Category: திருமால் திருப்புகழ்

பெருமாள் திருப்புகழ்

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “மாமணக் கூந்தலாள், மாற்றான்தாய் முன்னமவன்,
    வாமனனாய் வந்து வளர்ந்ததை, -ஸ்யாமளன்,
    காட்டுகின்ற சாக்கிட்டு, காலால் உறிப்பானை,
    போட்டுடைக்கப் பார்க்கிறானென் பேன்”….

    “என்னதவம் செய்தாய், யசோதை குமாரனே,
    வண்ணமுற கேசவ் வரைவதற்கு; -மன்னவனே,
    கோவிலுக்கு லீவுவிட்டு, கேசவ்இல்ல வாயிலின்,
    காவலுக்கு கண்ணா கிளம்பு”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy
    “ஆலில் மிதந்தவன் ,ஆயர் குலத்தவன்,
    காலிங்கு மாற்றிக் கடுந்தவம், -போலிருத்தல்,
    FIXINGகைப் போக்கிட FUTURE அவதாரம்,
    SIX &FOUR (TEN ) கல்கியாகே சவ்”….!கிரேசி மோகன்….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “தாள்பார்க்க தாய்ப்பசு, தோள்பார்க்க சேய்க்கன்று,
    BOWLபண்ணும் கண்ணன் பரவசம் -தூள்கேசவ்;
    சென்னைக்(கு) இவன்SPIN செய்திட IPL
    தொன்னைக்CUP தோனிக்குத் தான்”….கிரேசி மோகன்….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    ந்ருசிம்ஹ ஜெயந்தி அன்று எழுதியது
    ———————————————————————–
    ந்ருஸிம்ஹ மந்த்ரராஜம்(மூல மந்திரம்)
    ——————————————————————————
    “உக்ரம், வீரம் ,மஹாவிஷ்ணும் ,ஜ்வலந்தம் ,ஸர்வதோமுகம் |
    ந்ருஸிம்ஹம்,பீஷணம் ,பத்ரம் ,ம்ருத்யும்ருத்யும் நமாம்யஹம் ||

     

    crazy
    வெண்பாவாக்கம்
    ————————————-
    “வீரியன், வீரன் , வியாபகன் , சைதன்ய
    சூரியன் சூக்குமக் காரியன், -சீறிடும்,
    சிங்கன் ,எதிரிக்கு சொப்பனம் ,காலகாலன்,
    மங்களம் சேர்த்திடும் மால்”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “இந்த்ர மழையை, இடிமின்னலை ஏற்றவன்,
    சந்த்ர குலத்தோன், சகாக்களை, -தொந்த்ரவு,
    கெட்டலைய வைக்காது, காப்பாற்றும் பாண்டுரங்க,
    விட்டலைக் கண் டேன்கேச வா”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy
    “அவலுக்கும் உண்டோ அடைக்கும்தாள்’, பார்யாள்
    அவளுக்கோர் கீதைசொன்னான் அன்றே; -கவலை
    சுதாமன் வறுமையை சுத்தமாய் போக்கும்
    பிதாமகன் கேசவ் பிரஷ்”….கிரேசி மோகன்….

    சுதாமன் -குசேலனின் இன்னொரு பெயர்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “மாடெலாம் தானாக மேய்ந்திட கோகுலத்தில்,
    மாடலாகும் ஆசையில் முன்வந்துன், -வீடதன்,
    காலிங்க்பெல் எட்டாது, கண்ணன் குதிக்கின்றான்,
    தாளிங்கு கேசவ் திற”….கிரேசி மோகன் ….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy

    “கனக்கின்ற மாரியில், கோகுலத்தைக் காக்க,
    குணக்குன்றாம் கண்ணனவன் கோவர்த், -தனக்குன்றை,
    பேர்த்தெடுத்த பாவத்தைப், போட்டோ பிடித்ததுபோல்,
    வார்த்தெடுத்த கேசவர்க்கு வாழ்த்து”….கிரேசி மோகன் ….

     

    Share
  • கேசவ் வண்ணம்-கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

     

    crazy

    “நீலவுடல் மஞ்சளாச்சு, பீலிமயில் பின்னலாச்சு,
    கோலமிதன் காரணம் கூறுகண்ணா!, -ஆலமுண்ட,
    நாரிபாகன் போலநீயும், மாறினாயோ ,கேசவனின்,
    தூரிகை வண்ணத்தில் தோய்ந்து”….!கிரேசி மோகன் ….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     
    எனது ‘’சாக்லேட் கிருஷ்ணா’’ 150தாவது ஷோவுக்கு கேசவ்
    எனக்களித்த பரிசு இந்த ஓவியம்….
    ————————————————————————

     

    சாக்லேட் கிருஷ்ணாவுக்கு நன்றி வெண்பா ….

    crazy

    “பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
    நாலும் கலந்து நவநீதன -பாலனை
    சாக்லேட் கிருஷ்ணாவாய் செய்தனை கேசவா
    வாக்கிலெட்டா வண்ணம் வடித்து”….

    நன்றி கிரேசி மோகன் ….

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “யாரிதுசின் னப்பொண்ணு! யாதுமாகி நின்றிடும்,
    பாரதி கண்ணம்மா போலிருக்கு ! -நேரெதிர்,
    கண்டாயோ கேசவா, கண்ணனில் காளியை !
    விண்டாயே வண்ணத்தில் வார்த்து”….

    “சீட்டிப்பா வாடை, சிமிழ்வாய் சிரிப்புடன்,
    மாட்டிடையன் போட்டியாய் மாதங்கி; -கோட்டினால்,
    கண்ணனைக் காளியைக், கேசவ் அடைத்தனன்,
    வண்ணச் சிறைக்குள் வளைத்து”….கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    andal

    கோதைக்குள் கீதை

    “ஆடவரில் உத்தமன், ஆழ்வாரில் உத்தமி,
    பாடவரும் மார்கழி பாசுரத்தால் ,-தேடுவரம்,
    பட்டர்முன் பெண்ணுருவில் போயந்த ரங்கனையே,
    கட்டுறேன் என்றானோ K(சவ்)….!!!!கிரேசி மோகன்….

    ஆடவரில் உத்தமன்-புருஷோத்தமன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    டியர் கேசவ் ,உம்மை ஒப்பேற்ற வேண்டாம்….கண்ணனால் நீங்கள் Already ஒப்பில்லா ஏற்றத்தில் உள்ளீர்கள் ….வாழ்க உம் பணி &பாணி….

    பின் குறிப்பு -There is a proverb in tamil ….”ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் ….பாடற மாட்டை பாடிக் கறக்கணும்” ….அருச்சுனனை உமது ஓவியத்தால் கதகளி ஆடிக் கறந்தான்….பின் கீதையைப் பாடிக் கறந்தான் ஆடாது அசங்காது அந்த ஆயன் ….அருச்சுனன் என்ன நாம் எல்லோருமே அந்த மேய்ப்பவனுக்கு முன் கால் நடை ஜீவ ராசிகள்தானே….!

    அபாரம் கேசவ்….இது புதிய பாணி “கேளிச் சித்திரம் “….

    crazy

    “கேரள கேளி கிருஷ்ணன் அருச்சுனனை
    ஓரளவு ஒப்பேற்றும் உத்தியுடன் , -தேரலகில்
    தைதை கதகளி தாண்டவம் செய்தனன்
    கீதைக்(கு) இதுஒத்தி கை”….கிரேசி மோகன் ….

    Share
  • கேசவ் எண்ணம் – கிரேசி வண்ணம்

    கிரேசி மோகன்

     

    crazy

    “பசுபதி பாசம் பிணைப்பை விளக்கும்
    வசுகுல கண்ணன் வடிவில் -ஒசிபிசா
    COW -BOY கிருஷ்ணணில் கண்டேனே, ஸ்ரீகிருஷ்ண
    த்வைபா யனர்சொன்ன தேசு”….கிரேசி மோகன்….

    கிருஷ்ண த்வைபாயனர் -வியாசர்….தேசு-தேஜஸ்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

     

    “கண்ணா நடிக்கிறாய் கண்மை கசங்கிட
    அன்னை அதட்ட அவசரமாய் ; -மன்னவா
    சிந்தியது போதும் சிரிப்பினில் ஆழ்த்துகிறேன்
    வந்துயெம் நாடகத்தை வாழ்த்து”….கிரேசி மோகன் ….

    crazy sunday
    One of the most beautiful verses in Srimad Bhagavatha. Watercolour.
    Krishna pretends to shiver out of fear, like a plantain in the wind on Yashoda’s reprimand. Rubs his eyes while crying, spreading the Kajal in his eyes. Not for nothing he is called the Natavara vapuh– the king of actors.

     

     

    Share