கவிதைகள்

தொடாமலே ஒரு தொடுகை

ஷைலஜா
shylaja
தோழியின் திருமணத்தில்
அவள் கணவனின் நண்பனாயிருந்த நீ
அறிமுகப்படுத்தியதுமே எனக்குக்
கை கொடுத்திருக்கலாம்

தாம்பூலப்பை கொடுக்கும் சாக்கில்
தயங்கியாவது விரல் உரசி இருக்கலாம்.
சாப்பாட்டுப் பந்தியில்
பரிமாறவந்த பாயசத்தை
மீண்டும் கேட்டு
கண்களை மோத விட்டிருக்கலாம்.

கல்யாணக் கும்பலுடன்
கோவிலுக்குப் போனபோது
சாமி குங்குமத்தை
யாரும் பார்க்காதபோது என்
நெற்றியில் இட்டிருக்கலாம்.

கேலிச் சீண்டல் பேச்சில்
தெறித்த கோபத்தை
செல்லமாய் என் கன்னத்தைக்
கிள்ளியாவது தெரிவித்திருக்கலாம்.

முதலிரவுக் கட்டிலில்
முல்லைப்பூ தூவும்போது
முகப்பூவாய் அருகில் நின்றவளை
அள்ளி அணைத்திருக்கலாம்.

இத்தனை வாய்ப்புகள் இருந்தும்
இதையெல்லாம் விட்டு
எங்கோ மறைந்திருக்கும்
என் இதயத்தைத்
தொட்டது ஏனடா?

Print Friendly, PDF & Email
Share

Comments (8)

 1. Avatar

  அருமையா இருக்கே. யார் எழுதினது ??

 2. Avatar

  நீங்க இதை
  எழுத ஆரம்பிக்கும்பொழுது
  கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்

  எழுதி முடிச்சபிறகாவது
  படிக்கறவங்க நிலையை
  நினைச்சிப் பார்த்திருக்கலாம்

  கவிதைன்னு எழுதினதை
  கதையாவாச்சும்
  முயற்சி செஞ்சிருக்கலாம்

  குறைஞ்சபட்சம்
  எழுதி வெளியான பிறகு
  லிங்க் கொடுக்காமலாவது
  இருந்திருக்கலாம்

  இப்படி படிக்க வெச்சு
  கொலவெறியாக்குறது
  ஏன் அக்கா?!

 3. Avatar

  தொடாமலே ஒரு தொடுகை புரிந்தது அவன் மட்டுமல்லன் இந்தக் கவிதையும் கூட 🙂 வாழ்த்துகள்…

  எழுச்சியுடன்,
  கலை.செழியன்

 4. Avatar

  கவிதை நல்லா இருக்கு அக்கா.

 5. Avatar

  aagga… innaa azhagaana ka(thai)vithai…

 6. Avatar

  உணர்வுகளை அழகா பிரதிபலிக்கும் கவிதை… சூப்பர்

 7. Avatar

  வாவ்! ரொம்ப ஸ்வீட் அண்ட் க்யூட் கவிதை!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க