அழகப்பா பல்கலைக்கழகம்: தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு

0

சான்றிதழ் வகுப்பு

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் – தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு 15.05.2020 தொடங்கி 21.05.2020 வரை நடைபெற உள்ளது. இவ்வகுப்பில் பங்கேற்போருக்கு சான்றிதழ்  வழங்கப் பெறும். கட்டணம் ஏதும் கிடையாது.

முன்பதிவிற்கான கடைசி நாள் 13.05.2020.

சான்றிதழ் வகுப்பினில் இணைய விரும்புவோர் pavaisenthamiz17@gmail.com என்ற மின்னஞ்சலிலும் 9442379558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தங்கள் முழு முகவரியை (மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண்ணோடு) பதிவு செய்து கொள்ள வேண்டும்.

படைப்பிலக்கியக் கூடல்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் – தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பாக, படைப்பிலக்கியக் கூடல் நிகழ்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வற்கடம் (பஞ்சம்) பற்றிய குறிப்பு இறையனார் களவியலில் உள்ளது. அதுபோன்றே தாது வருடப் பஞ்சம் குறித்து, ‘பஞ்சமுக விலாசம்’ என்னும் நூல் குறிப்பிடுகிறது. இந்த நூல்களின் வழியே அக்கால மக்களின் நிலையை வாழ்வியலை அறிந்து கொள்ள முடிந்தது. அதுபோன்று 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் கொரானா என்னும் கொடிய நோய்த்தொற்று உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. அந்த நோய்க்குரிய மருந்து இல்லாத நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது. இங்ஙனம் ஒட்டுமொத்த மனித குலத்தையே அச்சுறுத்தும் கரோனா குறித்துப் படைப்பாளர்களின் எண்ணங்களைப் பதிவு செய்து நூலாக்கம் செய்யும் முயற்சியைத் தமிழ்ப் பண்பாட்டு மையம் மேற்கொண்டுள்ளது. எனவே படைப்பாளர்கள்,  தங்களின் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.

படைப்புகளின் மையப்பொருள் கரோனா என்பதாகும்.

கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நகைச்சுவைத் துணுக்கு எனத் தங்களின் படைப்புகள் அமையலாம் படைப்புகளை 20.05.2020 க்குள் pavaisenthamizh17@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

அனைவருக்கும் சான்றிதழ் உண்டு.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *