‘என் பெயர் குமாரசாமி’ – பாடகரான பார்த்திபன் – செய்திகள்

0

திருநல்லான் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘என் பெயர் குமாரசாமி’ இந்தப் படத்தில் புதுமுக நாயகன் ராம் கதாநாயகனாக நடிக்க, பிரபல மும்பை நடிகை அந்த்ரா பிஸ்வாஸ் ஜோடியாக நடிக்கிறார்.  யுவா, பப்லு, ரிஷா, யோகி தேவராஜ், பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் பைஜூ இவர்களுடன் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ரதன் சந்திரசேகர்.  இப்படத்தில் இடம் பெறும் ஏழு பாடல்களுக்கு வீ. தஷி இசையமைக்கிறார்.  பாடல்களை யுகபாரதி, நெல்லை பாரதி, தாணு கார்த்திக், தொல்காப்பியன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இயக்குநர் ரதன் சந்திரசேகர் எழுதிய

‘வனப்புடை மகளிர் சொல்லும்…

இரு தனப்புடை மார்பும் கொல்லும்…’

எனத் தொடங்கும் பாடலை இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன் பாட, 12-10-2011 அன்று காலை சென்னையிலுள்ள கிரண் ஸ்டுடியோவில் இசையமைப்பாளர் தஷியின் இசையில் பதிவானது.

இந்தப் பாடல் குறித்து இயக்குநர் ரதன் சந்திரசேகர் கூறுகையில், “காதலில் ஏமாற்றமடையும் நாயகன் மனம் குமுறி, தெருப் பாடகர்களுடன் இணைந்து பாடுவதாக அமையும் இந்தப் பாடல் முற்றிலும் வழக்கமான பாடலாக அல்லாமல் அமைந்தது.  இப்பாடலை நடிகர் பார்த்திபன் பாடினால் மிகச் சிறப்பாக அமையும் என்று மனதில் பட்டதும், உடனே நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்தேன்.  பாடல் வரிகளைக் கேட்ட மாத்திரத்தில் பாடுவதற்கு ஒப்புக் கொண்டார்.  மிகவும் ஒத்துழைப்புத் தந்து, சிறப்பாக பாடல் உருவாக அவர் காட்டிய ஆர்வம் என்னை அவர் குறித்து பெருமிதம் கொள்ளச் செய்துள்ளது” என்றார்.

இப்பாடலை ஜீவ சாண்டில்யன் ஒளிப்பதிவில் கொடைக்கானலில் படமாக்கவுள்ளனர்.  படத்தொகுப்பு – வி.டி. விஜயன், சண்டைக் காட்சி – சூப்பர் சுப்பராயன், நடனம் – தினேஷ், ரமேஷ் ரெட்டி, மக்கள் தொடர்பு – ஜி. பாலன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *