Category: தொடர்கதை

  • சிலை அழுதது – 1

    தேமொழி

     

    அந்த சிறிய சாலையின் இருமருங்கிலும் நின்ற மக்களின் கையில் அமெரிக்க தேசியக் கொடிகள் படபடத்துக் கொண்டிருந்தது. வயது வித்யாசமின்றி அனைவரும் கையில் ஆளுக்கொரு வாசகங்கள் எழுதிய அட்டையையோ, தேசியக் கொடியையோ ஆட்டியவண்ணம் இருந்தனர்.  ‘உன்னை மறக்க மாட்டோம் ரிச்சர்ட்’, ‘உன் ஆன்மா சாந்தி அடையட்டும்’, ‘நீ எங்களை பெருமை அடைய செய்துவிட்டாய், ‘நீ ஒரு சிறந்த வீரன் ரிக்கி’, என தங்கள் மனதில் ரிச்சர்டைப் பற்றி எழுந்த எண்ணங்களுக்கு உருவம் கொடுத்த அட்டையை ஏந்திக்கொண்டு அவன் மறைந்த துக்கத்தை அனுசரித்துக் கொண்டிருந்தார்கள்.

    வெய்யிலுக்கு கண்ணைச் சுருக்கிக் கொண்டிருந்த அனைவரது கண்களும் அந்த ‘ஃபர்ஸ்ட் பாப்டிஸ்ட் சர்ச்’ என்ற தேவாலயத்தின் வாசலையே நோக்கிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் சோகத்தால் யாரும் உரத்து பேசாமல் கிசு கிசு என்று பேசிக் கொண்டிருதாலும் அதுவும் ஒரு கசமுசா சத்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தது.  தேவாலயத்தின் உள்ளே இராணுவ வீரர்களும், மிக முக்கிய உறவினர்களும், நண்பர்களும் ரிச்சர்டின் இறுதி சேவையில் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர். தேவாலயத்தின் வாசலுக்கு இருபுறத்திலும் மக்களின் ஊர்திகள் நிறுத்துவது தடை செய்யப்பட்டு அரை மைல் தொலைவிற்குச் சாலை வெறிச்சோடி இருந்தது.  தேவாலயத்தின் வாசலில் ஒரு கருப்பு அமரர் ஊர்தியும், அதன் அருகில் இரு இராணுவ வீரர்கள் மட்டுமே இருந்தார்கள்.

    ரிச்சர்ட் வில்லியம்ஸ் பிறந்து வளர்ந்து படித்த ஊர் அது. பல தலைமுறைகளாக அவன் குடும்பம் அங்கிருப்பதால் பெரிய உறவினர் கூட்டமும், கணக்கிடலங்கா நண்பர்கள் கூட்டமும் அந்த ஊரில் இருந்தனர். அனைவருக்கும் ரிச்சர்ட் தனது முப்பது வயது தாண்டுவதற்குள் இறந்தது அதிர்ச்சியைத் தந்தது. வில்லியம்ஸ் குடும்பம் தீவிர நாட்டுப் பற்று உள்ள குடும்பம். அப்பா வில்லியம்ஸ் தனது பரம்பரையில் அனைவரும் அமெரிக்க இராணுவப் பணிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் என்பதில் அளவிட முடியாப் பெருமை கொண்டவர்.  வில்லியம்ஸின் தாத்தா இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றவர்.  வில்லியம்ஸின் தந்தை வியட்நாம் போரிலும், வில்லியம்ஸின் பெரியப்பா கொரியன் போரிலும் பங்கேற்றவர்கள். வில்லியம்ஸும் அவரது சகோதரர்களும் ஈராக் போரிலும், ஆபரேஷன் டெசெர்ட் ஸ்டார்மிலும் (Operation Desert Storm) பங்கேற்றவர்கள்.

    தனது மகன்களும் மகளும் அதுபோன்றே தங்கள் பரம்பரைப் பெருமையைக் காக்கும் வண்ணம் இராணுவத்தில் சேர்ந்தது அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.  முதல் மகனும், அடுத்த மகளும் ஆபரேஷன் அனகொண்டா (Operation Anaconda) வில் பங்கேற்று ஆப்கானிஸ்தான் சென்றார்கள், ஒருவர் கண்ணிவெடிகுண்டில்(landmine) சிதற, மற்றவர் தற்கொலைப்படைத் தாக்குதலில்  (suicide attack) உயிர் இழந்ததற்கு வில்லியம்ஸ் மிக வருந்தினாலும், அதனால் அவர் அசரவில்லை. அடுத்து ரிச்சர்ட் தானும் இராணுவத்தில் சேரப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார்.  சென்ற வாரம் அவனும் சில வீரர்களும் பயணித்த ‘ப்ளாக் ஹாக்’ (Black Hawk) ஹெலிகாப்டர் விமானம் கிழக்கு ஆஃப்கானிஸ்தான் பகுதியில் விபத்திற்குள்ளாகி வீரர்கள் அனைவரும் அதில் உயிரிழந்தனர்.  இராணுவம் இன்னமும் விபத்தின் காரணத்தைப் பற்றிய விசாரணையை முடிக்கவில்லை.  இராணுவத்தினர் ரிச்சர்டின் உடலைச் சவப் பரிசோனைக்குப் பிறகு இன்று குடும்பத்திடம் ஒப்படைத்து தங்கள் இறுதி மரியாதையை செலுத்த வந்துள்ளனர். இனி தனது பரம்பரையில் அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றுவதைத் தொடர யாரும் இல்லை என்ற அதிர்ச்சியிலும், இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்ததில் அப்பா வில்லியம்த் மிகவும் ஆடிப்போயிருந்தார். சிறிது நாட்களுக்கு முன்தான் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் போனார்.  இப்பொழுது  அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

    தேவாலயத்தின் கதவு திறந்தது.  அனைவரும் தங்கள் பேச்சுக்களை நிறுத்தியதால் அந்தஇடத்தில் பேரமைதி நிறைந்தது.  ரிச்சர்ட் விமானப் படையில் இருத்தால், விமானப்படை வீரர்கள் ஆறு பேர், சவப் பெட்டியைச் சுமக்கும் ‘பால் பியரர்ஸ்’ ஆக, பக்கத்திற்கு மூவராக, அமெரிக்கக் கொடி போர்த்திய அவனது சவப் பெட்டியைச் சுமந்து கொண்டு மிகவும் விறைப்பாக அணிவகுத்து வந்தனர்.  அவர்களுக்கு முன் புறம் ஒரு வீரரும் பின் புறம் ஒரு வீரரும் அவர்களைப் போலவே விறைப்பாக நடந்து வந்தனர்.  அவர்களுக்குப் பின்னர் கருப்பு ஆடைகளும் தொப்பிகளும் அணிந்த நண்பர்களும், உறவினர்களும் கண்களைத் துடைத்துக் கொண்டு வந்து நின்றனர்.  உள்ளூர் தொலைக்காட்சி நிலைய படம் பிடிப்பவர்களும், செய்தியாளர்களும்  மட்டுமே சிறிது அங்கும் இங்கும் ஓடிப்  படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

    சவப்பெட்டியைச் சுமந்து வந்த வீரர்களில் இரு பெண் வீராங்கனைகளும் இருந்தார்கள். அனைவரும் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து, படிப்படியாக ஐந்து முறை திரும்பி,  90 பாகையில் நேர் செங்குத்தாகத் திரும்பி மீண்டும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியில் சவப் பெட்டியை ஏற்றினார்கள்.  பிறகு வண்டியின் இரு பக்கமும் பக்கத்திற்கு நால்வராக அணிவகுத்து விரைந்து நடந்து, வண்டியைதாண்டியதும் வரிசை கலைந்து ஓடிப்போய் தேவாலய ஊர்திகள் நிறுத்துமிடத்தில் இருந்த தங்கள் இராணுவ வண்டியில் ஏறிக் கொண்டார்கள்.  எங்கிருந்தோ சொல்லி வைத்தது போல உச்சியில் விளக்குகள் மின்ன காவல்துறை ஊர்தியும், அதற்கும் முன் இரு மோட்டார்பைக் காவலர்களும் திடுமெனத் தோன்றி அமரர் ஊர்தி முன்னர் தங்கள் ஊர்திகளை நிறுத்திக் கொண்டனர்.

    இதற்குள் ரிச்சர்ட் குடும்பத்தின்  உறவினர்களும் நண்பர்களும் ஊர்திகள் நிறுத்துமிடத்திற்குச் சென்று தங்கள் வண்டிகளில் ஏறிக் கொண்டார்கள்.  சக்கரநாற்காலியில் அப்பா வில்லியம்சைத் தள்ளி வந்த ரிச்சர்டின் அம்மாவும், ரிச்சர்டின் மனைவி அபியும் அவருக்காக பிரத்யேகமாக தருவிக்கப்பட்ட, சக்கர நாற்காலியை ஏற்றும் வாடகை வேன் அருகில் வந்ததும் அதில் அவரை ஏற்றினார்கள்.  அப்பா வில்லியம்ஸுடன்  அம்மா பின்னால் அமர்ந்துகொள்ள, அபி முன்னிருக்கையில் அமர்ந்து கொள்ளவும் வண்டி புறப்பட்டது.  தேவாலய வாசலில் நின்ற அனைவரும் அமைதியாக கொடிகளை அசைத்தனர். முன்னால் காவலர்களின் வண்டிகள், ரிச்சர்டின் அமரர் ஊர்தி, இரு இராணுவ வாகனங்கள், தொடர்ந்து ரிச்சர்டின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஊர்திகள் என ஊர்வலம் நகரின் மற்றொரு புறத்தில் இருந்த மயானத்தை நோக்கி ஊர்ந்தது.  சாலையின் போக்குவரத்து சிறிது தடங்கலுற்றது.  காவலர்களின்  சைகைக்கு காத்திராமல் இறுதி ஊர்வலம் என்று தெரிந்த உடனேயே ஊர்திகளில் சென்றவர்கள்  தானாகவே சாலையில் ஓரங்கட்டி வழி விட்டனர். வழியில் நின்ற பேஸ் பால் கேப் தொப்பிகள் அணிந்திருந்த ஒரு சில இளைய தலைமுறையினரும் தொப்பிகளை அகற்றி தலைகுனிந்து  அஞ்சலி செலுத்தினர்.

    வில்லியம்ஸின் வண்டி ரிச்சர்ட் படித்த பள்ளியை நெருங்கியது.  பள்ளியின் வாசலில் உள்ள அறிவிப்புப் பலகையில், “உன் ஆன்மா சாந்தி அடையட்டும் ரிச்சர்ட் வில்லியம்ஸ், உன் வாழிகாட்டுதலை நாங்களும் தொடர்வோம், நாட்டுப் பணியில் பங்கேற்போம்” என்ற வாசகங்கள் எழுதப் பட்டிருந்தது.  அதைப் பார்த்ததும் அபியின்  கண்கள் கலங்கியது.  பின்னால் ரிச்சர்டின் அம்மாவிடம் இருந்து ஒரு விசும்பல் தோன்றியது.  எத்தனை முறை மகனை இந்தப் பள்ளியின் வாசலில் வண்டியில் கொண்டு வந்து இறக்கி விட்டிருக்கிறார். எத்தனை முறை அவன் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில் பார்வையாளராக வந்து மகனுக்கு உற்சாக மூட்டியிருக்கிறார்.  அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை.

    அப்பா வில்லியம்ஸ் உணர்சிகளற்ற  சிலையாகவே  அமர்ந்திருந்தார். வண்டி மயானத்தை அடைந்தது.  மீண்டும் இராணுவ வண்டிகளில் இருந்து வெளிப்பட்ட எட்டு வீரர்களும் விறைப்பாக நடந்து அமரர் ஊர்தியை நெருங்கினார்கள்.  ரிச்சர்டின் குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் அங்கு தற்காலிகமாக போடப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்தார்கள். முன் வரிசையில் ரிச்சர்டின் அம்மா, சக்கரநாற்காலியில் ரிச்சர்டின் அப்பா, பிறகு அபி என அமர்ந்து கொண்டார்கள்.  இருபாதிரியார்கள் விவிலியத்தைக் கையில் வைத்துக் கொண்டு பிரார்த்தனைகாகத் தயாராக நின்றார்கள்.

    வீரர்கள் முன்போலவே பக்கத்திற்கு மூவராக அணிவகுத்து, முன்னும் பின்னும் இருவர் தொடர ரிச்சர்ட் உறங்கிய சவப்பெட்டியை கொண்டுவந்து பந்தலுக்கருகில் இருந்த ஒரு மேடையில் வைத்தார்கள். பிறகு லாவகமாக சடாரென சப்பெட்டியின் மேல் போர்த்தியிருந்த தேசியக் கொடியை உருவினார்கள்.  பக்கத்திற்கு நால்வராக நின்று கொண்டு சடார் சடாரென ஒலி வரும் வண்ணம் கொடியை உதறி, நீள வாக்கில் மடித்து, தொடர்ந்து நீவிவிட்டவாரே மடிக்கத் தொடங்கினர்.  சிவப்பு வெள்ளை பட்டைகள் மட்டும் உள்ள பகுதியில் மடிக்க ஆரம்பித்து 13 முறை முக்கோண வடிவில் மாற்றி மாற்றிப் போட்டு மடித்து, வெள்ளை நட்சத்திரங்களும், நீல வண்ணமும்  கொண்ட பகுதி  வெளியில் தெரியுமாறு முக்கோண வடிவில் மடித்து முடித்தனர்.  அதை ஒருவர் மட்டும் கையில் பெற்றுக்கொள்ள மற்ற வீரர்கள் அணிவகுத்து மீண்டும் வெளியேறிய பிறகு களைந்து சென்றனர்.

    கொடியைப் பிடித்திருந்த வீராங்கனை மட்டும் விறைப்பாக ரிச்சர்டின் குடும்பத்தை நோக்கி நின்றார்.  ரிச்சர்டின் அம்மாவும், அபியும் எழுந்து நின்று கொண்டார்கள்.  பாதிரியார்கள் ஒவ்வொருவராக பிரார்த்தனை முடித்து ஆமன் சொல்லி முடித்ததும், வீராங்கனை அபியை நெருங்கி இராணுவ மரியாதை செய்த கொடியை அபியின் கையில் கொடுத்துவிட்டு, ரிச்சர்டின் பணிக்கு இராணுவத்தின் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, அவன் ஆன்மா சாந்தியடையட்டும் என்று சொல்லி சல்யூட் அடித்துவிட்டு விரைப்புடன் நடந்து வெளியேறினார்.  அதனைத் தொடர்ந்து இறுதி மரியாதைகள் நடந்து  ரிச்சர்ட் அடக்கம் செய்யப்பட்டான். அவ்வப்பொழுது தாள முடியாமல் அபியும்  ரிச்சர்டின் அம்மாவும் கண்கலங்கினர், அல்லது விசும்பினார்.  ஆனால் அப்பா வில்லியம்ஸ் சிலை போன்ற உணர்சிகளற்ற முகத்துடனேயே இருந்தார்.

    சடங்குகள் அனைத்தும் முடிந்து அனைவரும் வெளியே வந்து தங்கள் ஊர்திகளில் கிளம்பினர்.  அபியும், ரிச்சர்டின் அம்மாவும் மீண்டும் சக்கரநாற்காலியை வாகனத்தில் ஏற்றினர். ரிச்சர்டின் அம்மா ஏறியவுடன் கதவைச் சாத்த உதவிய அபி, முன்னிருக்கை கதவை நோக்கி நகர்ந்தாள். அதற்குள், “வண்டியை எடு” என்று அப்பா வில்லியம்ஸின் கடினமானக் குரல் கேட்டது. அபி அதிர்ச்சி அடைந்தாள். அவளைப் போலவே அதிர்ச்சியுடன் வண்டியோட்டியும், ரிச்சர்டின் அம்மாவும் வில்லியம்ஸின் முகத்தைப் பார்த்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு அபியைப் பார்த்தனர், அவள் முகத்தில் இருந்து அபி அதிர்சியில் இருந்து இன்னமும் மீளவில்லை என்று தெரிந்தது. திறக்கப்போன வாகனத்தின் கைப்பிடியில் இருந்து தனது  கைகளை அதிர்ச்சியில் இருந்து மீளாமலே அகற்றிக் கொண்டாள்.  ரிச்சர்டின் அம்மா அபி என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.   இடைவெட்டிய வில்லியம்ஸ் வண்டியோட்டியை நோக்கி, “இன்னமும் கிளம்பவில்லையா?” என்று உறுமினார்.  வண்டியோட்டியும் பரிதாபமாக ஒருமுறை அபியை நோக்கிவிட்டு தயக்கத்துடன் வண்டியை ஓட்டத் தொடங்கினார்.

    வண்டி அவளைக் கடந்தபொழுது தலைகுனிந்து, கண்ணீர் வழிந்த முகத்துடன் ரிச்சர்டின் அம்மாவின் முகமும், சிலையாக இருந்த வில்லியம்ஸின் முகமும் அபியின் பார்வையில் தட்டுப் பட்டது.  இனி எவ்வாறு மயானத்தில் இருந்து ஊருக்குள் செல்வது, ஏதேனும் நண்பர்களோ உறவினர்களோ சவாரி கொடுத்து உதவி செய்ய இருக்கிறார்களா அல்லது வாடகை வண்டியை எப்படி மயானத்திற்கு வரவழைப்பது என்று குழம்பிய அபி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

    (தொடரும்)

     

    படம் உதவி:
    http://photoblog.statesman.com/wp-content/uploads/2010/08/lkv-processionblog.jpg
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSpWyVdRB2zx_sg0bNyNy2fu6UMxzJz829AJ5VT_6wHx35ES5Dd2w
    https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSyODas5KYOAvTZTve6GwZ1CXq8829lzqMsozsY1jYdVCmGDlIz1A

     

     

     

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!..(பகுதி-2)

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    220px-Alexander_The_Greate_and_Roxane_by_Rotari_1756

    அலெக்சாண்டரின் திக்விஜயத்தில் தோல்வியுற்ற பாரசீக நாடுகளில் ஒன்றான பாக்டிரீயாவைச் சேர்ந்த நாட்டியக்காரி ரொக்ஸானா அவனுக்குக் கிடைத்த போர்ப்பரிசு. பாக்டிரீயாவை வீழ்த்தியதும் அதன் சிற்றரசன் அளித்த ஒரு மாலை விருந்தின்போது பதினாறு வயது நிரம்பிய அப்பேரழகியைக் கண்டவுடன் அவள் மீது மையல் கொண்டான் முப்பது பிராயத்தை எய்திய அலெக்சண் டர்,அவன் விருப்பத்தைப் புரிந்துகொண்ட பாக்டிரீயக் காவலன் அவளை அன்றிரவு மாசிடோனிய மன்னனின் கூடாரத்துக்கு அனுப்பி வைத்த்தும், அவளுடன் தான் அன்றிரவு நடத்திய சம்பாஷணைகளும் அவன் நினைவில் வந்ததும றக்கமுடியாதுதான்!

    அன்று அந்தக் கூடாரத்தில் உள்ள தீப்பந்த வெளிச்சத்தில், ரொக்ஸானா ஒரு தங்கச்சிலை போல் நின்றிருந்தாள். அலெக்சாண்டர் அந்த பதுமையின் அருகில் சென்று நோக்கினான். சற்றுமுன் பல இளம் பெண்டிர் வழங்கிய நாட்டிய நிகழ்ச்சியில் பார்த்தவளா இவள்! உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இப்பேரழகி உண்மையிலேயே எனக்கு ஒரு போர்ப்பரிசுதான்  என யோசித்தவாறு அவளைச் சுற்றி வந்தான். அவன் எண்ணத்தை அவள் பூரணமாக ஆக்கிரமித்தாள்.

    செம்பஞ்சு வண்ண மேனி, சிறிய பாதங்கள், அல்லித்தண்டுகளை ஒத்த கால்கள், குறுகிய இடை, பருவச் செழிப்பின் உந்துதலால் பூரித்திருந்த இனமலர்கள், கோலமயில் கழுத்து, அப்பொழுதே அலர்ந்த தாமரையை வெட்கிக்க வைக்கும் வதனம், படைத்த சிற்பியின் கைத்திறனால் நன்று செதுக்கப்பட்ட மூக்கு, செம்மை படர்ந்த இதழ்கள், தீக்‌ஷண்யமான கண்கள், மகுடம்போன்ற கரிய அளகம்… இவையெல்லாம் அவள் முன்னழகு என்றால், அவள் பின்னழகு அவனை மேலும் சொக்க வைத்தது.

    அந்த மெய்மறந்த நிலையில் அக்கூடாரத்தில் சற்று நேரம் மவுனம் ஆட்சி செய்தது. அவ்வமைதியை முடிக்கும் வகையில் அவள் பேசலுற்றாள்.

    “மாவீரரே! இப்போது  நான் என்ன செய்யவேண்டும் சொல்லுங்கள். தங்கள் இன்ப வேட்கைக்கு பலியாகத் தயாராக வேண்டுமா? எப்பொழுதெல்லாம் உங்களைப் போன்ற அரசர்கள் போர்வெறி கொண்டு ஒரு நாட்டை வீழ்த்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் காமவெறி கொண்டு பேதைப் பெண்களைத் துன்புறுத்துவதுதானே வழக்கம்!” என்று கண்ணீர் மல்கும் கண்களோடு தழுதழுத்த குரலில் கேவினாள் ரொக்ஸானா.

    ”பெண்ணே! என்னை ஏன் ஒரு காமாதுரனாக நினைக்கிறாய்? அழகினை ஆராதிக்கும் ஒரு இளைஞனாக ஏன் கருதக்கூடாது? மாலை விருந்தின்போது நடந்த நாட்டிய நிகழ்ச்சியில் உன்னைக் கண்டது முதல் என் மனம் என்னை உன் அடிமையாக ஆக்கிவிட்டது. நான் ஈராஸின் பாணத்துக்கு பலியாகிவிட்டேன். உன்னை முறைப்படி மணம்புரிய வேண்டும் என்பதே என் முடிவு, உனக்கு சம்மதமா? ஒரு உண்மையை உன்னிடம் கூறியாக வேண்டும். எனக்கு ஏற்கனவே இரு மனைவியர் உண்டு. அரசர்கள் பல தாரங்களை மணப்பது புதிதல்லவே. உனக்கு விருப்பம் இல்லை என்றால் உன்னை நான் கட்டாயப்படுத்த மாட்டேன். உன்னை மிக்க கவுரவமாக திருப்பி அனுப்பி வைப்பேன்.”

    அலெக்சாண்டரின் இந்த வெளிப்படையான கூற்று ரொக்ஸானாவின் மனத்தை நெகிழச் செய்தது.

    ”எனக்கு இப்படிப்பட்ட அதிர்ஷ்டமா? மாமன்னர் அலெக்சாண்டருக்கு இந்த அபலை நாட்டியக்காரி மீது காதலா? இது என்னை ஏய்க்கும் பொருட்டு கூறப்படும் உபசார வார்த்தைகளா அல்லது மெய்யான சொற்களா?”

    “பெண்ணே உன் பெயர் என்ன? நான் கூறுவது இறைவன் மீது ஆணையாக முற்றிலும் உண்மை. உன் ஒப்புதலுடன் உன்னை என் பட்டமகிஷியாக்கிக் கொள்ளவே நான் விரும்புகிறேன்.”

    ”மன்னர் மன்னரே, என் பெயர் ரொக்ஸானா. என்னை தங்கள் பட்டத்து ராணியாக்கப் போகிறீர்களா? உங்கள் மனைவியரும், உறவினர்களும், அரசாங்க ஆலோசகர்களும் மற்றும் உமது நாட்டின் சான்றோர்களும் இதனை ஒப்புக் கொள்வார்களா?”

    “ரொக்ஸானா, என் விருப்பத்திற்கு விரோதமாக என் அன்னை ஒலிம்பியா ஏதும் சொல்லமாட்டார். மற்றவர்கள் அபிப்பிராயத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நம்முடைய திருமணம் என் அன்னையின் முன்னிலையில்தான் நடக்கவேண்டும். அதுவரை நீ காத்திருக்க வேண்டும்.”

    “என் மனத்திற்கு இனியவராகிவிட்டவரே, மணம் எப்போது நடந்தாலும், இனி நான் உங்களுடன்தான் இருப்பேன். உங்களுக்குத்தான் சேவை செய்வேன். நீங்கள் எங்கு சென்றாலும் நானும் ஒரு தோழியாக உங்களை நிழல்போல் தொடர்வேன்.”

    “ரொக்ஸானா, மிக்க மகிழ்ச்சி, நீ என் கூடவே இருந்தாலும், நம் திருமணம் நடக்கும்வரை  நான் வரம்பு மீறமாட்டேன்,  ‘இது உறுதி’  என்றான் அலெக்சாண்டர்.

    “எத்தனை உத்தமமானவர் நீங்கள்!” என்றாள் அவள் ஒரு பெருமூச்சோடு.

    அன்றிலிருந்து அப்பாரசீகப் பேரழகி அலெக்சாண்டரின் பாசறையிலேயே வசித்தாள். அவ்வப்போது அவன் கூடாரத்துக்குச் சென்று அவனுக்கு உணவளிப்பது, போர்க்காயங்களுக்கு களிம்பு தடவுவது, உரிய காலத்தில் மருத்துவர் சொல்லியபடி மருந்துகளைக் கொடுப்பது, நடனம் மற்றும் இனிய பேச்சுகளால் அவனை மகிழ்விப்பது போன்ற சேவைகளைப் புரிந்து வந்தாள்.

    கூடாரத்தின் வாயிலில் ஒரு இனிமையான வாசம் வந்து அவன் மூக்கைத் துளைத்த்தும் அவன் நிகழ்காலத்துக்கு வந்தான். அங்கே ரொக்ஸானா நின்றிருந்தாள்.

    eros

     

    ”ஈராஸ்” கிரேக்கர்களின் காதல் தேவன்.

     

     

     

     

    (தொடரும்)

    Share
  • உத்தமன் அலெக்சாண்டர்!…(பகுதி – 1)

     

    ராமஸ்வாமி ஸம்பத்

     

    Alexander-The-Great-1

                                                                                                                                                                                                                                                                                                                                                                                  

     

     jhelum“இது நதியா அல்லது கடலா’’ என்ற ஐயப்பாடு எழும் அளவில், அகண்ட ஜீலம் நதி கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த்து. பருவக்காற்றினால் உந்தப்பட்டு அடாது கொட்டித்தீர்க்கும் மழை அந்த சிந்து மஹாநதியின் உபநதியை மேலும் மேலும் வெள்ளப்பெருக்கில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. உச்சிப் பொழுதாக இருந்தாலும் கார்மேகக் கூட்டம் வானத்தையே மூடிவிட்டதால் இயற்கை வெளிச்சம் வெகு குறைவாக இருந்தது. ’சல…சல..’. என்ற பலத்த அரவத்துடன் அலைமோதும் வெள்ளம், ‘விர்…விர்…’ என்று வீசும் அதிவேகக் காற்றின் பேரொலி, மற்றும் வான்முகில்களின் உருமல் அந்த பிராந்தியத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.

    அத்தகைய கண்கொள்ளாக் காட்சியைத் தனது போர்க் கூடாரத்திலிருந்து வெளிவந்து அந்த மழையினூடே நனைந்து கொண்டே ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருந்தான் மாசிடோனிய மாமன்னன் அலெக்சாண்டர். ஜீலத்தின் கிழக்குக் கரையில் இரண்டு நாட்களுக்கு முன்பே பவுரவ நாட்டு மன்னன் புருஷோத்தமனுடன் நடந்து ஓய்ந்திருந்த போரில் அந்த யவன மன்னன் உடலை சிராய்த்திருந்த விழுப்புண்களின் வலியைக்கூட  ஓரளவுக்கு அக்காட்சி மறக்கச் செய்தது.

    ‘ஆஹா, எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த ஹைடஸ்பெஸ்!**. இந்த உபநதியே இப்படியிருந்தால் இண்டஸ் (சிந்து மாநதி) எவ்வளவு பெரிதாக இருக்கும்! அப்புகழ்பெற்ற காஞ்ஜெஸ் (கங்கை மாநதி) எப்படியிருக்குமோ!’  என அவன் மனம் ஆலோசனையில் வீழ்ந்தது. ‘எப்படியாவது காஞ்ஜெஸ் சமவெளி நாடான மகதத்தையும் வெல்ல வேண்டும்’ என்ற ஒரு மனத்துடிப்பு வெளிப்பட்டது. சிந்து-கங்கை சமவெளி நாடுகளை வென்று கீழை நாடுகளையும் வீழ்த்தி தன் உலக ஏகாதிபத்தியத்தை நிலை நாட்டவேண்டும் என்பதே அவன் அவா.

    ஆனால் அவன் படைவீரர்களோ வீட்டு நினைவு மேலிட்டதாலும், மாதக் கணக்கில் போர் புரிந்து பல நாடுகளை வீழ்த்திய களைப்பினாலும் மேற்கொண்டு போரிட விரும்பவில்லை. அதுவும் தவிர ஜீலம் போரில் தாங்கள் இதுவரை கண்டறியாத யானைப்படையின் எதிர்த்தாக்குதலால் அவர்கள் சற்று அச்சம் அடைந்ததும் அவர்கள் உற்சாகக் குறைவுக்கு ஒரு காரணம். மகத சாம்ராட்டின் யானைப்படை பவுரவ மன்னனின் படையைவிட பல மடங்கு பெரியது என்ற தகவல் அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தது.  மேலும் பரத கண்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள அடர்ந்த முல்லைப் பிரதேசத்தில் உள்ள மரக்கிளைகளில் தலை கீழாகத் தொங்கியவாறு தவம் செய்யும் யோகிகள் அவர்களுக்கு வியப்போடு அச்சத்தையும் ஏற்படுத்தினர். “ஐயோ! இவர்கள் மாயாவிகளோ என்னவோ, என்ன செய்வார்க்ளோ?” என்ற பயம் அவ்வீரர்களைப் பீடித்து, ’போதும் இந்த ஓயாத சண்டை’ என்று எண்ண வைத்தது.

    ’என்ன வீரர்கள் இவர்கள்! நான் இவர்களுக்கு என்ன குறை வைத்தேன்? கை நிறைய ஊதியம் கொடுத்ததோடல்லாமல் மாசிடோனியாவில் உள்ள இவர்கள் குடும்பத்தாருக்கு உணவுப் பொருட்களோடு எல்லா வசதிகளையும் இலவசமாக அளித்திருக்கிறேன். இவற்றைத் தவிர, எனது திக்விஜயத்தில் வீழ்ந்த நாடுகளில் சூறையாடப்பற்ற விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் இவர்களுக்கே ஈந்தும் இவ்ர்கள் ஏன் இப்படி எனது ஆணையை மீறி நாடு திரும்ப விரும்புகிறார்கள்? நன்றி கெட்ட ஜன்மங்கள்!’ என அலெக்சாண்டர் பற்களைக் கடித்தான்.

    அதே நேரத்தில், ஜீலத்தின் கீழ்க்கரையில் நடந்து முடிந்த அந்த உக்கிரமான போரில் ’தான் மெய்யாக வெற்றி பெற்றோமா?’ எனும் சந்தேகம் அவனுள் எழுந்தது. ’…இந்த நாட்டு மன்னன் எப்பேற்பட்ட வீரன்! என்ன உயரம், ஏழடி இருப்பானோ? அவன் முன் நான் ஒரு சித்திரக்குள்ளனே. போர் யானையின் மீது அமர்ந்து எவ்வளவு லாவகமாக அம்புகளையும் ஈட்டிகளையும் மாற்றி மாற்றி என் மீது எறிந்து என்னை இப்படிக் காயப்படுத்தி உள்ளான். குருதி சொட்டும் காயங்களுடன் தரையில் வீழ்ந்த என்னை ஏன் அவன் கொல்லவில்லை? அவனது தயக்கத்தைப் பயன்படுத்தித்தானே என் மெய்க்காப்பாளர்கள் அவனை சிறைபிடித்தனர்! அப்படி அவன் தயக்கம் காட்டாதிருந்தால் வெற்றி அவனுடையதாக இருந்திருக்கும் அல்லவா…’ என்றெல்லாம் அலெக்சாண்டரின் சிந்தனை ஓடியது.

    ‘கீழைநாட்டாரை எவ்வளவு குறைவாக எடை போட்டிருந்தோம். இங்கு வாழும் மக்கள் காட்டுமிராண்டிகள் என்றும் இவர்களை வீழ்த்துவது மிக எளிது என்றல்லவா நினைத்திருந்தோம். நாம் இதுவரை கண்டிராத இவர் யானைப்படை எவ்வளவு நாசத்தை நம் படைகளுக்கு உண்டாக்கி விட்டிருக்கிறது. நஞ்சு தோய்க்கப்பட்டக் கணைகளைத் துதிக்கைகளால் எறிந்து அந்த யானைகள் எத்தனை சேதங்களை ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக என் உயிருக்கு உயிரான புரவி பூசிபாலஸ் இப்படையின் யானையால்தான் கொல்லப்பட்டது. என் வலது கை போன்ற தளபதி நினேயியாவை இந்த யுத்தத்தில்தானே காவு கொடுத்தேன். இந்த என் வெற்றிக்கு எத்தனை பெரிய விலையைக் கொடுத்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக இப்படை யானைகள் சகதியான தரையில் சரியாகக் கால் ஊன்றமுடியாமல் பவுரவ நாட்டுப் படைகள் மீதே திரும்பிப் பாய்ந்ததால் அல்லவா அவர்கள் பக்கமும் பலத்த இழப்பு ஏற்பட்டது. கடந்த மாதங்களில் கிரேக்கம், எகிப்து, சிரியா, மத்தியதரைக் கடல் நாடுகள், பாரசீக நாடுகளெல்லாம் எவ்வளவு எளிதாக என்னிடம் சரண் அடைந்தன! இங்கு மட்டும் என் பராக்கிரமம் ஏன் செல்லவில்லை..?.’ என்று எண்ணி அந்த யவன அரசன் மனம் ஒடிந்து போனான்.

    ‘மேலும், பவுரவ நாட்டின் விரோதியான தக்‌ஷசீல சிற்றரசன் அம்பியின் உதவியில்லாமல் இந்த ஹைடஸ்பஸின் மேற்குக் கரையைக் கடந்து அதன் கீழ்க்கரையில் இப்போரினை நடத்தியிருக்க முடியுமா? பொற்குவைகளால் அவனை மயக்கி அல்லவா நான் கைபர் கணவாய் வழியாக இந்த பரத கண்டத்தில் கால் வைத்தேன். பவுரவ நாட்டிற்கு இந்த நதி இயற்கை அளித்துள்ள பெரிய அரண். அம்பியின் யோசனைப்படி இரவோடு இரவாக ஜீலத்தின் வடக்கு திசை நோக்கி படைகளை நகர்த்தி அகலக்குறைவான ஓரிடத்தில் பரிசல்கள் மூலம் கீழ்க்கரைக்கு வந்து சேர்ந்திராவிட்டால் மழை ஓயும்வரை நம்மால் எதுவும் செய்திருக்க முடியாது.’

    இவ்வாறெல்லாம் ஆலோசனை செய்த அலெக்சாண்டருக்குத் தன் ஆசான் அரிஸ்டாடில் சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னிடம் கூறியது நினைவுக்கு வந்தது: ‘கீழைநாட்டவர்கள் ஆன்மீக பலம் மிகுந்தவர்கள். அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல.’ மேதை பிளாட்டோவின் முக்கிய சீடரான அவரது மதிப்பீடு எவ்வளவு சரியானது என்பதனை உணர்ந்த நிலையில், மழையில் அதிக நேரம் நனைந்ததால் ஏற்பட்ட விழுப்புண்களின் வலி தாங்கமுடியாமல், உள்ளே வந்து மஞ்சத்தில் வீழ்ந்தான்.

    “யாரங்கே? ரொக்ஸானாவைக் கூப்பிடுங்கள்” என்று உரத்த குரலில் கர்ஜித்தான்.

     “ஜீலம் நதி”  கிரேக்கர்களால் “ஹைடஸ்பெஸ்” என்ற பெயரால் அழைக்கப்பட்டது.

    (தொடரும்)

    Share
  • அன்பே அழகானது. – பகுதி 6.

    – ராஜ்ப்ரியன்

     

    ஏண்டா ஐஸ்கிரிம் வாங்க போறவன் கூட யாரையாவது அழைச்சி போகலாம்மில்ல.

    இல்ல டாடி.

    நீ வர வர ரொம்ப மோசமா நடந்துக்கற ரஞ்சித் என கோபமாக சொன்னதும் அமைதியாக வந்தான்.

    பாஸ் தப்பு ரேவதி மேல. நீங்க ஏன் குட்டி பையனை திட்டறிங்க.

    ரேவதிக்கிட்ட ஒப்படைச்சிட்டு போனா நீங்க யாரும் அவனை பாத்துக்கமாட்டிங்களா என கேட்டதும் அதில்ல சார் என ஸ்ரீதர் தலை குனிந்தான். மஞ்சு சோகமாக அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

    கிடைச்சிட்டான்யில்ல விடுடா என்ற பிரபு, ரஞ்சித்தை அழைத்து புதுயிடத்துக்கு வந்தா தனியா போக கூடாது. யாராவது பெரியவங்க ஒருத்தர் துணையோடத்தான் போகனும். இங்கயெல்லாம் நீ தொலைஞ்சி போய்ட்டின்னா உன்ன கண்டு பிடிக்கவே முடியாது. அதனால ஜாக்கிரதையா இருக்கனும் சரியா என்றான்.

    சரி அங்கிள்.

    ஆமாம் ஐஸ்கிரிம் வாங்க உனக்கேது காசு என நான் கேட்டதும்

    அமைதியாக இருந்தான்

    கேட்கரன்யில்ல பதில் சொல்லு என கோபமாக கேட்டதும் ட்ரஸ் எடுக்க போனப்ப ஐஸ்கிரிம் வாங்க பணம் தந்திங்களேப்பா அதல மீதி காசு எங்கிட்ட இருந்துச்சி அதலதான் வாங்கனன்.

    உனக்கு காசு தர்றது தப்பா போச்சி.

    சின்னப்பையன் சொன்னா புரிஞ்சிக்கபோறான். அதவிட்டுட்டு திட்டிக்கிட்டே இருக்கற என பிரபு மீண்டும் சொல்ல அமைதியாக வந்தேன். இரவு 8 மணியளவில் அனைவரும் ஊர் வந்து சேர்ந்தோம்.

    வீட்டுக்கு வந்து உள் நுழைந்ததும் என்னடா கோபமா என கேட்டேன்.

    அமைதியாக இருந்த ரஞ்சித் எதுவும் சொல்லமால் நி;ன்றான். இந்த வயசுல உங்க பையன் பிர்லியன்டா இருக்கான்னு மத்தவங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு. ஆனா நீ பண்ற வாலு தனத்த தான் பொருத்துக்க முடியல என்றதும். அதற்கும் அமைதியாக இருந்தான். சரி ட்ரஸ் மாத்திக்க டிபன் செய்யறன் சாப்பிடலாம் என்றதும் அமைதியாக பெட்ரூம்குள் நுழைந்தான். நானும் சென்று உடை மாற்றிக்கொண்டு டிபன் செய்ய தொடங்கினேன். தோசை ஊத்தி சட்னி வைத்து தந்ததும் சாப்பிட்டுவிட்டு ரூம்குள் சென்றுவிட்டான். நான் பெட்ரூம்குள் நுழைந்த போது அவன் தூங்கியிருந்தான். அவன் தலையை தடவி தந்தபடி நானும் தூங்கியிருந்தேன்.

    காலையில் எழுந்தவன் அவனே குளிக்க சென்றான். என்ன சார் இன்னும் கோபம் போகலயா ?

    அதெல்லாம் ஒன்னும்மில்ல.

    உன் முகத்த பாரு குரங்கு மாதிரியிருக்கு.

    உன் மூஞ்சிதான் எங்கிட்டயிருக்கு என பதில் சொல்ல அவனை முறைப்பது போல பார்த்ததும் பாத்ரூம்குள் ஓடிவிட்டான். குளித்துவிட்டு வெளியே வந்து பள்ளிக்கு கிளம்பியவனின் கழுத்தில் டை கட்டியபடி மெல்லிய குரலில் நீ அவுங்க கூட இல்லன்னதும் நான் எப்படி துடிச்சன் தெரியுமா. அந்த கோபத்தல திட்டிட்டன்டா ஸாரி.

    நீங்க சென்னை அழைச்சிம் போகும்போது என்ன சொன்னிங்க.

    என்ன சொன்னன்.

    பொம்மையெல்லாம் வாங்கி தர்றன்னு சொன்னீங்க. எதுவும் வாங்கி தரல.

    மஞ்சுக்கிட்ட நான் தான் வாங்கி தரச்சொன்னனே.

    எதுவும் வாங்கி தரலப்பா.

    நானும் டென்ஷன்ல மறந்துட்டன். அடுத்தமுறை போறப்ப நிறைய வாங்கி தர்றன்.

    ஓ.கே டாடி என தலையாட்டியவன் சந்தோஷத்தில் கன்னத்தில் ஒரு முத்தம் தந்தான். தட்டில் போட்டு வைத்திருந்த மூன்று இட்லியை சாப்பிட்டபோது வெளியே வீட்டு வாசலில் வந்து நின்று ஹாரன் அடித்தது ஆட்டோ. இரு ரஞ்சித் உன்ன நான் ட்ராப் பண்றன்.

    வேணாம் டாடி. நான் ஆட்டோவுல போறன். மதியம் லஞ்ச் டாடி. மறந்துட்டன் இரு என சமையல் அறைக்கு சென்று அவனுக்காக வைத்திருந்த டிபன் பாக்ஸ் எடுத்து வந்து தந்தபடி ஐந்து இட்லி வச்சியிருக்கன். மிச்சம் வைக்காம சாப்பிடு என டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டிலை தந்ததும் வாங்கிக்கொண்டு வெளியே நின்ற ஆட்டோவில் ஏறிக்கொண்டு சிரித்தபடி டாடா காட்டினான்.

    நானும் குளித்துவிட்டு முடித்து சாப்பிட்டுவிட்டு அலுவலம் சென்ற போது வேலைகள் நடந்துக்கொண்டு இருந்தன. ஒரு கம்ப்யூட்டரில் அமர்ந்து பிரபு டிசைன் செய்துக்கொண்டு இருந்தவனை உள்ள வாடா என்றதும் வந்தவன் வீட்ல போயும் அவனை திட்டனியா ?.

    இல்லடா. காலையில வரைக்கும் கோபமா இருந்தான். ஸ்கூல் போகும்போது தான் கொஞ்சம் சிரிச்சான்.

    அவனுக்கு அம்மா பாசமும், அரவணைப்பும் தேவைடா. ஒரு அப்பா எவ்ளோ பாசத்த காட்டனாலும், அம்மா மாதிரி வராது. அதனால கோபப்படாம நாங்க சொல்றத கொஞ்சம் கேளுடா என்னும் போதே ஃபோன் மணி அடித்தது. மதன் ஃபோனை எடுத்து ஹலோ என்றான்.

    எதிர் தரப்பு குரலை கேட்டதும் வணக்கம் சார். நல்லாயிருக்கிங்களா ?

    நல்லாயிருக்கனப்பா. நீ எப்படியிருக்கற ?.

    நான் நல்லாயிருக்கன் சார்.

    செல்போன்க்கு கூப்பிட்டன் எடுக்கல.

    பைக்ல ஆபிஸ் வந்துக்கிட்டு இருந்தன் சத்தத்தல கேட்கல சார்.

    தலைவர் அடுத்த மாசம் இங்க வர்றாரு.

    என்ன சார் திடீர்ன்னு.

    மாவட்ட தலைவர் பையன்க்கு கல்யாணம். அதுக்காக வர்றாரு. நாம நல்லா விளம்பரம் செய்யனும்.

    செய்துடலாம் சார்.

    வாசகம் சொல்றன் குறிச்சிக்கப்பா.

    சொல்லுங்க சார் என ஒரு பேப்பர் பேனாவை எடுத்து அவர் சொன்னதை குறிக்க தொடங்கினான். பத்து நிமிடம்மானது. டிசைன் பண்ணி நாளைக்கு ஆபிஸ்க்கு 11 மணிக்கு தந்து அனுப்பறன் சார். கரெக்ஷன் ஏதாவது இருந்து சொன்னிங்கன்னா மாத்தி நாளைக்கு ஈவ்னிங் பைனல் பண்ணிடலாம் சார் என முடித்து ஃபோனை வைக்க 15 நிமிடமானது.

    பிரபுவிடம் எல்லாரையும் உள்ள வரச்சொல்லு.

    எதுக்கு.

    வரச்சொல்லு சொல்றன்.

    கண்ணாடி டோரை திறந்த பிரபு, ஆல் ஆபிசர்ஸ் ப்ளீஸ் கம் என்றதும் அடுத்த இரண்டு நிமிடத்தில் எல்லோரும் மதன் முன் அமர்ந்திருந்தனர்.

    அடுத்த மாசம் மக்கள் முன்னேற்ற முன்னணி கட்சியோட தலைவர் முக்கிய கட்சிக்காரர் வீட்டு கல்யாணத்துக்கு இங்க வர்றாறாம். இப்பத்தான் டேட் கன்பார்ம்மாச்சாம். அந்த கட்சி மா.செவாயிருக்கற வேலாயுதம் எம்.எல்.ஏ இப்பத்தான் போன் பண்ணி சொன்னாரு. நியூஷ் பேப்பர், பேனர், போஸ்டர்க்கு டிசைன் கேட்டுயிருக்காரு. ரொம்ப நல்லாயிருக்கன்னு தலைவர் நின்னு ரசிக்கற மாதிரி இருக்கனம்ன்னு சொல்றாரு.

    செய்து தந்துடலாம் சார் என்றான் பாண்டியன்.

    ஆனா நாளைக்கே வேணும்ன்னு கேட்கறாரு.

    நாளைக்கா என ரேவதி அதிர்ச்சியாக.

    ஆமாம்.

    ஸ்கூல், காலேஜ் அட்மிஷன் டைம் சார். வாராவாரம் புது டிசைன்ங்க தந்துக்கிட்டே இருக்கனம்ன்னு சொல்லியிருக்காங்க. நம்மோட ரெகுலர் கஸ்டமர்களோடதே நிறைய பென்டிங் இருக்கு. அதனால இத நாளைக்கே செய்து தர முடியாது சார் இரண்டு நாளாவது ஆகும் சார் என்றாள் ரேவதி.

    இவரும் நம்ம ரெகுலர் கஸ்டமர் தான் ரேவதி என்ற நான் கொஞ்சம் யோசித்துவிட்டு

    எம்.எல்.ஏவத பாண்டியனும், ரேவதியும் செய்யட்டும். காலேஜ், ஸ்கூல் ஓர்க்குகள பிரபு செய்யட்டும். மஞ்சு நீ கொஞ்சம் அப்படியே இந்த வேலைகளையும் கவனி.

    சரியென தலையாட்டிய மஞ்சு. சார் அந்த எம்.எல்.ஏ போனமுறையே ஐந்தாயிரம் பென்டிங் வச்சியிருக்காரு என்றாள் மஞ்சு.

    இந்தமுறை வாங்கிடலாம் மஞ்சு. ஸ்ரீதர் எங்க?.

    இன்னும் வரல சார்.

    பேங்க்ல ஏதாவது ஓர்க் இருக்கா.

    செக்குங்க இருக்கு சார் அத அக்கவுண்ட்ல போடனும்.

    அத எங்கிட்ட குடு நான் பாத்துக்கறன். ஸ்ரீதர் வந்ததும் எம்.எல்.ஏ விளம்பரத்த டிசைன் பண்ணச்சொல்லு.

    சரி சார்.

    பாண்டியன் வேலைய பிரிச்சி பாருங்க. நீங்க பேனர் வேலைகள பாருங்க, ரேவதி பேப்பர் விளம்பரத்த டிசைன் பண்ணட்டும், போஸ்டர் விளம்பரத்த ஸ்ரீதர்க்கிட்ட தந்துவிடுங்க. தேதியும், வாசகமும் சொல்லியிருக்காரு. எல்லாத்தலயும் அவர் படமும், கட்சி தலைவர் படமும் தான் போடனுமாம். தம்பதிங்க படத்த தந்துவிட்டுயிருக்காறாம். அதுக்கு இடத்த விட்டுட்டு டிசைன் பண்ணுங்க. சி.டி வந்ததும் படத்த எடுத்து வச்சி ஃபில் பண்ணுங்க.

    சரி சார்.

    சரி எல்லோரும் போய் வேலைய பாருங்க என்றதும் அனைவரும் எழுந்து சென்றனர்.

    பிரபு எனக்கொரு ஐடியா, நாம இதுவரைக்கும் டிசைன் மட்டும் தான் செய்து தந்துக்கிட்டு இருந்தோம். இந்தமுறை அதை பிரிண்ட் செய்து தர ஆர்டரை எடுத்த எப்படியிருக்கும் ?.

    என்னடாயிது புதுசா.

    ஆமாம் புதுசு தான். வளருனும்டா. எத்தனை வருஷத்துக்கு தான் அப்படியே இருக்கறது. கொஞ்சம் வளருவோம்;டா. நீ ஒருவேளை செய். நல்லா பிரிண்ட் போடறவங்க எங்க எங்க இருக்காங்கன்னு பாரு. ரேட் எவ்ளோன்னு விசாரி நான் இதோ வந்துடறன்.

    ஏத்தனை வேலைடா நான் செய்யறது.

    சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்த வச்சிக்கிட்டு வேலையப்பாரு. நான் வரும் போது பட்டியல் ரெடியா இருக்கட்டும்.

    ம்.

    ஃபைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் மதன்.

    மதியம் 2 மணிக்கு திரும்பி வரும்போது ரிஷப்சனில் அமர்ந்து அனைவரும் அரட்டையடித்துக்கொண்டு இருந்தனர்.

    ஏய் என்னப்பாயிது, நிறைய ஓர்க் பென்டிங் இருக்குன்னு காலையில தான் சொன்னிங்க. இப்ப என்னடான்னா எல்லாரும் உக்காந்து கதையடிச்சிக்கிட்டு இருக்கிங்க.

    கரண்ட் இல்ல சார்.

    நாம தான் யூ.பி.எஸ் போட்டுயிருக்கோம்மே?.

    நாம போட்ட யூ.பி.எஸ் நாலு மணி நேரம் தான் வருது. காலையில 9 மணிக்கு போன கரண்ட் இப்பவரை வரல. மதியம்மே பேக்கப் காலியாகி ஒரே ஒரு சிஸ்டம் தான் ஒர்க்காகுது. அதலத்தான் பாண்டியன் சார் வேலை பாத்துக்கிட்டு இருக்காரு என்றான் ஸ்ரீதர்.

    காலையில நீ எங்க போன ?

    ஓர்க் பாஸ்.

    என்ன வேலை பாத்த.

    ஃபில் வராம சிலது இருந்தது அத வாங்கிவர போனன் பாஸ்.

    வாங்கிட்டியா

    நாளைக்கு வரச்சொல்லிட்டாங்க.

    ஊர் சுத்த நிறைய காரணத்த வச்சியிருக்க

    இல்ல பாஸ்.

    பிரபு எங்க ?.

    லஞ்ச்க்கு போயிருக்கார் சார்.

    அவனை மொபைல் லைனில் பிடித்து சாப்பிட்டியா ?.

    ம் என்றவனிடம் வேலை முடிஞ்சதா.

    உன் லேப்டாப்ல ஸ்டோர் பண்ணி வச்சியிருக்கன் பாரு.

    சரி சீக்கிரம் வா எனச்சொல்லிவிட்டு மதன் தன் அறைக்குள் சென்றான். லேப்டாப்பை ஆன் செய்து பிரபு ஸ்டோர் செய்த ஃபைலை ஓப்பன் செய்து பார்த்தபோது விதவிதமான ரேட்களில் பிரிண்ட் போடப்படுவது தெரிந்தது. தன்னிடம்மிருந்த சில குறிப்புகளை பார்த்தான் அவன் சொன்னதை விட விலை கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது. பிரபு உள்ளே நுழைந்தவன் கரண்ட் வந்துடுச்சிடா என சொன்னபடி ஃபேனை சுழல விட்டவன் பாத்துட்டியா ?

    பாத்துக்கிட்டு தான் இருக்கன். இத நீயும் பாரு என நான் குறித்து வந்திருந்த சில தகவல்களை அவனிடம் தந்தேன். கொஞ்சம் நேரம் பார்த்தவன் எனக்கு குழப்பமாயிருக்கு என்ன பண்றதா ஐடியா என கேட்டான்.

    விதவிதமான ரேட்களா இருக்கு. இதல கொஞ்சம் டீப்பா போனாதான் குவாலிட்டி தர முடியும், நாமளும் லாபம் பாக்க முடியும் அதனால இப்போதைக்கு பெருசா வேணாம். இத படிப்படியா செய்வோம். அவசரப்பட்டு இறங்கி சிக்கிட்டோம் இருக்கறதும் போயிடும்.

    இந்த கம்பெனி ஆரம்பிச்ச இந்த எட்டு வருஷத்தல இப்பத்தாண்டா ஒழுங்க யோசிச்சியிருக்கற என்றான் பிரபு.

    பாஸ் என அழைத்தபடி வேகவேகமாக அறைக்குள் வந்த ஸ்ரீதர், பாஸ் ஆல் இன்டியா முழுக்க பிராஞ்ச் வச்சியிருக்கற தேவ் கம்பெனியோட பெங்களுரூ பிராஞ்ச் மேனேஜர் பேசனாரு. அவுங்களோட கிளையண்ட் ஒருத்தர் நம்மவூர்ல பெரிய ஜிவல்லரி திறக்கறாறாம். அதை மக்கள்க்கிட்ட புரமோட் பண்ணனுமாம், ஜிவல்லரி ஓனர் பிரஸ்ச மீட் பண்ணனும்மாம் அரேஞ்ச் பண்ணி தர முடியுமான்னு கேட்கறாரு.

    ஓ.கே சொல்லு. அவுங்க நம்மள ஓவர் லுக் பண்ணக்கூடாது. பிடி நம்மக்கிட்ட இருக்கட்டும் ஸ்ரீதர்.

    நீங்க பேசறிங்களா பாஸ்.

    இல்ல மேனேஜர் பேசுவாருன்னு சொல்லு.

    ஓ.கே பாஸ் என்றபடி வெளியே சென்றான்.

    ஓபி அடிச்சாலும் நல்ல கான்டக்ட் வச்சியிருக்கனேடா.

    அவன் கேடி. ஒரு நாள் நமக்கு அல்வா தரப்போறான் பாரு என்றவனிடம்

    தரும்போது பாத்துக்கலாம். இங்க அந்த கம்பெனி எது பண்றதாயிருந்தாலும் அது நம்ம ஏஜென்சி வழியாத்தான் பண்ணனும் அந்தளவுக்கு பேசி அவனை நம்ம கண்ட்ரோல்ல வச்சிக்க. நமக்கு தர்ற ரேட் விஷயத்தல தயங்குவாங்க. எங்க ரேட் இதுதான்னு கட்டன்ரைட்ட பேசிடு.

    பெரிய கம்பெனிடா விட்டு பிடிப்பமே ?.

    ஒன்னும் வேணாம். நம்மக்கிட்ட வர்றது அந்த ஜிவல்லரி கிடையாது. ஜிவல்லரி நியமிச்சியிருக்கற அட்வர்டைசிங் கம்பெனி. நியூஸ் பேப்பர், மீடியா விளம்பரத்த அவுங்களே தயாரிப்பாங்க. வெளியிடப்போறதும் அந்த கம்பெனி தான். இங்க லோக்கல்ல தெருவுல, வினையல் போர்டு, பிட் நோட்டீஸ் தர்ற சின்ன சின்ன விஷயத்துக்கு தான் நம்மள பயன்படுத்துவாங்க. அவனால அவ்வளவா வருமானம் கிடையாது. அதனால அவன் சொல்ற வேலைய கேட்டுக்க செஞ்சிட்டு அதுக்கு ஏத்தமாதிரி பில் போட்டு அனுப்பிடு.

    நாம ஏன் அந்த ஜிவல்லரி ஓனரை அப்ரோச் பண்ணி இங்கத்தி அட்வர்டைசிங்க நாங்க பாத்துக்கறன்னு கேட்டா பிரபுவை முறைத்தேன்.

     

    தொடரும்……………

     

    Share
  • அன்பே அழகானது – 5

    ராஜ்ப்ரியன்

    மதியம் என்ன லஞ்ச் என சுதாவிடம் மாலாதி டீச்சர் கேட்டதும்.

    உதடு பிரியாமல் புன்னகைத்த சுதா, அப்பாவோட ப்ரண்ட் பொண்ணுக்கு கல்யாணம். அதனால காலையில எல்லாரும் அங்க போய்ட்டாங்க. அதனால லஞ்ச் கொண்டு வரல. வீட்டுக்கு போய் சாப்பிட்டு தான் வரனும் மேடம்.

    என்ன மேடம் வந்து ஓருவாரம்மாச்சி. உங்க வீட்டப்பத்தி சொல்லவேயில்ல என ப்ரியா தான் கிளறினாள்.

    நான், அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, அண்ணன் பொண்ணு சுவாதி ஐந்து பேர் தான். அப்பாவும், அண்ணனும் பிஸ்னஸ் பண்றாங்க, அம்மா ஹவுஸ்ஒய்ப், அண்ணி இந்தியன் பேங்க்ல அசிஸ்டன்ட் மேனேஜரா இருக்காங்க.

    ப்ரியா தயங்கி தயங்கி உங்களுக்கு கல்யாணம்மாயிடுச்சில்ல.

    ம்.

    வீட்டுக்காரர் என மாலதி இழுக்க சுதாவின் செல்போன் அன்பென்ற மழையிலே என பாடல் பாட அதை எடுத்து பார்த்தவள் அம்மா கூப்பிடறாங்க எனச்சொல்லியபடி ஆன் செய்தாள். சொல்லும்மா. இன்னும் கொஞ்ச நேரத்தல லஞ்ச் ஃபெல் அடிப்பாங்க வீட்டுக்கு வர்றம்மா எனச்சொல்லிவிட்டு காலை கட் செய்யவும் லஞ்ச் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

    நானும் இன்னைக்கு வீட்டுக்கு தான் போறன் வாங்களேன் உங்கள ட்ராப் பண்றன் என்றாள் ப்ரியா.

    உங்களுக்கு எதுக்கு சிரமம்.

    இதலபோய் என்னயிருக்கு வாங்க என்றாள்.

    ப்ரியாவும், சுதாவும் பார்கிங் ஏரியாவுக்கு நடந்து செல்ல குட் ஆப்டர்னோ மேடம் என்றார் கணக்கு ஆசிரியரான ஸ்டீபன்.

    திரும்பி பார்த்த ப்ரியா வணக்கம் சார் என்றாள்.

    எங்க போறிங்க ?.

    லஞ்ச் கொண்டு வரல சார் அதனால வீட்டுக்கு போறன். அதிருக்கட்டும் சார் ஸ்கூல் திறந்தது ஒருவாரம்மாச்சி இப்பத்தான் வர்றிங்க.

    ஃபேமிலி டூர் முடிஞ்சி, சொந்த ஊர்க்கு போய்ட்டு நேத்து தான் வந்தோம்.

    ஓஹே.

    இவுங்க யார் டீச்சர் ?.

    நியூ அப்பாய்மென்ட் சார். பேரு சுதா.

    சுதா பக்கம் திரும்பி ஸ்டீபன் புன்னகைக்க சுதாவும் பதிலுக்கு புன்னகைத்தாள்.

    சார் டுவல்த்துக்கு மேக்ஸ் எடுக்கறாரு என ப்ரியா அறிமுகப்படுத்த சுதா ஹலோ சார் என்றாள்.

    சரி சார் டைம்மாகிடுச்சி போய்ட்டு வந்துடறோம் என்றாள் ப்ரியா. அவரும் தலையாட்டிவிட்டு தன் டூவீலரை எடுத்துக்கொண்டு சென்றார். ப்ரியா தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வர சுதா ஏறி அமர இருவரும் பள்ளியில் இருந்து வந்தனர். சுதா தன் வீட்டுக்கு வழிச்சொல்ல ப்ரியா வண்டியை விரட்டினாள். காந்தி நகரில் உள்ள தன் வீட்டு முன் வந்ததும் நீங்களும் வாங்க இப்படியே சாப்பிட்டுட்டு ஸ்கூல் போகலாம் என அழைக்க ப்ரியா மறுத்துவிட்டு ரிட்டன் நான் வந்து பிக்கப் பண்ணிக்கட்டுமா என கேட்டதும் சுதா உங்களுக்கு எதுக்கு சிரமம். நூன் ஸ்கூல்க்கு வந்துடறன் எனச்சொல்ல ப்ரியா கிளம்பினாள்.

    வீட்டுக்குள் நுழைந்த சுதாவை கண்டதும் அவளது அம்மா காவேரி, ஏண்டீ காலையில தோசையாவது சுட்டு சாப்பிட்டுட்டு போக வேண்டியதுதானே.

    குhலையில பசிக்கல அதனால அப்படியே போய்ட்டன் என்றபடி பாத்ரூம் சென்று திரும்பி வந்து டைனிங்டேபிள் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டபடியே கல்யாணம் எப்படிம்மா நடந்தது என கேட்டபடியே சாப்பிட்டாள். சுhப்பிட்டு முடித்ததும் ஃபேக்கை எடுத்துக்கொண்டு கிளம்ப எப்படிடீ போற என கேட்டார் காவேரி.

    ஏதாவது ஆட்டோ புடிச்சி போய்க்கறம்மா எனச்சொல்லியபடி வெளியே மெயின் ரோட்டுக்கு வந்து ஆட்டோவுக்காக காத்திருந்தாள்.

    அப்போது அவள் அருகே சர்ரென ஒரு டூவீலர் வந்து பிரேக் அடித்து நின்றார் ஆசியர் ஸ்டீபன். மேடம் இங்க என்ன நிக்கறிங்க ?

    பக்கத்தல தான் சார் வீடு. ஸ்கூல்க்கு போகனும் ஆட்டோவுக்காக நிக்கறன்.

    எதுக்கு ஆட்டோ நானும் ஸ்கூல் தான் போறன், எதுவும் சங்கடம்மில்லைன்னா என்னோட வாங்க.

    பரவாயில்ல சார். ஆட்டோவுலயே வந்துடறன்.

    நீங்க என்னை ஃப்ரண்டா நினைச்சி வாங்க என சொல்லியபடி ஸ்டீபன் சுதாவை பார்க்க அதை காதில் வாங்கியபடி ரோட்டில் காலியாக வந்த ஆட்டோவை சுதா பார்க்க அது அவள் அருகே வந்து நின்றது. ஸாரி சார் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என்றபடி ஆட்டோவில் அமர்ந்தபடி குழந்தை ஏசு ஸ்கூல் போங்க எனச்சொல்ல ஆட்டோ புறப்பட்டது. ஆட்டோவையே பார்த்தபடி நின்றிருந்தார் ஸ்டீபன்.

    பள்ளிக்கு வந்து வகுப்புகளை நடத்தியவள் மாலை வீட்டுக்கு கிளம்பும்போது  ப்ரியாவிடம் மதியம் ஸ்டீபன் வண்டியில் வாங்க என அழைத்தது பற்றி சுதா சொன்னாள்.

    வந்தன்னைக்கே உங்கிட்ட ஆரம்பிச்சிட்டாரா?.

    என்ன மேடம் சொல்றிங்க என சந்தேகமாகவே கேட்டாள்.

    அவர் ரொமான்ஸ் மன்னன். கூட வேலை பாக்கற டீச்சராச்சேன்னு பாக்கமாட்டாரு வழிவாரு. மேனேஜ்மென்ட் அவர் விவகாரத்த கண்டுக்கறதில்ல. சர்ச்ல அவருக்கு செல்வாக்குயிருக்கு. அரசியல் செல்வாக்கும் வச்சியிருக்காரு. அதனால அவர்க்கிட்ட ஒதுங்கியே இருக்காங்க. அவரோட மனைவியும் டீச்சர் தான் ரொம்ப நல்லவங்க. மதியம் உன்ன பாத்துட்டு நீ யாருன்னு தெரிஞ்சிக்க தான் பேச்சு கொடுத்தாரு. நீ மட்டும் அவரோட வண்டியில வந்திருந்த உன் இமேஜ் காலியாகியிருக்கும். அவர்கிட்ட ஜாக்கிரதையா இரு. உங்க ஏரியாவுக்கு பக்கத்து ஏரியால தான் அவரோட வீடு இருக்கு என்றாள்.

    பாத்து ஒரு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள உங்கள ட்ராப் பண்றன்னு கேட்கறது கொஞ்சம் கூட நல்லாயில்லைங்க. வந்த கோபத்துக்கு திட்டிட்டுயிருப்பன் வேணாம்ன்னு விட்டுட்டன்.

    அவர் விவகாரத்தல கொஞ்சம் ஜாக்கிரதையா இரு என்றவள் வாங்க உங்கள வீட்ல ட்ராப் பண்ணிடறன். சரியென சுதா தலையாட்ட ஸ்கூட்டி சுதாவின் வீட்டுக்கு சென்றது. கதவை திறந்து வரவேற்ற காவேரியிடம் இவுங்க பேர் ப்ரியா கூட வேலை பாக்கறாங்கன்னு சொன்னயில்ல இவுங்க தான் என அறிமுகப்படுத்தினாள் சுதா.

    வாம்மா என்றவர் இருங்க காபி போட்டு எடுத்து வர்றன் எனச்சொல்லிவிட்டு உள்ளே சென்றார். சுதா ப்ரியாவுக்கு வீட்டை சுற்றி காட்டினாள். காபியுடன் வந்த காவேரி, ப்ரியாவிடம் நீ எங்கம்மாயிருக்க என விசாரிக்க தொடங்கினார். எனக்கு சொந்தவூர் விழுப்புரம். இங்க கல்யாணம் பண்ணி தந்தாங்க. என் வீட்டுக்காரரும் ஆசிரியரா இருக்காரு. ஒரு பொண்ணு. லலிதான்னு பேரு நாமக்கல் போர்டிங் ஸ்கூல்ல எட்டாவது படிக்கறா என்றார்.

    வேலைக்கு போய் சம்பாதிக்கனும்கிற நிலமையில இவயில்ல. வேலைக்கு போகனம்ன்னு அடம்பிடிச்சதால தான் இவுங்கப்பா அனுப்பிவைக்கறாரு. இவ சந்தோஷமா இருக்கனம்ன்னு நினைக்கறோம். அவ விதி அவளை சுத்தி விட்டு வேடிக்கை பாக்குது என கண் கலங்க ப்ரியாவுக்கு புரியவில்லை என்றாளும், சுதா வாழ்க்கை மகிழ்ச்சியா இல்லை என்பதை உணர்ந்தாள். காவேரி அழுவதை கண்டதும் என்னம்மா நீ என சுதா கேட்க தன் கண்களை முந்தானியால் துடைத்தபடி நான் ஒன்னும் அழுவலடியம்மா என்ற காவேரி கிச்சன் பக்கம் நடந்தார்.

    ஏதோ ஞாபகம் வந்தவளாக திரும்பி, மதியம் சாப்பிட வந்த உங்கப்பா நீ சாப்பிட வந்தியான்னு கேட்டாரு. வந்து சாப்பிட்டுட்டு ஆட்டோவுல திரும்ப போய்ட்டான்னு சொன்னதும் என்னை திட்டி தீத்துட்டாரு. உனக்கு ஸ்கூட்டி வாங்க போயிருக்காரு என்ன கலர் வேணும்ன்னு உன்ன போன் பண்ணச்சொன்னாரு என காவேரி சொன்னபோது ப்ரியா ஜெர்க்காகிவிட்டாள்.

    முன் சீட்டில் பாண்டியன், ரஞ்சித் அமர்ந்திருக்க, நடு சீட்டில் நான், பிரபு, ஸ்ரீதர் அமர்ந்திருந்தோம். பின் சீட்டில் மஞ்சு, கீதா, ரேவதி அமர்ந்திருந்த குவாலிஸ் கார் சென்னையை நோக்கி போய்க்கொண்டு இருந்தது.

    ஏன் கீதா ஆஸ்பிட்டல் சேர்த்து பத்து நாளாகியிருக்கு. அத ஆபிஸ்ல யார்க்கிட்டயும் சொல்லாம மறைச்சிட்டு கொஞ்சம் பணம் வேணும்ன்னு கேட்கற. பிரபு மட்டும் பிரச்சனை என்னன்னு சொல்லலன்னா இது தெரிஞ்சே இருக்காது. பணம் இல்லன்னா கேட்க வேண்டியது தானே. எதுக்கு அலையனும் என கேட்டதற்க்கு அமைதியாகவே வந்தது.

    நேத்து காலையில எங்க மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வந்தப்ப அவுங்க தான் கீதா அம்மா பத்தி சொன்னாங்க. நான் கீதாக்கிட்ட கேட்கலாம்ன்னு இருந்தன் மறந்தே போய்ட்டன். அது வெறும் முப்பதாயிரம் கேட்குதுன்னு சொன்னப்ப தான் கோபம் வந்துச்சி. 2 லட்ச ரூபாய் செலவாகும்ன்னு ஹாஸ்பிட்டல்ல சொன்னாங்களாம். நிறைய இடத்தல பணம் கேட்டுயிருக்கு. கடைசி வரை நம்மக்கிட்ட கேட்கவேயில்ல முப்பதாயிரம் தாங்கன்னு கேட்டதும் தான் கோபம் வந்துடுச்சி அதான் திட்டிட்டன் என்றான் பிரபு.

    ஸாரி சார் என்ற கீதா அவ்ளோ பணம் என்னை நம்பி தருவீங்களான்னு சந்தேகத்தல கேட்காம விட்டுட்டன் சார் என்றாள்.

    ஐந்து வருஷமா வேலை பாக்கற. இன்னமும் கூட வேலை பாக்கறவங்கள புரிஞ்சிக்கலயே என்றதும் அமைதியாக இருந்தாள்.

    ஏதாவது வேலை பாக்கனும்மேன்னு நானும், பிரபுவும் கல்யாண பத்திரிக்கை, போஸ்டர் விளம்பரம் டிசைன் பண்ணி தர்றவங்களா பத்துக்கு பத்து அறையில ஒரு கம்ப்யூட்டர வச்சிக்கிட்டு வேலை செய்ய ஆரம்பிச்சோம். மாசத்தல பாதி நாள் வெட்டியா உட்கார்ந்துயிருப்போம். பாண்டியன் வந்தப்பிறகு பாண்டியனோட கைவண்ணம் தான் பெருசா வளர முடிஞ்சது. பெரிய அளவுல ஆபிஸ் திறக்கலாம்ன்னு முடிவு செய்தப்ப நானும் பிரபுவும் பணம் போட்டோம், பாண்டியனால பணம் போட முடியலன்னாலும் பாண்டியனும் பாட்னர் மாதிரி தான். பாண்டியன் மட்டுமல்ல இந்த கம்பெனியில யார் வந்து வேலைக்கு சேர்ந்து உழைச்சாலும் அவுங்களோட நல்லது கெட்டதுல எல்லாருக்கும் பங்குயிருக்கும்ன்னு சொன்னோம். அதுப்பிறகாறம் தான் நடந்துக்கிட்டு வர்றோம். இத கம்பெனியா பதிவு செய்ததால நான் எம்.டி, இவன் மேனேஜர், மஞ்சுக்கு அக்கவுண்டன்ட்ன்னு பதவியிருக்கே தவிர அதுயெல்லாம் சும்மா. என்னைப்பொருத்தவரை எல்லாரும்மே ஒன்னு தான். இன்னைக்கு எங்களை தவிர 5 பேர் இருக்கிங்க. அதுவே 70 பேர் வேலை செய்யற இடமா மாறனாலும் இப்படித்தான் நடந்துப்போம்.

    பாஸ் அப்போ நாங்களும் பாட்னர்களா பாஸ்.

    இருக்க இடம் கொடுத்தா மடத்த புடிக்கனும்ன்னு நினைக்காதடா என பாண்டியன் சவுண்ட் விட்டதும் அமைதியானான்.

    மருத்துவ செலவுக்குன்னு தர்ற பணம் கடன் தான். சம்பளத்தல புடிச்சிக்குவோம் என பிரபு சொன்னதும் என்னயிருந்தாலும் நீங்க கணக்குல சரியா இருக்கிங்க சார் என்றான் ஸ்ரீதர்.

    சும்மா தருதுன்னு வச்சிக்க நீ மாசத்துக்கு இரண்டு முறை வண்டியில இருந்து கீழ விழுந்து ஆஸ்பிட்டல் பில் கட்டுன்னுவ அதனால தான் கடிவாளம் போட்டு வச்சியிருக்காரு சார் என மஞ்சு சொன்னதும் ஈஈ என சிரித்தான்.

    டாப்பிக்கை மாத்துவோம் என நினைத்து என்ன ஸ்ரீதர் எப்போ கல்யாணம்.

    யாருக்கு பாஸ்.

    உனக்குதான்யா

    நான் குழந்தை பாஸ்.

    டேய் உனக்கு காலாகாலத்துல கல்யாணம்மாகியிருந்தா இன்னேறம் நாலு புள்ளைக்கு அப்பனாயிருப்ப. நீ குழந்தையா என பிரபு காலாய்த்ததும் அனைவரும் சிரித்துவிட்டோம்.

    உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் சார்.

    கேட்டதுக்கு பதில் சொல்லுடா என பாண்டியன் சொன்னதும் தங்கச்சியிருக்கு பாஸ். அதுக்கப்பறம் தான் எனக்கு என்றான்.

    உன்னாலே உன்னாலே என திடீரென கார் ஸ்பீக்கரில் பாட்டு அலறியது. என்னவென பார்த்தாள் ரஞ்சித் தான் பாட்டு போட்டுயிருந்தான்.

    எங்கடா அமைதியா வர்றானேன்னு பாத்தன். ஆரம்பிச்சிட்டியா ?.

    ஃபோர் அடிக்குதுப்பா.

    சவுண்ட் கம்பியா வச்சி கேளு.

    தலையாட்டினான். அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை இராமச்சந்திரா மருத்துவமனை முன் நின்றிருந்தோம். கீதா அனைவரையும் வார்டுக்கு அழைத்து சென்றாள். வெளியே கீதாவின் அண்ணனும், அப்பாவும் நின்றிருந்தார்கள். எங்களைப்பார்த்து வாங்க என அழைத்தனர்.

    மஞ்சு, ரேவதி, ரஞ்சித்தை தன் அம்மா இருந்த அறைக்குள் கீதா அழைத்து சென்றாள்.

    எப்படி இருக்காங்க என கீதாவின் அப்பாவிடம் நாங்கள் கேட்டதும், உள்ள தான் இருக்கா போய் பாருங்க என்றார். அவுங்க பாத்துட்டு வரட்டும் எனச்சொல்லிவிட்டு ஆரம்பத்தலயே பாக்க வேண்டியது தானே.

    நம்ம ஊர்லயே பாத்துக்கிட்டு தான் இருந்தோம், சரியா வைத்தியம் பாக்காததால வந்த விணை சார். எல்லாம் விதி என்றார் விரக்தியான குரலில்.

    ஆஸ்பிட்டல்ல சேர்த்திங்கயில்ல பணம்மில்லைன்னா கீதாக்கிட்ட சொல்லி ஆபிஸ்ல கேட்க சொல்ல வேண்டியதானே என பிரபு கேட்டதும் சொந்தக்காரங்ககிட்ட கேட்டுயிருந்தன் தர்றன்னு சொன்னாங்க கடைசியல தரல அதான் என்றார் தயங்கி தயங்கி.

    இப்ப எவ்ளோ கட்டனும் என பாண்டியன் கேட்டதும் ஒரு லட்ச ரூபாய் கட்டியாச்சி. நாளைக்கு ஆப்ரேசன் பண்ண டேட் குறிச்சியிருக்காங்க மீதிய டிஸ்சார்ஜ் பண்ணறப்ப கட்டனா போதும்ன்னு சொன்னாங்க என்றான் கீதாவின் அண்ணன்.

    உள்ளே போனவர்கள் வெளியே வர நாங்கள் உள்ளே சென்றோம். வாங்க என கிதாவின் அம்மா அழைத்தார். கையில் வைத்திருந்த பொருட்களை பெட் அருகே வைத்துவிட்டு உடம்பு எப்படியிருக்கும்மா என ஸ்ரீதர் தான் கேட்டான்.

    நாளைக்கு ஆப்ரேஷன்னு சொல்லியிருக்காங்;க தம்பி.

    கவலைப்படற அளவுக்கு ஒன்னும்மில்ல. சுகர், பிபி அதிகமாயிருக்கும் அதனால முடியாம போயிருக்கும். நாளைக்கு சின்ன ஆப்ரேஷன் தான் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் என்றான் பிரபு. பின் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தோம்.

    மஞ்சு என அழைத்ததும் அனைவரும் உள்ளே வந்தனர். தலையாட்டியதும் உள்ளே வந்த மஞ்சு தன் ஃபேக்கில் இருந்த 500 ரூபாய் கட்டுகள் இரண்டை எடுத்து கீதாவிடம் தந்தாள்.

    என்னத்துக்குங்க இவ்ளோ பணம் என கீதாவின் அம்மா பதற. ஓன்னும்மில்லம்மா மெடிக்கல் செலவுக்குண்ணு கடன் கேட்டா அதான் சார் தரச்சொன்னாரு என மஞ்சு சொன்னதும் அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர்.

    வெளியே வந்த நாங்கள் கீதாவின் அண்ணன், அப்பாவிடம் பணம் வேணும்ன்னா கேளுங்க தந்து விடறோம். காசுயில்லன்னு அலையாதிங்க எனச்சொல்லிவிட்டு புறப்பட்டோம்.

    கார் வரை வந்த கீதாவிடம் அம்மா வீட்டுக்கு அழைச்சி வந்ததுக்கப்பறம் ஆபிஸ் வந்தா போதும் கீதா எனச்சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    கார் மெயின் ரோட்டுக்கு வந்ததும் பாஸ் என அழைத்தான் ஸ்ரீதர்.

    ம்.

    இங்க எக்ஸ்பிரஸ் மால், ஸ்பென்சர் பிளாசான்னு ஏதோ இருக்காம் பாஸ். அங்க போய்ட்டு போகலாம் பாஸ்.

    அவன் பக்கம் திரும்பி அங்க எதுக்கு என கேட்டதும் ஈஈஈ என இளித்தான். பின்னால் உட்கார்ந்திருந்த ரேவதி சைட் அடிக்கவா இருக்கும் சார் எனச்சொல்ல அதெல்லாம் இல்ல சார் என பதறி மறுத்தான்.

    டிரைவர் சார். எல்.ஐ.சி பக்கம் போங்க என்றதும் அவர் சரியென தலையாட்டினார். எல்.ஐ.சி தாண்டி ஸ்பென்ஸர் வந்ததும் காரை நிறுத்தி இறங்கிக்க ஸ்ரீதர், நீங்களும் போறதாயிருந்தா போங்க என மஞ்சு, ரேவதியிடம் சொன்னதும் நீங்க பாஸ் என கேட்டவனிடம், கொஞ்சம் ஒர்க் இருக்கு போய்ட்டு வந்துடறோம். நாங்க வர்றதுக்கு இரண்டு மணி நேரமாகும் அதுவரைக்கும் ஏதாவது வாங்கறதாயிருந்தா வாங்கிக்கிட்டு வெயிட் பண்ணுங்க எனச்சொன்னதும் மூவரும் இறங்கினர். நானும் போய்ட்டு வர்றன் டாடி என்றான் ரஞ்சித்.

    கொஞ்சம் யோசித்துவிட்டு ரேவதி இவனை பாத்துக்க என பொறுப்பை ஒப்படைத்ததோடு ஏதாவது கேட்டான்னா வாங்கித்தா, ஐஸ்கிரிம் மட்டும் அதிகம் வாங்கி தராத எனச்சொல்லிவிட்டு சேட்டை பண்ணாம ஒழுங்கா அவுங்களோட இரு என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

    எங்கடா போறோம் என பிரபு தான் கேட்டான்.

    டிஸ்ப்ளே பத்தி நேத்து பேசனும்மில்ல. அதான் சோனி, சாம்சங் கம்பெனியில போய் என்ன ரேட் ஆகுதுன்னு விசாரிச்சிட்டு வருவோம் என்றதும் தலையாட்டினான். இரண்டு ஷோ ரூம்களை தேடிப்பிடித்து விசாரித்துவிட்டு, மாடல்களை பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும்போதே ஸ்ரீதர்க்கு போன் செய்து நாங்க வந்துக்கிட்டு இருக்கோம் வெளியில வந்து ஆப்போசிட்ல நில்லுங்க என்றேன். சரியாக 2.15க்கு ஸ்பென்சர் அருகே பஸ் ஸ்டாப்பில் ரேவதி, மஞ்சு, ஸ்ரீதர் நின்றிருந்தனர். கார் அவர்களை நோக்கி சென்றுக்கொண்டு இருந்தபோதே சார் ரஞ்சித்த காணோம் என்ற பாண்டியனின் குரலை கேட்டு அதிர்ச்சியாகி பார்த்தபோது அவர்கள் அருகில் அவன் இல்லை என்பதை என் கண் உறுதி செய்ததும் ஆயிரம் மடங்கு அதிர்ந்து போனேன்.

    தொடரும்……………..

    Share
  • அன்பே அழகானது – 4

    ராஜ்ப்ரியன்

    கார்த்திகை விளம்பர நிறுவனம் என்ற போர்டு தொங்கிய கட்டடத்துக்குள் மதன் நுழைந்ததும் அந்த அலுவலகத்துக்குள் இருந்தவர்கள் எழுந்து குட்மார்னிங் சார் என்றனர். மதன் அப்படியே நின்று ஒருமுறை திரும்பி வாசல் பக்கம் பார்த்தான், வணக்கம் வைத்தவர்களும் பார்த்தனர். யாரும் தன் பின்னால் இல்லை என்பதை கண்ட மதன் திரும்பி வணக்கம் வைத்தவர்களிடம் எனக்கு தான் வணக்கம் வச்சிங்களா என கேட்க எல்லாரும் சிரித்தனர்.

    என்ன புதுசா எழுந்து நின்னு வணக்கம் வைக்கறிங்க என கேட்டபடியே மதன் உள்ளே வந்தான்.

    சும்மா தான் சார் என்றாள் மஞ்சு. அருகே பாண்டியன், ரேவதி, கீதா, ஸ்ரீதர் நின்றிருந்தனர்.

    மத்தவங்களுக்கு வணக்கம் சொல்ற மாதிரி சொன்னாலே போதும். ஸ்கூல் வாத்தியார்க்கு சொல்றமாதிரி எழுந்து நின்னு சொல்றதெல்லாம் வேணாம். வெளியாளுங்களுக்கு தான் நான் எம்.டி. மத்தப்;படி இங்க வேலை பாக்கற ஏழு பேர்ல நானும் ஒருத்தன் சரியா என கேட்க.

    சரி சார் என தலையாட்டினர்கள் சிரித்தபடி.

    பிரபு எங்க ?.

    உங்க ரூம்ல சார் என்றாள் மஞ்சு.

    கதவை திறந்து உள்ளே போனதும் ஃசேரில் அமர்ந்திருந்த பிரபுவிடம் ஒரு எம்.டி வர்றன் எழுந்து நின்னு வணக்கம் வைக்கறதில்லையா?.

    செருப்ப கழட்டி தான் வைக்கனும்.

    அப்பறம் எதுக்கு மத்தவங்கள எழுந்து வணக்கம் வைக்க சொன்ன.

    சத்தியம்மா நான் சொல்லலடா.

    அப்பறம் என்ன புதுசா எழுந்து வணக்கம் வைக்கறாங்க என சந்தேகமா கேட்டதும்

    அதுவா, இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு கிளையண்ட் ஆபிஸ்க்கு வந்து பார்த்துயிருக்காரு. நீயும் இல்ல, நானும் இல்லன்னதும் எனக்கு கால் பண்ணாரு. நான் வேகமா ஆபிஸ்க்கு வந்தன். எல்லாரும் உட்கார்ந்தபடி எனக்கு வணக்கம் வச்சத பாத்தவரு இது என்ன ஆபிஸா? இல்ல டீ கடையா? ஒரு மேனேஜர் வர்றார் மரியாதை இல்லாம உட்கார்ந்துக்கிட்டு வணக்கம் வச்சா என்ன அர்த்தம், நீங்க சரியில்ல, உங்க எம்.டி வரட்டும் பேசிக்கறன்னு கோபமா கர்ஜித்தாரு. அத கேட்டு எல்லோரும் மரியாதை ராமன்களா மாறிட்டாங்க.

    யார்ரா அந்த ஆபிஸர் ?.

    உங்கிட்ட பேசுவாரு அப்ப தெரிஞ்சிக்க என சிரித்தவன் அதெல்லாம் இருக்கட்டும் என்னச்சொல்றான் உன் பையன்.

    காலையில ஸ்கூல் போகும்போதே உம்முன்னு போயிருக்கான்.

    ஏன்

    ஃபைக்ல அழைச்சிப் போய் விடுன்னான், வேலையிருக்குடான்னு சொன்னன் அதான் கோபமா போயிருக்கான்.

    மதியம் லஞ்ச்.

    வாங்கிப் போய்த்தான் தரணும்.

    அதுக்கு தான் நாங்க சொல்றத கேளுடாங்கறோம்.

    டேய் சாமி காலையிலயே ஆரம்பிச்சி கடுப்பேத்தாத என்றபடியே கொஞ்சம் எல்லாரையும் உள்ளவரச்சொல்லு. பிரபு எழுந்து போய் தகவல் சொல்ல அடுத்த சில நிமிடங்களில் அக்கவுண்டன்ட் மஞ்சு, சீனியர் டிசைனர் பாண்டியன், டிசைனர்கள் கீதா, ரேவதி, விளம்பர பொறுப்பாளர் ஸ்ரீதர் என அனைவரும் அவன் முன் அமர்ந்திருந்தனர்.

    எப்படி நடந்துக்கிட்டு இருக்கு வேலையெல்லாம் ?.

    சார் இந்த மாசம் வர வேண்டிய பில் நிறைய பென்டிங் இருக்கு சார் என்றாள் மஞ்சு.

    ஸ்ரீதரை பார்த்ததும், காலேஜ், ஸ்கூல் அட்மிஷன் இப்பத்தான் நடக்குது பாஸ். ஏப்ரல், மே, ஜீன் மாசம் பில் எல்லாம் ஜீலைல தான் தருவோம்ன்னு சொல்லிட்டாங்க.

    அவுங்க ஜீலையில தந்தா எப்படி நாம ஆபிஸ்ச ரன் பண்றது என பிரபு கேட்க ஸ்ரீதர் மவுனமாகவே இருந்தான்.

    அடிக்கடி கரண்ட் கட் பண்றதால பேட்டரி பேக்கப் நாலு மணி நேரம் கூட வரமாட்டேன்குது இதனால ஓர்க் நிறைய பென்டிங்ல கிடக்கு. பெரிய யூ.பி.எஸ்சா போட்டா நல்லாயிருக்கும் சார் என்றான் பாண்டியன்.

    செய்துடலாம் பாண்டியா.

    வேற ஏதாவது என கேட்டும் அனைவரும் அமைதியாக இருந்தனர். சரி நான் அழைச்ச விஷயம் வேற. இப்ப நாம விளம்பரம் டிசைன் செய்து தர்றது, அத பேப்பர்களுக்கு தர்றது, பிரஸ் மீட் அரேஞ்ச் பண்றதுன்னு இருக்கோம். நாம அடுத்த கட்டத்துக்கு போக வேண்டிய நேரம் வந்துடுச்சி. நாம புதுசா டிஸ்ப்ளே விளம்பரம் செய்யலாம்ன்னு ஓரு ஐடியா.

    டிஸ்ப்ளே விளம்பரம்ன்னா என்ன சார் என ரேவதி கேட்க அனைவருக்கும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களது முகத்திலேயே தெரிந்தது.

    நகரத்தோட மையத்தல, மக்கள் நடமாட்டம் அதிகமாயிருக்கற பகுதியில இருக்கற பில்டிங்கோட மாடியில பத்துக்கு பத்து அளவுல எல்.இ.டி டிஸ்ப்ளே வச்சி விளம்பரம் ஓடவிடறது. நைட், பகல்ன்னு எல்லா நேரமும் ஓடிக்கிட்டு இருக்கும். சென்னை, மதுரை, கோயம்பத்தூர் பகுதியில வச்சியிருக்காங்க. இதல டெக்ஸ்ட் மட்டும் டிஸ்ப்ளே பண்ற மாதிரியும்மிருக்கு, வீடியோவ ஓடறமாதிரியும் இருக்கு. இப்ப வீடியோ ஓடறமாதிரி வச்சா தான் நல்லாயிருக்கும். நாம யாருக்கும் விளம்பரம் தர தேவையில்ல. நம்மை தேடி விளம்பரம் வரும் எப்படி என சொல்லி நிறுத்தியதும்.

    சூப்பர் ஐடியா பாஸ் என குதுகலித்தான் ஸ்ரீதர்.

    ஐடியா நல்லாத்தான் இருக்கு வருமானம் வருமா என இழுத்தான் பிரபு.

    நல்லா சம்பாதிக்கலாம் சார் என பிரபுவுக்கு பதில் தந்தான் ஸ்ரீதர்.

    ஓன் டைம் இன்வஸ்மென்ட். சிஸ்டத்தல ப்ரோகிராம் பண்ணிட்டோம்ன்னா ஆட்டோமேட்டிக்கா விளம்பரம் போய்க்கிட்டு இருக்கும். நமக்கு செலவுன்னு பாத்தா பில்டிங் வாடகையும், ஈ.பி பில்லும் தான் நீங்க ஓ.கேன்னு சொன்னா இறங்கிடலாம் எனச்சொன்னதும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர். மவுனத்தை கலைத்து என்ன பாண்டியன் ஓ.கேவா இறங்கலாமா என கேட்டதும்

    இறங்கலாம் தான் சார். ஆனா அத பாத்துக்க ஒருத்தர் போய்ட்டா இங்க வேலை அதிகமாயிடும் சார்.

    பிரச்சனையில்ல பாண்டியன் யாராவது பசங்கயிருந்தா இரண்டு பேரை பாருங்க வேலைக்கு வச்சிக்கலாம்.

    அப்ப ஓ.கே சார்.

    அப்படியே டவுன்க்குள்ள எங்கயாவுது நல்ல இடம் கிடைக்குதான்னு பாருங்க.

    சரி சார்.

    ஒ.கே எல்லாரும் போய் வேலை பாருங்க என்றதும் அனைவரும் எழுந்துச்சென்றனர். கீதா மட்டும் சைலண்டாக எழுந்து சென்றது ஆச்சர்யமாக இருந்தது.

    வெளியேற முயன்ற மஞ்சுவை அழைத்து அக்கவுண்ட்ல எவ்வளவு அமௌண்ட் இருக்கும்.

    ஒரு லட்சம் இருக்கும் சார்.

    ஓ.கே என தலையாட்டியதும் கதவை சாத்திவிட்டு சென்றாள்.

    பிரபுவை பார்த்து மேனேஜர் சார் என அழைத்ததும்

    சொல்லுடா என்றான் கோபமான குரலில்.

    என்னடா அதுக்குள்ள கோபம்.

    புதுசா ஒரு ஓர்க் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி எங்கிட்ட சொல்றதில்லயா என கேட்டான் அதே கோபமான குரலில்.

    காலையில மதுரை கள்ளழகர் திருவிழா டிவியில ஓடிக்கிட்டு இருந்தது. அப்பத்தான் மதுரையில ஒரு இடத்தல டிஸ்ப்ளே விளம்பரம் ஓடறத பாத்தேன். நாமளும் பண்ணலாம்மேன்னு ஐடியா வந்ததும் சென்னையில இருக்கற ஒருத்தர்க்கு போன் பண்ணி தகவல் கேட்டேன் அவர் அவருக்கு தெரிஞ்சத சொன்னாரு. அதான் பண்ணா நல்லாயிருக்கும்மான்னு ஐடியா கேட்டேன். நீ என்னவோ வேலைய ஆரம்பிச்சிட்டு ஓடிக்கிட்டு இருக்கறமாதிரி பேசற என்றதும் கொஞ்சம் சாந்தமானவனிடம் நெட்ல அதப்பத்தின தகவல்கள தேடி எடுத்து வை. நான் போய் யூ.பி.எஸ் பத்தி விசாரிச்சிட்டு வர்றன்.

    டிசைன் வேலையும் பாக்கணும், இதயும் பாக்கணும்ன்னா என்னடா அர்த்தம்.

    சார் நீங்க மேனேஜர் மட்டும்மில்ல பாட்னரும்கிறத ஞாபகத்தல வச்சிக்கிட்டு வேலையப்பாருங்க எனச்சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.

    யூ.பி.எஸ் மாடல்கள், ரேட், பேட்டரி, வாரண்டி பற்றி விசாரித்துவிட்டு, சில முக்கிய கிளையன்டுகளை பார்த்துவிட்டு அலுவலகம் வந்தபோது மதியம் மூன்றாகி இருந்தது. பசி வயிற்றை கிள்ள அப்போது தான் நினைவுக்கு வந்தான் ரஞ்சித். ஆஹா வேலை டென்ஷன்ல மறந்து போயாச்சே என நெஞ்சு பரபரக்க அலுவலகத்தில் இருந்து பள்ளியை நோக்கி வண்டியை விரட்டினேன். பள்ளி கேட் முன் வண்டியை நிறுத்தியதும் ஸ்கூல் விடற டைம் சார் வண்டிய ஓரம்மா விடுங்க என்றார் வாட்ச்மேன். அவர் சொல்லும் போதே மணியடித்தது பிள்ளைகள் ஓடிவர காத்திருந்த அவர்களது அம்மாக்களோடு ஒவ்வொரு பிள்ளைகளும் சென்றது.

    ரஞ்சித்தை கண்கள் தேடியது. நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள சார் என்ற குரல் காதருகே கேட்க திரும்பினேன். ஆட்டோ டிரைவர் மணி நின்றிருந்தவர், என்ன சார் நீங்களே வந்துயிருக்கிங்க.

    இல்ல மணிண்ணே. காலையில லேட்டானதால மதியம் லஞ்ச் வாங்கி எடுத்துக்கிட்டு வர்றன்னு சொல்லியிருந்தன், வேலை டென்சன்ல மறந்துட்டன். இப்பத்தான் ஞாபகம் வந்தது. அதான் என இழுத்ததும் என்ன சார் இப்படி பண்ணிட்டிங்க. எங்கிட்ட சொல்லியிருந்தா நான் வாங்கி வந்து தந்துருப்பனே என்றார்.

    பதில் சொல்ல முடியாமல் மீண்டும் பிள்ளைகள் வருவதை பார்க்க தொடங்கினேன். ஒரு பையனோடு ரஞ்சித் சிரித்து பேசிக்கொண்டு வருவது காண முடிந்தது. தூரத்தில் இருந்து என்னை பார்த்தவன் கை அசைத்தான். நானும் பதிலுக்கு கை அசைத்ததும் ஓடிவந்தான். தன்னுடன் வந்தவனை காட்டி டாடி நானும், இவனும் ஓரே க்ளாஸ். வினய்ன்னு பேரு என்றான்.

    ஹாய் அங்கிள் என்றவன் ஆட்டோ நிக்குது அங்கிள் நான் கிளம்பறன். ரஞ்சித்க்கு டாட்டா காட்டிவிட்டு சென்றான்.

    ரஞ்சித் என் முகத்தை பார்க்க நான் அவனிடம், ஸாரிடா. ஓர்க் டென்ஷன்ல மதியம் லஞ்ச்சோட வர்றன்னு சொன்னத மறந்துட்டேன். நீயாவது எனக்கு ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாம்மில்ல.

    என்மேல உனக்கு அக்கறையேயில்ல டாடி என்றான் மெல்லிய குரலில்.

    பக்கென்றது. என்னடா இப்படி சொல்ற.

    எதுவும் பேசாமல் தரையை பார்த்தபடி நின்றான்.

    நான் குற்றணர்ச்சியுடன் வண்டியை ஸ்டார்ட் செய்து அவனை தூக்கி உட்கார வைத்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி சென்றேன். ஹோட்டலில் போய் அமர்ந்ததும் இட்லி தாங்க என்றதும் இட்லி வந்தது சாப்பிட்டுக்கொண்டே அடுத்து என்ன வேணும் என கேட்டதும் சோலாபூரி என்றான். அவனுக்கு சோலாபூரி, நான் ஒரு ஆனியன் ஊத்தப்பம் சாப்பிட்டுவிட்டு ஒரு ஐஸ்கிரிம் வாங்கி ரஞ்சித்திடம் தந்துவிட்டு அவனை அழைத்துக்கொண்டு ஆபிஸ் வந்தேன். இருவரும் சைலண்டாக வருவதை பார்த்து மஞ்சு அதியமாக பார்த்தாள். அறைக்குள் இருந்த பிரபு ரஞ்சித்தை கண்டதும் எனக்கு எங்கடா ஐஸ்கிரிம் ?.

    ஒன்னு தான் அங்கிள் வாங்கி தந்தாரு.

    பிரபு என் மெயில் ஓப்பன் பண்ணி யூ.பி.எஸ்க்கான டீட்டய்ல் இருக்கு அத பிரிண்ட் அவுட் எடுத்துக்கிட்டு வா என்றதும் அவன் நீயும் வா ரஞ்சித் என்றபடி அவனையும் அழைத்துக்கொண்டு பிரிண்டர் அறைக்கு சென்றான்.

    அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் கதவை திறந்துக்கொண்டு தயங்கி தயங்கி கீதா உள்ளே வந்தாள்.

    என்ன கீதா?.

    தயக்கத்துடனே ஒரு ஹெல்ப் சார்.

    என்ன ?.

    அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. ஆஸ்பிட்டல்ல சேர்த்துயிருக்கோம்.

    சொல்லவேயில்ல. என்னாச்சி ?

    கால்வலியால இரண்டு மாசம்மா கஸ்டப்பட்டாங்க. இரண்டு நாளைக்கு முன்னாடி நடக்க முடியாம போனதால சென்னைக்கு அழைச்சிம் போய் ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம். ஆப்ரேஷன் பண்ணனம்ன்னு சொல்லிட்டாங்க. ஆப்ரேஷன்க்கு பணம் தேவைப்படுது சார்.

    எவ்ளோ ?

    முப்பதாயிரம் சார்.

    எப்போ வேணும்.

    நாளைக்கு தந்தா நல்லாயிருக்கும் சார்.

    அப்போது பிரிண்ட் எடுக்கப்பட்ட பேப்பர்களோடு பிரபு உள்ளே வந்தவனிடம் கீதாவோட அம்மாவ ஆஸ்பிட்டல்ல அட்மிட் செய்துயிருக்காங்கலாம். ஆப்ரேஷன்க்கு முப்பதாயிரம் தேவையாம் ?.

    பிரபு கோபமாக கீதா பக்கம் திரும்பி ஏன் இப்படி பொய் சொல்ற என்றான் கோபமாக.

    தொடரும்………………

    Share
  • அன்பே அழகானது – 3

    ராஜ்ப்ரியன்

    கிச்சனை க்ளீன் செய்துக்கொண்டு இருந்தபோது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. வெளியே வந்து கதவை திறந்தபோது வணக்கம் சார் என்றார் 45 வயது மதிக்கதக்க ஒருவர்.

    சொல்லுங்க.

    எம் பேரு மணி சார். ஆட்டோ ஓட்டறன். உங்களை பாக்கச்சொல்லி பாண்டியன் சார் சொல்லி அனுப்பனாரு.

    அப்படியா உள்ள வாங்க.

    இருக்கட்டும் சார்.

    ஓன்னும்மில்ல பையனை புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்கன். என்னால அவனை தினமும் அழைச்சிம் போக முடியாது. அதனால தான் ஆட்டோவுல அனுப்பலாம்ன்னு முடிவு பண்ணி பாண்டியன்கிட்ட சொல்லி வச்சியிருந்தன்.

    உங்களப்பத்தி பாண்டியன் சார் சொன்னாரு சார். பையனை பத்திரமா அழைச்சிம் போய் அழைச்சி வருவன், நீங்க பயப்பட தேவையில்ல. பாண்டியன் சார் பொண்ணயும் நான் தான் ஸ்கூலுக்கு அழைச்சிம் போறன்.

    ஓஹோ.

    இந்த ஏரியாவுக்கு எத்தனை மணிக்கு வருவீங்க.

    8 மணிக்குள்ள வந்துடுவன் சார்.

    சரிங்க. காலையில வந்து அழைச்சிம் போயிடுங்க. சாயந்தரம் ஆபிஸ்சான்ட கொண்டு வந்து விட்டுடுடனும்.

    சரி சார்.

    மாசத்துக்கு எவ்ளோ?.

    500 ரூபா சார்.

    ஒகே.

    திங்கட்கிழமை ஸ்கூல் ஸ்டார்ட் பண்றாங்க.

    தெரியும் சார்.

    இருங்க பையனை காட்டறன் எனச்சொல்லிவிட்டு உள்பக்கம் திரும்பி ரஞ்சித் கொஞ்சம் வெளியில வா.

    என்னப்பா என கேட்டபடி வந்தான்.

    இவன் தான். ஆறாவது சேர்த்துயிருக்கன் பேரு ரஞ்சித்.

    யாருப்பா இவரு ?.

    இனிமே இந்த அங்கிள் தான் உன்னை தினமும் அவரோட ஆட்டோவுல ஸ்கூல் அழைச்சிம் போய் அழைச்சி வந்து விடப்போறார், அவர் பேரு மணி எனச்சொல்லிவிட்டு நீங்க போய்ட்டு வாங்கண்ணே என்றதும் கிளம்பினார்.

    அப்போ என்னை நீ ஸ்கூல் அழைச்சிம் போகமாட்டியாப்பா என வருத்தமாகவே கேட்டான்.

    நைட்டே சொன்னனேடா. உன்ன அனுப்பிட்டு காலையில வீட்ல சின்ன சின்ன வேலை பாத்துட்டு அதுக்கப்பறம் கிளம்பனா சரியா இருக்கும். உன் கூடவே கிளம்பிட்டா இருக்கற வேலை பாக்க முடியாது அதனாலத்தான். தாத்தா பாட்டி வந்ததும் நானே உன்ன அழைச்சிம் போறன் என்றபோதும் அமைதியாகவே சோபாவில் அமர்ந்திருந்தான்.

    அவனது வருத்தத்தை குறைக்க ஒன்னு செய்யறன் ஈவ்னிங் உன்ன நான் வந்து பிக்கப் பண்ணிக்கறன்.

    வேணாம் நான் ஆட்டோவுலயே வந்துடறன் என அவன் சொல்லும் போது என் மனம் பாரமாகத்தான் இருந்தது. அவன் அம்மா இருந்திருந்தா பிரச்சனையில்ல என்னப்பண்றத்து என பெருமூச்சு விட்டப்படி மீண்டும் கிச்சன்க்குள் புகுந்தேன்.

    மதியத்துக்கு லஞ்ச் செய்துக்கொண்டு இருந்தபோது செல்போன் ரிங் ஆகும் சத்தம் கேட்டது. யாருன்னு பாரு ரஞ்சித்.

    தாத்தாப்பா என குரல் தந்தான். கை கழுவிவிட்டு வெளியே வரும்போது ஆன் பண்ணி பேசிக்கொண்டு இருந்தான்.

    நல்லாயிருக்கன் தாத்தா. எப்ப ஊருக்கு வர்ற தாத்தா ?.

    …………

    சீக்கிரம் வா தாத்தா.

    ………….

    என்னை அப்பா புது ஸ்கூல்ல சேர்த்துயிருக்காரு, புது டிரஸ் எடுத்து தந்தாரு. இன்னும் டூ டேஸ்ல ஸ்கூல் தாத்தா.

    …………..

    அப்பா இந்தா தாத்தா உங்கிட்ட பேசனுமாம் என்றபடி செல்போனை தந்தான்.

    ஹலோ என்றதும்

    எப்படிப்பா இருக்கா ?

    நல்லாயிருக்கன்.

    அவனை எதுக்கு வேற ஸ்கூல் மாத்தன ?

    அந்த ஸ்கூல் நல்லாயிருக்குன்னு சொன்னாங    ;க அதான்.

    நீங்க எப்ப ஊருக்கு வர்றிங்க ?.

    நான் சொல்றத நீ செய் அதுக்கப்பறம் ஊருக்கு வர்றன்.

    அதவிட்டுட்டு வேற ஏதாவது பேசுங்க. ஏம்ப்பா நானும் இரண்டு வருஷமா சொல்றன் நீ கேட்கமாட்டன்னா என்னப்பா அர்த்தம்.

    அம்மாக்கிட்ட போனை தாங்க.

    பெருமூச் விட்டவர் இந்தாடீ உங்கிட்ட பேசனுமாம்.

    என்னப்பா எப்படியிருக்கற ?.

    நான் நல்லாயிருக்கறன் நீங்க எப்படிம்மா இருக்கிங்க ?.

    எங்கப்பா இந்த கால் மூட்டு வலி தான் அதிகமாயிருக்கு. உட்காந்தா எழுந்திருக்க முடியல, நடக்க முடியல.

    டாக்டர்க்கிட்ட காட்ட வேண்டியதுதானே?

    போனன் தைலம் மாதிரி ஒன்னு தந்தாங்க ஒன்னும் சரியாகல.

    இங்கவாம்மா டாக்டர்கிட்ட காட்டி சரிப்பண்ணிடலாம்.

    புள்ள தனியா பேரனை வச்சிக்கிட்டு கஸ்டப்படறான் போய் கூட இருக்கலாம்ன்னு சொன்னதுக்கு என் பேச்ச மதிக்காத அவன் வீட்டுக்கு நான் வரல என்னைக்கு நான் சொல்றத கேட்கறானோ அன்னைக்கு வர்றன்கிறார் உங்கப்பா. நான் என்னத்த பண்றத்து என சலித்துக்கொண்டபடியே டேய் எம்பேரன் கண்ணுலயே நிக்கறான் கொஞ்சம் கூட்டியாந்து கண்ணுல காட்டிட்டுத்தான் போயேண்டா. அவரும் ராத்திரியில எம் பேரன் என்ன பண்றானோ, ஏது பண்றானோன்னு புலம்பறாரு.

    வேலை அதிகமாயிருக்கும்மா.

    ஒரு மணி நேரத்தல வீட்டுக்கு வந்துடலாம் இதுக்கு போய் நேரம் இல்லைங்கறயேடா.

    வர்றதுக்கு பாக்கறன். நீ உடம்ப பாத்துக்கம்மா.

    அது கிடக்கட்டும் அவன்கிட்ட போனை தா என்றதும் ரஞ்சித் இந்த பாட்டி பேசனுமாம் என்றதும் ஓடி வந்து செல்போனை வாங்கிக்கொண்டான். நான் கிச்சனை நோக்கி நடந்தேன்.

    நல்லாயிருக்கன் பாட்டி.

    பூரி சாப்பிட்டன். அப்பா சுட்டு தந்தாரு. எப்ப ஊருக்கு வர்றிங்க என பேசிக்கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் பொருத்து கிச்சன்க்குள் வந்து அப்பா நின்;றான்.

    என்னடா சொன்னாங்க பாட்டி.

    ஊருக்கு வரச்சொன்னாங்க என்றவன் சற்று கேப் விட்டு போகலாமாப்பா.

    உம்.

    எப்போ ?

    அடுத்த சன்டே போகலாம் என்றதும் குதுகலமாக ஓடினான்.

    தொடரும்……………

    Share
  • அன்பே அழகானது – 2

    ராஜப்ரியன்

    டாடி ….

    டாடி ……….

    என்னடா ?

    பைக் ஓட்டனா காது கேட்காதா டாடி?

    எத்தனை முறை சொல்லியிருக்கன் அப்பான்னு கூப்டுன்னு.

    ஸாரி.

    சரி எதுக்கு கூப்ட்ட.

    எங்க போறோம் ?

    என்னடா கேள்வியிது. ஆறாவது சேர்ந்துயிருக்க புது ஸ்கூல் அதனால உனக்கு யூனிபார்ம் எடுக்கப் போறோம்.

    அது தெரியும். கிளம்பும்போது என்ன சொன்னிங்க.

    என்ன சொன்னன்?

    ஐஸ்கிரிம் சாப்பிட்டுட்டு அப்பறம்மா டிரஸ் எடுக்கலாம்ன்னு சொன்னிங்கயில்ல.

    ஆமாம் அதுக்குயென்ன இப்போ.

    முதல்ல ஐஸ்கிரிம் பார்லர் அதுக்கப்பறம் டிரஸ்.

    நீ ஓழுங்கா ஐஸ்கிரிம் சாப்பிடமாட்ட. டிரஸ் மேலப்படும். அப்படியே துணிக்கடைக்குப் போனா அசிங்கமா இருக்கும். அதனால போகும் போது வாங்கித்தர்றன் வீட்ல வந்து சாப்பிடு.

    வீட்ல வந்து சாப்பிடறன். ஆனா இப்ப வாங்கித்தா.

    டிரஸ் எடுக்கப் போறப்ப அத வேற கைல எடுத்துக்கிட்டு போகனும்டா.

    டிரஸ் எடுத்ததுக்கப்பறம் காசுயில்ல, சளி புடிக்கும்ன்னு சொல்லுவீங்க.

    அதெல்லாம் சொல்லமாட்டன்டா.

    உங்களப்பத்தி எனக்கு தெரியும்.

    கேடிடா நீ.

    நான் உன் பையன்ப்பா என்றவனிடம் வேறு எதுவும் பேசாமல் பைக்கை ஐஸ்கிரிம் பார்லர் முன் நிறுத்தியதும் நீ வெளியில இருப்பா நான் வாங்கி வந்துடறன் என 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடிய ரஞ்சித் நான்கு ஐஸ்கிரிம் கப்புகளை வாங்கிக்கொண்டு மீதி சில்லறையை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவதை மதன் பார்த்தான்.

    அருகே வந்த ரஞ்சித்திடம் மீதி பணத்த எங்கிட்ட தாடா.

    உங்கிட்ட காசுயில்லாதப்ப தர்றன் என்றபடியே வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

    உனக்கு வர்ற வர்ற கொழுப்பு அதிகமாயிடுச்சிடா.

    அதுக்குத்தான் சாப்பாட்டுல ஆயில் குறைக்கச்சொல்றன்.

    அவன் நக்கலடிப்பதைக் கேட்டு டேய் பேசாம வா என்றதுக்கு ‘ம்’ என்றான்.

    குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அலுவலகத்தில் சொன்னபடி அவர்கள் குறிப்பிட்ட துணிக்கடைக்கு சென்று மூன்று செட் யூனிபார்ம், டை, ஷீ எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர இரவு 8 மணியானது. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததும் டேய் தோசை சுடறன் சாப்பிட்டுட்டு அதுக்கப்பறம் ஓரே ஒரு ஐஸ்கிரிம் சாப்பிடு. மீதிய நாளைக்கு சாப்பிடுவ.

    நோ டாடி. இப்ப டூ, டுமாரோ டூ.

    நைட்ல சாப்பிட்டா சளி பிடிக்கும் காலையில சாப்பிடுடா.

    காலையில சாப்ட்டா கோல்டாகாதா?.

    ஆகாது.

    ஏன்?.

    கேள்வி கேட்காம அதக் கொண்டு வந்து பிரிட்ஜ்ல வை.

    பிரிட்ஜ்ஜைத் திறந்து அதை வைத்தபடியே நான் தூங்கனதுக்கப்பறம் நீ எடுத்து சாப்பிடமாட்டயில்ல.

    நீ அதிகமா என்னை நக்கல் அடிக்கறடா எனச்சொன்னதை அலட்சியவன்.

    தோசைக்கு சக்கரை வச்சி தாப்பா.

    ம் என்றதும் ஹாலுக்கு சென்று டிவியை போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். ஆதித்யா, போகோ, நிக் என மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன் முன்னால் தோசை தட்டை வைத்ததும் ரிமோட்டை தொடைக்கு கீழே வைத்துவிட்டு சாப்பிட தொடங்கினான். நானும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன். எதையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை தந்தான். நான் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வரும்வரை டிவி முன்பே உட்கார்ந்து இருந்தவனிடம் டைம்மாகிடுச்சி ரஞ்சித் படுக்கலாம்.

    இன்னும் கொஞ்ச நேரம்ப்பா.

    ரிப்பீட்டட் புரோகிராம்டா நாளைக்கும் போடுவான் வா என்றதும் டிவியை ஆப் செய்துவிட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தான். நான் கதவை லாக் செய்துவிட்டு பெட்ரூமுக்கு வர அவன் கட்டிலில் படுத்திருந்தான். அவனுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தேன்.

    ஸ்கூல் எப்பப்பா ஓப்பன்.

    இன்னும் இரண்டு நாள் இருக்கு.

    தினமும் நீ அழைச்சிம்போய் விடுவியாப்பா.

    காலையில ஆட்டோவுல போய்டு. ஈவ்னிங் நான் வந்து உன்னை அழைச்சி வர்றன்.

    காலையில உன்னோட பைக்லயே வர்றன்ப்பா.

    எனக்கு ஆபிஸ் பத்து மணிக்குடா. உனக்கு ஸ்கூல் 8:30 மணிக்கு ஸ்டார்ட்டாகிடும். அதனால நீ காலையில ஆட்டோவுல போய்டு. மதியம் லஞ்ச்ச பாக்ஸ்ல எடுத்தும் போய்டு. தாத்தா பாட்டி ஊர்லயிருந்து வந்ததுக்கப்பறம் பாட்டி தினமும் மதியம் லஞ்ச் எடுத்து வருவாங்க.

    போப்பா தாத்தாவும் – பாட்டியும் வந்துடுவாங்கன்னு நீயும் தான் சொல்ற. அவுங்க வரவே மாட்டேன்கிறாங்க.

    வருவாங்கடா செல்லம் இப்ப நீ தூங்கு என்றதும் அவன் சோகமாக கண்ணை மூடிக்கொண்டான். அவன் தூங்குவது உறுதியானதும் கட்டில் டிராயரை சத்தம் வராமல் திறந்தேன். அதில் லேமினேஷன் செய்யப்பட்ட போட்டோவில் ஜோடியாக நானும் என் மனைவியும் சிரித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் மனம் பாரமானது.

    தொடரும்

    Share
  • அன்பே அழகானது – 1

    ராஜ்ப்ரியன்

    சாந்தமும், அமைதியும் குடிகொண்ட பிரபலமான குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளி பிரின்ஸ்பல் நாற்பத்தியெட்டு வயது சிஸ்டர் சில்வியா கண் கண்ணாடியை கழட்டி வைத்தபடி சொன்னதும் எதிரே அமர்ந்திருந்த சுதா புன்னகையுடன்  நன்றி மேடம் என்றாள்.

    எங்க பள்ளியை விட பிரபலமான பள்ளிங்க இங்க இருக்கு. நீங்க நல்லா படிச்சியிருக்கிங்க. உங்க தகுதிக்கு காலேஜ்கள்ளயே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கும்மே அங்கயெல்லாம் போகாம குறைந்த சம்பளத்துக்கு இங்க டீச்சரா வேலைக்கு சேர என்ன காரணம் ?

    என்னோட சின்ன வயசுல இந்த ஸ்கூல்ல படிக்கணம்ன்னு ஆசை. அப்ப முடியல. இப்ப வேலை பாக்க வேண்டிய நிலை வந்ததும் இங்க சேரணம்ன்னு ஆசைப்பட்டன். விளம்பரத்த பாத்து அப்ளே பண்ணேன் என சுதா சொன்னபோது மெல்ல புன்னகைத்த சிஸ்டர் சில்வியா, நீங்க எய்த் டூ டென்த் ஸ்டூடன்ட்க்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுங்க.

    சரிங்க மேடம்.

    தன் இருக்கையில் இருந்து எழுந்த சிஸ்டர் சுதாவிடம் வாங்க என அழைத்தார்.

    மேடம் ஒரு நிமிஷம். உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டிங்களே ?.

    தெரியாததைத்தான் கேள்வியா கேட்பாங்க. அதல என்ன தப்புயிருக்கு. கேளும்மா என்றார் சிரித்தபடியே ?.

    ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலிஷ்ல தான் பேசணம்ன்னு வெளியில சொன்னாங்க. நீங்களே தமிழ்ல பேசறிங்களே.

    ஆங்கிலம் கத்து தர்றோம் இல்லன்னு சொல்லல. ஆனாலும் இங்க தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்லயிருந்து வந்த கால்டுவெல் தமிழ் கத்துக்கிட்டு தமிழைப்பத்தி சிறப்பா நூல்கள் எழுதனாரு. ஆப்படியிருக்கும் போது நம்ம மொழிய நாம பேசலன்னா நல்லாயிருக்கும்மா. முதல்ல தாய்மொழிக்கு முக்கியத்துவம், அதுக்கப்பறம் தான் பிறமொழி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ங்கறதால இங்கிலிஸ்ல தான் பேசுவாங்கன்னு வெளியில இருக்கறவங்க நினைக்கறாங்க. அப்படியெல்லாம் இல்ல பசங்களுக்கு ஆங்கிலத்த கற்று தர்றோம், தாய் மொழிய உணர வைக்கறோம் என்றவர் போகலாம்மா என கேட்டார் சுதா தலையாட்டியதும் நடக்க தொடங்கினார். அலுவலக வாயிலில் நின்று டேவிட் என அழைத்தார். வந்துட்டன் மேடம் என குரல் தந்தப்படி 40 வயதான டேவிட் பவ்யமாக வந்து நின்றார். சுதா இவர் ஆபிஸ் பியூன் டேவிட் என அறிமுகப்படுத்தியவர், டேவிட் இவுங்க சுதா புது அப்பாய்மெண்ட் 8 டூ 10 கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுக்கபோறாங்க. இவுங்களுக்கான டைம்டேபிள் கம்ப்யூட்டர் ரூம்ல இருக்கும் பிரிண்ட் அவுட் வாங்கி வாங்க எனச்சொல்லிவிட்டு நடந்தார்.

    ஸ்டாப் ரூம்க்குள் நுழைந்த சிஸ்டரை கண்டு அனைவரும் எழுந்து நின்றனர். தன் பின்னால் நின்ற சுதாவை சுட்டிகாட்டி எம்.எஸ்.சி. எம்.பிஎல் முடிச்சியிருக்காங்க. நம்ம ஸ்கூல்க்கு கெமிஸ்ட்ரி டீச்சரா அப்பாய்மென்ட் பண்ணியிருக்கு. நீங்க இவுங்களுக்கு ஒத்தொழைப்பு தரனும் என்றவர் சுதா பக்கம் திரும்பி இதான் ஸ்டாப் ரூம், டைம் டேபிள் தரச்சொல்றன், போய் உட்காருங்க குட் லக் எனச்சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

    சுதா காலியாக இருந்த இடத்தில் அமர அருகில் இருந்த ஒரு ஆசிரியை ஹாய், ஐயெம் மாலதி. இங்கிலிஷ் டீச்சர் என அறிமுகமானார்.

    நீங்க என்ன ஊர் ?.

    இதே ஊர் தான் காந்தி நகர்ல இருக்கன்.

    எங்க படிச்சிங்க ?.

    திருச்சியில எம்.எஸ்.சியும், பெரியார் யுனிவர்சிட்டியில எம்.பில் பண்ணன்.

    அப்பா என்ன பண்றாரு ?

    பிஸ்னஸ் பண்றாரு.

    இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பாத்திங்களா?.

    இல்ல.

    ஏன் ?.

    சும்மா தான் எங்கயும் முயற்சி பண்ணல.

    மாலதி மேடம் அவுங்க இப்பத்தான் வந்துயிருக்காங்க. அதுக்குள்ள அவுங்கள ஏன் ராக்கிங் பண்றிங்க விடுங்க என ப்ரியா சொல்ல அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது.

    ஏன் மேடம் கலாய்க்கறிங்க. புதுசா வந்துயிருக்காங்க. அவுங்களப்பத்தி உங்களுக்கும் தெரியாது. உங்க மனசுல இருக்கற கேள்வியையும் தான் நான் கேட்கறன் தெரிஞ்சிக்கிட்டா பழகா ஈசியா இருக்கும்மில்ல அதுக்குத்தான் கேட்கறன் என்றார்.

    நீங்க கேளுங்க மேடம் என சுதா சொன்னதும்

    கல்யாணமாகிடுச்சா

    என கேட்டதும் சுதா அமைதியாகி சுதாவின் முகம் சுருங்கி கண்ணீல் நீர் கோர்த்தது. இதை பார்த்த மாலதிக்கு சுதா பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

    தொடரும்……………

    Share
  • அந்திமாலையும், அவளும் அவனும்-3

    திவாகர்

    “அவள் ஆண்டாள்தான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?”

    “முதலில் சுத்தமாகத் தெரியாது.. ஏதோ சிறுமி எதற்கோ நிறுத்துகிறாள் என்று நினைத்துதான் குதிரையை விட்டு இறங்கினோம்.. அந்தப் பெண்ணின் கண்களில் கண்ணீர்.. நாங்கள் உருகிப் போய்விட்டோம்.. எதற்கும் கலங்காத நரசிங்க மகாராஜா அந்த நடுச் சாலையில் மண்டியிட்டு அந்த சின்னப்பெண்ணின் கையைப் பிடித்து ’ஏனம்மா அழுகிறாய்’ என்று கேட்டார்.. அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லாமல் எங்களை இதோ நாம் இங்கே நிற்கிறோமே அங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு இந்தக் கோயில் உள்ளே வருமாறு வேண்டினாள். என்னையும் கையைப் பிடித்து அழைத்துப் போனாள்..”

    கண்களில் ஏதேனும் கண்ணீர் வந்ததோ என்னவோ, திம்மராசு சடாரென தன் கண்களை மேல்துணியால் ஒற்றிக் கொண்டார்.

    “எனக்கு வயது அப்போது நாற்பது இருக்கும் கிருஷ்ணா.. என் மூத்த பெண் நன்றாக வளர்ந்து சட்டென ஒரு நோய் வந்து இறந்து போன நேரம் அது.. அந்தப் பெண்ணைப் போலவே இவளும் இருந்தாள்.. எனக்குள் என்னை அறியாமலே ஒரு தந்தைப் பாசம். அந்தப் பெண் என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துப் போகும்போதே அந்தப் பாசத்தின் வலி என் நெஞ்சைப் பிசைந்து கொண்டே இருந்ததை எப்படிச் சொல்வேன்..”  திம்மராசு பெருமூச்சு விட்டு மறுபடியும் பேசினார்

    ”கிருஷ்ணா! அவள் ஒரு வார்த்தை எங்களிடம் பேசவில்லை. அவளே அங்கே உள்ள சிலந்தி வலைகளைக் கலைத்தாள், உடைந்த கற்களையும் எடுத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கினாள். சிறிது நேரம் அப்படிச் செய்தவள் மறுபடியும் என் கையைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு இடமாக வலம் வந்தாள். பாசி படிந்த நீர்க்குளம் அருகே நின்றாள்.. அருகே கிடந்த காய்ந்த சருகுகளையெல்லாம் ஒதுக்கிக் கொண்டே சென்றவள் கோயில் உள்ளே பெருமாள் கர்ப்பக்கிருகத்தருகே வந்து நின்றாள்.. அவள் மறுபடி எங்களை ஒன்றும் கேட்கவில்லை.. என்னைப் பிடித்துக் கொண்டு வந்த கையை அவளே விடுப்பித்துக் கொண்டாள்.. பெருமாளைக் காணச் செல்கிறாளோ என்று நினைத்தோம்தான். உள்ளே அந்த இருளான கருவறையில் சென்றவள்.. மறுபடி வரவில்லை.. குரல் கொடுத்துப் பார்த்தோம்.. கருவறை உள்ளேயே சென்றோம்.. திக்பிரமையோடு அதுவரை கூடவே வந்த நரசிங்க மகாராஜாவுக்குப் புரிந்து விட்டது. எங்களை அழைத்து வந்தது சாதாரண மானிடப் பெண்ணில்லை.. சாட்சாத் ஆண்டாளே.. அவள்  இந்தக் கோயில் கட்டும் நிமித்தம் எங்களை அழைத்து அவள்தான் ஆணையிட்டுள்ளாள் என்று. விஷயம் புரிந்தவுடனே பார்க்கவேண்டுமே நரசிங்கரின் உற்சாகத்தை. அடுத்த ஒரு மாத காலம் அனைத்து ராஜகீய வேலைகளும் இந்த ஊரில்தான் நடந்தது என்றால் பார்த்துக்கொள் கிருஷ்ணா.. கோயில் கோபுரம் எப்படிக் கட்டப்படவேண்டும், கோயில் சுற்றுப்புறம் எப்படி இருக்கவேண்டும், உள்ளே மண்டபங்கள் எப்படியெல்லாம் மராமத்து செய்யப்படவேண்டும், நந்தவனம், குளம் எப்படியெல்லாம் சீரடைய வைக்கவேண்டும், யார் யார் நிதி ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் இங்கிருந்துதான் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டே வருடம்தான்.. இதோ இந்த கோபுரத்துடன் அழகிய கோயிலும் நந்தனவனமும் இங்கே உருவாகிவிட்டது.” *******(1)

    திம்மராசு சற்று நிதானித்தார்..

    “எங்கள் ஆண்டாள சன்னிதியில் புதுப் பொலிவு பார்த்தோம். கிருஷ்ணா! இப்போது சொல்கிறேன் ஒரு ரகசியத்தை உனக்கு.. நீங்கள் அத்தனைபேரும் தடுத்துப்பார்த்தாலும் நான் ஏன் விஜயநகரத்தை விடுத்து வில்லிபுத்தூர் வந்தேன் தெரியுமா, என் செல்லப் பெண் போல வந்து என் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாளே, அவளை நினைத்து நினைத்து உருகி உருகித்தான் இங்கே வந்து இதோ கோயிலருகேயே குடில் கட்டி வாழ்ந்து வருகிறேன்.. இனி இந்த உடலிலிருந்து என் உயிர் பிரியும் வரை அவளைப் பார்த்துக்கொண்டே இங்கேதான் வாசம் என்ற முடிவோடுதான் தினமும் உயிர் வாழ்கிறேன் கிருஷ்ணா!”

    திம்மராசுவின் குரல் குழைந்து போனதைக் கவனித்தான் கிருஷ்ணதேவன். எத்தனைப் பெரிய விஷயம் இது.. விந்தைகள் எல்லாமே இங்கு சர்வ சாதாரணம் போலும்.. அப்படித்தான் இருக்கவேண்டுமென நினைத்தான்.. இல்லையென்றால் சண்டை நடக்கும்பகுதியில் தரிசனம் கொடுத்தவன் இன்று அந்திமாலையில் நேத்ரதரிசனம் தருவானா.. அதுவும் இவர் பேத்தி மூலமாக.. கிருஷ்ணாவின் மனதில் இனம் புரியாத ஆனந்தம் புகுந்து கொண்டது.

    திம்மராசுவுடன் கோயிலுள்ளே சென்று பெருமாள் தரிசனம் செய்தவன் ஆண்டாள் ச்ன்னிதிக்கு வந்தான். கண்ணார அந்தத் தாயைக் கண்டவன் அப்படியே தரையில் விழுந்து சேவித்தான். ’இத்தனை சிறிய வயதில் எத்தனை பெரிய கிழவி போல ஞானத்தைக் கரைத்துக் குடித்து அதன் சாற்றினை மட்டும் அடியவர்களுக்கு அள்ளித் தந்த சுடர்க்கொடியே.. தாயே உன் மேல் காவியம் ஒன்றை எழுத என்னை ஒரு கருவியாக்கு’ என்று மனதுக்குள் அவளை வேண்டினான். மனது மிகவும் திருப்திப்பட்டது போல உணர்ந்தான்.

    திம்மராசு நகர்ந்தார். போகும்போது மடைப்பள்ளியில் ஆகாரத்துக்கான ஏற்பாடும் செய்யச் சொன்னார். அவருடன் கிருஷ்ணாவும் நகர்ந்தான். இருந்தும் அவன் கண்கள் ஆங்காங்கே அவர் பேத்தியைத் தேடின.. எங்கே போய்விட்டாள்.. இங்கேதான் கோயிலில் இருப்பாள் என்று சூசகமாக திம்மராசு மாமா சொன்னாரே.. இல்லை எங்கும் அவள் காணவில்லை.. மறுபடியும் கோயில் வெளியே வந்து குடிலுக்குள் சென்று இரு பலகைகளைக் கொண்டு வந்து கீழே போட்டார்.

    எங்கே அவள்.. இவள் தாத்தாவுடன் இல்லையோ என்னவோ.. ஒருவேளை தாதியரோடு தனியாக வளர்க்கிறாரோ என்னவோ.. ஆனாலும் தன்னை விட்டுப் பிரியும்போது சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.. ’என்னைப் பாராதது போலவே தாத்தாவிடம் காட்டிக்கொள்ளேன்’  அது சரி, இவளைப் பாராதது போல காட்டிக் கொள்ளலாம்தான்.. அதற்காக அவளைப் பாராமலே இருந்து விட முடியுமா.. திரும்பப் போவதற்குள் எப்படியாவது அவள் முக தரிசனம் செய்து விட வேண்டும்.. வருவாளா.. அப்படி வரவில்லையென்றால் மாமாவிடம் கேட்டுவிடவேண்டியதுதான்..

    அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே குதிரைக் கொளம்படிச் ச்பதங்களோடு ஒரு சிறிய படை ஒன்று தபதப’வென வரும் சப்தம் கேட்டது.. புரிந்தது கிருஷ்ணதேவனுக்கு.. தன் நண்பர்கள்தான்.. கொஞ்சம் தாமதித்தாலும் வந்துவிடுவோம் என்று மதுரையில் சொன்னார்கள் அல்லவா.. வந்துவிட்டார்கள்.

    அடுத்த அரை நாழிகையில் திம்மராசுவின் குடில் அல்லோல கல்லோலப்பட்டது. வெளியே மெய்க்காவலர்கள் படை காத்திருக்க, தஞ்சை மதுரை செஞ்சி நாயகர்கள்தான் உள்ளே வந்தவர்கள்.  அவர்கள் திம்மராசுவிடம் கிருஷ்ணை நதிக்கரையோரம் கங்கர்களோடு நடந்த சண்டையில் பெற்ற வெற்றியும் அந்த அதிகாலை வேளையில் மன்னருக்குக் கிடைத்த மகாலக்ஷிமி சமேத மகாவிஷ்ணுவின் தரிசனமும் பற்றியே வெகுவாகப் பேசினார்கள்… சற்றுநேரம் வரைக்கும் வெகு அமைதியாகக் காணப்பட்ட அந்த இடம் அமர்க்களமான குரலில் ஏற்பட்ட சப்தத்தால் பெரும் பரபரப்பு கூடியது போல காணப்பட ஆரம்பித்தது. எல்லோருக்குமே திம்மராசு மீது மரியாதை அதிகம் என்பது கூட அவர்கள் பேச்சின் மூலம் தெரிந்தது. மகாவிஷ்ணுவின் விருப்பமும், அவர் கேட்டுக் கொண்டதனால் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் புகழை தெலுங்கு மொழியில் மன்னர் பாட இருப்பதையும் சற்று எல்லோருமே உணர்ச்சிவசமாகப் பேசினார்கள்தான்.

    “திம்மராசுப் பெரியவர் பிரதானி பதவியில் இல்லையென்றாலும் இன்னமும் எங்களுக்கெல்லாம் தலைமை அமைச்சர்தாம். மன்னாதி மன்னரான கிருஷ்ணதேவராய சமூகம் மிகப் பெரிய காவியம் படைக்கும் தருணத்தில் திம்மராசனார் திருமலைத் திருப்பதியில் இருக்கவேண்டும்.. திருமலை வேங்கடவன் முன்னிலையில் அல்லவா இந்தக் காவியம் அரங்கேறப்போகிறது.. திம்மராசு மாமய்யா அவசியம் வந்து மன்னரை வாழ்த்த வேண்டும், அதற்கு மன்னாதி மன்னரும் வேண்டுகோள் விடுக்கவேண்டும்’”

    இது செஞ்சிக்கோட்டை வையப்ப நாயகர் வேண்டுகோள். அவரது குரல் மிகச் சப்தமாக வந்ததாலும், மற்ற தலைவர்கள் அதை ஆமோதித்து வரவேற்றதாலும் ஏனோ அந்த சூழ்நிலை கிருஷ்ணதேவன் மனதுக்குப் பிடிக்காமல் போனது. அவன் மனம் தனிமையில் திம்மராசு மாமாவிடம் அதிகம் பேசவே விரும்பியது.. தனிமையில் பேசினால் பேத்தி கூட வந்தாலும் வந்து சேர்ந்து கொள்வாள்.. ஆனாலும் இனி இவர்களை விலக்கமுடியாதே..

    “நண்பர்களே!.. உங்கள் அழைப்புதான் என் அழைப்பும்.. ஆனால் திம்மராசு மாமாவை நாம் கட்டாயப்படுத்தக்கூடாது.. அவர் சாதாரணப்பட்டவர் இல்லை.. அவர் வந்தாலும் வரமுடியாவிட்டாலும் அவர் ஆசிகள் எனக்கு எப்போதும் உண்டு என்பதை நான் அறிவேன்”

    பட்டும் படாமல் பேசிய வார்த்தைகளில் உள்ள உண்மையை திம்மராசு உணரத்தான் செய்தார். கிருஷ்ணாவுக்கு

    “உங்கள் அன்புக்கு நன்றி நாயகர்களே!.. ஆனாலும் என் நிலையை விளக்கமாக சற்று முன்னர்தாம் உங்கள் மன்னரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்.. என் மனம் முழுவதும் திருமலையில் வேங்கடவன் சன்னிதியில் மன்னர் காவியம் பாடுவதில்தான் இருக்கும்.. ஏனெனில் நான் என் பேத்தியை விட்டு எங்கும் வரமுடியாது..”

    புரியாமல் பார்த்தார்கள் நாயகர்கள். புரிந்தவன் சிரித்தான்.

    “அதுவும் நல்லதுதான் மாமா.. உங்கள் ஆசை எனக்குத் தெரியாதா என்ன.. இருக்கட்டும்.. நான் வந்ததன் காரணமே இந்தக் காவியத்தை எப்படி ஆரம்பிக்கலாம் என்று உங்களைக் கலந்து ஆலோசிக்கத்தான்.. நல்ல காலம் நம் நண்பர்களும் வந்துவிட்டார்கள்.. எல்லோருமே கேட்கட்டுமே.. சொல்லுங்கள்.. காவியத்தை எப்படி ஆரம்பிப்பது..”

    திம்மராசு யோசித்தார்..

    ”ம்ம்.. சரியானதுதான்.. உனக்கு தரிசனம் தந்தவர் தம்மை ஆந்திர விஷ்ணு என்றார் அல்லவா.. தெலுங்கு மொழியில் ஆண்டாள் தன்னை திருமலையில் சேர்ந்ததாகப் பாடவேண்டுமென்று கோரிக்கை விடுத்தார் இல்லையா? உனக்கு இந்தக் காவியத்தில் பாட்டுடைத்தலைவன் திருமலை வேங்கடவன்.. நாயகி ஆண்டாள் தாய்தான்.. அவர் எப்படி தரிசனம் தந்தாரோ, என்ன வரம் கேட்டாரோ.. அங்கிருந்து காவியத்தை ஆரம்பித்து எழுது.. முதல் வணக்கத்தையும் திருவேங்கடவனுக்கு சமர்ப்பித்து விடு”

    “ஆஹா.. முதலமைச்சரின் ஆலோசனை என்றும் முதன்மையானதுதான்” மதுரை நாகம நாயக்கர் புகழாரம் சூட்ட ஆரம்பித்தார்.. கிருஷ்ணதேவன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.. அவனுக்கு அந்தி மாலை நேர நேத்ர தரிசனமும் திம்மராசு பேத்தியின் கௌஸ்துப மாலையின் விளக்கமும் நினைவுக்கு வந்தன..

    ”இப்படி ஆரம்பிக்கட்டுமா?”

    ”எப்படி.. சொல் சொல்..”

    ” இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
    ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
    ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
    ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
    தெள்ளத் தெளிவாய் வெளியே
    தெரியும் விந்தையைத் தந்த

    திருவேங்கடவனே உனக்கு முதல்வணக்கம்!” **** (2)

    நாயகர்கள் ஏதும் பேசமுடியாமல் மௌனமாக இருந்தனர். திம்மராசுவோ ஸ்தம்பித்துப் போயிருந்தார். ”என்ன சொன்னாய் கிருஷ்ணா.. ‘ஒருவருக்கொருவர் உள்ளொளியாய உள்ளேயே ஒளிந்திருந்தும் தெள்ளத் தெளிவாய வெளியே தெரிந்த விந்தையா? ஆஹா அற்புதம் கிருஷ்ணா.. உனக்கு திருவேங்கடவனின் பரிபூரண அருள் இருக்கிறது.. ஆஹா எத்தனை அருமை.. எப்படிப்பட்ட சொற்கள்.. எத்தனை வலுவான பொருளோடு அப்படியே நாவில் வந்து வெளியே வெண்முத்துக்களாக விழுகின்றன..”

    திம்மராசு புகழ்ச்சியைக் கேட்டதும் சட்டென மறுத்தான் கிருஷ்ணதேவன்.. “மாமா, மன்னிக்க வேண்டும், உங்களின் இத்தனை புகழ் வார்த்தைகளும் எனக்குச் சேரவே சேராது.. எல்லாம் உங்கள் பேத்திக்கே சொந்தம்” என்று வெளியே குரல் உடைபட சொன்னவன் மனதில் இன்னொன்றும் சொல்லிக்கொண்டான்..”என் இனிய செல்லப்பெண்ணே.. இது நீ கொடுத்த பாட்டு, உன் அருள்.. உனக்குதான் அதன் பெருமை சேரும்’…

    திம்மராசு எங்கேயோ ஒரு உலகில் இருந்ததைப் போல உணர்ந்தார்..’

    “ஆமாம்.. பேத்தி.. பேத்திதான்.. இருந்தாலும் இந்த அழகிய பாடல் உள்ள காவியம் காலம் உள்ளவரை உன்னை வாழ்த்திக் கொண்டே இருக்கும் கிருஷ்ணா!”

    நாயகர்கள் எல்லோரும் சேர்ந்துகொண்டு கிருஷ்ணதேவனை உலகளாவப் புகழ ஆரம்பித்தனர்.. கிருஷ்ணா மனதுக்குள் கவலை ஏராளமாக இருந்தது.. எத்தனை இருந்தாலும் அந்த சிறிய பெண்ணுக்கு ஏற்பட்டிருந்த ஞானத்தின் முன் தன் அஞ்ஞானம் எப்படி சமமாகும் என்று எப்படி இவர்களுக்கு எடுத்துரைப்பது.. அடக் கடவுளே.. ஒருமுறை அவள் தன் தாத்தாவைப் பார்க்க இங்கே தக்கணமே வரக்கூடாதா.. இத்தனை தலைவர்கள் முன் அவளுடைய ஞானத்தைக் காண்பித்து அவளை நாம் முன்னிறுத்தியிருக்கலாமே.. தாத்தா அனுமதியுடன் பேத்தியை தலைநகருக்கு அழைத்துச் சென்று கவுரவம் செய்திருக்கலாம்தான்.. ஆனால் எங்கே அவள்.. எப்படி இவரிடம் கேட்பது.. அவளைப் பற்றியும் நாம் அதிகம் பேசக்கூடாது அல்லவா.. அவள் கட்டளை இருக்கிறதே.. இதனால் அவளுக்கு நிதம் கிடைக்கும் விஷ்ணுவின் நேத்ர தரிசனம் தடைப்படுமே.. அப்படியும் அவரிடம் சூசகமாக பேத்தியைப் பற்றி சொன்னாலும் பேச்சை மாற்றிவிட்டாரே மாமா…

    ஏதேதோ பேசினர்.. பின்னர் நாயகர்கள் எழுந்து கொண்டனர். கிருஷ்ணதேவனும் எழுந்துகொண்டான்.. அடுத்தநாள் காலை மதுரையிலிருந்து ராணிகள் சகிதம் தாம் தலைநகரம் பயணப்படவேண்டும்.. சிறிது நேரம் நின்று கொண்டே பேசியவர்கள் விடை பெற்றார்கள். அழகாக தலையசைத்து வாசல் வரை வந்து வழி அனுப்பினார் திம்மராசு.

    குதிரை ஏறப்போனவன் மறுபடியும் தனியாக திம்மராசு மாமாவிடம் வந்தான். “மாமா.. தங்கள் பேத்தியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்..இது என் தனிப்பட்ட வேண்டுதல்”

    சட்டென் கையைப் பிடித்துக்கொண்டார் திம்மராசு..”ஆஹா.. கிருஷ்ணா! என் பேத்தியின் மீது இத்தனை அக்கறையா.. நான் அவளைப் பார்த்துக் கொள்ள, அவள் என்னைப் பார்த்துக் கொள்ள.. எங்களுக்கென்ன கவலை சொல்! இவைகளைப் பற்றி நீ ஏதும் கவலைப்படாமல் உன் காவியத்தை எழுது.. ம்.. சொல்ல மறந்துவிட்டேன்.. நீ எழுதும் காவியத்துக்கு அமுக்த மால்யதா என்று பெயர் வை. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைப் பற்றிய காவியமல்லவா” சந்தோஷமாகப் பேசி கையை விடுவித்து அனுப்பித்து வைத்தார்.. அவனும் தலையை ஆட்டி அவர் பாதம் வணங்கி விடைபெற்றான். குதிரையிலும் மெல்ல ஏறினான்.. அவன் சைகை கிடைத்ததும் மற்ற குதிரைகளும் மெல்ல நகர்ந்தன

    இருளில் குதிரைகள் சிறிது தூரம் செல்லும் வரைப் பார்த்துக்கொண்டிருந்தவரிடம் கோயில் பரிசாரகர் இரவு உணவு வகைகளை எடுத்துக் கொண்டு வந்தார். ‘அடடே.. கிருஷ்ணா மட்டும் தனியாக வந்தான் என்றே நினைத்துக்கொண்டு உணவு சமைக்கச் சொன்னேன்.. கூட வந்தவர்கள் ஏதும் உண்ணாமல் சென்று விட்டார்கள்.. எனக்கு சிறிது எடுத்து வைத்து விட்டு, மீதம் உன் இல்லத்துக்கு எடுத்துச் செல்..” என்று உள்ளே செல்லத் திரும்பினார்..

    ”ஐயா! அர்த்த ஜாம பூசைக்கு நேரமாகிவிட்டது. நீங்கள் வந்து உங்கள் பேத்தியை தரிசனம் செய்து விட்டால் நல்லது என்கிறார் பட்டர்.”

    ”இதோ வந்துவிட்டேன்.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா.. எங்கள் கிருஷ்ணதேவன் மிகப் பெரிய அறிவாளி, ஞானி கூட.. நான் அவனுக்கு ஆண்டாளை என் செல்லப் பெண்ணாக நினைத்து கோயில் கட்டியதைச் சொன்னேன்.. எனக்கு அப்போது வயது குறைவு.. அதனால் மகளாக நினைத்தேன்.. செல்லப்பெண் என்றும் அவனிடம் சொன்னேன்.. நான் வளர்ந்தாலும் அவள் வளரமாட்டாள் அல்லவா.. இப்போது வயதாகிப்போன இந்தக் கிழவனுக்கு அவள் மகளல்ல, பேத்தி.. இதைச் சரியாகக் கணித்து விட்டான் கிருஷ்ணா. அதனால்தான் தன் புலமையைக் கூட என் பேத்தி சொல்லிக் கொடுத்தது என்று சொல்லி ஆண்டாளுக்கே பெருமையைக் கொடுத்து விட்டான் அவன்.. ஆஹா..!

    பரிசாரகருக்கு ஏதும் புரியாமல் பார்த்தார்.. அதைத் தெரிந்து கொண்ட திம்மராசு.. ’ஓ.. உனக்கு ஒன்றும் புரியவில்லை இல்லையா.. நான் சொன்னதை மறந்துவிடு.. சரி, நான் என் பேத்தியைப் பார்க்க வேண்டும்.. கிருஷ்ணா அருமையாக ஒரு கவிதை சொன்னான். அதை அவளுக்கே அர்ப்பணம் செய்துவிடுகிறேன்.. இப்போதே சொல்லிவிட்டால் அவளும் சந்தோஷப்படுவாள்.. ஆண்டாள் தாயே.. என் அருமைப் பேத்தியே.. இதோ வருகிறேன்.. உனக்கு ஒரு புதுப்பாடல் சொல்லவேண்டுமே.. திருவேங்கடவனுக்கு முதல் வணக்கமாம்.. ஆமாம்.. திருவேங்கடவன் உனக்குப் பிடித்தவன் ஆயிற்றே.. இல்லாவிட்டால் வானில் செல்லும் மேகங்களையெல்லாம் திருமலை நோக்கி திரும்பப் போகச் சொல்லி காதல் தூதுதான் விடுவாயா?..’

    திம்மராசு ஆனந்தமாக பேசிக்கொண்டு கோயிலுக்குள் செல்லும் அதே வேளையில் கிருஷ்ணதேவன் மட்டும் வேகமாக ஓடிக்கொண்டிருந்த தன் குதிரையைத் திடீரென நிறுத்தினான். குதிரை பீறிட்டு திமிறிக்கொண்டே அங்கே நின்றது. மாலை இதே இடத்தில் அத்தனை நேரம் அமைதியாக நின்ற இந்தக் குதிரை இப்போது மட்டும் என்ன அப்படி திமிறல்.. அதன் திமிறல் சப்தம் மற்ற நாயகர்களையும் வீரர்களையும் நிப்பாட்டியது..

    அதே இடம்.. அதோ இந்தப் பாறை மேல்தான் அவள் நின்றாள்.. நாளையும் வருவாள்.. அந்தி வானமும் இருக்கும், அவளும் இருப்பாள் அவனைக் காண்பாள். அவன் அழகான செங்கண்ணை சிறுச் சிறிதே திறந்து தரிசனம் கொடுப்பான்..

    சட்டென ஒரு திட்டம் மனதில் வந்தது.. தானும் திம்மராசு மாமாவைப் போல இந்த ராஜ்ஜிய சுகங்களை உதறிவிட்டு இதே வில்லிபுத்தூரில் குடிலில் இருந்துகொண்டு தினமும் அவளுடன் அந்திவானத்தில் அவனைக் கண்டால்தான் என்ன.. ஆஹா.. நினைக்கும்போதே என்ன ஒரு இதமான சுகம்.. அப்படிச் செய்தால்தான் என்ன.. வேண்டாமே இந்த மன்னர் வேஷமும் நாடுகளும், சண்டைகளும்..

    ”மன்னருக்கு ஏதேனும் கவலை வந்து விட்டதோ.. ஏதேனும் மாமாவிடம் பேச மறந்து விட்டீர்களா.. என்னிடம் சொல்லுங்கள் தேவரே.. நான் சொல்லிவிட்டு வருகிறேன்.. இன்று இரவில் மதுரை எப்படியும் சென்றாகவேண்டும்.. ராணியார் வேறு பிரத்தியேகமாக எங்களுக்குச் சொல்லி அனுப்பி வைத்தார்.. தங்களைத் தவறாது பக்கத்தே இருந்து அழைத்து வருமாறு..”

    நாகம நாயகனின் குரல் காற்றில் சப்தமாக வந்ததும் கிருஷ்ணதேவன் மனதில் இருந்த திட்டமும் மனோதிடமும் மாறியது.. யாருக்கு என்ன கொடுப்பினையே அதுதானே கிடைக்கும்.. திம்மராசுவுக்கு கொடுப்பினை உள்ளது.. நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லைதான்.. அந்திவானம் இருந்த திசை நோக்கினான்.. இருளில் ஏதும் தெரியவில்லை..  கிருஷ்ணா ஒரு பெரிய பெருமூச்சு விட்டவன் தலையசைத்து குதிரையை மதுரை நோக்கி விரட்டினான்..

    (முற்றும்)

    ******1. இது சரித்திர நிகழ்ச்சியாக கருதப்பட்டு  பர்டன் ஸ்டெயின் அவர்களின் ‘விஜயநகரா’ புத்தகத்தில் பக்கம் 78 இல் ஒரு குறிப்பொன்று கொடுக்கப்பட்டுள்ளது.

    ******2. அமுக்தமால்யதா’ வில் ஸ்ரீகிருஷ்ணதேவராயனின் முதல் பாடல் – தெலுங்கு மொழியிலிருந்து, டாக்டர் பிரேமா நந்தகுமாரின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து , தமிழாக்கம் செய்யப்பட்டது.

    Share
  • அந்திவானமும், அவனும் அவளும் – 2

    திவாகர்

    நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளிக்கிறார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன். இறைவா.. எப்படி விவரித்தால் இவள் முதலில் நம்புவாள்..

    “என்ன யோசிக்கிறாய்.. ஏதாவது கதை அளக்கலாமா இந்தப் பெண்ணிடம் என்று யோசித்துப் பார்க்கிறாயோ.. பொய் சொன்னால் எனக்குத் தெரிந்து விடும்..”

    ஏதோ ஒரு உத்வேகத்தில் அவளிடம் அங்கே அன்று நடந்ததை அப்படியே சொன்னான். அவன் கண்ணுக்கு அவள் சின்னப் பெண்ணாகத் தோன்றவில்லை.. ஆருயிர் நண்பன் ஒருவன், தன் நலம் விரும்பி, தன்னை எப்போதும் சீண்டிக் கொண்டிருக்கும் சகோதரி, தன்னை அரவணைத்துப் பாலூட்டும் தாயாகத்தான் நினைத்தான்..

    “நான் மெய்யாகத்தான் சொல்கிறேன்.. என் இரு கண்களாலும் அந்தத் தாமரைச் செங்கணானைப் பார்த்தேனே” கெஞ்சினான் கிருஷ்ணா..

    “ஓ.. பார்த்து விட்டாயா.. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே.. நான் சொல்லவில்லை அப்போதே.. விண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தால் சற்று தீர்க்கமாகப் பார்த்தாலே அவன் தெரிய வருவான்.. அன்று உனக்கு அவன் தெரிந்ததால் அப்படி ஒன்றும் விசேஷமில்லை..”

    ”கண்ணம்மா! என் செல்லப்பெண்ணே!.. இப்படி ஒரேயடியாக எனக்குக் கிடைத்த தரிசனத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடாதே! விண்ணிலே எல்லாருக்கும் அந்தத் தரிசனம் கிடைத்து விட்டதா.. என் ஒருவனுக்கு மட்டும் ஏன் அப்படித் தெரியவேண்டும், நீயே சொல்லேன்..”

    “அடடா. ஏன் இப்படி புலம்புகிறாய்? ஒன்று சொல்லட்டுமா.. நீ அவனை சரியாக தரிசனம் செய்யவில்லை என்று கூட சொல்வேன்.. சரி, நீ பார்த்த விஷ்ணுவின் மார்பில் என்ன கண்டாய்?

    ”அதுதான் சொன்னேனே.. கௌஸ்துபமணியைப் பற்றி..”

    “நன்றாக உற்றுப்பார்த்தாயா?”

    ”பார்த்தேனே!”

    ”இல்லை பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் அங்கே லக்குமியும் உள்ளே இருப்பதை உணர்ந்திருப்பாய்.. இல்க்குமி அவன் மார்பில் குடி கொண்டவள் அல்லவா..!”

    ”ஆமாம்.. அது என்னவோ சரியானதுதான்.. ஆனால் அவள் ஏன் அவனுடன் கருடபக்‌ஷியில் பக்கத்தே அமர்ந்து  தரிசனம் தரவேண்டும்?”

    சிரித்தாள் சின்னப்பெண். “அவள் மகா கருணையுள்ளவள்.. கௌஸ்துபமணியில் பார்க்க முடியாதவன் தனியாகவாவது பார்க்கட்டுமே என்று காட்சியளித்திருக்க வேண்டும்.. தமிழில் சொல்கிறேன்.. கேட்டுக் கொள்!”

    ஆணையிடுவது போல வந்த குரலில் அடிபணிவதுபோன்ற நிலைக்கு ஆளானான்.. “அப்படி சொல் செல்லம்மா!”

    இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
    ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
    ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
    ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
    ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
    தெள்ளத் தெளிவாய் வெளியே
    தெரியும் விந்தையை என்னென்பேன்

    அப்படியே உருகிப் போனான் கிருஷ்ணதேவன்.. யார் இந்தப் பெண்.. தெய்வமா.. மகாலட்சுமியா, தன்னை என்றும் காக்கும் குலதெய்வமா.. மகேசுவரன் பத்தினி மகாசக்தியா.. இல்லை இல்லை இவள் நம் திம்மராசுவின் பேத்திதான். அவரும்தான் எத்தனையோ சமயங்களில் மிக நேர்த்தியாக எத்தனையோ விஷயங்கள் சொன்னவர் ஆயிற்றே.. கனவிலிருந்து வெளி வந்தவன் போல மயக்க நிலையில் இருந்தான் கிருஷ்ணா.

    ”அதோ பார் செவ்வானம்.. மெல்ல மெல்ல அந்திவானம் வெள்ளையிலிருந்து செம்மைக்கு மாறி வரும் விந்தையைப் பார்.” அவள்தான் சந்தோஷமாக கையைத் தட்டிக் கொண்டே கூவினாள்.

    அவளோடு சேர்ந்து அவனும் மேற்கே உயரப் பார்த்தான்.. ஆமாம் எத்தனை அழகிய வானம்.. ஆஹா வெண்மை நிறம் போய் பல நிறங்களாகக் கலந்து செம்மையில் முடிகிறதே.. இந்த வானத்தை ஏன் குருஷேத்திர பூமிக்கு ஒப்புவமையாக்கினாரோ அந்த தமிழ்க் கவிஞர்..

    ”இந்த செவ்வானத்தைப் பார்த்தால் உனக்கு என்ன ஞாபகம் வருகிறது..”

    “ஓ அதுதானே ஏற்கனவே பேசினோமே.. யுத்தகளம் பற்றி”

    அவள் சிரித்தாள்.. அந்த அந்தி மாலை நேரத்தில் அவள் கண்களில் கூட அந்த சிரிப்பின் மலர்ச்சியைக் கண்டான்.

    “எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?”

    “சொல்லேன்..”வியப்பாகக் கேட்டான் கிருஷ்ணா.

    “அந்த செங்கணான் விழிகள்தான் இந்த அந்தி வானம்.. நன்றாகப் பார்.. எப்படி சிறுகச் சிறுக விழித்து எழுகிறான் பார்.. வெண்மையானவை எல்லாம் நிறம் மாறி தன் கண்ணின் நிறத்துக்குக் கொண்டு வரும் அற்புதம் பார்த்தாயா.. தமிழில் கோதையின் பாடல் கேட்டதுண்டா..

    ”கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல்  விழியாவோ”.. என்று பாடினாளே.. பார்த்தாயா.. நீ அன்று பார்த்த தாமரைக் கண்ணானும் இவனும் ஒன்றுதானே..

    கிருஷ்ணதேவன் மறுபடி அந்தி வானத்தைப் பார்த்தான். தான் முன்னம் பார்த்த விஷ்ணுவின் ரூபமும் கூடவே அவன் நினைவில் வந்தது.. ஆமாம். அவன் செங்கணான்.. ’அந்தி வானத்து செங்கண்ணா! நீ எப்படியெல்லாம் காட்சி தருகிறாய்.. நான் சாதாரண மந்த புத்தியுள்ள மானிடன் என்பதால் முழு உருக்கொண்டு நான் மனதில் வேண்டியதற்கேற்ப அன்று அர்ச்சாரூபத்தில்  ஸ்ரீதேவி சமேதராக காட்சி தந்தாய்.. அதை நானல்லவோ கர்வப்பட்டு அரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு வருகிறேன்.. இதோ இன்று இந்த தெய்வீகப் பெண் மூலம் இயற்கையாகவே உன்னைப் பார்க்க முடியும் என்ற எளிய தத்துவத்தைப் புரிய வைத்தாய்.. நீ எங்குதான் இல்லை.. எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் பரமாத்மாவே.. உன் கருணையை இவள் மூலம் தெளிய வைத்தாயே..’

    கிருஷ்ணதேவன் இமைகளில் கண்ணீர் ததும்பியது.. நாம் திம்மராசுவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்டாளின் பாடல்களுக்காகத்தானே நாமே அவள் ஆசி பெற இந்த ஊர் வந்தோம்.. இறைவனே சமயம் பார்த்து இந்தப் பெண்ணை இங்கே அனுப்பினானோ.. பகவான் இயற்கையாகவும், தேவதேவனாகவும் காட்சி அளிப்பவன் மட்டுமல்ல, அவன் ’மனுஷ்ய ரூபிணே’ என்பது கூட எத்தனை சத்தியம்.. திம்மராசு மாமாவின் பேத்தியால் எத்தனை அறிந்து கொண்டோம்..

    ”அடடே.. நீ இப்படி யோசித்துக் கொண்டே இரு.. இதோ இருள் வந்துவிட்டது.. என்னை தாத்தா வீட்டில் தேடுவார்.. உனக்கென்ன குதிரை இருக்கிறது.. நீ பறந்து வந்து விடுவாய்.. நான் இப்படியே வயலுக்குள் குறுக்காகப் புகுந்து அல்லவா ஓடவேண்டும்.”

    அவள் இனிய குரலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் மனம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தததால் அவனிடம் இப்போது சலனம் இல்லை.. அவன் தலையசைத்தான்…

    “பார்த்தாயா.. முதலில் பார்த்தபோது ஏதோ பெரிய மனிதன் போல வெளி வேஷம் போட்டிருக்கிறாய்.. ஒரே மாயவார்த்தை பேச்சுதான்.. குதிரையில் ஏறி வா, நான் வேண்டுமானால் நடந்து வருகிறேன்.. என்றெல்லாம் அழைத்தாய்.. இப்போது பார்.. மௌனியாகிவிட்டாய்.. ஒரு வார்த்தைக்குக் கூட என்னைக் குதிரையில் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லவில்லை.. போகட்டும்.. எனக்கு வயலில் ஓடுவதெல்லாம் நித்தமும் பழக்கம்தான்.. நீ சொன்னாயே என்று நம்பி உன்னுடன் குதிரையில் இன்று வந்தால் நாளையும் இந்த ஆசை பெருகும்.. வேண்டாம்.. வேண்டாம்.. நீ மட்டும் நிதானமாக வா..”

    கிருஷ்ணாவின் கண்கள் இன்னமும் கலங்கித்தான் கிடந்தன.. அவள் அதைக் கண்டு விட்டபின்னாலும் கூட சிரித்தாள்..

    “ஒரு முக்கியமான விஷயம்.. என்னைப் பற்றி தாத்தாவிடம் கோள் மூட்டி விடாதே.. பிறகு நாளை என்னால் இங்கே வரமுடியாது.. விஷ்ணுவின் கண்களைக் காணவும் முடியாதபடி செய்யாதே.. அட, என்னைக் கண்டதாகவே பேசாதேயேன்..என்ன.. வரட்டுமா..

    சொன்னவள் அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் குறுக்கே கிடந்த வயல்களின் ஒத்தையடிப் பாதையில் ஓடத் துவங்கியதும்தான் சற்று நினைவுக்கு வந்தான்..

    “அட.. பார்த்துப்போ செல்லம்மா.. ஓடாதே.. ஓடாதே.. விழுந்து விடப்போகிறாய்”

    பரிவுடனே வந்த வார்த்தைகள் காற்றில் கலந்து வீணாகிப் போனதுதான்.. அவள் ஓட ஓட  அவள் உருவமும் தன் கண்களுக்கு மறைந்ததோடு இருளும் சட்டென வருவது போல வந்துவிட்டதால் அவன் அவள் போகும் திக்கையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.. போகட்டும்.. திம்மராசு மாமாவுக்குதான் எத்தனை பாக்கியம்.. இவர் பிரதம அமைச்சராக இத்தனை வருடங்கள் நல்லாட்சி தந்து பரிபாலனம் செய்தார் என்றெல்லாம் புகழ்ந்தோமே.. அதுவா பாக்கியம்.. இல்லை.. இவளைப் பேத்தியாகப் பெற்றதுதான் அவர் பாக்கியம்.. அப்படி பாக்கியம் செய்த மகானைத் தான் காணப்போவதும் தான் செய்த முன்வினைப் பயனே..

    குதிரையில் ஏறி மெல்லச் செல்லுமாறு அதைச் சிமிண்டினான்.. நிதானமாகவே செல்வோம்..அவள் போன பின்பு அங்கு செல்வோம்.. அதுதான் முறையும் கூட..இவளைப் பற்றி நாம் எதுவும் சொல்ல வேண்டாம்தான்.. ஆனால் மீண்டும் ஒருமுறை இந்த அழகிய கண்மணியைப் பார்க்கலாம் அல்லவா..

    குதிரையும் சற்று நிதானமாகவே நடந்ததுதான்.. ஆனாலும் தூரம் அதிகமில்லை என்பதால் ராஜபாட்டை பிரிந்து ஊருக்கு செல்லும் வழியாகக் குறுகி வழிவிட்டது.. இருள் படர்ந்தாலும் அங்கே தெரிந்த அந்தக் கோயிலின் கோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் வைக்கப்பட்டிருந்த பெருந்தீபங்கள் அதன் உயரத்தை அழகாகக் காண்பித்ததோடு, அந்தக் கோபுரத்தின் அழகையும் உயர்த்திக் காண்பித்தன. சமீபத்தில் கட்டப்பட்ட நெடிதுயர்ந்த கோபுரம்.. பகலில் பார்க்கவேண்டுமே இதன் அழகை..’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன் கோயில் அருகே குதிரையை நிறுத்தினான்.. கோயிலுக்குள் செல்லாமல், கோயில் அருகாமையில் உள்ள அந்தக் குடிலுக்குள்தான் அவன் காலடிகள் பட்டன..

    பெரிய குடில்தான்.. இந்த மூன்று வருடத்தில் எத்தனையோ முறை வந்துவிட்டோம்.. திம்மராசு மாமா இந்தக் கோயில் அருகேதான் இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்து கட்டிக் கொண்ட குடில் இது.. பகலில் வெளியிலிருந்து பார்த்தால் குடிசை போலத்தான் இருந்தாலும் உள்ளே அதன் தெய்வீகத்தைப் பார்த்து யார்தான் பரவசப்படமாட்டார்கள்..

    அவன் உள்ளே நுழைந்ததுமே எதிர்வந்து அழைத்துக்கொண்டார் திம்மராசு..

    “நேற்றே வருவாய் என்று காத்திருந்தேன் கிருஷ்ணா, அப்படித்தான் செய்தி வந்தது.. இருக்கட்டும்.. மதுரையில் நண்பர்களைப் பிரிந்து வருவது சற்று கஷ்டம்தான்.. அதுவும் கூடவே அல்லுடு ராமராஜுவும் வந்திருக்கிறான் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றான் உன்னுடைய ஆள். அவனிடம் சற்று எச்சரிக்கையாகவே இருக்கச்சொல்.. அச்சுதன் இப்போது எங்கே இருக்கிறான்?”

    சடசடவென கேள்விகள் கேட்ட தன்னுடைய முன்னாள் முதன்மை அமைச்சரை முதலில் பாதம் தொட்டுப் பணிந்தான் கிருஷ்ணா.. திம்மராசு இப்போதெல்லாம் அரசியல் அதிகம் பேசுவதில்லை என்றாலும் மாமாவுக்கு என்றும் தங்கள் குலத்து நலன் முக்கியம் என நினைப்பவர் ஆயிற்றே..

    “தம்பி அச்சுதன் காளஹத்தி கோபுரத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறான் இல்லையா.. அங்குதான் தற்சமயம் வாசம்.. அல்லுடுவைப் பற்றி நன்றாகவேத் தெரியும்.. சிறுவயது அல்லவா.. சற்று துள்ளும்தான்.. மதுரையில் நாகம நாயகனுக்கும் செஞ்சி வையப்ப நாயகனுக்கும் சில சண்டைகள்.. அச்சுதன் பக்கத்தில் இருந்தால் சண்டையிட்டிருக்கமாட்டார்கள்.. இருவருமே அவனுக்கு நண்பர்கள்.. அல்லுடு ராமராஜு துடுக்கால் இருவருக்கும் கோள் மூட்டி விட்டான்.. நான் சற்றுப் பேசி சரிசெய்து விட்டுதான் வந்தேன். மாமா! தாங்கள் இல்லாத விசயநகரம் எனக்கு தலைநகரம் இல்லை.. தலைவலி நகரம்.”

    “ஓ.. அதை விடு, சென்ற மாதம் ஸ்ரீகாகுள நிகழ்ச்சியை நினைத்து நினைத்து நெஞ்சம் குளிர்ந்து கொண்டிருக்கிறேன்.. அதைப் பேசு.. அரசியலே வேண்டாமென்றுதானே இங்கே வந்தேன்.. வா.. உட்கார்ந்து பேசுவோமா..” என்ற திம்மராசு, சட்டென ஞாபகம வந்தவராக ”இல்லை.. இல்லை.. இரவுப் பூசைக்குக் கோயிலுக்குள் சென்று திரும்பாவிட்டால் என் பேத்திக்குக் கோபம் வந்து விடும்.. வா.. முதலில் அங்கு போவோம்.. ஆனாலும் பிரயாணக் களைப்புடன் இருப்பாய்.. ஏதானும் சத்தன்னம் அருந்துகிறாயா” என்றவர் அவன் பதிலுக்குக் காத்திராமல் குடில் உள்ளே சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டார்.. சென்றவர் உடனடியாகத் திரும்பவும் வந்தார். கிருஷ்ணாவுக்கு விஷயம் புரிந்தது. உதட்டில் ஒரு மென்னகை கூட வந்தது. சுட்டிப் பேத்திதான் முழுவதும் தின்றுவிட்டு ஏப்பம் விட்டுதான் அங்கே பாறைக்கு வந்தாள் என்ற விஷயம் இவருக்கு எப்படித் தெரியும்..

    “உனக்கு அதிர்ஷ்டமில்லை கிருஷ்ணா! மதியம் நைவேத்தியம் செய்துவிட்டு, நானும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மீதியில் பாலை சற்று அதிகமாகவே ஊற்றி வைத்தேன்.. இப்போது பார்த்தால் சத்தன்னப் பானையில் ஒரு பருக்கை கூட இல்லை.. இந்தப் பூனைகளின் தொல்லை சில சமயங்களில் தாங்கமுடியவில்லை கிருஷ்ணா.. போகட்டும் அவைகளுக்கென பிரத்தியேகமாக யாராவது உணவிடுவார்களா.. என்ன.. பூனையும் தெய்வ ரூபம்தானே.. கோயில் மடைப்பள்ளியில் உனக்குப் பிரத்தியேகமாக சுடச் சுடச் செய்து வைக்க வைத்தால் போயிற்று..”

    கிழவர் முகம் சற்று வாட்டமாக வைத்துக்கொண்டு பேசினாலும் அந்தச் சமயத்திலாவது சட்டியில் உள்ள சத்தன்னத்தைத் தின்று விட்டது அவர் பேத்திதான் என்பதைச் சொல்லலாமா என்று யோசித்தான்.. வேண்டாம், அது தவறு.. குழந்தைக்குப் பசித்திருக்கும்.. பாவம்..

    கொடுத்து வைத்தவள்.. இல்லை இல்லை.. இவர்தான் கொடுத்து வைத்தவர். எப்படிப்பட்ட தெய்வ குணம் படைத்தவள் அவள்.. ஆமாம்..எங்கே அவள்.. இன்னுமா வரவில்லை.. வந்திருப்பாள்.. கோயிலுக்குள் போயிருப்பாள் போலும்.. மாமாதான் சொன்னாரே..

    இருவரும் பேசிக்கொண்டே பக்கத்திலே உள்ள ஆலய கோபுரத்தருகே வந்தனர். உயரமான அந்தக் கோபுரத்தை கழுத்தை உயர்த்திப் பார்த்தான்.

    “காளஹஸ்தி காலி கோபுரத்தைக் கூட அச்சுதன் இப்படித்தான் உயரமாகக் கட்டி வருகிறான்.. தலைநகரம் திரும்புமுன் அங்கே செல்லவேண்டும்..”

    “கிருஷ்ணா, இந்தக் கோபுரம் வந்த கதை தெரியுமா.. ஆண்டாள் பிரத்தட்சயமாக வந்து தனக்கு வேண்டுமெனக் கட்டிக் கொண்டது இந்த கோபுரம், இதற்கு நானே சாட்சி!”

    இந்த சம்பவம் கிருஷ்ணதேவன் கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் இவர் வாயால் இன்னொருமுறை சொல்லட்டுமே..

    முப்பது வருடங்களுக்கு நானும் நரசிங்கராஜாவும் இங்கே உள்ள பாண்டியமன்னரின் மறைவுக்காக வந்திருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம்.. இந்த வழியாகத்தான் வந்தோம். இதோ இந்த இடங்களெல்லாம் புதர்களும் முட்செடிகளும், பாழடைந்த இடிபட்ட மண்டபங்களும் சிலந்தி வலைகள் எங்கெங்கும் காணப்பட நரசிங்கர் அதிர்ந்துபோய்விட்டார். இந்த ஊர் கேட்பாரற்றுக் கிடந்தது. ஊரில் கோயில் இருந்தும், வேளா வேளைக்கு பூஜை இருந்தும் பாழடைந்த மதில்கள், கோயில் சிலைகள் என எல்லாமே பழமையாக இருந்ததைப் பார்த்த நரசிங்க ராஜா மிகவும் வருத்தப்பட்டு ஏதாவது செய்யவேண்டும்..என்று சொல்லிக்கொண்டே இந்தக் கோயிலுக்குள் நுழையாமல் ஊரைக் கடந்துவிட்டோம். இந்த ஊர் எல்லையில்தான் அந்த அதிசயம் நடந்தது.”

    திம்மராசு பூர்த்தியாக பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விட்டார். அவர் மனம் அந்தப் பழைய காட்சியில் நினையாக நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது போலும். கிருஷ்ணாதான் கேள்வி கேட்டான்..

    “கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் சொல்லுங்களேன்..”

    “கிருஷ்ணா.. நீ கேள்விப்பட்டதை விட நேரடியாக அனுபவித்தால்தான் அந்த மகிமை புரியும்.. சென்ற மாதம் கங்கர்களுடன் நடந்த போரின் கடைசி நாளன்று காலை உனக்குக் காணக்கிடைக்காத காட்சி கிடைத்ததே.. அதை நீ உணர்ந்து சொல்லும்போதுதான் அதன் மகிமை எனக்கே புரியும்..”

    “ஆமாம்.. உண்மைதான் மாமா!”

    ”நாளைக் காலை இந்த ஊரைப் பகலில் பார்த்தாயானால் இதன் புதுமையையும், இந்தக் கோயிலில் புனிதத்தையும் பார்த்து ஆச்சரியப்படுவாய்.. ஆனால் அன்று அப்படியில்லை.. கோபுரம் இல்லாத அனாதைக் கோயிலாக இருந்தது. ஒருகால கட்டத்தில் இந்தக் கோயிலிலா விஷ்ணுசித்தர் பூசை செய்து வந்தார் என்ற கேள்வி வரும்.. ஏன் எங்களுக்கே விஷ்ணுசித்தர் நினைவு கூட அன்று வரவில்லை.. அப்படிப்பட்ட நிலையில்தான் ஊர் எல்லையில் எங்கள் ஆண்டாள் எங்கள் குதிரைகளுக்கு முன் நின்று நிறுத்தினாள்..”

    (அடுத்த பகுதியில் நிச்சயமாக முடியுமென நினைக்கிறேன்)

    படங்களுக்கு நன்றி : kothairangan.blogspot.com and Flikr

    Share
  • அந்திவானமும் அவளும் அவனும் – 1

    திவாகர்

    கிருஷ்ணா அந்த அத்துவான பிரதேசத்தில், ராஜபாட்டையில், போக்குவரத்தே இல்லாத சூழ்நிலையில் அதுவும் அந்தி நெருங்கும் நேரத்தில் அவளைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. சின்னப்பெண்ணா, இளைய கன்னியா.. யாராயிருந்தால்தான் என்ன.. இந்த வேளையில் தனிமையில் இங்கு அவளுக்கு என்ன வேலை.. ஒருவேளை இடம் தெரியாமல் வந்து விட்டாளோ.. நிற்கும்போதெல்லாம் எப்போதும் திமிறிக்கொண்டே இருக்கும் தன் குதிரை கூட அவளைப் பார்த்ததும்  அப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்யாமல் அமைதியாக வேடிக்கைப் பார்த்ததையும் கவனிக்கத்தான் செய்தான். இது தன் குதிரைதானா அல்லது இவள் தேவலோகத்துக் கன்னியா? புரியவில்லை..

    “ஆஹா.. இந்த அத்துவான இடத்தில் யாருமே காணப்படாத பாட்டையில் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. உனக்குத் துணையாக யாரும் வரவில்லையா.. சரி, நீ எந்த ஊர்.. உனக்குத் தெரியுமோ தெரியாதோ.. எனக்கு இங்கு எல்லா ஊர்களும் பழக்கம்தான்.. நீ எந்த ஊர் என்று சொல்லு.. என் குதிரை உன்னை அங்கே விட்டு விட்டுத் திரும்பி வரும்..”

    ”அட! இந்தக் குதிரையில் என்னைப் போகச் சொல்கிறாயே.. இது தனியாகப் போகுமா.. இதற்கு ஊர் வழிகள் தெரியுமா.. இதன் பெரிய செவியில் ‘அந்த ஊருக்குப் போய்க் கொண்டு விட்டு வா’ என்று சொன்னால் அது என்னை அழைத்துக் கொண்டு வேகமாக  ஓடி என்னை விட்டு விட்டு வந்து விடுமா.. அல்லது ஒருவேளை யாரிடமாவது விசாரித்து சரியான வழி கேட்டு விட்டு விட்டு வருமா?”

    சொல்லி விட்டு அவனைப் பார்த்து கண்கள் விரிய அழகாக சிரித்தாள். கொள்ளை அழகுதான்.. யார் பெற்ற பெண்ணோ..

    கலகலவென அந்தப் பெண் சிரித்தது அவனை மிகவும் கவர்ந்தது.. சிரித்ததோடு இல்லாமல் தன்னை யாரென்று தெரியாமல் எகத்தாளத்தையும் சேர்த்துப் பேசுகிறாளே.. சடாரென்று குதிரையின் மேலே இருந்து கீழே குதித்தவனைப் பார்த்து சற்று மிரள்வது போல பாதையோரத்தில் ஒதுங்கினாள்.

    இவள் மிரள்கிறாளா அல்லது மிரள்வது போல நடித்தாளா..புரியாமல் பார்த்தவன் தான் நின்ற இடத்திலிருந்தே பேசினான்.

    “என் குதிரையைப் பற்றி உனக்குத் தெரியாது.. அதனுடன் பழகப் பழகத்தான் உனக்கும் புரியும். அது போகட்டும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை.. நீ எந்த ஊர்..?

    கேள்வி கேட்டவனை ஆவலுடன் பார்ப்பது போலப் பார்த்தவள் பின்னால் இருந்த தன் பின்னலை முன்னால் இழுத்து கையினால் அதை வருடிக்கொண்டேதான் சொன்னாள் “புதூர்தான்”..

    “ஓ.. இங்கேதானா.. சரி வா.. நானும் அங்குதான் போகிறேன்.. நீ குதிரையில் ஏறிக்கொள்.. நான் நடந்தே வருகிறேன்..”

    “ம்ஹூம்.. நான் வரமாட்டேன்.. நீதான் சொன்னாயே.. நீ பழக்கிய குதிரை என்று.. ஏதாவது ஏடாகூடமாக என்னை வேகமாக வேறு ஏதாவது ஊருக்குக் கூட்டிப்போய்விட்டால்.. என் தாத்தாவுக்கு யார் பதில் சொல்வார்கள்?”

    ”ஓ.. சரி, சரி, வா. நானும் நீயும் நடந்து கொண்டே போவோம்.. உன் தாத்தா யார்.. அவர் என்ன செய்கிறார்..”

    அவள் நகரவில்லை.. “திம்மராசு தாத்தாவை உனக்குத் தெரியாதா.. அய்யய்ய.. என் தாத்தாவைத் தெரியாது என்று ஊருக்குள் யாரிடமும் சொல்லாதே.. உன்னை ஒருவிதமாகப் பார்ப்பார்கள்”.

    சற்று அதிர்ந்துதான் போனான் கிருஷ்ணா.. என்ன திம்மராசு மாமாவின் பேத்தியா இவள்.. அட.. அதுதான் இத்தனை அழகாகப் பேசுகிறாள்.. சரி, இவள் ஏன் இந்த சாயங்கால வேளையில் யாருமில்லா இந்த பிரதேசத்தில் வரவேண்டும்.. ஆண்டவா.. இவள் தைரியசாலிதான்..

    ”ஆஹா.. உன் தாத்தாவைப் பார்க்கத்தானே நானே தலைநகரத்திலிருந்து வருகின்றேன்.. உன் தாத்தா எனக்குக் குருதேவர் போன்றவர்.. எங்கள் குலவிளக்கு..”

    இப்படிச் சொன்னாலும் அந்தப் பெண்ணின் முகத்தில் எவ்வித ஆவலும் இல்லைதான்.. இவன் சொல்வதையே காதில் வாங்காதது போல அந்த ராஜபாட்டையில் ஓரத்தில் உள்ள பாறைமேல் ஏறினாள் அவள். இதையும் கவனித்தான்.. சின்னப்பெண் தானே..இவள் தாத்தா இந்த தேசத்துக்கு செய்த சேவை இவளுக்கென்ன தெரியும்.. திம்மராசு என்ற ஒருவர் இல்லாவிட்டால் இந்த விஜயநகர சாம்ராஜ்யமே எப்போதோ அழிந்திருக்கும் என்பதை இவள் அறிவாளா.. இந்த தென்னகத்தையே ஒருங்கிணைத்து ஆண்ட நரசிங்க ராஜா இறந்த குழப்பத்தில் எல்லா நாடுகளும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது துணிந்து முன்னின்று தன் தந்தைக்கு பட்டம் கட்டி துளுவ வம்சத்தை சிம்மாசனத்தில் ஏற்றிய மகான் அவர் என்று இவள் அறிவாளா..இந்த விஜயநகர தேசத்துக்கே பிரதம அமைச்சராக எத்தனையோ ஆண்டுகள் இருந்து எத்தனையோ ஆலயங்கள் எழுப்பித் தந்து, எதிரிகளை அழிக்க போர்க்களங்களையெல்லாம் சந்தித்து, தன் தோளோடு தோள் நின்று சாதித்த பெருமைகளை இவள் அறிவாளா.. இப்போதும் கூட அவரைத் தனியாக சந்திப்பதற்கென்று நேரம் ஒதுக்கிச் செல்கிறோம் என்பதில் நண்பர்கள் பலர் ஆவலுடன் தாமும் வருவோம் என்று வேண்டிக்கொண்டாலும் அவர்களை கூட வரவேண்டாம் என்று ஒதுக்கியதில் அவர்கள் கொஞ்சம் கோபத்துடன் மதுரையில் தனக்காகக் காத்திருக்கிறார்கள் என்பதை இவளுக்குப் புரியும்படி சொல்லமுடியுமா.. ஆனால் இதுவெல்லாம் இவளுக்குத் தேவையில்லைதானே. இனிமையான இளமைக் காலத்தில் இத்தனை அரசியல் விஷயங்கள் எதற்கு.. இவள் இன்பமாகத்தான் பொழுதைக் கழிக்க வேண்டும்..

    “நீ யாருடைய பெண்ணம்மா.. திம்மராசு மாமா ஆட்சிப் பொறுப்புகளிலிருந்தெல்லாம் ஒதுங்கி விஜயநகரத்தை விட்டு விரும்பி வில்லிப்புத்தூரில் வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டாலும் குடும்பத்தார் அத்தனைபேரும் தலைநகரில்தானே இருக்கிறார்கள்.. பெரியபெண் நர்மதையின் பெண்ணா.. சிறியவள் கிருஷ்ணையின் பெண்ணா? உன் பெற்றவர்கள் அனைவரும் என்னிடம் பூரண அன்பு கொண்டவர்கள் என்பது உனக்குப் புரியுமோ புரியாதோ.. ஆனால் மாமா இங்கு வந்துவிட்டபின்னர் உன் குடும்பங்களோடு கொஞ்சம் தொடர்பு விட்டுப் போனது வாஸ்தவம்தான்.. சொல்லம்மா.. உன் பெயர் என்ன..”

    அவள் மெல்லச் சிரித்தாள்.. “என் பெயர் எல்லாம் உனக்கெதற்கு.. என் தாத்தாவிடம் கோள் மூட்டப் போகிறாயா?.. அவர் என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்பமாட்டார்.. தங்கநிகர் நெஞ்சம் கொண்டவர், அது தரணிக்கே தெரியும்”

    “அட.. என் செல்லப் பெண்ணே.. உன்னைப் பற்றி நான் ஏன் கோள் சொல்லப்போகிறேன்.. ஆஹா.. உன் தமிழ் அருமை.. எங்கே கற்றாய்..”

    “இங்கேதான்..தமிழ் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு விட்டு தமிழ் கற்க விஜயநகரம் வரை வரவேண்டுமா என்ன?”

    “இல்லை.. தேவையில்லை.. உன் வார்த்தைகள் என்னை மயக்குகிறது.. சரி, பகல் முடியப்போகிறதே.. செல்வோம் வா..”

    “ஊம்ஹும்.. நான் உன்னுடன் வரமாட்டேன்.. நீ போ.. பிறகு வருகிறேன்.. தாத்தா பார்த்தால் உடனே கோபித்துக் கொள்வார்”

    “இல்லை.. நான் சொல்லிக்கொள்கிறேன்.. நான் சொன்னால் உன் பாட்டன் எதையும் கேட்பார்..”

    “அது இன்னும் பயம்.. நீ இல்லாததும் பொல்லாததும் ஏதேனும் சொன்னால்?”

    அவள் பயப்படுவது போல பார்த்தாள்.. இல்லை இவள் பயங்கொண்டவளாகத் தெரியவில்லை.. பாட்டனுக்கு ஏற்ற பேத்திதான்..

    “சரி.. எத்தனைநேரம் இந்த ஆளில்லா சாலையில் இப்படியே ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டிருப்பாய்?”

    அவள் சிரித்தாள் “அட, சரியாகச் சொல்லிவிட்டாயே! ஆமாம்.. ஆகாயத்தைப் பார்க்க நான் எப்போதும் இங்கே வருவேன்.. இந்தப் பாறைதான் நான் எப்போதும் நிற்கும் இடம்.. இங்கிருந்து ஆகாயத்தைப் பார்ப்பது என் வழக்கம்..நீ எப்போதாவது ஆகாயத்தைப் பார்த்திருக்கிறாயா? அங்கே அதிசயம் நிறைய இருக்கும் என்றாவது உனக்குத் தெரியுமா?”

    பாறை மேல் நின்று அந்த ஆகாய நிலா சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே சட்டென சற்றுத் திகைத்துதான் போனான் அவன்.. சென்ற மாதத்து துவாதசி நாளன்று காலைதான் ஆகாயத்தில் பார்த்ததும் அங்கே கண்ட காட்சியும் இவளிடத்தில் சொன்னால் நம்புவாளா.. இல்லை இவளுக்கு அதன் உன்னதம் தெரியுமா.. அதைப் பற்றிப் பேசத்தான் பிரத்யேகமாக திம்மராசு மாமாவிடம் செல்கிறோமென்று இவளுக்கு எப்படிச் சொல்வேன்..ஆண்டவா.. ஏன் இந்த திம்மராசு மாமாவின் பேத்தி என்னை இப்படிப் பாடாய் படுத்துகிறாள்.. இவள் யாரெனத் தெரிந்தும் இவளை இப்படியே விட்டு விட முடியுமா.. ஐய்யோ.. முடியாதுதான் சிறு பெண்.. இவள் வழியாகச் சென்றுதான் இவளை அழைத்துச் செல்ல வேண்டும்..

    “சரி.. நீ எத்தனை நேரம் இங்கு இருப்பாயோ நானும் அத்தனை நேரம் இங்கு இருப்பேன்..”

    “பசிக்குமே”

    “உனக்குப் பசிக்காதோ?”

    ”நான் இப்போதுதான் தாத்தா குடிசையில் சட்டியில் கிடந்த அமுதை அப்படியேக் குடித்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.. பாவம் தாத்தாவுக்குதான் பசிக்கும்..”

    “சுட்டிப் பெண்ணே! தாத்தாவைப் பற்றிய கவலையை விடு.. அவர் பசியை நான் போக்குவேன்.. அத்தோடு என் குதிரைப் பையில் ஏராளமான தின்பண்டம் கூட இருக்கிறது.. மதுரையில் கொடுத்து அனுப்பினார்கள்.. இன்னும் சிறிது நேரம் போனால் என் வீரர்கள் கூட என்னைத் தேடி வரலாம்.. நான் அவர்களை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு தனியாக பிரயாணம் செய்வதில் அவர்களுக்கு வருத்தம்..”

    இத்தனை பேசினோமே.. இவள் இதையெல்லாம் கண்டுகொள்வதாகவே அவள் முகத்தில் பாவனை ஒன்றும் காணோமே என்று சற்று கவலைப்பட்டான் கிருஷ்ணா..  சிறு பெண்.. என்னமாய்ப் பேசுகிறாள்..ஆனாலும் இவளுக்குத் தன்னைப் பற்றித் தெரிந்துதான் என்ன ஆகப்போகிறது.. சாலையோரத்தில் ஒரு பாறையின் மீதமர்ந்து சாவகாசமாகப் பேசும் இவளிடம் எத்தனை நேரமானாலும் பேசிக்கொண்டே இருக்கலாம் போலும்.. ஆனாலும் அந்தி மாலை நேரம்.. சற்று போனால் இருள் கூட வந்து சேர்ந்துவிடும்..

    ”அது சரி.. ஆகாயத்தைப் பார்த்தாயா.. என்று கேட்டேனே.. உன் காதில் விழவில்லையா? நான் அதற்குதான் இங்கு வந்தேன்.. நீயும் வேண்டுமானாலும் கொஞ்ச நேரம் இங்கு என்னோடு இருந்து இந்த அந்தி மாலை வேளையிலும் இருட்டு வேளையில் நட்சத்திரம் வரும்போதும் ஆகாயத்தைப் பார்..”

    அவளருகே சற்று தள்ளி அந்த அகன்ற பாறையில் அமர்ந்துகொண்டு ஆகாயத்தைப் பார்த்தான். இதோ இப்படி வெள்ளையாக இருக்கும் ஆகாயம் இன்னும் சற்று நேரத்தில் கருப்பாக மாறிவிடும்.. ஆனால் கருப்பாக இருந்த ஆகாயம் வெள்ளையாக மாறிய அந்த சுபோதய வேளையில் கண்ட காட்சி மட்டும் மறுபடியும் நினைவுக்கு வந்தது.. நினைவுக்கு ஏன் வரவேண்டும் அதுதான் தன் மனதில் ஆழப்பதிந்துவிட்டதே என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.

    ”காதில் நன்றாகவே விழுந்தது.. நானும் ஆகாயத்தைத் தனியாகவே பார்த்திருக்கிறேன்..”

    “எப்போது பார்த்தாய்?”

    ”அதிகாலை வேளையில்.. சென்ற மாதம் ஒரு அதிகாலை வேளையில் பார்த்தபோதுதான்..” என்று ஏதோ சொல்லவந்தவன் அவள் முகத்தை சட்டென்ப் பார்த்தான். அவனையே ஆவலுடன் பார்த்தவள் அவளும் தன் பார்வையை விலக்கி மறுபடியும் ஆகாயத்தைப் பார்த்தாள். இவள் தன்னிடம் விளையாடுகிறாளோ.. மாமாவிடம் இதையெல்லாம் தனியாகச் சொல்லி மகிழவேண்டும்.. தன் பேத்தி எத்தனை சுட்டியாக இருக்கிறாள் என்று அவரும் மகிழ்வாள்..

    ”அதிகாலையில் பார்த்தாயா.. அப்போதெல்லாம் பார்ப்பதை விட சாயங்காலம் முடியும்போது வானத்தைப் பார்க்கவேண்டுமே.. அதுவும் இந்தப் பாறையிலிருந்து மேற்கே பார்க்கவேண்டும் என்றுதான் இப்போது வந்தேன்..”

    ”சாயங்கால வானம் என்ன அத்தனை உசத்தி?”

    ”ஓஹோ.. நீ தமிழ் படிக்கவில்லை போலும்..”

    “அதென்ன அப்படி சொல்லிவிட்டாய்.. இரண்டு புலவர்களை மதுரையிலிருந்து வரவழைத்துக் கற்றுக் கொண்டவனாக்கும், இரண்டு வருடங்கள் தொடர்ந்து பயின்றவன் தெரியுமா”

    ”ம்ஹூம்.. எனக்கு நம்பிக்கையில்லை.. அப்படிப் படித்தவனானால் அந்தி நேரத்து வானம் அதுவும் மேற்கே வானம் என்றதும் உனக்கு ஏதும் நினைவு வரவில்லையா?”

    “ம்.. இரு.. இரு.. ஆமாம்.. மேற்கே வானம் செவ்வானமாக மாறப்போவதையும் அந்த செவ்வானத்தை கவுரவர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த யுத்தத்தில் ரத்தமாக சிவந்து போன யுத்தகளத்தை ஒப்பிட்டும் ஒரு புலவர் பாடியிருக்கிறார்.. எனக்கு நன்றாக நினைவு உள்ளது.. பெரும்பாணாற்றுப் படை, சரிதானே”

    “ஓஹோ.. நீயும் யுத்தத்தில் கலந்து கொள்வாயா.. பார்த்தாயா.. சிவந்த யுத்தபூமியை அந்தி நேரத்து செவ்வானத்துக்கு ஒப்பீடாக வைத்தார்களே.. அழகு எங்கே உள்ளதோ அங்கே ஆபத்தும் உள்ளது போலும்..”

    சட்டென அதிர்ந்தான் அவன்.. இவள் சின்னப்பெண்ணா.. தனக்குள் கேட்டுக்கொண்டவன் தன்னையே சமாதானம் செய்துகொள்ளவும் செய்தான்.. தமிழ் இலக்கியங்கள் எல்லாவற்றையும் எல்லா உவமைகளையும் ஒப்பிட்டுப் பாடித்தொலைத்துவிட்டன.. படித்தவர்கள் அறியத்தானே செய்வர்..இதில் சிறியவர் என்ன பெரியவர் என்ன?

    ”என்ன, என்னை மனதுக்குள் திட்டிக்கொள்கிறாயா.. சரி சரி,, உனக்கு வானத்தைப் பார்ப்பதில் விருப்பம் இல்லை போலும்.. போய் என் தாத்தாவைப் பார்.. உருப்படியான காரியம் செய்.. நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துதான் வருவேன்..”

    ”செல்லப்பெண்ணே!.. நான் அப்படியெல்லாம் உன்னை விட்டு விட்டுப் போகமாட்டேன்.. நானும் நீயும் சேர்ந்தே செல்வோம்.. சரி, நீ உன் வேலையைப் பார்.. ஏதாவது விசித்திரம் கண்டால் சந்தேகம் கேள்.. நான் பதில் சொல்கிறேன்..”

    ”நீயா!  உனக்கு செவ்வானத்தைப் பற்றியே ஏதும் தெரியவில்லை.. இதில் என் சந்தேகத்தைத் தீர்க்கப்போகிறாயா? எதையும் நன்றாக உற்றுப் பார்க்க வேண்டும்.. சட்டென எதுவும் தோணாது.. கொஞ்சம் பொறுமை தேவை.. உனக்குத் தெரியுமா.. இந்த வானம் முழுதும் ஒருவன் ஆள்கிறான். அவன் பெயர் தெரியுமா?”

    கிருஷ்ணதேவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. தன்னைப் போலவே சிந்திக்கும் ஒரு பிறவியை இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறான். திம்மராசு மாமாவின் பேத்தியிடம் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்தான்..

    ”செல்லப்பெண்ணே! ஆமாம்.. அவன் எனக்கும் பிடித்தவன்.. அவனை விஷ்ணு என்போம்.. நீ எப்படி கூப்பிடுகிறாயோ?

    ”ஆஹா.. உனக்கு உன் மூளை இப்போதுதான் வேலை செய்கிறது.. சரி, விண்ணை ஆள்பவன் விஷ்ணு என்கிறாய் அல்லவா.. இதோ விண்ணைப் பார்க்கிறாயே.. அந்த விஷ்ணுவையும் பார்க்கவேண்டுமே..”

    திம்மராசு பேத்தியின் வார்த்தைகள் அவனை மயக்கின. மறுபடியும் சென்ற மாதத்தில் கடந்து போன கிருஷ்ணை நதி தீரத்துப் போர்க்களமும் துவாதசித் திதியும் அந்த விண்ணை ஆளும் விஷ்ணுவும் கண்முன் வந்தனர்.. எப்படிச் சொல்வேன்.. இவளிடம்..தான் என்ன பேசினாலும் மறுத்துப் பேசும் சாமர்த்தியம் உள்ளவள்.. இவளுக்கு வாய்க்கும் இளைஞன் மிக அரிதான் அறிவு படைத்தவனாக அமையவேண்டும்.. சரி, விடக்கூடாது இவளை, இனி அந்தப் பொறுப்பையும் நாமே ஏற்போமே..

    “என்ன, வாய் மூடி மௌனமாகி விட்டாய்.. விஷ்ணுவைப் பார்க்க முடியவில்லையல்லவா..”

    “எதற்காக அந்தப் பேச்சையே எடுக்கிறாய்.. நீ பார்த்தாயோ?”

    ”அட, இடக்கு முடக்காக இதென்ன கேள்வி..  முன்பே சொன்னேனே.. சரியாகச் செவியில் விழவில்லை போலும்.. ஓஹோ செவிட்டு வீரனோ?”

    இந்த வார்த்தையைப் பிறர் யாரேனும் பேசியிருந்தால் அவர்கள் நிலைமை தலைநகரத்தில் என்னவாகி இருக்கும் என்று கற்பனை செய்து சிரித்தான்..”செல்லப்பெண்ணே!.. சரி, நான் செவிடு இல்லைதான்.. உன் பதிலைச் சரியாகத்தான் சொல்லேன்.. உன்னளவு எனக்கு தமிழில் பரிச்சயமில்லை என்றுவேண்டுமானால் ஒப்புக்கொள்கிறேன் போதுமா?”

    “ஆங்.. அப்படி வா வழிக்கு, விண்ணை ஆள்வதால் மட்டும் அவன் விஷ்ணு அல்ல, அவன் விண்ணில் பரந்து கிடக்கும் அத்தனை பிரதேசங்களிலும் வியாபித்துக் கிடக்கிறான்.. அதனால்தான் அவன் விஷ்ணு.. சரி, அவனைப் பார்க்க வேண்டுமென்றால்  வெகு சுலபமான வழி இருக்கிறது..”

    இப்போது கிருஷ்ணதேவன் ஆலோசனை சுத்தமாக அவனிடத்தே இல்லை..எங்கோ கிருஷ்ணை நதி தீரத்துக்குப் போய்விட்டது. கடும்போர்.. கங்கர்கள் மிகத் தீரமாகத்தான் போரிடுகிறார்கள்.. ஆனால் அவர்கள் வெல்லப்படவேண்டும்.. அன்று ஏகாதசித் திருநாள் வேறு.. ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதமிருப்பவன்.. அன்று அந்த ஸ்ரீகாகுள கிராமத்து கோயிலில் இருந்த பெருமாளை நினைத்துக் கொண்டே அந்தக் கோயிலின் முன்னறையில் வெறுந்தரையில் படுக்கிறான்.. அவன் தளபதிகள் வெளியே என்ன செய்வது என்பது புரியாமல் காத்துக்கிடக்கிறார்கள்.. எதிரிகள் ஓய்ந்து கிடக்கின்றனர், இன்னமும் ஓரிரு நாளில் அவர்களை எளிதாக வென்றிடமுடியும்தான்,  ஏகாதசி தின விரதம் இன்றா நேற்றா.. எத்தனையோ வருடங்களாகத்தான் மன்னர் செய்துவருகின்றார்.. ஆனாலும் யுத்த பூமியிலும் தொடரவேண்டுமா என்பதுதான் அவர்களின் மனக் கவலை.. இவை எதுவும் கவனம் கொள்ளாமல் மனத்தில் இறைவனையே நிறுத்தி ஜபம் செய்து கொண்டே இருந்ததும் விடிகாலையில் யாருமறியாமல் கிருஷ்ணை நதிக்குச் சென்று நதியில் ஸ்நாநம் முடித்து கருமையிலிருந்து வெளுப்புக்கும் வரும் வானத்தை சாதாரணமாகத்தான் பார்த்தான்..

    ஆஹா.. எப்படி வர்ணிப்பது அந்த அதிசயக் காட்சியை…

    படங்களுக்கு நன்றி:

    Raja Ravi Varma (Google) Picture

    www.pbase.com

    Share
  • தேர்ப்பாகன் மகன்…(பாகம்-4)

     

    ராமஸ்வாமி ஸம்பத

    ”கண்ணா, நீங்கள் சொல்வதுபோல் தர்மன் என்னை அஸ்தினாபுர அரியணைக்கு உரியவனாக்கினாலும், என்னால் அந்த சிம்மாசனத்தில் அமரத்துடிக்கும் துரியோதனனுக்கு ஏமாற்றத்தை அளிக்க முடியாது. செங்கோல் என் கைக்குக் கிடைத்த உடனே அதனை துரியனுக்குத் தாரை வார்த்து விடுவேன். அது உங்களுக்கு சம்மதமாயிருக்குமா? மேலும், உங்களுக்கு எந்த அளவு தர்மம் முக்கியமோ அவ்வளவு எனக்கு என் தர்மமாகிய இடுக்கண் களையும் நட்பு முக்கியம். என்மீது அபரிமிதமான அன்பைப் பொழிவதோடு என்னை பூரணமாக நம்பியிருக்கும் துரியனை நான் எவ்வாறு கைவிட முடியும்? ’எல்லாவிதத்திலும் நட்பினால் பயனடைந்தபின் இறுதியில் ஆருயிர் நண்பனைக் கைவிட்டான் கர்ணன்’ என்ற அவலத்தை நான் சுமக்க வேண்டுமா? என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் கோரிக்கையைத் தீர்க்க என்னால் இயலவில்லை,” என்றான் கர்ணன் முடிவாக.

    மீண்டும் அவனுக்கே உரித்த மோஹனப் புன்னகையை உதிர்த்தான் கண்ணன். “எழுதிவைத்த விதியை ஈசனாலும் மாற்ற முடியாது என்பது சான்றோர்களின் வாக்கு. உன் மெச்சத்தகுந்த நிலைப்பாடு எனக்கு ஒருவிதத்தில் பெருமையாக இருக்கிறது. நீ குந்தியின் மகனல்லவா! அதனால்தான், உன் நிர்ணயம் ‘நன்றி மறப்பது நன்றன்று’ என்பதனை உலகுக்கு கொட்டி முழக்கும் வகையில் அமைந்துள்ளது. நான் வேண்டுமென்றே உனக்கு வைத்த சோதனையில் நீ வெற்றி பெற்றுவிட்டாய். நாளைக்காலை உன்னை ஈன்ற அன்னை உன்னிடம் வரம் கோரி வருவாள். அவள்மீது சினம் கொள்ளாமல் அவள் நிலையைப் புரிந்து கொண்டு அவளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு செய்வாயாக,” என்ற கண்ணன், “வரம்வேண்டி உன்னிடம் வந்தேன். இப்போது நானே உனக்கு வரம் அளிக்க விழைகிறேன். கேள் கர்ணா,” என்றுரைத்தான்.

    “நன்றி கண்ணா, நான் உங்களிடம் வேண்டுவது ஒரே ஒரு வரம்தான். தயவு செய்து நான் மூத்த பாண்டவன் என்பதனை அவ்வைவருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்றான் கர்ணன் நீர்மல்கிய கண்களோடு.

    ”அப்படியே ஆகட்டும். நீ தன் முதல் புத்திரன் என்பதனை உலகுக்கு குந்தி மஹாராணியே பறைசாற்றுவாள். உன் உயர்ந்த உள்ளத்துக்கு இன்னொரு வரம் தர விரும்புகிறேன். கேள்.”

    ”கண்ணா, என்னை சரியாகப் புரிந்து கொண்டிருக்கும் உங்களைப் பாராட்ட என்னிடம் சொற்களே இல்லை. உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். ஒருவனை அவன் தந்தையின் தொழிலைக் கொண்டு இகழ்வது எவ்வகையில் நியாயம்?”

    “கர்ணா, ‘செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்’ என்பதனை உணராத அற்பர்கள்தான் அப்படித் தூற்ற முனைவார்கள். எத்தனையோ பேர் என்னை மாட்டிடையன் என்று எள்ளி நகையாடினார்கள் என்பது உனக்குத் தெரியாததல்ல. ராஜசூய யாகசாலையில் பன்னாட்டு மன்னர்கள் குழுமியிருந்த சபையில் என்னை பசுபாலன் என்று பழித்தான் சிசுபாலன். அத்தகைய ஈனமானவர்களை பொருட்படுத்தக் கூடாது,”

    “தெரியும் கண்ணா1 ஆனால் நான் அனுபவித்த வேதனை….’தேரோட்டி மகன், தேரோட்டி மகன்’ என கணக்கற்ற முறையில் என்னை இகழ்ச்சி செய்தார்களே..  என் வளர்ப்புத் தந்தை அதிரதன் ஒரு தேரோட்டி என்பது அவர் செய்த தவறா? தேரோட்டுவது இழிசெயலா? சொல் கண்ணா!.” உணர்ச்சிகளுக்கிடையே கண்களில் நீர்மல்கக் கேட்டு நின்ற ராதேயனை [கர்ணனின் வளர்ப்புத் தாயின் பெயர் ராதை என்பதால் அவன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான்] வருத்தமாகப் பார்த்தான் கண்ணன்.

    ”கவலைப் படாதே கர்ணா! எதற்கும் ஒரு தீர்வு உண்டு.. நீ எதை இழிநிலை என நினைத்து வருத்தப் பட்டாயோ, பிறர் எதை வைத்து உன்னை இழிவாகப் பார்த்தனரோ, அவைகளுக்கும் ஒரு முடிவுண்டு” என்று கூறி விடைபெற்றுக் கொண்டான் கண்ணன்….
                               
    நினைவலைகளின்று வெளிப்பட்ட கர்ணன், மானசீகமாகக் கண்ணனை வணங்கினான். ராஜசூய யாகத்தில் பங்குபெற்ற அந்தண சிரேஷ்டர்கள் விருந்து உண்டபின் அவர்கள் விட்டுச்சென்ற எச்சில் இலைகளை எவ்வளவு பவ்யத்துடன் கண்ணன் சேகரித்து ஆற்றில் கொண்டு சேர்த்தான் என்பதனை நினைவு கூர்ந்தான். “கண்ணா, இது என்ன விபரீதம்?” என்று கேட்டபோது. ”நான் எச்சிக்கலையும் எடுப்பேன்,” என்ற அவன் பதில் கர்ணன் செவிகளில் மீண்டும் ஒலித்தது.

     “எச் சிக்கலையும் எடுக்க வல்லவரல்லவா இந்த வாசுதேவர்! தானே தேரோட்டியாகி, தேரோட்டும் தொழிலை வானளவுக்கு உயர்த்தியோடு மட்டுமல்லாமல் என்னுடைய ‘தேரோட்டி மகன்’ என்ற தாழ்வு மனப்பான்மையையும் எவ்வளவு லகுவாகத் தொலைத்திருக்கிறார் இந்த பார்த்த சாரதி!”  என்று மனதார அவரை வியந்து வாழ்த்தியதோடு, “இந்த விஜய சாரதியிடம் சரணடைந்த பாண்டவர்கள்  எவ்வளவு பாக்யசாலிகள்! எங்கு கண்ணன் இருக்கிறாரோ அங்கு வெற்றிச் செல்வியும் கடாட்சிப்பாள் என்பதனை உணர மறுக்கிறானே துரியன்” என்று பச்சாதாபம் கொண்டான் அங்க நாட்டரசன்.

    கர்ணன் மனம் துரியோதனனுக்காக ஒரு கணம் பரிதாபப்பட்டாலும் தன்னையும் ஒரு பொருட்டாக மதித்து செயல்பட்டு தர்மத்தைக் காத்து வரும் கண்ணனின் கருணையையே நினைத்து நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கியது.
                             

    (முற்றும்)

    படங்களுக்கு நன்றி :

    http://www.tamilhindu.com/category/mahabharat/

     

    Share
  • கால இயந்திரம்-(பாகம்-3)

     

    பர்வத வர்தினி

    இரண்டு நாட்கள் கழித்து பூங்கொடியின் அரசாங்க ஆணைப் பத்திரத்துடனும் பொன்னுமலையான் போன்று வேடமிட்டிருந்த கிருஷ்ணசாமியுடனும் சாரு கோட்டைக்குள் புகுந்தாள். ஆணைப் பத்திரத்தைக் கண்டவுடன் இவர்கள் உள்ளே செல்ல தடையேதுமின்றி அனுமதிக்கப்பட்டது. 

    அது மாலைப்பொழுது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக மல்லிகை வாசம் நாசியைத் துளைத்தது. இருவரும் மிகவும் ஜாக்கிரதையாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சென்றனர். கடம்பூரின் அரண்மனையும் அதன் பின்புறம் தோட்டமும் மாலை சூரியனின் சிவந்த ஒளியில் அழகுற காட்சியளித்தது. 

    சாரு கிருஷ்ணசாமியிடம் மெல்லிய குரலில் “நான் படிச்சிருந்தபடி இந்த இரவிலே தான் அந்த சம்பவம் நடக்கப் போகுது. அதுக்கு முன்னாடி வந்தியத்தேவர் அரண்மனை தோட்டத்துக்கு வருவார். அங்கிருந்துதான் மணிமேகலை அவரை சுரங்க வழிக்கு அழைச்சுக்கிட்டு போவா. அவர் மணிமேகலையை பார்க்கறதுக்கு முன்னாடி நான் அவரை சந்திக்கணும். ஸோ நாம கொஞ்சம் இருட்டினதும் அந்த மதில் சுவர் மேலே ஏறி அந்தப்பக்கம் அரண்மனைத் தோட்டத்துக்குள்ளே குதிச்சுடணும். சரியா?” என்று கேட்டாள். 

    “மதில் சுவர் மேலே ஏறி குதிக்கறது என்ன சாமானிய காரியமா?” என்று கேட்டார் கிருஷ்ணசாமி. 

    “அங்கிள், அங்கேப் பாருங்க! ஒரு பெரிய மரம் சுவருக்குப் பக்கத்திலே இருக்கு. இந்த இடமும் ஆள் நடமாட்டம் கம்மியா இருக்கு. கண்டிப்பா முடியும்” என்று ஊக்குவித்தாள். 

    “சரி ஆகட்டும்” என்றார் அவர். 

    சற்று நேரம் அவர்கள் கடைவீதியில் உலாவிவிட்டு இருட்டியதும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவ்விடமே அமைதியாக நிச்சலனமாக இருந்தது.சாரு அங்கிருந்த பெரிய மரத்தின் மீது ஏறத் துவங்கினாள். மரம் ஏறி பழக்கம் இல்லாததால் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ஆனாலும் வந்தியத்தேவனைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவளை மேலும் மேலும் ஏறச் செய்தது. பின்னாலேயே கிருஷ்ணசாமியும் மூச்சிரைக்க மரம் ஏறிக் கொண்டிருந்தார். மரத்தினை முக்கால்வாசி ஏறியதும் மதில் சுவருக்கு தாவி சில அடிகள் நடந்து அந்தப்பக்கம் இருந்த மற்றுமொரு மரத்தைப் பிடித்துக் கொண்டு இறங்கினாள் சாரு. கிருஷ்ணசாமியும் இவளைத் தொடர்ந்து வந்திறங்கினார். 

    பதுங்கி பதுங்கி சென்று தோட்டத்தில் தாமரைக்குளத்தை இருவரும் கண்டுகொண்டனர். அப்போது யாரோ தோட்டத்திற்குள் வரும் சப்தம் கேட்டு இருவரும் ஒளிந்து கொண்டனர். வந்தது வந்தியத்தேவன் என்று தெரிந்ததும் இருவரும் வெளியில் வந்தார்கள். அவர்களைக் கண்டு வந்தியனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. “இங்கே எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டான். 

    “ஆழ்வார்க்கடியானின் உதவியுடன் வந்தோம். உங்களைப் பார்க்கவே சிரமப்பட்டு வந்தோம்” என்றாள் சாரு. 

    “எதற்கு? என்ன விஷயம்? ஆழ்வார்க்கடியான் ஏதேனும் சேதி சொல்லி அனுப்பினானா?” என்று கேட்டான் வந்தியத்தேவன். 

    “அவர் சேதி ஒன்றும் அனுப்பவில்லை. நாங்கள் திரும்பி செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்களிடம் விடை பெற்று செல்ல வந்தோம். அத்துடன் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்யவும் வந்தோம். இன்று,இளவரசருக்கு ஆபத்து காத்திருக்கிறது. நீங்கள் அவருடன் இருந்தாலும் அவரை உங்களால் காப்பாற்ற முடியாது. ஆகையால் நீங்கள் எங்காவது சென்று விடுங்கள். அவருடன் நீங்கள் இருந்தால் ஒரு பெரும் பழிக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதைத் தெரிவிக்கவே வந்தேன்” என்று கண்களில் நீர்மல்க கூறினாள் சாரு. 

    வந்தியத்தேவனுக்கு இவளது அன்பைக் கண்டு மனம் கனிந்தது. சூதும் சூழ்ச்சியும் நிறைந்த இந்த உலகத்தில் அன்புடன் தனது பாதுகாப்பை எண்ணி பேராபத்துக்கிடையில் இவள் கோட்டைக்குள் புகுந்திருக்கிறாளே என்று வியப்பு ஏற்பட்டது. அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்பது தெய்வப்புலவரின் வாக்கல்லவா! காலங்கள் தாண்டி என்னைத் தேடி வந்திருக்கிறாள் என்று எண்ணினான். 

    “சாரு உன்னு​டைய அன்பு என்னை பேச முடியாதபடி கட்டிப்போடுகிறது. இருந்தாலும் நான் என் கடமையை செய்யக் கடமைப்பட்டவன். எத்தகைய நிலையிலும் இளவரசரைப் பிரிய மாட்டேன் என்று எனது உயிருக்கும் மேல் நான் போற்றும் இளவரசி குந்தவையிடம் வாக்களித்திருக்கிறேன். ஆபத்துக​ளை சமாளித்துக் கொள்​வேன்! நீ கவலைப்படாதே! நீ பத்திரமாக உன் காலத்திற்கு செல்” என்றான் வந்தியத்தேவன். 

    கொஞ்ச தூரத்தில் மணிமேகலையின் குரல் கேட்கவே வந்தியத்தேவன் அவசரமாக “சாரு நீ சென்று விடு. மணிமேகலை வருகிறாள். அவள் உங்கள் இருவரையும் பார்த்து விட்டால் குழப்பம் தான் அதிகரிக்கும்” என்றான். 

    சூழ்நிலையை புரிந்து கொண்டு சாருவும் கிருஷ்ணசாமியும் அவசரமாக அகன்று சென்றனர். 

    தோட்டத்தின் மறுபகுதிக்கு வந்தபின் சாரு நின்றாள். சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தாள். வந்தியத்தேவரை பின் தொடர்ந்து சென்றால் வேட்டைமண்டபத்தை அடையலாம். ஆனால் அங்கே சதிகாரர்களிடம் தானும் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். வேறெப்படி அந்தப்புரத்திற்குள், நந்தினியின் அறைக்குள் நுழைவது? அங்கு தான்ஆதித்தகரிகாலரின் மரணம் ஏற்படும் என்று படித்திருக்கிறோமே! 

    தீவிரமாக யோசித்ததில் அவளுக்கு ஒரு யுக்தி தோன்றியது. 

    “அங்கிள், எனக்கு ஒரு ஐடியா!” 

    “என்ன சாரு? சொல்லு” என்றார் கிருஷ்ணசாமி. 

    “என்னுடைய கணிப்பின்படி மேல்மாடத்துலே ஒரு துவாரத்தின் வழியா காபாலிக உருவத்துல பெரிய பழுவேட்lடரையர் நந்தினியைப் பார்க்கப் போவாரு. நான் ஒளிஞ்சிருந்து அவர் போகும் போது அவருக்குப் பின்னாலேயே போனேன்னா கொலை நடக்கபோற இடத்துக்கு ஈஸியா போய்டலாம்னு நினைக்கிறேன். ஆனா நீங்க இங்கேயே எனக்காக காத்திருக்கணும். நான் போய்ட்டு திரும்பினதும் நாம கால இயந்திரத்துலே கிளம்பிடலாம். ஒருவேளை நான் வர லேட்டானா, நீங்க கிளம்பிடுங்க. ஏன்னா அதுக்கும் மேல இங்கிருந்தா உங்களுக்கும் ஆபத்தா முடிஞ்சிடும்” என்றாள் சாரு. 

    “இதெல்லாம் தேவையில்லாத விஷப் பரீட்சைம்மா. நாம இப்போவே கிளம்பலாம்னு நினைக்கறேன்.” 

    “வந்த காரியத்தை அரைகுறையா விட்டுட்டு வர மனசில்லே  அங்கிள். ப்ளீஸ் இது தான் கடைசி முறை” என்றாள் கெஞ்சலாக. 

    “சரி. ஆனா உன்னை நான் பத்திரமா கூட்டிட்டு போகாம தனியா திரும்பி போக மாட்டேன். நீ சொன்னபடி உனக்காக இங்கேயே காத்திருக்கேன்” என்றார். 

    “நான் போய் தயாரா ஒளிஞ்சிக்கறேன் அங்கிள். நீங்களும் பத்திரமா இருங்க” என்று சொல்லி விட்டு சாரு மெல்ல நடந்து மேல்மாடத்திற்கு போகும் வழியைக் கண்டுபிடித்து சென்றாள். மேல் மாடத்தில் ஒரு பெரிய தூணின் பிரம்மாண்ட நிழலில் மறைந்துகொண்டாள். காபாலிகரின் வருகைக்காக காத்திருக்கலானாள். 

    நேரம் கடந்துகொண்டே இருந்தது. காபாலிகர் வரும் வழியாகத் தெரியவில்லை. ஒருவேளை வேறேதேனும் வழியில் போயிருப்பாரோ என்று அவள் மனம் யோசிக்கத் துவங்கியபோது அங்கே ஆஜானுபாகுவான உடல்கட்டுடன் கழுத்தில் ஒரு மண்டை ஓட்டு மாலையுடன் காபாலிகர் ஒருவர் யாருக்கும் தெரியாதபடி மறைந்து மறைந்து வந்தார். சற்று தூரம் சென்று தரையில் ஓரிடத்தில் அமர்ந்து ஏதோ நெம்புவது போல் செய்யவும் கீழே ஒரு துவாரம் தோன்றியது. அது தான் களஞ்சிய அறைக்குச் செல்லும் வழியென சாரு புரிந்து கொண்டாள். அவர் உள்ளே சென்றதும் அவரைத் தொடரலாம் என்று எண்ணி எழுந்தவளுக்கு அதிர்ச்சி. அவருக்குப் பின்னே மற்றுமொரு மனிதன் அவர் சென்ற வழியிலேயே சென்று அதே துவாரத்திற்குள் இறங்கியதைக் கண்டாள். இவன் யார்? எதற்குப் பழுவேட்டரையரை பின்தொடர்கிறான்? என்று யோசித்தபடியே அவனை சாரு பின்தொடர்ந்தாள். 

    திறந்திருந்த துவாரத்தின் வழியே மெல்ல எட்டிப் பார்த்தபோது உள்ளிருந்த தீபத்தின் மங்கலான ஒளியில் அந்த சிறிய களஞ்சிய அறை கண்ணுக்குப் புலனாகியது. அங்கே ஒருவரும் இருக்கவில்லை. எனவே அவளும் அந்த துவாரத்தின் வழியாக நுழைந்து கீழே இறங்கினாள். அவள் இறங்கவும் பக்கத்து அறையில் தடதட என சப்தம் கேட்டது. தன் மூச்சைப் பிடித்துக்கொண்டு அவள் கண்ட காட்சி அவளுக்கு மிகுந்த பயத்தை அளித்தது. தவறியும் தான் அலறிவிடக்கூடாது என்று தன் கைகளால் தன் வாயைப் பொத்திக்கொண்டாள். களஞ்சிய அறையின் வாயிலில் வந்தியத்தேவன் மயங்கிக் கிடந்தான். நந்தினி பழுவேட்டரையரைக் கண்ட பயத்தில் நிலைகுலைந்து நின்றிருந்தாள். வேட்டை மண்டபத்திலிருந்து வெளிப்பட்ட ரவிதாசனும் அவனது ஆட்களும் பழுவேட்டரையரைத் தாக்கி நினைவிழக்கச் செய்தனர். 

    காபாலிக உருவத்தில் வந்த பழுவேட்டரையரின் கரத்தில் இருந்த ஒரு திருகுகத்தியைக் கொண்டு அவரைத் தொடர்ந்து வந்த மனிதன் ஆதித்தகரிகாலனை கொன்றிருந்தான். “கடைசியில் எனக்கே அந்த வாய்ப்பு கிடைத்தது. இடும்பன்காரியின் கையினால் உனக்கு மரணம் என எமதர்மன் விதித்திருக்கிறான், பார்த்தாயா? ஹாஹாஹாஹா” என்று கொக்கரித்தான் அவன். இனியும் இங்கு நிற்பது ஆபத்து என்று ரவிதாசன் அனைவரையும் கிளம்புமாறு ஆணையிட்டான். நந்தினியின் வேண்டுகோளின்படி பழுவேட்டரையரையும் அவர்கள் தூக்கிச் சென்றனர். அனைவரும் சுரங்கவழியே தப்பிச் சென்றனர். அடுத்த சில விநாடிகளில் அந்த அறையில் இறந்து போன இளவரசரையும் மயங்கிக் கிடந்த வந்தியத்தேவனையும் தவிர யாரும் இல்லை. 

    சாருவின் மனம் பதைபதைத்தது. இந்தக்கட்டத்​தை பொன்னியின் செல்வன் புத்தகத்தில் படிக்கும்போது ஏற்பட்ட துயரமே மிக அதிகம். அந்தக் காட்சியை இப்போது நேரிலும் கண்டுவிட்ட பிறகு அவளது நிலையை என்னவென்றுசொல்ல! இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் துவண்டு கிடந்த வந்தியத்தேவனைக் கண்டாள். தன் மனதில் முடிவு செய்துகொண்டாள். இவர் இங்கு இருந்தால்தானே இவர் மீது பழி சுமத்துவார்கள். இவரை உடனே இங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும். ஆனாலும் மெல்லிய உடல்வாகு கொண்ட பெண்ணாகிய தான் அவரைத் தூக்கி நிறுத்தமுடியாது. அதற்குப் பதில் அவரை எழுப்பி கூட்டிச் செல்லலாம் என நினைத்தாள். 

    “வந்தியத்தேவரே! எழுந்திருங்கள். நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. இனியும் நீங்கள் இங்கிருந்தால் ஆபத்து. எழுந்திருங்கள்! கிளம்புங்கள் என்னுடன்!” என்று அழுதுகொண்டே வந்தியத்தேவனை எழுப்பினாள். 

    திடீ​ரென அவளது தோள்பட்டையில் ஒரு கரம். பயத்துடன் திரும்பிப் பார்த்தவள் அங்கிருந்தது கிருஷ்ணசாமி என்று கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டாள். “அங்கிள், அவரை எழுப்புங்க. இல்லாட்டி வீண் பழி அவர் மேலே விழும்” என்று கதறத் துவங்கினாள். 

    அவளது வாயை பொத்தி கிருஷ்ணசாமி அவளது பேச்சை நிறுத்தினார். “சாரு, இனி ஒரு கணமும் நாம லேட்பண்ணக் கூடாது. அது பெரிய ஆபத்துல தான் கொண்டு போய்விடும். யாராவது நம்மை இங்கே பார்த்துட்டா அந்த கொலைப்பழி நம்ம மேலே கூட விழ வாய்ப்புண்டு.  இங்கிருந்து இப்போவே நாம கிளம்பணும். போகலாம் வா,எழுந்திருசாரு” என்றார். 

    சாரு மறுத்தாள். “வந்தியத்தேவரை காப்பாத்தணும், அதை செய்யாம நான் வரமாட்டேன்” என்று அரற்றினாள். 

    “எழுந்திரு சாரு நேரமாகுது. எழுந்திரும்மா” என்றார் கிருஷ்ணசாமி மீண்டும். 

    “எழுந்திரு சாரு” 

    “எழுந்திரு” 

    “நேரமாகுது” 

    “எழுந்திரு சாரு” 

    திடீரென பெரும் அலை முகத்தில் அடித்தது போலிருந்தது சாருவிற்கு. விருட்டென எழுந்தாள். எழுந்ததும் ஒன்றும் விளங்கவில்லை. திருதிருவென விழித்தாள். 

    “என்னடி இது? இவ்வளோ நேரம் தூங்கியிருக்கே! அதுக்கும் மேலே ‘காப்பாத்தணும் வரமாட்டேன்’னு ஒரே புலம்பல். நானும் எழுப்பிட்டே இருக்கேன். நீயும் தூக்கத்துலே உளறிட்டே இருந்தே! அதான் முகத்திலே தண்ணி ஊத்தி உன் தூக்கத்தைக் கலைச்சேன்” என்றாள் சாருவின் தாய். 

    “நான் எங்கே இருக்கேன்? வந்தியத்தேவர் எங்கே? நீ எப்படிம்மா இங்கே வந்தே? கிருஷ்ணசாமி அங்கிள் எங்​கே போனார்?” என்று கேள்விகளை அடுக்கினாள் சாரு. 

    “சரியாப் போச்சு போ. நீ நம்ம வீட்டுல தான் இருக்​கே. கனவு கண்டியா? பொன்னியின் செல்வன் புக்கை கையிலே வெச்சிண்டு தூங்கிட்டு கனவு வேற கண்டிருக்கே. எப்​போதான் இந்தப் பைத்தியம் உனக்கு தெளியு​மோ​தெரிய​லை! சரி சரி. சீக்கிரம் போய் முகம் கழுவு. சித்து கொஞ்ச நேரத்துல வரேன்னு ஃபோன் பண்ணினான்” என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்கு சென்றாள் சாருவின் தாய். 

    இன்னமும் கனவிலிருந்து விடுபட முடியாமல் முதல் நாள் நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்த சாருவிற்கு அப்போது தான் விளங்கியது. அட நேத்து தான் ஒரு இங்கிலீஷ் சினிமா பார்த்தோம்.  டைம் மெஷின் மூலமா கடந்த காலத்துக்குப் போற கதை. அதுவும் பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியும் கலந்து இப்படி ஒரு அற்புத கனவு வந்திருக்கும்போல. ஆஹா, இது நினைவாகவே இருந்திருக்கக் கூடாதா? என்று ஏக்கம் ஏற்பட்டது. 

    சிறிது நேரத்திற்கு பின் சித்து வந்தான். சாரு அவனிடம் “சித்து, உங்க மாமா பேரு என்ன?” என்று ஆர்வத்துடன் கேட்டாள். 

    ஏன் இப்படி இவள் கேட்க வேண்டும் எனப் புரியாமல் பார்த்தான் சித்து.. இருந்தும் சற்று நிதானமாகவே சொன்னான். 

    “கிருஷ்ணஸ்வாமி”

     

    Share
  • தீக்கொழுந்தில் ஒரு பனித்துளி (19)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 19

    மதியம் மூன்று மணியிருக்கும்,

    மாலையில் மகன் வந்ததும் அவனிடம் எப்படிப் பேசுவது….எதைச் சொல்லி அவனைச் சரிக்கட்டி, தேவியின் கணவனுக்கு கிட்னி தானம் செய்யச் சொல்வது, என்று தனக்குள் ஒத்திகை பார்த்தபடி அமர;ந்திருந்தாள் லட்சுமி.

    அப்போது கதவு ‘பட..பட”வெனத் தட்டப்பட,

    ஓடிப் போய்த் திறந்தாள்.

    சுந்தர் பணி புரியும் தறிக் கூடத்து சிப்பந்தியொருவன் நின்று கொண்டிருந்தான்.  அவன் முகத்தில் கலவரம். எதையோ சொல்ல துடிக்கும் உதடுகள். கண்களில் பீதியின் வெளிப்பாடு.

    ‘என்னப்பா…இந்த நேரத்துல?”

    ‘அ…ம்…..மா…!  வந்து…வந்து…தறிக் கூடத்துல தீப்பிடிச்சிடுச்சம்மா!”

    ‘அய்யய்யோ….என்னாச்சு…என் பையனுக்கு என்னாச்சு?” பதறினாள் லட்சுமி.

    ‘ஆளுங்களுக்கெல்லாம் ஒண்ணுமில்லை….ரெண்டு மூணு பேருக்குத்தான்…கொஞ்சம் தீக்காயம்!” அவன் எதையோ மறைக்கிறான் என்பதை அவன் தயக்கத்திலிருந்தே புரிந்து கொண்ட லட்சுமி,

    ‘தம்பி…சாமி சத்தியமா உண்மையச் சொல்லுப்பா..என் மகன் எப்படியிருக்கான்?’ லட்சுமி அவனை நெருங்கி வந்து அவன் தாடையைத் தொட்டுத் திருப்பிக் கேட்டாள்.
     

    ‘ஆமாம்மா…சுந்தருக்கு கொஞ்சம் அதிகப்படியாவே தீக்காயம் ஏற்பட்டிடுச்சும்மா!…ஈரோடு ஜி.ஹெச்.சுக்குத்தான் கொண்டு போயிருக்காங்க!”

    ‘அய்யோ…சுந்தர்;!” அலறியபடியே அவள் சாய,

    வந்தவன் செய்வதறியாது திகைத்து நின்று, பிறகு சட்டென்று சுதாரித்துக் கொண்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தான்.
    —–

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரி.

    உடல் முழுதும் தீக்காயங்கள் வாங்கி, தலை முடிகள் முற்றிலுமாய் கருகி, முகம் கோரமாகி, குற்றுயிரும் குலையுயிருமாய் அவசர சிகிச்சைப் பிரிவில் கிடந்தான் சுந்தர்.

    முதல் கட்ட சிகிச்சையை முடித்து விட்டு, அடுத்த கட்ட சிகிச்சைக்குப் போகும் முன், அவன் மயக்கம் தெளியக் காத்திருந்தார; டாக்டா;.

    ‘எக்ஸ்க்யு+ஸ் மீ டாக்டர;!” என்றபடி உள்ளே நுழைந்த ஒரு இளம் டாக்டர;, ‘டாக்டர;…இவரோட வந்தவங்க…வெளிய நின்னுட்டு கேள்வி மேல கேள்வி கேட்டுத் துளைச்செடுக்கறாங்க டாக்டர்;…பேஸண்டடோட கண்டிஷன் என்னன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா அதை அவங்களுக்கு கன்வே பண்ணி லேசா அவங்களை ஆஃப் பண்ணிடுவேன்!”

    ‘ம்ஹூம்….பேஸண்ட் இன்னும் சுயநினைவுக்கு வரலை…வந்தாத்தான் எதுவும் சொல்ல முடியும்!…ஓ.கே!…’இன்னும் அபாய கட்டத்துலதான் இருக்கார்;”ன்னு சொல்லி வைங்க!” என்றார; சீப் டாக்டர்.

    ‘டாக்டர்…இப்ப நான் தெரிஞ்சுக்க கேட்கறேன்…சொல்லுங்க…பேஸண்டோட உண்மையான நிலமை என்ன?” அந்த இளம் டாக்டர; சற்று தாழ்வான குரலில் கேட்க,

    ‘ப்ச்!..”என்றவாறு உதட்டைப் பிதுக்கிய  சீப் டாக்டர்;, ‘ம்ஹூம்…தேறாது!” எனறார்…ஒரே வார்த்தையில்.

    ‘மை காட்!” என்றபடி அந்த இளம் டாக்டர் வெளியேறினார்.

    அவர் வெளியேறிய சில நிமிடங்களில் அந்த அறைக்குள் முனகல் சத்தம் கேட்க, திரும்பிப் பார்த்தார; சீப் டாக்டர்.

    சுந்தர்தான்.

    கண்களைத் திறந்து விழிகளை மட்டும் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் நகர்த்தி எதையோ பார;வையால் தேடிக் கொண்டிருந்தான்.

    அவனை நெருங்கி நின்று கூர்ந்து கவனித்தார; டாக்டர்;.

    ரணங்களின் வேதனை அவன் கண்களில் அப்பட்டமாய்த் தெரிந்தது.

    அவன் எதையோ சொல்லத் தவிப்பது உதடுகளின் துடிப்பில் தெரிய,

    டாக்டர; குனிந்து அவன் காதருகில் சென்று, ‘மிஸ்டர், சுந்தர்;….பயப்படாதீங்க!…உங்களுக்கு பெரிசா ஒண்ணுமில்லை…ஒன்றிரண்டு சிறிய தீக்காயங்கள்தான்!”

    ‘டா…க்…ட…ர்!…. டா…க்…ட…ர்;!” மூச்சு விடவே சிரமப்பட்டான்.

    ‘ம்..சொல்லுங்க…”

    ‘டா…க்…ட…ர்!…நான் பொழைக்க….மாட்டேன்!….எ…ன…க்…கு…த்  தெரியும்!…’மிகவும் கஷ்டப்பட்டுப் பேசினான்.

    ‘யார; சொன்னது?…நிச்சயம் நீங்க பொழைச்சுக்குவீங்க!”

    ‘இல்ல….டாக்டா;….நீ…நீங்க….அந்த…டாக்டர்கிட்ட…பேசிட்டிருந்ததை…நான் கேட்டேன்!”

    திணறிப் போன டாக்டர்;, ‘அது…அது வந்து…சும்மா…” சமாளிக்கப் பார;த்தார்.

    ‘இ…ல்….ல   டா…க்…ட…ர்! எப்படியும்…நான்…சாகத்தான்…போறன்!… அதுக்கு முன்னாடி…. என்னோட… என்னோட கிட்னிய…எடுத்து…சிவா மருத்துவமனைல…இருக்கற…ரத்ன…வேலுவுக்கு…குடுத்திடுங்க!’ சொல்லிட்டு டாக்டரையே ஊடுருவிப் பார;த்தான்.  அந்தப் பார்வையில் ஒரு கெஞ்சல் தெரிந்தது. வாழ்க்கையின் விளிம்பில்…மரணத்தில் வாசலில் இருந்து கொண்டு கெஞ்சும் அந்த ஜீவனின் இறுதி ஆசை டாக்டரை நெகிழச் செய்தது.

    ‘இப்படியும் ஒரு மனுசனா?…தான் சாகப் போறோம்னு தெரிஞ்சதும்…’எப்படியாவது என்னைக் காப்பாத்துங்க டாக்டர்” ன்னு கேட்காம எங்கியோ..ஏதோ ஒரு ஆஸ்பத்திரில இருக்கற யாரோ ஒருத்தனுக்கு தன்னோட கிட்னிய எடுத்துக் குடுத்திடுங்கன்னு சொல்றானே!”

    ;டாக்டர; யோசிக்காதீங்க டாக்டர்!…நான் சாகறதுக்கு முன்னாடி ஆபரேஷன் பண்ணி என்னோட கிட்னிய எடுத்திடுங்க டாக்டர்!” அவன் கண்களில் அவசரம் தெரிந்தது.

    டாக்டருக்கும் அவன் எண்ணம் சரியெனவே பட்டது.

    நீண்ட யோசனைக்குப் பிறகு, நர;ஸை அழைத்து சுந்தரின் மெடிக்கல் ரிப்போர்ட் பைல்களை எடுத்து வரச் சொன்னார்.

    அவனது ஸ்கேன் ரிப்போர;ட்டை காஷுவலாகப் பார;த்த டாக்டர; அதிர்ந்தார்;.

     

    Share