இலக்கியம்கவிதைகள்மரபுக் கவிதைகள்

கொண்டு செலுத்திடுவேன்

அண்ணாகண்ணன்

கொண்டு செலுத்திடுவேன் அம்மா கொண்டு செலுத்திடுவேன்
நின்று செலுத்திடுவேன் அம்மா நின்று செலுத்திடுவேன்
நன்று செலுத்திடுவேன் அம்மா நன்று செலுத்திடுவேன்
இன்று செலுத்திடுவேன் அம்மா இன்று செலுத்திடுவேன்!

சென்று முடித்திடுவேன் ஐயா சென்று முடித்திடுவேன்
குன்று பெயர்த்திடுவேன் ஐயா குன்று பெயர்த்திடுவேன்
வென்று களித்திடுவேன் ஐயா வென்று களித்திடுவேன்
ஒன்று நடத்திடுவேன் ஐயா ஒன்று நடத்திடுவேன்!

உண்டு பெருங்காலம் நமக்கு உண்டு பெருங்காலம்
உண்டு வருங்காலம் யார்க்கும் உண்டு வருங்காலம்
கண்டு நிறைந்திருப்போம் அன்பே கண்டு நிறைந்திருப்போம்
கட்டி அணைத்திருப்போம் அன்பே கட்டி அணைத்திருப்போம்!

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (2)

  1. பழைய கவிதைகளை படிக்க இயலுமா இந்த புதிய வடிவமைப்பில்

  2. https://www.vallamai.com/?cat=7 என்ற இந்தப் பகுதிக்குப் போனால், பழைய கவிதைகள் அனைத்தையும் படிக்கலாம். மேலே வல்லமை உள்ளடக்கப் பகுதிகளின் தலைப்புகள் உள்ளன. அதன் அருகே உள்ள அம்புக் குறியைச் சொடுக்கினால், உட்பிரிவுகளுக்குச் செல்லலாம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க