இலக்கியம்நுண்கலைகள்படக்கவிதைப் போட்டிகள்வண்ணப் படங்கள்

படக்கவிதைப் போட்டி – 281

அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (25.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

Print Friendly, PDF & Email
Share

Comments (4)

 1. Avatar

  தாயவளே துயவளே
  தனியாதா அன்பாலே
  தரணிதனில் உயிர் தழைக்க
  தன்னையே ஈந்தவளே தாயே

  உன்னில் இருந்து உயிர்த்தேன் அம்மா
  உன்கரம் பற்றியே உயர்ந்தேன் அம்மா
  உனக்கு இணை உலகில் நீயே அம்மா
  உனையன்றி தெய்வம் எனக்கேதம்மா

  கருத் தந்து உருத் தந்து உயிராக்கினாய்
  கருணையோடு எனை வளர்த்து உயர்வாக்கினாய்
  கரும்பாக உனை பிழிந்து என் வாழ்வை இனிப்பாக்கினாய்
  கருப்பான உன் கரத்தால் உழைத்தென்னை சிவப்பாக்கினாய்

  நிலவு நீ காட்டி சோறுட்டினாய்
  நிலத்தில் நடை பழக்கி வழிகாட்டினாய்
  நிழலாய் நீயிருந்து எனை மரமாக்கினாய்
  நிலைத்த உனை அன்பில் எனை குளிப்பாட்டினாய்

  விழி இரண்டின் ஒளியாளே
  வெளி எங்கும் அன்பு ஒளி பாய்ச்சினாய்
  மொழி அதிராமல் பேசியே என்றும் இன்பம்
  பொழிகின்ற மழை மேகமாக தாலாட்டினாய்

  ஈன்ற தாயே இனியவளே அம்மா
  ஈடில்லா உன் உழைப்பாளே
  ஈபிள் கோபுரம் போல் தலை நிமிர்ந்தேன்
  ஈந்த உன் கொடையால் இன்று உலகளந்தேன்

  யாழ். பாஸ்கரன்
  ஓலப்பாளையம்
  கரூர்- 639136
  9789739679
  basgee@gmail.com
  https://noyyal.blogspot.com

 2. Avatar

  கோபுரமாய்…

  அன்னை என்பவள் கண்முன் தெய்வம்
  அவளை வணங்கியே மண்ணில் உய்வோம்,
  முன்னே காணும் முதலாம் கடவுள்
  முறைப்படி பேணிடு தீபச் சுடராய்,
  உன்னை உயர்த்த தன்னுயிர் தருவாள்
  உயர்வில் அவளொரு கோபுர உருவே,
  பின்னர் அவளைத் தவிக்க விடாதே
  பிழையிது தந்திடும் உனக்கே இடரே…!

  செண்பக ஜெகதீசன்…

 3. Avatar

  கவலை நிறைந்த முகத்தோடு
  காலினை நீட்டி அமர்ந்தபடி
  கண்ணினை நிலம் காண இருப்பவளே
  உன் கதையைத் தான் சொல்லிவிடேன்

  கடற்கரையின் ஒரமது என்பதறிந்தே
  உன் மன அலையும் அதனூடே பொங்கியெழ
  சுருக்கங்கள் உடலெங்கும் ஓவியமாய்
  கருத்த நிற காரழகி நீ என்பதறிவேன்

  காற்றுக் கூட உன்னைத் தொடவில்லையா
  கரையடிக்கும் அலையதனை நீ உணரவில்லையா
  வாயைத் திறந்துப் பதில் சொன்னால் வாகாயிருக்கும்
  வாடிய மலராய் அமர்ந்திருந்தால்
  வாழ்வே கசக்கும்

  சுதா மாதவன்

 4. Avatar

  வளம் பெறும் வழி

  ஆணும் பெண்ணும்
  சரி நிகர் சமானம்
  அடையும் இலக்கில்
  அவரவர் உயரம்
  விடுதலை உணர்வு
  விகிதத்தில் இல்லை
  எட்டும் அறிவில்
  இளைத்தவர் இல்லை

  உள்ளத்தின் உள் நோக்கி
  உன் திறன் அறிந்தால்
  உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்
  அச்சம் தவிர்த்து
  அகிலத்தை வெல்லலாம்
  வெற்றுப் புகழ்ச்சியை
  ஒதுக்கி வைத்து
  உண்மை அறிவை
  உயர்த்தும் கல்வியை
  வளர்த்து வளம் பெறும் வழியறிவாய்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க