண்டு, அவரிடம் நீட்டினேன்.

ஆவலுடன் அதைப் பெற்றுக்கொண்டவர், சாவி கொடுத்தால் ஒரு குரங்கு தாவித் தாவி சிறிய பிளாஸ்டிக் மரத்தின்மேல் ஏறுவதைப் பார்த்துக் குதூலித்தார். அவருள் இருந்த குழந்தை, அப்போதும் இருந்தது. கூலியாளாக நாடுவிட்டு நாடு வந்தவர் பெரிய முதலாளியானதன் ரகசியம் புரிந்தது. உடல் வலுவிழந்திருந்தாலும், தன்னைச் சுற்றி நடப்பதில் ஆர்வம் குன்றாமல், ஆரோக்கியமான மனத்துடன் வாழ்ந்தவர்!

`இனி என்ன இருக்கிறது!’ என்ற விரக்தியே ஒருவரை நடைப்பிணமாக ஆக்கிவிடும்.

கதை

“இருபத்து மூன்று வருடங்களாக இந்த வேலையைச் செய்கிறேன்!” என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொண்ட பணிப்பெண் நோர்மாவைப் பார்த்து எனக்கு பிரமிப்பாக இருந்தது. காலை, மத்தியானம் இரு வேளைகளிலும் இரண்டு வீடுகளைச் சுத்தம் செய்வது, அவள் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் கடுமையாக உழைப்பாள்! வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படித்தான் கழியும். (கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?)

“கடினமாகவோ, அலுப்பாகவோ இல்லையா?” என்று அவளைக் கேட்டேன்.

“எனக்குப் பள்ளியில் படிக்கும் மகனைத் தவிர, இந்தோனீசியாவில் நூறு வயதான அம்மா இருக்கிறாள். நடக்க முடியாத அக்காவும் இருக்கிறாள். நான் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டாமா?” என்ற பதில் வந்தது.

படிப்பறிவில்லாத அப்பெண்மணியிடமிருந்து கற்க வேண்டிய பாடம்: நம் பொறுப்புகளை வேண்டாவெறுப்பாக ஏற்றால் அவை பாரமாகப் படும். மனமுவந்து செய்தால், உடலும் ஒத்துழைக்கும். சலிப்பும் கிடையாது.

சிலருக்கு மாற்றம் என்றாலே அச்சம்.

ஒரு முறை கருவேப்பிலையின் அடிப்பாகத்தில் கெட்டியாக ஏதோ இருந்தது கண்டு, அருவருப்பாக இருந்தது. பிறகுதான் புரிந்தது, அது கூட்டுப்புழு என்று. வெகு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறுமுன், பல மாறுதல்களைக் கடந்து வரவேண்டிய நிலை அதற்கு.

மாற்றத்தைக் கண்டு அஞ்சாது துணிந்து நடந்தால், நாமும் – அழகாக மாறாவிட்டாலும் — நல்லவிதமாக மாற வாய்ப்பு கிடைக்கலாமே!

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?

  1. கர்ம வீராங்கனை என்ற பதம் எங்கு வருகிறது?

  2. வீராங்கனை
    https://ta.wiktionary.org/s/1v1d
    Jump to navigation
    Jump to search
    பொருளடக்கம்
    1 பெயர்ச்சொல்
    2 மொழிபெயர்ப்புகள்
    3 சொற்றொடர் எடுத்துக்காட்டு
    4 ஒத்த கருத்துள்ள சொற்கள்
    பெயர்ச்சொல்[தொகு]
    வீராங்கனை

    வீரம் மிகுந்த பெண், பெண்கள் அணியில் விளையாடுபவர்
    மொழிபெயர்ப்புகள்[தொகு]
    ஆங்கிலம் – female soldier, player in a female team
    சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]
    சுதந்திரப் போராட்ட வீராங்கனை (Female freedom fighter)
    அவள் ஒரு கபடி வீராங்கனை. (She is kabadi player)
    ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]
    பகுப்பு: பெயர்ச்சொற்கள்

    #வீராங்கனைகள்

    Search results

    VARA VARA

    @vara7star
    30 Dec 2018
    More
    #கடலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட கழக #செயல்வீரர்கள் மற்றும் #வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ….
    கெத்து காட்றாங்க சிறக்கட்டும் வாழ்த்துக்கள்…வாழ்த்துக்கள்

    0 replies0 retweets0 likes
    Reply Retweet
    Like Direct message

    Sun News

    Verified account

    @sunnewstamil
    1 Sep 2018
    More
    #புதுச்சேரியில் சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த #பெண்கள் வலைபந்து போட்டி இன்று தொடங்கியது. இதில் இந்தியா,இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த #வீராங்கனைகள் பங்கேற்பு . 14-18 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய நபர்கள் மற்றும் 4 வீராங்கனைகள் என 9 பேர் ஒவ்வொரு அணியிலும் பங்கேற்பு.

    0 replies2 retweets9 likes
    Reply Retweet 2
    Like 9 Direct message

    Dinamalar

    Verified account

    @dinamalarweb
    13 Aug 2018
    More
    வீராங்கனைகளுக்கு வீச வாள் கிடைக்குமா ? #வீராங்கனைகள் #வாள் #வாள்ச்சண்டை http://www.dinamalar.com/news_detail.asp?id=2080086

    0 replies1 retweet10 likes
    Reply Retweet 1
    Like 10 Direct message

    தர்ஷினி

    @dharshnikumardk
    15 Jul 2017
    More
    #தொடரட்டும் #தர்மயுத்தம்???
    #செயல்வீரர்கள் #வீராங்கனைகள் மாபெரும் #பொதுக்கூட்டத்திற்கு தயாராகும் #திருவாரூர் நகரம்
    #வர்லாம் வர்லாம் வா???

    1 reply0 retweets5 likes
    Reply 1 Retweet
    Like 5 Direct message

    ShootThaKuruvi

    @ShotDKuruvi
    25 Feb 2017
    More
    ஊழல் ஆட்சிக்கு எதிராக, நேர்மையான ஆட்சியை வலியுறுத்தி அமைப்புசாரா #300 #வீராங்கனைகள் சென்னை பீச்சில் போராட்டம்??? pic.twitter.com/z3NCGIGanN

    0 replies0 retweets0 likes
    Reply Retweet
    Like Direct message

    ஆயிரத்தில் ஒருவன்

    @oneamongthe1000
    4 Aug 2012
    More
    நாமாளுக நிறைய பேரு ஒலிம்பிக் பாக்குரானுகனா அதுக்கு விளையாட்டை தவிர வேற ஒரு காரணமும் இருக்கு.#வீராங்கனைகள்

    @TNhighlight
    1 Sep 2018
    More
    #புதுச்சேரியில் சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த #பெண்கள் வலைபந்து போட்டி இன்று தொடங்கியது. இதில் இந்தியா,இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த #வீராங்கனைகள் பங்கேற்ப்பு . 14-18 வயதுடைய மனவளர்ச்சி குன்றிய நபர்கள் மற்றும் 4 வீராங்கனைகள் என 9 பேர் ஒவ்வொரு அணியிலும் பங்கேற்ப்பு. http

Leave a Reply to Nirmala Raghavan

Your email address will not be published. Required fields are marked *