Author: சக்தி சக்திதாசன்

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    வாரங்களா ? நொடிகளா ? என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம்.

    சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அபிமானம் கொண்டுள்ள எனது அன்பு நண்பர் ” அண்ணன் ” என்று நான் அழைக்கும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்செய்தி ஒன்றைத் தந்தார்.

    அவ்வண்ணனை எனக்கு அநேக வருடங்களாகத் தெரியும் நான் லண்டன் வந்த காலங்களில் அறிந்து பழகிய பின்னர் இடையில் சிறிது காலம் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததினால் தொடர்பிழந்திருந்தோம்.

    சில வருடங்களின் முன்னால் நாம் மீண்டும் பழகுவதற்கான சந்தர்ப்பம் ஏகியது. அவரின் மீது நான் கொண்ட அபிமானம் உயர்ந்ததின் காரணம் அவர் ஈழத்தின் பிரச்சனைகள் காரணமாக அநாதரவாக விடப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த சிறுவர்களில் நூறுபேரை அவர்களது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு முடியும் வரையிலான கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்றுக்கொள்வதோடு அவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதி கொண்ட விடுதி நிர்மானிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுவேயாகும்.

    அவரது ஆர்வம், அயராத உழைப்பு, அனாதரவான குழந்தைகளின் மீதான கருணை, ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்த அன்பு என்பவையேயாகும்.

    சரி இனி அவர் சொன்ன நற்செய்திக்கு வருவோம்.

    “ தம்பி, தேவகோட்டை ராமநாதன் லண்டன் வருகிறார் , இன்று காலையில் தான் தொடர்பு கொண்டார். அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார் ” என்பதுவே.

    தேவகோட்டை ராமநாதன், அசத்தல் மன்னர்களில் முன்னனியில் நிற்பவர், “அசத்தல் மன்னர்” காமெடி கிங்” என பல பட்டப் பெயர்களை தனதாக்கிக் கொண்டவர். மிகவும் இளைய வயதினிலேயே கலைஞர் கருணாநிதியின் கையினால் பரிசு பெற்றவர். “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு ” என்னும் நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்.

    asak

    ஆமாம் அற்புதமான நகைச்சுவை, ஆன்மீகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பவர். இருபதுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டு ஜம்பதுகளுக்கேயுரித்தான அனுபவ முதிர்ச்சி கொண்டோருடன் கலந்துரையாடும் அனுபவத்தைத் தரும் அற்புத ஆற்றல் மிக்க இளம் தலைமுறைக் கலைஞர். சட்ட வல்லுனர்.

    செட்டிநாடு கலைத்தாயின் கருவறை. என் மானசீகக்குரு கவியரசர் கண்ணதாசனை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் அற்புத கருத்தை எமக்களித்த கவிஞர் “கணியன் பூங்குன்றன்” அவர்களை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். அத்தகைய அரும்பெரும் மண்ணில் உதித்த எம் இளங்கலைஞரே ” தேவகோட்டை ராமநாதன்”.

    அதுமட்டுமன்றி என் இனிய நண்பர்களாம் “ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் ” ஆகியோரை ஈன்றெடுத்த அற்புத மண்ணில் பிறந்தவர் என் இனிய தம்பி “தேவகோட்டை இராமநாதன்”.

    இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2012ம் ஆண்டேயாகும். இதே ” அண்ணன்” இதே நிதிசேகரிப்புக்காக வைத்த ஒரு நிகழ்விற்காக என் அருமைத்தம்பி சின்னத்திரை புகழ் ” ஷியாம் கணேஷ்” அவர்கள் மூலமாக ப்ரு நகைச்சுவை மாலைக்காக ஏற்பாடு செய்த குழுவில் “ரோபோ சங்கர்” “வடிவேலு பாலாஜி” ஆகியோருக்குத் தலைவராக தம்பி “தேவகோட்டை இராமநாதன்” வந்திருந்த போதே.

    இலண்டன் வந்த தேவகோட்டை இராமநாதன் அவர்களை இங்கு அழைத்திருந்த செட்டிநாட்டைச் சேர்ந்த இரு தம்பிகள் அண்ணாமலை , செந்தில் தியாகராஜன்” ஆகியோர் கடந்த 29ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் இலண்டன் ” நகரத்தார் சங்கம்” சார்பில் ஒரு நகைச்சுவை மாலை நடத்தியிருந்தார்கள்.

    செட்டிநாடு தந்த ஒரு இனிய மாது “வள்ளி” என்பவர் இந்நிகழ்ச்சியை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகம் செய்வதற்காக இலண்டனின் பிரபல்யம் மிக்க “சென்னைத்தோசை” உரிமையாளரும் முன்னால் இலண்டன் தமிழ்ச்சங்க தலைவருமான அசோகன் சின்னப்பன் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய தேவகோட்டை இராமநாதன் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார். அப்பப்பா ! ஒரு இளம் கலைஞருக்குள் இத்தனை சிரிப்பு வெடிகளா ?

    மிகவும் இளம் சிறுமிகள் தொடங்கி பருவக்குமரிகள் வரை அற்புதமான பரதநாட்டியத்தில் எம்மைத் திளைக்க வைத்து விட்டார்கள்.

    இடைவேளை வந்தது. அருமையான உணவு அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மனதை நிறைத்ததைப் போல எமது வயிறை நிரப்பியது.

    அதைத்தொடர்ந்து நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் தலைமையில் மனித வாழ்வை மேம்படுத்துவது பணமா ? குணமா ?எனும் பட்டி மன்றம். ஒரு நகைச்சுவைத் தென்றலின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் என்றால் சிரிப்புக்கும், சிலேடைக்கும் கேட்கவா வேண்டும் ?

    ஒரு இனிய மாலைப்பொழுதை கழித்த மனநிறைவோடு அடுத்தொரு நகைச்சுவைத் திருவிழாவைக் கண்டுகளிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினோம்.

    ஆமாம் டிசம்பர் 5ம் திகதி இரவு எனது ” அண்ணனின்” ஏற்பாட்டில் அருமைத் தம்பி “தேவகோட்டை இராமநாதன்” அவர்களின் நகைச்சுவைத் திருவிழா நிகழப் போகிறது.

    மீண்டும் வயிறு புண்ணாகப் போகிறதோ ? (சிரிப்பினால்)

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (133)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள் !

    வாரங்களா? நொடிகளா? என்றே எண்ணமுடியாத வகையில் காலம் காற்றாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறது.

    டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வந்து நிற்கிறோம்.

    சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நான் அபிமானம் கொண்டுள்ள எனது அன்பு நண்பர், “அண்ணன்” என்று நான் அழைக்கும் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நற்செய்தி ஒன்றைத் தந்தார்.

    20141129_221216அவ்வண்ணனை எனக்கு அநேக வருடங்களாகத் தெரியும் நான் லண்டன் வந்த காலங்களில் அறிந்து பழகிய பின்னர் இடையில் சிறிது காலம் நாம் இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்ததினால் தொடர்பிழந்திருந்தோம்.

    சில வருடங்களின் முன்னால் நாம் மீண்டும் பழகுவதற்கான சந்தர்ப்பம் ஏகியது. அவரின் மீது நான் கொண்ட அபிமானம் உயர்ந்ததின் காரணம் அவர் ஈழத்தின் பிரச்சனைகள் காரணமாக அநாதரவாக விடப்பட்ட அனைத்து இனத்தைச் சேர்ந்த சிறுவர்களில் நூறுபேரை அவர்களது ஆரம்பக் கல்வியிலிருந்து பட்டப்படிப்பு முடியும் வரையிலான கல்வி மற்றும் பராமரிப்பை ஏற்ருக்கொள்வதோடு அவர்கள் தங்குவதற்கான அனைத்து வசதி கொண்ட விடுதி நிர்மானிப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதுவேயாகும்.

    அவராது ஆர்வம், அயராத உழைப்பு, அனாதரவான குழந்தைகளின் மீதான கருணை, ஜாதி, இன, மத பேதங்களைக் கடந்த அன்பு என்பவையேயாகும்.

    சரி இனி அவர் சொன்ன நற்செய்திக்கு வருவோம்.

    “தம்பி, தேவகோட்டை ராமநாதன் லண்டன் வருகிறார் , இன்று காலையில் தான் தொடர்பு கொண்டார். அவர் எனது முயற்சிகளுக்கு ஆதரவாக ஒரு நிகழ்ச்சியை நடத்தித் தருவதாகக் கூறியுள்ளார் ” என்பதுவே.

    தேவகோட்டை ராமநாதன், அசத்தல் மன்னர்களில் முன்னனியில் நிற்பவர், “அசத்தல் மன்னர்” “காமெடி கிங்” என பல பட்டப் பெயர்களை தனதாக்கிக் கொண்டவர். மிகவும் இளைய வயதினிலேயே கலைஞர் கருணாநிதியின் கையினால் பரிசு பெற்றவர். “தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு” என்னும் நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர்.

    20141129_195119

    ஆமாம் அற்புதமான நகைச்சுவை, ஆன்மீகம், இலக்கியம் என அனைத்துத் துறைகளிலும் கொடி கட்டிப் பறப்பவர். இருபதுகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டு ஜம்பதுகளுக்கேயுரித்தான அனுபவ முதிர்ச்சி கொண்டோருடன் கலந்துரையாடும் அனுபவத்தைத் தரும் அற்புத ஆற்றல் மிக்க இளம் தலைமுறைக் கலைஞர். சட்ட வல்லுனர்.

    செட்டிநாடு கலைத்தாயின் கருவறை. என் மானசீகக்குரு கலியரசர் கண்ணதாசனை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் அற்புத கருத்தை எமக்களித்த கவிஞர் “கணியன் பூங்குன்றன்”அவர்களை ஈன்றெடுத்த அரும்பெரும் மண். அத்தகைய அஎஉம்பெரும் மண்ணில் உதித்த எம் இளங்லைஞரே ” தேவகோட்டை ராமநாதன்”.

    அதுமட்டுமன்றி என் இனிய நண்பர்களாம் “ரவி தமிழ்வாணன், லேனா தமிழ்வாணன் ” ஆகியோரை ஈன்றெடுத்த அற்புத மண்ணில் பிறந்தவர் என் இனிய தம்பி “தேவகோட்டை இராமநாதன்”.

    இவரை நான் முதன் முதலில் சந்தித்தது 2012ம் ஆண்டேயாகும். இதே “அண்ணன்” இதே நிதிசேகரிப்புக்காக வைத்த ஒரு நிகழ்விற்காக என் அருமைத்தம்பி சின்னத்திரை புகழ் ” ஷியாம் கணேஷ்” அவர்கள் மூலமாக ப்ரு நகைச்சுவை மாலைக்காக ஏற்பாடு செய்த குழுவில் “ரோபோ சங்கர்” “வடிவேலு பாலாஜி” ஆகியோருக்கு தலைவராக தம்பி “தேவகோட்டை இராமநாதன்” வந்திருந்த போதே.

    20141127_195127இலண்டன் வந்த தேவகோட்டை இராமநாதன் அவர்4களை இங்கு அழைத்திருந்த செட்டிநாட்டைச் செநெர்ந்த இரு தம்பிகள் அண்ணாமலை ,செந்தில் தியாகராஜன்” ஆகொயோர் கடந்த 29ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் இலண்டன் ” நகரத்தார் சங்கம்” சார்பில் ஒரு நகைச்சுவை மாலை நடத்தியிருந்தார்கள்.

    செட்டிநாடு தந்த ஒரு இனிய மாது “வள்ளி” என்பவர் இந்நிகழ்ச்சியை மிகவும் அழகாகத் தொகுத்து வழங்கினார். தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகம் செய்வதற்காக இலண்டனின் பிரபல்யம் மிக்க”சென்னைத்தோசை” உரிமையாளரும் முன்னால் இலண்டன் தமிழ்ச்சங்க தலைவருமான அசோகன் சின்னப்பன் அவர்கள் மிகவும் நகைச்சுவையாக நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் அவர்களை அறிமுகப்படுத்தினார்.

    தொடர்ந்து பேசிய தேவகோட்டை இராமநாதன் அனைவரையும் வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்துவிட்டார். அப்பப்பா! ஒரு இளம் கலைஞருக்குள் இத்தனை சிரிப்பு வெடிகளா?

    20141129_201441_1

    மிகவும் இளம் சிறுமிகள் தொடங்கி பருவக்குமரிகள் வரை அற்புதமான பரதநாட்டியத்தில் எம்மைத் திளைக்க வைத்து விட்டார்கள்.

    இடைவேளை வந்தது. அருமையான உணவு அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் மனதை நிறைத்ததைப் போல எமது வயிறை நிரப்பியது.

    அதைத்தொடர்ந்து நகைச்சுவைத் தென்றல் தேவகோட்டை இராமநாதன் தலைமையில் மனித வாழ்வை மேம்படுத்துவது பணமா ? குணமா ?எனும் பட்டி மன்றம். ஒரு நகைச்சுவைத் தென்றலின் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம் என்றால் சிரிப்புக்கும், சிலேடைக்கும் கேட்கவா வேண்டும் ?

    ஒரு இனிய மாலைப்பொழுதை கழித்த மனநிறைவோடு அடுத்தொரு நகைச்சுவைத் திருவிழாவைக் கண்டுகளிக்கப்போகிறோம் எனும் எதிர்பார்ப்புடன் வீடு திரும்பினோம்.

    ஆமாம் டிசம்பர் 5ம் திகதி இரவு எனது “அண்ணனின்” ஏற்பாட்டில் அருமைத் தம்பி “தேவகோட்டை இராமநாதன்” அவர்களின் நகைச்சுவைத் திருவிழா நிகழப் போகிறது.

    மீண்டும் வயிறு புண்ணாகப் போகிறதோ ? (சிரிப்பினால்)

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(132)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    எத்தியோப்பியா நாட்டிலே ஒரு சமநிலப் பிரதேசத்திலே தோன்றிய மனித சமுதாயம் இன்று உலகைப் பல கண்டங்களாகப் பிரித்து வெவ்வேறு கலாச்சாராப் பின்னணிகளுடன் தமது வாழ்க்கையை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் அவர்களின் வாழ்க்கை விரிவடைந்த விகிதாச்சாரமும் உலகின் காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடந்தேறியுள்ளது என்பதே விஞ்ஞான உலகின் தீர்ப்பு.

    இன்று உலகின் பல பாகங்களிலும் வாழும் மனிதர்கள் தமது முன்னோர்களின் ஆதிகால வாழ்க்கை முறையையும், தாம் இன்று வாழும் நிலைக்கு வந்தடைந்த பாதையின் நெளிவு சுளிவுகளையும் ஆய்ந்தறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    அதன் வழி உலகின் பல பாகங்களில் வாழும் பல சமுதாயங்கள் பலவகையிலான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வகையிலான அகழ்வாராய்ச்சிகளின் மூலமாகவும், பெரிய கட்டிடங்களின் அத்திவாரங்களுக்காக நிலங்களை வெட்டும் போது, தற்செயலான கண்டு பிடிப்புகளின் மூலம் மறைந்து போன பல சமுதாயங்களிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

    என்ன, எங்கே இழுத்துச் செல்கிறது சக்தியின் இந்தப் பீடிகை என்று எண்ணத் தோன்றுகிறது இல்லையா ?

    சில வருடங்களுக்கு முன்னால் என் மனைவி பணிபுரியும் நிறுவனத்தின் கிளை மூடப்பட்டு பலருக்கு வேலை பறிபோனது. தெய்வாதினமாக அக்கிளையில் பணிபுரிந்தவர்களில் மிஞ்சிய இருவரில் என் மனைவியும் ஒருவரானார். ஆனால் அவரின் அலுவலகம் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 120 மைல்கள் தள்ளியுள்ள “ரஹ்பி (Rugby) “ எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

    ப்ராஜெக்ட் மனேஜர் பதைவியிலிருக்கும் என் மனைவிக்கு இரண்டு நாட்கள் அலுவலகத்திலும் மீதமாயிருக்கும் மூன்று நாட்கள் இல்லத்திலிருந்து ( வாடிக்கையாளர்களை சந்திக்காத போது) பணிபுரியும் சலுகை அளிக்கப்பட்டது. ஆக என் மனைவு வாரத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு கிளம்பி தனது அலுவலகம் செல்வார் அன்றைய இரவு அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி அடுத்தநாள் காலை மறுபடி அலுவலகம் சென்று மாலையில் திரும்பி எமது இல்லம் வருவார்.

    rugbyஅப்படி அவர் அங்கு செல்லும் வேளைகளில் எனக்கு அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வசதி இருந்தால் நானும் அவருடன் ரஹ்பி செல்வது உண்டு. அப்படி நேற்றைய முந்தினம் காலை அவர் தனது அலுவலகம் செல்லும் போது நானும் சென்றேன்.

    பகலில் அவர் அலுவலகம் போனதும் நான் ஹோட்டல் அறையில் தங்கி ஓய்வெடுப்பேன். இல்லையானால் அங்குள்ள சில இடங்களைச் சென்று பார்ப்பது வழக்கம். அப்படி இம்முறை நான் சென்று பார்க்க விழைந்த இடம் ரஹ்பி நகரத்தின் நூதனசாலையாகும். அவர்களின் பொதுஜன நூலகத்துடன் சேர்ந்த வகையில் நூதனசாலையும், படக் கண்காட்சி நிலையமும் அமைந்துள்ளது.

    20141125_131343[1]இந்நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மிகவும் விசித்திரமானவை. பண்டைய காலத்தில் ஒருவருடைய நிலத்தினுள் மற்றொருவர் அனுமதியின்றி நிழைவது மிகவும் அதீதமான குற்றமாகக் கணிக்கப்பட்ட காலமது. “உத்தரவின்றி உட்பிரவேசியாதீர் ” என்னும் பாதகையத் தாங்கியிருப்பன போலும். அப்படி நுழைந்த யாரும் பிடிக்கப்பட்டால் தண்டனையாக அவர்களைப் பிணைப்பதற்கான இருப்புச் சட்டம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் பலவகையான காட்சிப் பொருட்கள் அதாவது 1930ம் ஆண்டு தொடங்கி 1990கள் வரை “ரஹ்பி” எனும் அந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்திய சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நூதனசாலையில் அவர்கள் சேகரிக்கிம் பொருட்கள் அப்பகுதியில் வாழ்வோரிடமிருந்தே பெறப்படுகிறது. அப்படியே அக்கண்காட்சியைப் பார்த்துக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது கண்களில் ” ரால்ஸ் ராய்ஸ் ( Rolls Royce) “ எனும் பிரசித்தி பெற்ற கம்பெனியின் இயந்திரம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    640px-Tripontium_bathouse_remainsஅப்பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ரோமானிய காலச் சமுதாயத்தின் அடையாளங்கள் பல அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மிகவும் அதிசயமான முறையில் அந்நாளைய ரோமானியச் சமூகம் வெப்பௌ அறைய எப்படி நிர்மாணித்திருந்தார்கள் என்பதும் விளக்கப்பட்டிருந்தன. இந்த இடம் அன்றைய ரோமன் இங்கிலாந்தில் “ட்ரப்பொண்டியம் (Tripontium)“ என்று அழைக்கப்பட்டது.

    20141125_131727[1]அது மட்டுமின்றி அன்றைய ரோமன் சமூகத்தினரின் ஆபரணங்கள், உடையமைப்புகள் என்பன பற்றியும் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய ரோமன் மக்களினது இறை நம்பிக்கை பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது. மனிதரின் அன்றாட வாழ்க்கையில் தெய்வங்களின் ஈடுபாட்டால் மற்ரங்கள் நிகழ்கின்றன என்று அன்றைய ரோமானிய சமூகம் நம்பியது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரினது புராதனச் சின்னங்களின் கண்டுபிடிப்பு அவர்களின் வாழ்க்கை முறைகளை பற்றிய ஒரு சிறுகுறிப்பு உள்ளடங்கிய வீடியோ கண்காட்சி ஒன்று ஏறத்தாழ 4 நிமிட நேர வரையிலானது அங்கே காட்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.

    தமது முன்னோர்கள் நாம் வாழும் இன்றைய நிலைக்கு வரும் பாதையில் சந்தித்தவைகள் எவை என்பதை தம்மால் முடிந்த அளவிற்கு பாதுகாத்து அதை அனைவரின் கண்காட்சிக்காக இலவசமாகக் கட்டணமின்றி அனுமதிலும் இந்நாட்டவரின் இக்குணாதிசயம் மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்று.

    இப்படியான ஒரு மனப்பான்மை கொண்டவர்களால் தான் தமது நாட்டைப் பற்றிய பெருமையைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. அப்படி எம் நாட்டின் மீது நாம் பெருமை கொண்டால்தான் அதனைச் சுத்தமாக வைத்திருப்பது கொண்டு அதற்கான காரியங்களை எதுவித ஊழலுமின்றி புரியக்கூடிய மனோநிலை கிடைக்கிறது.

    அப்படியாயின் நாம் எமது புராதானச் சினக்களையும், முன்னோர்களிம் சரித்திரத்தையும் எப்படிப் பேணுகிறோம் ? சிந்திக்க வைக்கும் கேள்வி இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இனியதோர் ஈழத்து எழுத்தாளர் இறை உலகெய்தினார்

    சக்தி சக்திதாசன்

    ஈழத்து எழுத்தாளரும் “மித்ரா” அச்சக உரிமையாளருமான அன்பு ஐயா எஸ்.பொ அவர்கள் நேற்றைய தினம் இறைஉலகெய்தினார் எனும் துயரச் செய்தியின் பின்னனியில் அவருடனான என் நினைவுகளை இங்கு பதிவிடுகிறேன்.

    ass

    2005ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நிலாச்சாரல் இணைய இதழை நடத்தி வருபவரும். கண்னி மென்பொருள் வல்லுனரும், என் இனிய தோழியுமான நிலா என்றழைக்கப்படும் நிர்மலா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிர்பலங்கள் பலரை நிலாச்சாரல் இணைய இதழுக்காக பேட்டி கண்ட நேரம்.

    அப்போது என் அதிர்ஷடவசமாக சென்னையிலே தங்கியிருந்தார் நேற்றுக் அவ்ய்ஸ்திரேலியாவில் காலமான அன்பு ஜயா ம் ஈழத்து எழுத்தாளர் திரு. எஸ்.பொ அவர்கள்.

    சந்திப்பாரோ ? மாட்டாரோ ? எனும் ஒரு சந்தேகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

    மிகுந்த மகிழ்ச்சியுடன் ” சக்தி சக்திதாசனா? ஆமாம் உனது எழுத்துக்களை படித்திருக்கிறேன், அச்சகத்திற்கு வா ? சிற்றுண்டி அருந்திக் கொண்டே பேசலாம் ” என்றார் அந்த அன்பு எழுத்தாளர்.

    ஈழத்து இலக்கியச் சிற்பி ஒருவரை இந்தக் கற்றுக்குட்டி என்ன நேர்காணல் காணுவது ? ,அமதுக்குள் ஒரு ஆதங்கம் இருப்பினும் இத்தகைய புகழ் மிக்க என் அன்னை நாட்டு எழுத்தாளரை தமிழக மண்ணில் சந்திப்பதையிட்டு பெரு மகிழ்வோடு அவரைக் காணச்சென்றேன்.

    இனிவருவது ஏற்கனவே நிலாச்சாரலில் வெளிவந்த என்னுடனான அவரது நேர்காணல். நிலாச்சாரலுக்கு என் மனமார்ந்த நன்றியறிதல்களைச் செலுத்திக் கொண்டு அதை இங்கே சந்தர்ப்பம் கருதி மீள்பிரசுரிக்கிறேன்.

    இந்த நேர்காணலைத் தவிர்த்து அவர் எனக்கு தனது அனுபவம் சார்ந்த பல அறிவுரைகளைத் தந்தார். அவை என்றும் என் மனப்பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டேயிருக்கும்..

    காலையில் 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வாருங்கள், காலைச் சிற்றுண்டி அருந்தியபடியே பேசலாம் ” என அன்பான, நட்பு மிளிர்ந்த அதிகாரமிக்க அழைப்பு. அதுவரை நான் சந்தித்திராத, சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்து உதாரண எழுத்தாளர் அவர்களோடு நடந்த முதல் தொலைபேசி உரையாடலின்போது அவரின் வெளிப்படையான பேச்சும் அந்த நட்புணர்வும் அவர்மீது கொண்டிருந்த மதிப்பை இன்னும் பெருக்கியது.

    திரு எஸ். பொன்னுத்துரை எனும் எஸ்.பொ. அவர்கள் பலவருடங்களுக்கு முன்னால் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்திருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் பிகப்பெரிய பங்கு வகிக்கிறார். சென்னையில் கோடம்பாக்கத்தில் “மித்திரா” என்னும் பதிப்பகத்தை நிறுவி, அதை இயக்கி வரும் இவர், ஆஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்.

    மனந்திறந்து அவர் நிலாச்சாரல் வாசகர்களுக்காக அளித்த பேட்டி இதோ !

    உங்களுடைய இலக்கிய ஆர்வத்தின் பின்னணி என்ன ?

    என்னுடைய இலக்கிய ஆர்வம் மிகச் சிறுவயதிலேயே உருவானது. எனது முதலாவது கவிதை 14 வயதில் அச்சில் வந்தது. இதற்குக் குடும்பப் பின்னணி காரணமல்ல.மாணவர் சமுதாய இலக்கிய அரங்கில் இணைந்து , இலக்கியம் சமுதாய முன்னேற்றத்திற்கு ஓர் சரியான சாசனம் எனும் எண்ணம் கொண்டு, இளம் வயதிலேயே ஈடுபாடு வந்தது.

    உங்கள் எழுத்துக்கு முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள் ?

    என்மீது தாக்கம் ஏற்படுத்தியவர்களுள் பாரதியாரே முக்கியமானவர். அவரின் தாக்கமே என்னை முதலில் கவிதை எழுதத் தூண்டியது. தமிழினால் சமுதாயத்தை எந்தெந்த வகையிலெல்லாம் விழிக்கப்பண்ண முடியுமோ , அவ்வழிகளிலெல்லாம் அவரது கவிதையின் வீச்சுச் சென்றது. மாகாகவியே என்மீது தனது கவிவீச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

    இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய நிலை உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளதா
    இல்லை கவலையாக உள்ளதா ?

    துணிவாகச் சொல்லுவேன் ஈழத்துத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் , இலக்கியப் படைப்புக்களாக இல்லை. அதற்காக இலக்கியம் தற்காலப் போர் சார்ந்ததாகவோ அன்றி அதனைத் தவிர்த்ததாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் தற்கால நடைமுறை பதிவுசெய்யப்படவில்லை. ஈழத்துத் தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு வெளிவரும் ஆக்கங்கள் , அரசாங்கக் கண்காணிப்பின் கீழ், தணிக்கைக்கு உட்படுத்தப்படும்போது , எவ்வாறு மக்களின் உண்மை நிலையை உணர்த்த முடியும்? இந்த இடைவெளியைப் பயன்படுத்திச் சிலர் , வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமே எழுதுவது போன்றும் தென்படுகிறது .

    நீங்கள் ஈழத்தை விட்டுப் புலம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டபோது, உங்கள்
    மனதினில் விளைந்த உணர்ச்சிகள் என்ன ?

    நான் ஈழத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் புலம் பெயர்ந்தவனல்ல. அரசியல் காரணங்களினால் எனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய பதவியுயர்வுகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டதாலும் மற்றும் பல அரசியல் காரணங்களினாலும் நான் ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தேன் என்பதுவே உண்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரங்களின் பின்னால் இனக்கலவரத்தின் பாதிப்பு கூர்மைப்படுத்தப்பட்டது. எமது பழைய தமிழ்த்தலைவர்கள் என்றுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கவில்லை. 1959ம் ஆண்டு திரு.செல்வநாயகம் செய்த ஒப்பந்தத்தின் போதுதான் ஈழத்தில் தமிழ்த்தேசியம் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் தமிழ் மறைந்து கொண்டிருக்கிறது , ஈழத்தமிழர்
    தமிழை முதன்மைப்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது மகிழ்வாக இருந்தாலும், ஈழத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் விளைவாகவே ஈழத்தமிழர் தமிழ்த் தேசியத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மை. இன்று உலகமெங்கும் தமிழ்த்தேசியம் உலகத்தமிழரால் முன்வைக்கப்படும்போது , நானும் அந்த உலகத்தமிழர்களில் ஒருவன் எனும் நிலையால் பெருமையான உணர்ச்சியே மேலோங்கியுள்ளது.

    நீங்கள் தமிழ்நாட்டோடு அதிகம் தொடர்புடையவர் என்னும் நிலையில் , ஈழத்தமிழர்கள் மீதான, தமிழக மக்களின் தற்போதைய கணிப்பு என்ன என்று எண்ணுகிறீர்கள் ?

    ஈழத் தமிழ் மக்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கு ராஜீவ் காந்தியின் கொலை, மற்றும் சில ஈழத்தமிழர்களின் பிழையான நடவடிக்கைகள் பத்திரிகைகளினால் பெரிது படுத்தப்படுவது போன்ற பல காரணங்கள் உண்டு.

    ஈழத்தமிழ் இலக்கியங்கள் அந்தநாட்டுப் போரைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்
    என்றொரு எதிர்பார்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் அது சரியானதா?

    இலக்கியங்களை எழுதுபவர்கள் கோபுரங்களில் இருந்து கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் அந்த மண்ணின் மக்களோடு வாழ்ந்து கொண்டுதான் இலக்கியம் படைக்கிறார்கள். ஆனால் அதற்காகப் படைக்கப்படும் அனைத்தும் போரைப்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதல்ல.சமகால நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவேண்டும். மனதிலே தமிழ்த்தேசியத்தையும், ஈழத்தமிழிலக்கிய மரபுகளையும் சுமந்து கொண்டு புலம்பெயர்ந்த மக்கள் , அதை இலக்கிய நாற்றாக்கி, போராட்டத்தின் பின் ஈழத் தமிழிலக்கிய மண்ணிலே நாட்டி இலக்கியத்தைப் பேணவேண்டும் என்பதிலே நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

    ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தில் எப்படியான வரவேற்பு இருக்கிறது?

    அந்தக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் இலக்கியத்தின் பிறப்பிடம் தமிழகம் என்றும், அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்றும் எண்ணும் மனோபாவம் வணிக ரீதியாக உண்டு. ஈழத்துத் தமிழெழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு ஓர் தனி அகராதி வேண்டும் எனும் கருத்தும் உண்டு.

    ஆனால் இந்த மனோபாவம் இன்று மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகம் இன்று தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, இன்குலாப் போன்றவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை ரசிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். வணிகரீதியில் மட்டுமே நாம் பிரச்சனையை எதிர் கொள்கிறோம். இது முற்றிலுமாக மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

    புலம்பெயர்ந்த படைப்புக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

    சென்னையிலே ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே, பல முன்னணி எழுத்தாளர்களின் மத்தியில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களே தலைமைப்படுத்திச் செல்வார்கள் என உரக்கச் சொன்னவன் நான். ஆனால் தற்போது புலம்பெயர் நாடுகளிலே தமிழ் இலக்கியத்திற்கு மத முலாம் பூசப்பட்டு, பின்னிலைப் படுத்தப்படுகிறதோ என அஞ்சவேண்டியுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என எண்ணுகிறேன்.

    புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் தாம் வாழும் நாடுகளின் சூழல்களை மையப்படுத்தி
    இலக்கியம் படைப்பது தமிழை முன்னேற்றும் என எண்ணுகிறீர்களா?

    நிச்சயமாக ! அப்படியான ஒரு அணுகுமுறைதான் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டிருக்கும்” எம்மை ஒரு உலகளாவிய ரீதிக்குக் கொண்டு வரும். மற்றைய நாட்டு மொழியைப் படித்துத்தான் அவர்களது கலச்சாரங்களை ஒரு கண்னாடியால் பார்ப்பதுபோல் இல்லாமல் எமது எழுத்தாளர்கள் தமிழிலேயே அதை வெளிக்கொணரவேண்டும். அது மட்டுமன்றி அந்தந்த நாட்டு மொழிகளில் கூடப் புலம்பெயர்ந்தவர்கள் கவிதை,கட்டுரை வரைந்து தமிழிலக்கியச் சிந்தைகளை விசாலப்படுத்த வேண்டும்.

    கணணியில் தமிழ் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன ?

    இது ஒரு மிகவும் நல்ல முன்னேற்றமே ! தமிழ்நாட்டு முயற்சிகள் அதிகம் இருந்தாலும் மென்பொருளாக்கம் முதலியவற்றில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழரின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது. கணன்¢யின் தேவையைக் கூட்டி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது உலகத்தமிழன் என்று சொன்னால் மிகையாகாது. கணணியில் தமிழ் கண்ட வளர்ச்சி வாசிக்கும் பழக்கத்தைக் கூட்டுமேயன்றிக் குறைக்காது என்பது எனது கருத்து.

    புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?

    யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்துக் காணிச்சண்டை, வேலிச்சண்டை, ஜாதிச்சண்டை அனைத்தையும் விடுத்துத் தமிழைச் சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பியுங்கள். உங்களுக்குத் தமிழ் மீது நேசம் இருக்குமானால் தயவுசெய்து ஏதாவது வகையில் தமிழ்ப்பணி செய்யுங்கள். தமிழ் நூல்களை வாங்கிப் படியுங்கள்.

    அன்பு மிகுந்த வாசகப் பெருமக்கள் இந்தப் பேட்டி 2005ம் ஆண்டு இடம்பெற்றது என்பதனையும் எனது கேள்விகளும், அவரது பதில்களும் அன்றைய காலச் சூழலின் பின்னனியில் இருந்தன என்பதையும் படிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டுகிறேன்..

    அன்பு ஜயா எஸ்.பொ அவர்களின் ஆத்மசாந்திக்காக அனைவர்க்கும் பொதுவான அந்த இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(131)

    சக்தி சக்திதாசன்.

     

     

    LOECD1

     

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    மற்றொரு வாரத்தில் உங்களுடன் இணைவதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    இலண்டன் பி.பி.ஸி தொலைக்காட்சியில் சமீபத்தில் ” உலகில் உயிரினங்கள் ( Life on Earth ) “ எனும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

    அந்நிகழ்ச்சியை பார்வையுற்ற போது என் மனதில் பல நினைவலைகள் அதிர்ந்து எழுந்தன.

    இப்பிரபஞ்சத்தில் வாழும் உயிரினங்கள் எத்தனையோ வகையானவை. அவை ஒவ்வொன்று வாழும் வகைகள் வேறுபட்டவை.

    இப்பூமி உருவானதாகச் சொல்லப்பட்ட காலத்திலிருந்து வாழ்ந்த உயிரினங்கள் பல அக, புற சூழல்களின் காரணத்தினால் முற்றாக அழிந்து போயின.

    வேறு பல வாழ்க்கையின் சவால்களை சந்திப்பதற்காக மாறும் சூழல்களினால் தம்மை மாற்றியமைத்துக் கொண்டுள்ளன.

    ஏன் குரங்கு வடிவிலிருந்து மனித வடிவிற்கு மாற்றம் காணக் காரணம் கூட காலநிலை மாற்றங்களினால் ஏற்பட்ட சவால்கள் என்றுகூடக் கூறப்படுகின்றன..

    இந்நிகழ்ச்சியில் உயிரினங்கள் சிலவற்றின் வாழ்க்கை அணுகுமுறைகளை அவை பிறந்தது முதல் அவைகளின் பருவமாற்றங்களினூடக நிகழும் மாற்றங்களைக் கையாளும் வகையில் ஆராய்ந்திருக்கிறார்கள்.

    இவற்றில் சிலவற்றை ஒரு பேச்சுக்காக எடுத்துப் பார்ப்போம்.

    monkeysபால பருவத்திலிருந்து வாலிபப் பருவத்தையடைந்த “சிம்பன்ஸி” எனும் வகையைச் சேர்ந்த குரங்கு ஒன்றைப் பார்க்கிறார்கள். பால பருவ குரங்குகளுடன் இணைந்து விளையாடுவதைத் தவிர்த்த இக்குரங்கு அக்குரங்குக் கூட்டத்தின் முன்னனித் தலைமைக் குரங்குகளுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்காக முயன்று தோல்வியடைந்து பின் வாங்குகிறது.

    இதனுடைய இம்முயற்சி எதற்காக? அக்குரங்குக் கூட்டத்தில் தன்னுடைய அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வதற்காகன முயற்சி என்கிறார்கள்.

    அந்தஸ்தை முன்னேற்றிக் கொள்வது ஒன்றே உணவு பெறுவதில் முக்கியத்துவதையும், பெண் குரங்குகளுடனான உறவுகளில் முக்கியத்துவம் பெறுவதற்காகவும் என்று சொல்லப்படுகிறது.

    antஅடுத்து அமெரிக்காவில் அரிசோனா எனும் மாநிலத்தில் உள்ள ஒரு எறும்புச் சமுதாயத்தைக் காட்டுகிறார்கள். மழை பெய்தவுடன் ஈரமான நிலத்தில் தனக்கு ஒரு புற்று ஏற்படுத்துவதற்காக இராணி எறும்பு தரையைக் கிண்டத் தொடங்குகிறது. அதனுடன் சேர்ந்து இன்னும் ஓர் ஏழு இராணி எறும்புகள் அக்குழியைத் தோண்டுகின்றன.

    அமைக்கப்பட்ட புற்றினுள் இந்த எட்டு இராணி எறும்புகளும் முட்டையிட்டு பல தொழிலாளி எறும்புகளைத் தோற்றுவிக்கின்றன.

    அதன் பின்பு நடப்பதுதான் விசித்திரம்! அரசியலோ?

    அப்புற்றினுள் ஒரேயொரு இராணி எறும்புதான் அதிகாரம் செய்ய முடியும் விளைவு ஏழு இராணி எறும்புகள் அவைகளால் உருவாக்கப்பட்ட தொழிலாளி எறும்புகளினாலேயே அக்குவேறு ஆணிவேறாகப் பிரிக்கப்பட்டு வளரும் தலைமுறைக்கு உணவாக்கப்படுகின்றன.

    மிஞ்சிய அந்த ஒரு இராணி அவ்வெறும்புக் குழு அனைத்துக்கும் அதிகாரம் செய்யும் தலைமைத்துவத்தைப் பெறுகிறது .

    தண்ணீரிலே நீந்தும் ஒருவகை மீன் தனக்குத் தேவையான உணவை தன் வாயிலிருந்து சீறியடிக்கும் நீர்க்கற்றையின் மூலம் இலைகளில் ஒளிந்திருக்கும் பூச்சியை அடித்து நீரினுள் வீழ்த்தி அதனை உட்கொள்கின்றது.

    அதனைப் பார்த்துத் தானும் பழகிக் கொள்ளும் மீன்குஞ்சு கஷ்டப்பட்டு அடித்து வீழ்த்திய பூச்சியை அருகிலிருந்த பெரிய மீன் பாய்ந்து லபக்கென்று விழுங்க்கிக் கொள்கிறது. அந்தோ பாவம் அச்சிறிய மீன்!

    evolutionஇத்தகைய நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த என் மனதில் அவைகளுக்கும் மனிதர்களாகிய நமக்கும் என்ன வேறுபாடு எனும் எண்ணம் தலைதூக்கியது.

    பகுத்தறிவு !

    ஆமாம்… அதன் மூலம் மட்டுமே நாம் நம்மை நாகரீகமாக வளர்த்துக் கொண்டு மனிதர்கள் என்று கூறித் தம்பட்டம் அடித்து அலைகின்றோம்.

    ஆனால் பகுத்தறிவற்ற இவ்வுயிரினங்களுக்கும் நமக்கும் அப்படி பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

    உடைகள் அணிவதிலும், நம்மை அறிவாளிகளாகக் காட்டிக் கொள்வதிலும் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம் … ஆனால் அடிப்படையான தேவைகளின் உணர்வுகள் மாறுபடவில்லை.

    மனிதர்களும் அதே தேவைகளுக்குகாகத்தான் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கிறோம்..

    ஆனால் தமது வயிற்றுப்பசியை போக்கிக் கொள்ளவும், தமது சந்ததியைப் பெருக்கவுமே தமது உழைப்பை ஈந்திடும் விலங்குகள் அத்தோடு தமது இலக்குகளை நிறுத்திக் கொண்டு விடுகின்றன.

    ஆனால் மனிதர்களாகிய நாமோ நமது தேவைகளுக்கு மீறி சேர்க்கத் தலைப்பட்டு பேராசையினால் உந்தப்பட்டு அல்லல்படுகின்றோம்.

    மதம், இனம், மொழி, நிறம் எனப் பல்வேறு வேறுபாடுகளுக்கு முதலிடம் கொடுத்து நம்மைப் போன்ற அடுத்த மனிதர்களை அழித்துக் கொண்டிருக்கிறோம்.

    நாமும் வாழ்ந்து அடுத்தவரும் வாழ்தற்கான ஆதாரங்கள் பலவிருந்தும், அந்த அடுத்தவருக்குக் கிடைக்க வேண்டியதையும் நாமே அமுக்கிக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தினால் நமது மனவளர்ச்சியை நாமே குந்தகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

    ஓ ….இந்தச் குட்டைக்குள் ஊறும் ஒரு மட்டைதான் நானுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    படம் உதவிக்கு நன்றி: http://www.trunkrecords.com/turntable/life_on_earth.shtml & BBC

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . 130

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    இனிய வணக்கங்கள்.

    இதோ அடுத்தொரு மடல், அடுத்தொரு வாரம், அடுத்தொரு உறவாடல்.

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 9ம் திகதி இங்கிலாந்தில் போர்களில் மடிந்த வீரர்களை நினைவு கூறும் “நினைவு கூறும் ஞாயிறு” (Remembrance Sunday).

    கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே எனது மனைவி இலண்டன் டவர் ஹில் எனும் இடத்தில் முதலாவது உலக மகாயுத்தத்தின் ஆரம்பத்தின் நூறாவது ஆண்டையொட்டி அமைத்திருந்த “பொப்பி” என்றழைக்கப்படும் செந்நிறத்திலமைந்த செயற்கை மலர்களால் அமைக்கப்பட்ட ஒரு அலங்காரத்தைப் பார்வையிட வேண்டுமென்ற தன் விருப்பத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்.

    சரி! 9ம் திகது ஞாயிற்றுக்கிழமை செல்வோமே என்று ஒரு திட்டம் மனதிலிருந்தது. ஆனாலும் லண்டன் காலநிலை தான் நம் எண்ணப்படி நடப்பதில்லையே! எனவே ஒருவேளை அன்று இயற்கை அவ்வீரர்களை எண்ணித் தாரை தாரையாக கண்ணீர் வடிக்க எண்ணி மழையாகப் பொழியாரம்பித்தால் எமது திட்டம் தவிடு பொடி என்றே நினைத்திருந்தோம்.

    லண்டனில் எங்கு செல்வதானாலும் வசதியின் நிமித்தம் காரில் ஏறி உட்கார்ந்து சென்று விடுவதே வழக்கம். எனவே ஞாயிற்றுக்கிழமை லண்டனுக்கு செல்வதானால் பேரூந்திலேயே செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தோம்.

    சரி ஒருபடியாக ஞாயிற்றுக்கிழமையும் வந்தது. என்னே ஆச்சரியம் இயற்கை எம்மேல் கருணை கூர்ந்தது போலும்! மழை வருவதற்கான அறிகுறி இல்லை.

    அவசரம் அவசரமாக கிளம்பினோம் சரியாக 8.25 க்கு பேரூந்தில் ஏறி குறிய்டன் நோக்கிச் சென்றோம். அங்கு சென்ற பின்னர் தான் அங்கிருந்து எந்த எண் பேரூந்தைப் பிடித்து எப்படி ” டவர் ஹில் ” செல்வது என்று திட்டம் தீட்ட வேண்டும்.

    பேரூந்தின் வருகை நேரத்தை இணையத்தில் அறிந்து கொண்டதால் அதனைத் தவற விட்டு விடக்கூடாது என்று ஓட்டமும் நடையுமாகச் சென்றதில் பேருந்தில் ஏறி உட்கார்ந்து சில நிமிடங்கள் வரை பேசக்கூட முடியாத வகையில் மூச்சிறைத்தது.

    ஓ! ஜம்பதின் கடைசிப் படியிலல்லவா நிற்கிறோம்! மறந்து விட்டேனே! அட! ஞாபகமறதி வேறா?

    ஒருவாரு குறோய்டன் ஷாப்பிங் செண்டரில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்க எண்ணும் போது மனைவியின் கையிலிருந்த முன் அனுமதிச் சீட்டில் மேலதிக பணம் போட்டால் தானடுத்த பேரூந்தில் ஏறலாம் எனும் நிலை.மேலதிகப் பணம் போடுவதற்கான இயந்திரத்தை தேடி நடக்க ஆரம்பித்தோம்.

    நீண்ட நாட்களாக பேரூந்தில் பயணம் செய்யாததினால் மேற்கு குறொய்டன் பஸ் தரிப்பு நிலையம் அடைக்கப்பட்டு அதனுள் வேலை நடைபெற்று வருவது எமக்குத் தெரியவில்லை.

    அதனைக் கடப்பதற்கான சிறிய ஓடை போன்ற பாதையில் கால் வைத்ததும் நாற்றம் வயிற்றைக் குமட்டியது. அப்பாதை வழிப்பறி செய்பவர்களுக்காக ஏற்படுத்தப் பட்டதோ !

    poppy1ஒருவாறு அப்பிரச்சனையை முடித்துக் கொண்டு எமது பயணத்தின் அடுத்த அலகாக அடுத்தொரு பேரூந்தில் ஏறினோம். அது இரட்டைத்தட்டு பேரூந்தாகையால் மிகவும் மகிழ்ச்சியாக மேல்தட்டில் ஏறி உட்கார்ந்து கொண்டோம்.

    அடுத்தொரு தரிப்பில் ஒரு நடுத்தர வயதான ஆபிரிக்க பெண்மணி அம்மேல்தட்டில் ஏறி நாமிருந்த திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவள் வரும்போது ஏதோ பேசிக் கொண்டே வந்தாள் சரி காதில் கருவியைப் பொருத்தி மொபைல் தொலைபேசியில் தான் பேசுகிறாள் என்று எண்ணினால் .. . . .

    இல்லையே! தனக்குத் தானே அல்லவா பேசிக் கொண்டு வருகிறாள் என்றாள் என் மனைவி.

    போச்சுடா! ஒரு லூசுப் பெண்மணியிடம் போய் மாட்டிக் கொள்ளப் போகிறோமா ?

    வந்தவள் எமக்குப் பினால் இரண்டு இருக்கைகள் தள்ளி உட்கார்ந்து கொண்டாள். அது மட்டுமல்ல தனக்குத்தானெ சம்பாஷணை வேறு!

    ஆஸ்கார் விருது கொடுப்பவர்கள் கண்டிருந்தால் சிறந்த நடிகைக்கான பரிசு அவளுக்குத்தான் போங்கள் . . . .

    இடையிடையே அவளின் குரல் உயரவும் அட எமக்கும் அவளுக்கும் இடையில் இருக்கும் இருக்கைகளில் யாராவது அமர மாட்டார்களா ? எனும் ஒரு நப்பாசை.

    ஏதோ தெரியவில்லை அனைவருமே அதனைத் தவிர்த்து விட்டார்கள். அப்பெண்ணின் சம்பாஷணையை வி.ஐ.பிகள் போல நாம் தான் ரசித்துக் கொண்டோம்.

    poppy2ஒருவாறு அப்பயண முடிவில் லண்டனில் உள்ள “எலிபண்ட் அண்ட் காசில் (Elephant and Castle)” எனும் இடத்தை அடைந்தோம். இனி அங்கிருந்து மற்றொரு பேருந்தில் நாம் செல்ல வேண்டிய “டவர் ஹில்” எனும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

    அதற்கு முன்னால் அங்குள்ள ஷாப்பிங் செண்டரினுள் சென்றோம், கழிவறைகள் இருக்கின்றனவா என்று தேடியவாறு.

    இருந்தது ஆனால் அது கட்டணக் கழிவறை. உள்ளெ சென்றால் அப்பப்பா! தாங்க முடியவில்லை. மேற்குலக நாடுகளின் தலைநகரங்களில் பிரசித்தி பெற்ற லண்டன் நகரிலா இப்படி ?

    அது முடிந்து வெளியே வந்தால் அங்கிருந்த படிகளில் உட்கார்ந்தபடி கையில் போதை மருந்து ஏற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டோம்.

    போதுமடா சாமி ! ஆளை விட்டால் காணும் என்று விழுந்தடித்து வந்த ஒரு பேரூந்தில் ஏறிக் கொண்டோம், அதிர்ஷ்டவசமாக அப்பேரூந்தின் சாரதி ஒரு ஆசிரியர்.

    அவரிடம் நாம் செல்ல வேண்டிய இடத்தைக் கூறியதும் அவர் நீங்கள் சரியான பேரூந்தில் தான் இருக்கிறீர்கள் என்று கூறி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அருகாமையில் இறக்கி விட்டார்.

    அது லண்டனில் பிரசித்தி பெற்ற “டவர் பிரிட்ஜ்” க்கு அருகாமையில். அட்ஹன் வழியாகச் சென்றால் நாம் பார்க்க வேண்டிய அந்த செயற்கை மலர்களின் அலங்காரத்தை உள்ளடக்கிய “டவர் ஹில்” சென்று விடலாம்,

    அப்பப்பா! தேர்த்திருவிழா போன்ற கூட்டம். வரிசை வரிசையாக மக்கள் தம் வாழ்வை மேன்மையாக்க உயிரை நீத்த தம் முன்னோர்களை நினைவுகூறும் வகையில் அமைந்திருந்த செயற்கை மலர்களை பார்த்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்தார்கள்.

    poppy3அவ்வரிசையோடு நாமும் இணைந்து கொண்டு சென்றோம். அங்கு நிலவிய ஒருவிதமான சகோதர உணர்வை உணரக்கூடியதாக இருந்தது..

    இங்கிலாந்து நாட்டின் பலபாகங்களில் ஒருந்து வந்தவர்களை விட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களும் நிறைந்து காணப்பட்டார்கள். அங்கு கண்ட ஒரு ஒற்றுமையான் உணர்வு உலகில் இன்னும் மனிதத்துவம் சாதி,மத, இன, மொழி , நிற எல்லைகளைக் கடந்து ஒளிர்ந்து கொண்டுதானிருக்கிறது எனும் எண்ணத்தை மேலோங்கச் செய்தது.

    ஆங்காங்கே கிடைத்த இடைவெளிக்குள் நுழைந்து கொண்டு அம்மலர்களின் அலங்காரத்தைப் பார்வையிட்டோம்.

    ஒவ்வொரு மலரும் முதலாவது உலக மகாயுத்தத்தில் உயிரிழந்த ஒரு வீரரைக் குறிப்பதாகவிருந்தது. இங்கிலாந்து நாட்டு வீரர்கள், மட்டுமல்ல பொதுநல்வாய நாடுகளின் வீரர்களையும் அது உள்ளடக்கியிருந்தது.

    மொத்தம் 888,246 கைகளினால் வெய்யப்பட்ட போர்சலின் மலர்கள் அங்கே அலங்கார ரூபத்தில் நாட்டப்பட்டிருந்தன.

    அன்றைய வீரர்கள் தம் உயிரைக் கொடுத்து நாட்டிய விதையின் விருட்சத்தில் நிழல் காய்ந்து கொண்டிருக்கும் நாம் அவ்வழகிய நாளின் நினைவுகள் மீட்டுத்தந்த உயருய நினைவுகளை நெஞ்சில் தாங்கிக் கொண்டு மீண்டும் எமது இல்லம் ஏகினோம்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி

      

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(128)

    சக்தி சக்திதாசன்.

     

    RDAY3

     

     

    அன்பினியவர்களே!
    இனிய வணக்கங்களுடன் உங்களை இம்மடல் வாயிலாகச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.

    “அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றாள் எம் மூதாதைப் பாட்டி. ஆனால் மனிதராய்ப் பிறந்த நாம் இம்மானிடப் பிறவியின் அருமையைச் சரிவரப் புரிந்து கொண்டிருகிறோமா? என்பது மிகவும் சந்தேகத்திற்கிடமான விடயமே!

    காலரா, அம்மை, பிளேக் என்று பலவகையான கொடிய வியாதிகள் மனித குலத்தைத் தாக்கி அழித்தது ஒருபுறம்.

    சுனாமி, சூறாவளி, பூகம்பம், பெருவெள்ளம் என்று நம்மால் கட்டுப்படுத்த முடியாத நமக்கு அப்பாற்பட்ட காரணிகளினால் அழியும் மனிதர்கள் ஒருபுறம்.

    தற்போதைய “இபோலா” என்றழைக்கப்படும் விஷக் கிருமிகளின் வழி சியரா லியோன், பாப்பாவே நியூகினீ, லைபீரியா எனும் ஆப்பிரிக்க நாடுகளில் அழிந்தொழியும் மனிதர்களின் எண்ணிக்கை ஒருபுறம்.

    நமக்கு அப்பாற்பட்ட காரணிகளால் கிடைப்பதற்கரிய மனிதப்பிறவி கிடைத்தும் அதை இழந்து விடும் பரிதாப நிலையைப் பற்றி நம்மால் அதிக அளவில் எதுவுமே செய்து விட முடியாது.

    ஆனால் மனிதனை மனிதன் அழிக்கும் கொடிய போரினைத் தவிர்ப்பதன் மூலம் மட்டுமே இம்மனிதப்பிறவியின் அரிய தன்மையை நாம் உணர்ந்து கொண்டதை உறுதிப்படுத்த முடிகிறது.

    ஆதி அறியாத இப்பிரபஞ்சத்தில், யாரோ இருவரின் இன்பத்தின் மூலம் மனிதப்பிறவியாக ஜனனித்த நமக்கு இருப்பது எல்லாம்நமது சொந்தம் என்னும் எண்ணம் தலைதூக்கும் போதே போருக்கான அவசியமும் ஏற்படுகிறது.

    காரணம் எதுவாயினும், அது மொழியாகவோ, மதமாகவோ அன்றி இனமாகவோ இருப்பினும் அதற்காக மற்றுமொரு மனித உயிரை அழிப்பது எதுவிதத்திலு,ம் நியாயப்படுத்த முடியா ஒரு செயல்.

    RDAY1இதுவெல்லாம் ஏனின்று சக்தியின் மடல் வாயிலாக வந்து விழுகிறது எனும் கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை. ஆமாம் இத்தகையானதொரு சூழலிலேயே முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பித்தது. இவ்வுலக மகாயுத்தம் ஆரம்பித்தது நூறு வருடங்களுக்கு முன்னதாக ஆகும். 1914ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் திகதி ஆகும். இவ்யுத்தம் நான்கு வருடங்களுக்கு மேலாக நீடித்தது. இப்போர் ஏறத்தாழ உலகளாவிய ரீதியில் 9 கோடிக்கு மேலான யுத்த வீரர்களையும், 7 கோடிக்கு மேலான பொது மக்களையும் காவு கொண்டது.

    உலக வரலாற்றிலே மிக அதிக அளவிலான மனித உயிர்களைப் பறித்தது இப்போர் எனப்படுகிறது. “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது” இக்கூற்றின் அர்த்தம் இப்போது புதுமாதிரியாகத் தொனிக்கிறது இல்லையா? இப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி ஆகும். இப்போரின் முடிவுத் தினத்தை நினைவு கூறுவது இப்போர்களின் அனர்த்தத்தை மனிதருக்கு நினைவூட்டி இத்தகைய போர்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் எனும் காரணத்திற்காக மேற்குலக நாடுகளில் இத்தினம் “நினைவுதினமாக” அனுட்டிக்கப்படுகிறது.

    RDAY4இதை ஆங்கிலத்தில் “Rememberance Day” என்பார்கள். இத்தினத்தில் அனைவரும் சரியாக காலை 11 மணிக்கு … அதாவது 11ம் மாதமாகிய நவம்பர் மாதம் 11ம் திகதி 11 மணிக்கு இரண்டு நிமிட மெள்ன அஞ்சலிகள் மறைந்து போன மனித உயிர்களுக்காக அனுட்டிக்கிறார்கள். இங்கிலாந்தில் இத்தினம் நவம்பர் மாதம் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அதாவது 11ம் திகதிகு மிகவும் அண்மையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அனுட்டிக்கப்படுவது வழக்கம்.

    poppyஇதன் முக்கியத்துவம் என்னவென்றால் முதலாவது உலக மகாயுத்தத்தில் மடிந்தவர்கள் மட்டுமின்றி இரண்டாவது மகாயுத்தம் அடங்கலாக இன்றுவரை நடந்த அனைத்துப் போர்களிலும் உயிர்துறந்தவர்களுக்காக இந்நினைவு தினம் அனுட்டிக்கப்படுவதே. இத்தினம் அனுட்டிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே “பாப்பி” (Poppy) என்றழைக்கப்படும் ஒரு சிவப்பு நிறத்திலான மலரையொத்த ஞாபகச் சின்னம் ஒன்றை தம்மாலான நிதியையளித்து பெற்றுத் தத்தமது சட்டைகளில் பொருத்திக் கொள்வார்கள். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் நிதி நிலையத்திடம் கையளிக்கப்படுகிறது.

    இம்முறை, உலகமகாயுத்த ஆரம்பத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு இங்கிலாந்தில் “டவர் ஹில்” (Tower Hill) என்றழைக்கப்படும் சரித்திரப் பிரசித்திப் பெற்ற கோட்டையைச் சுற்றிய பாதையில் ஆழி போல் நிறைந்து காணப்படும் வகையில் இப்போரில் மறைந்த ஒவ்வொருவரையும் நினைவுபடுத்தும் வகையில் இப் பொப்பி மலர்கள் நாட்டப்பட்டு இப்பாதை இம்மலர்கள் நிறைந்த ஆழியாய்க் காட்சியளிக்கிறது. இதை மக்கள் திரளாகக் குவிந்து பார்வையிடுகிறார்கள்.

    RDAY2இத்தனை ஏற்பாடுகளும், இத்தனை ஆரவாரங்களும் எதற்காக? போரின் அகோரத்தை மனித இனம் உணர்ந்து மனிதாபிமானத்தை விட பெரியது இவ்வுலகில் எதுவுமே இல்லை எனும் உண்மையை உணர்ந்து கொள்வதற்காகத்தானே! இனியாவது “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது” எனும் வாக்கியத்தின் உண்மைப்பொருளை உணர்ந்து கொள்வோமா?

    காலமே இதற்கு விடை பகரும் ஆசான்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(127)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    இனிய வணக்கங்களுடன் அடுத்த மடலில் உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்வடைகிறேன்.

    இங்கிலாந்துக் கலண்டரிலே இருக்கும் முக்கியமான அம்சங்களில் ஒன்று இந்தச் சனிக்கிழமையன்று நள்ளிரவு நடைபெற இருக்கிறது.

    அது என்ன நிகழ்வு என்று எண்ணத் தோன்றுகிறதா ?

    Daylight Saving Time endsவருடா வருடம் இங்கிலாந்தில் “சம்மர்” (Summer) என்றழைக்கப்படும் கோடை காலத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்னதாகவும் அதே போல ” விண்டர்” (Winter) என்றழைக்கப்படும் மாரி காலத்தில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் முடுக்கி விடுவது வழக்கம்.

    அதன் அடிப்படையில் வரும் சனிக்கிழமை அதாவது நள்ளிரவு இந்நேரமாற்றம் நிகழவிருக்கிறது.

    இந்நிகழ்வுகளின் போது கோடைகால மாற்றத்தில் இரவு நேர தூக்கத்தில் ஒருமணி நேரத்தை இழப்பதுவும் மாரிகால மாற்றத்தில் இழந்த அந்த ஒரு மணிநேரத்தை மீண்டும் பெறுவதும் சகஜம்.

    இம்மாற்றம் எப்போதும் சனிக்கிழமை நள்ளிரவு நேரம் தான் நடைபெறும். ஏனென்கிறீர்களா ?

    பெரும்பான்மையானவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்களாதலால் இம்மாற்றத்தின் தாக்கத்தை ஞாயிற்றுக்கிழமை சரி செய்து விடலாம் என்பதுவே இதற்கு முக்கிய காரணமாகிறது.

    நான் இங்கிலாந்துக்குள் நுழைந்தது மாணவனாக அப்போது எனது வாழ்வாதாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக வார விடுமுறை நாட்களில் பகுதிநேரப் பணிபுரிவது வழக்கம்..

    அப்போது நான் மட்டுமல்ல என்னைப் போலவே ஈழத்திலிருந்து மாணவர்களாக வந்த அனைவருமே அத்தகைய ஒரு நிலையில் தான் இருந்தார்கள்.

    அப்போது எனக்கும் என்னைபோன்ற ஒத்த நிலையிருந்தவர்களுக்கும் இந்த நேர மாற்றம் எரிச்சலை ஊட்டுவதாகவே இருந்தது.

    எப்படி ?

    clock 1சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் பகலில் பணிபுரிகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், கோடைகால நேர மாற்றத்தில் எமது ஓய்வு நேரத்தில் ஒரு மணி நேரத்தை இழக்கிறோம். ஆனால் மாரிகால மாற்றத்தின் போது தூங்க ஒரு மணிநேரம் அதிகமாகக் கிடைக்கிறது.

    சரி சனி, ஞாயிறுகளில் இரவு நேர பணி என்று வைத்துக் கொண்டால் கோடை கால மாற்றத்தின் போது ஒரு மணிநேரத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்வதும் மாரிகால மாற்றத்தின் போது ஒருமணி நேரத்தை ஊதியமில்லாமல் பணிபுரிவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

    நான் இங்கிலாந்துக்கு வந்து சுமார் ஒரு வருடத்தின் பின்னால் இரவு நேரக் காவலாளியாகப் பகுதிநேரப் பணிபுரிந்து வந்தேன். அப்போது சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை இரவும் பணிபுரிவது வழக்கம்.

    clock 2கோடைகால நேரமாற்றத்தை எவ்வித தாக்கமுமின்றி ஏற்றுக் கொண்ட நான் (ஒரு மணி நேரம் குறைவாக அதே சம்பளத்திற்கு பணிபுரிவதானால் யாருக்குக் கசக்கும் ?) மாரிகால மாற்றத்தின் போது எனது கட்டுப்பாட்டு அதிகாரியிடம் ஒருமணிநேரம் அதிகமாகப் பணிபுரிந்திருக்கிறேனே அதற்கு ஒருமணி நேரம் அதிகமான ஊதியம் தர வேண்டாமோ ? என்று கேட்டேன்.

    பலமாகச் சிரித்த அவர் ” கோடைகால மாற்றத்தின் போது ஒரு மணி நேரம் குறைவாகப் பணிபுரிந்த போது ஒரு மணி நேர ஊதியத்தைப் பிடித்துக் கொண்டேனா ?” என்று கேட்டார்.

    புன்னகையோடு மெளனிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் ?
    சரி இப்படியாக இங்கிலாந்திலும் அநேகமான மேற்கு ஜரோப்பிய நாடுகளில் இடம்பெறும் நேரமாற்றத்திற்கான காரணம் தான் என்ன ?

    இந்நேர மாற்றம் முதன்முதலாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜி.வி.கட்சன் (G.V.Hudson) என்பவரால் 1895ம் ஆண்டு முதன் முதலில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

    Hudsonபூச்சிகளைப் பிடித்து அவற்றை ஆரய்ச்சி செய்யும் இவர் கோடைகாலங்களில் வெளிச்சமுள்ள நேரம் ஒருமணிநேரம் கூடுதலாக இருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ந்து அதைப்பற்றி ஓர் ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தார்.

    இங்கிலாந்தில் ஒரு கட்டிட ஊழியரான வில்லியம் விலெட்ஸ் (William Willets) என்பவரால் இது பிரஸ்தாபிக்கப்பட்டது.

    கோடை காலத்தில் ஒரு நாளின் அளவு கூடுதலாக இருந்தும் அதிகமானவர்கள் கூடுதலான நேரத்தைத் தூக்கத்தில் கழிப்பதகாகக் கருதிய இவர் கோடைகால நேரத்தை இருமணி நேரம் முன்னொக்கித் தள்ளி வைக்க வேண்டும் என்று பிரஸ்தாபித்தார்.

    இவரது இந்தப்பிரேரணையை ரோபெர்ட் பியர்சன் எனும் லிபரல் கட்சியைச் சேர்ந்த பாரளுமன்ற உறுப்பினர் 1908ம் ஆண்டு சட்டமாக்க வேண்டும் என்று முன்மொழிந்தார்.

    ஆனால் அக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதைத் தொடர்ந்து பலமுறை இக்கோரிக்கை பாரளுமன்ற முன்றலுக்கு கொண்டுவரப்பட்டும் நிறைவேறவில்லை.

    முதன் முதலில் மேற்கு ஜரோப்பாவில் இந்நேரமாற்றம் 1916ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 திகதி ஜெர்மனியாலும் அதன் நேச நாடான ஆஸ்ட்ரியாவாலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதைப்பற்றி அமராகிவிட்ட எனது தந்தை அவர் வாழும் காலத்தில் குறிப்பிடும் போது தான் பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக நிகழ்ந்த நிகழ்வு என்று குறிப்பிடுவதுண்டு.

    அதைத் தொடர்ந்து இங்கிலாந்தாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளினாலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.

    ஆனால் இந்நேரமாற்றம் ஒருமணிநேரத்தை மட்டும் உள்ளடக்கியதாக இருந்தது.

    ஒவ்வொரு வருடமும் ஏப்பிரல் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 முன்னொக்கி 03:00 மனிக்கு தள்ளப்படும். அக்டோபர் மாதம் மூன்றாவது வார விடுமுறைகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01:59 பின்னோக்கி 01:00 ஆக மாற்றப்படும்.

    இதுவே நடைமுறை வழக்கத்திலிருந்து வருக்கிறது. ஓ …இவ்வாரம் சனிக்கிழமை தூங்கி ஞாயிற்றுக்கிழமை எழுந்திருக்கும் போது ஒரு மணிநேரம் அதிகமாக தூங்க முடியுமோ ?

    இதே நேர மாற்றம் தான் அன்றைய மாணவ வாழ்வில் பிரச்சனை கொடுத்ததோ ?

    மீண்டும் அடுத்த மடலில் …
    அன்புடன்
    சக்தி

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

     

     

    படங்கள்: இணையத்திலிருந்து

    Share
  • உன் எழுத்துக்கள் உண்மையின் உரைகல்!

    -சக்தி சக்திதாசன்

    Rajam_Krishnan_spl

     

     

     

     

     

     

     

     

     

     

    குனிந்து நின்ற
    பெண்ணியத்தைச்
    சமுதாய வரம்புக்குள்
    தலைநிமிர வைத்தன
    உன்
    அற்புத எழுத்துக்கள்!

    சறுக்கி விழுந்தவர்களையும்
    சிக்கித் தவிப்பவர்களையும்
    அன்றாட உணவுக்கு
    அல்லல் படுவோரையும்
    உன்
    நாவல்களின்
    நாயகர்களாக்கி
    இலக்கியத்தில் நீ புது
    இலக்கணங்களை வகுத்தாயே!

    செப்பிடும் வகையும் தனி
    செந்தமிழ்ச் சுவையும் தனி
    தீந்தமிழ் எழுத்துக்களால்
    சிந்தையைப் புதுப்பித்தவள் நீ!

    அம்மா
    ராஜன் கிருஷ்ணனே!
    எழுத்துலகின் மேதையுனக்கு
    எழுதுகிறான் இக்கற்றுக்குட்டி
    கவிதையொன்று…
    அஞ்சலியில்லையம்மா
    ஆண்டவன் அடிகளில் ஏகிய
    உனக்கு நான் செய்வது
    பாமாலை அர்ச்சனையே!

    உன்
    எண்ணங்கள் மறைந்தால் தானே
    நீ
    மறைந்து விட்டாய் என்றாகும்
    எப்போதும் ஒளிவிடும்
    எழுத்துத் தீபம் நீ
    மறையாமல் ஒளிர்ந்திடுவாய்!!

    Share
  • அன்பான தீபாவளி வாழ்த்துகள்

    சக்தி சக்திதாசன்.

    diwali-114v

     

     

    ஒளிரும் தீப ஒளியில்

    கருகும் தீய எண்ணங்கள்

    மிளிரும் இந்த வேளையில்

    பொழியும் ஆனந்த உணர்வுகள்

    விடியும் பொழுதோடு ஒரு

    வெளிச்சப் பொழுதென

    மலரும் தீபாவளி அதனோடு

    புலரட்டும் பொன்னான காலம்

    தேசத்தின் காவலில் நின்று

    நேசத்தின் வாயிலைத் திறந்து

    பாசத்தின் முகத்திரை கொண்டு

    வீசட்டும் வாழ்த்துகள் இன்று

    இருளைக் கலைத்திடும் நேரம்

    ஒளியை ஈந்திடும் காலம்

    இல்லங்கள் தோறும் ஏற்றிடும்

    உள்ளங்கள் மலர்ந்திடும் தீபங்கள்

    கொடுமைகள் அழிந்திடவும் எங்கும்

    அஹிம்சைகள் தழைத்திடவும்

    புரிந்திடும் அர்த்தங்கள் கொண்டு

    எரியட்டும் தீபங்கள் இன்று

    இருப்பவர் உள்ளங்கள் எல்லாம்

    இரக்கத்தை மனதினில் ஏற்றி

    இல்லாதோர் இல்லங்கள் தோறும்

    இன்பத்தை இரந்திட வேண்டும்

    வளமான வாழ்க்கையைக் கண்டோர்

    வழங்கட்டும் கருணையை ஒளியுடன்

    வருமிந்த தீபாவளித் திருநாள்

    விளம்பட்டும் பொதுநலக் கருத்தை

    அன்பினிய இதயங்கள் அனைத்திற்கும்

    அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்

    அணையாது என்னுள்ளத்து தீபம்

    அதுதானே மாறாத நேசம்

     

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்  குடும்பம்

     

     

    Share
  • கவியரசர் நினைவுநாள் நினைவாக

    சக்தி சக்திதாசன்
    எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியரசரின் நினைவுநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.

    ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.0 R

    காசைவிட எது பெரிது?

    “தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்

    தான்போய்க் குடியி ருந்தால்

    தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா

    சம்சாரி என்றறியுமா?

    நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்

    நீசரென் றேயழைப் பார்;

    நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்

    நெருங்குமுன அறிய வேண்டும்!

    காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று

    கருத்தினில் இருத்து வாயே!

    கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற

    கன்னிமலை யரசி துணையே!”

    -கவியரசர் க்ண்ணதாசன்-

     

    தன்னுடைய சிறுகூடற்பட்டி மலையரசித் தாயிடம் தனது மனதில் காசைவிச தனது நண்பர்கள் தான் பெரிதென்ற எண்ணத்தை நிலைநிறுத்துமாறு எத்தனை பவ்வியமாக வேண்டுகிறார் பார்த்தீர்களா?

    கண்ணதாசன் அவர்கள் நண்பர்கள் பலரென்று நம்பியவர்களாலே ஏமாற்றப்பட்டவர். வெளுத்ததெல்லாம் பால் எனும் எண்ணம் கொண்டவர். ஆயினும் அவரது மனதில் நட்பை அதாவது உண்மையான் நட்பை பெரிதாக எண்ணும் சிந்தை எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கிறது பார்த்தீர்களா?

    காதல் என்னும் அந்த இனிய உணர்வினால் தாக்கப்பட்டோர் அனைவருமே என்றுகூடச் சொன்னால் தவறாகாது.

    அந்தக் காதல் உணர்வு மனதில் கொடுப்பதோ இன்பவேதனை. அந்த வேதனையைச் சொல்லில் வடிப்பது அதைவிட வேதனை.

    அத்தகைய ஒரு இன்பவேதனையை எமது இனிய கவியர்சர் எத்தனை இதமாகத் தந்திருக்கிறார் பாருங்கள் !

    விருத்தம்:

    நூறுமுறை பிறந்தாலும், நூறுமுறை இறந்தாலும்

    உனைப் பிரிந்து வெகுதூரம் – நான் ஒருநாளும்

    போவதில்லை, உலகத்தின் கண்களிலே –

    உருவங்கள் மறைந்தாலும், ஒன்றான உள்ளங்கள்

    ஒருநாளும் மறைவதில்லை!’

    பாடல்:

    ஓராயிரம் பார்வையிலே

    உன் பார்வையை நான் அறிவேன்

    உன் காலடி ஓசையிலே

    உன் காதலை நான் அறிவேன்

    (ஓராயிரம்)

    இந்த மானிடக் காதலெல்லாம்

    ஒரு மரணத்தில் மாறிவிடும்

    அந்த மலர்களின் வாசமெல்லாம்

    ஒரு மாலைக்குள் வாடிவிடும்

    நம் காதலின் தீபம் மட்டும்

    எந்த நாளிலும் கூட வரும்

    (ஓராயிரம்)

    இந்தக் காற்றினில் நான் கலந்தேன்

    உன் கண்களைத் தழுவுகின்றேன்

    இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

    உன் ஆடையை நாடுகின்றேன்

    நான் போகின்ற பாதையெல்லாம்

    உன் பூமுகம் காணுகின்றேன்

    (ஓராயிரம்)”

    ஒன்றான உள்ளங்கள் ஒருபோதும் மறைவதில்லையாம். எத்துணை உண்மை இது.

    இப்போது உங்கள் மனங்களிலே ஒரு கேள்வி எழலாம், அப்போ ஏமாற்றும் காதலெல்லாம் என்ன? என்று.

    இங்கேதான் கவியரசரின் வார்த்தைகளின் உண்மை புரிகிறது. அப்படிப்பட்ட ஏமாற்றும் உள்ளங்கள் ஒருபோதுமே ஒன்றாவதில்லை.

    மானைடர் காதலையும், மலர்களின் வாசத்தையும் தாண்டி ஒரு சரித்திரம் படைக்கும் காதலைக் கையோடு கூட்டிவருகிறார் கவியரசர்.

    சாந்திநிலையம் என்னும் படத்தில் குழந்தைகளை வைத்து மறைந்த நடிகர் திரு.நாகேஷ் அவர்கள் பாசுவதாக அமைந்த ஒரு பாடல்.

    ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கைகளில் தான் தங்கியுள்ளது என்பதனை இத்தனை எளிதாகச் சொல்லக்கூடியவர் நமது கவியரசர் தான்.

    படம்: சாந்தி நிலையம் – வருடம் 1969

    இசை: M.S. விஸ்வநாதன்

    நடிப்பு: ஜெமினி கணேசன், காஞ்சனா,மஞ்சுளா, நாகேஷ்

    பாடல் வரிகள: கவியரசர் கண்ணதாசன்

    “பூமியில் இருப்பதும்

    வானத்தில் பறப்பதும்

    அவரவர் எண்ணங்களே

    இருக்குமிடம் எதுவோ?

    நினைக்குமிடம் பெரிது

    போய்வரும் உயரமும்

    புதுப்புது உலகமும்

    அவரவர் உள்ளங்களே!

    நெஞ்சினில் துணிவிருந்தால்

    நிலவுக்கும் போய்வரலாம்

    உலகம் போகின்ற வேகம்

    உருவமும் இனிமேல் மாறும்

    நடக்கும் கதைகளைப் பார்த்தால்

    நமக்கே சிறகுகள் முளைக்கும்

    ரஷ்யர்கள் அனுப்பிய கூடு

    ராக்கெட் என்பது பேரு

    சிஷ்யர்கள் அனுப்பிய கூடு

    தெரியுது வானத்தில் பாரு!

    பாடலைக் கேட்டதுமே நாமும் வானத்தில் கைகளை விரித்துக் கொண்டு பறக்கலாம் போல ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.

    அப்பப்பா ! இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு இருக்கிறதே ! அதை எப்படி வீளக்க முடியும்?

    மனம் என்பது மேடையாம், அந்த மேடையிலே ஒரு ஆட்டம் நடக்கிறதாம் போங்கள். அது யாரென்று நினைக்கிறீர்கள் அவனுடைய/அவளுடைய மனதைக் கொள்ளை கொண்டவருக்குரிய முகமாம்.

    மற்றொரு வகையில் சொன்னால் காதல் வயப்பட்டவர் தூங்க முடியாமல் தவிப்பார் என்கிறார் கவியரசர்.

    அந்தப் பெண் என்ன செய்கிறாளாம்….. தமிழழென்பது காவ்இரி போல வற்றாது ஓடிக்கொண்டிருக்கும் நதிதானே ! இவள் தமிழ்மகள் எப்படியான தமிழ் மகள்?காவிரி போன்ற வற்றாத தமிழ் நதிய்இல் நீராடி வந்த தமிழ்மகள்.

    அது மட்டுமா?

    இயற்கை வனத்தில் காதல் மலர் பறித்து தனது விழிகளில் சூடிவிட்டாளாமே போங்கள் …..

    ஒருபூச்சரம் எப்படி வளைந்து, வளைந்து ஆடுமோ ? அப்படி அவளது அழகிய உடல் ஆடுகிறதாம், அந்த உடலுடன் ஓடி ஆடி விளையாடுவது அவனுக்கு பொன்னுடன் விளையாடுவது போல பெருமையளிக்கிறதாம்….

    என்ன கற்பனை கவியரசருக்கு ?

    அவள் அவனோடு வந்து பேசுவது சிலை உயிர் பெற்று வந்து பேசுவது போலல்லவா இருக்கிறது.

    விழி, விழியுடன் கலப்பதும்… இதழ் இதழுடன் கலப்பதும்…. இஅவர்களின் காதல் களியாட்டத்தைக் கண்டதும் இரவு ராணியான நிலவின் உறவாடலில் கூட சுவை சேர்ந்து விடுகிறதாம்…..

    சரி இனி பாடலைப் பார்ப்போமா ?

    படம் : வல்லவனுக்கு வல்லவன் – 1965

    குரல் : டி.எம்.எஸ்., சுசீலா

    பாடல் : கண்ணதாசன்

    இசை : வேதா

    நடிகர்கள் : ஜெய்சங்கர், அசோகன், மணிமாலா

    மனம் என்னும் மேடையின் மேலே

    முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    மனம் என்னும் மேடையின் மேலே

    முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்)

    தமிழ்க் காவிரி நீராடி இருவிழியில்

    காதல் மலர் சூடி

    வண்ணப் பூச்சரம் போலாடி உடலழகில்

    பொன்னுடன் விளையாடி

    சிலை ஒன்று நேரில் வந்து உயிர் கொண்டு பேசுது

    கலைத் தென்றல் வீசுது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்)

    விழி மேலொரு விழி சேர்த்து பருவக்கலை

    மேனியில் கை சேர்த்து

    கனி இதழுடன் இதழ் சேர்த்து வெண்ணிலவின்

    இரவுக்கு சுவை சேர்த்து

    சிலை ஒன்று தேரில் வந்து எனைக் கொண்டு சென்றது

    துணை தென்றல் ஆனது

    யார் வந்தது.. அங்கே யார் வந்தது..

    (மனம்) “

    அன்பு நெஞ்சங்களே கவியர்சரின் நினைவு தினத்தில் அவரின் நினைவுகளோடு உங்களுடன் உறவாட நினைத்ததின் பலனே இப்படைப்பு.

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(126)

    — சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !
    புதியதோர் மடல், புதியதோர் வாரம், புதியதோர் கருத்து.

    மேலைநாடுகள் மிகவும் செழிப்பானவை. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை வசதிகள் நிறைந்தது. அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வசதிகள் இங்கே காணப்படுகின்றன. இதுவே பொதுவாக மேலைநாடுகளைப்ப் பற்றி கீழைத்தேச நாடுகளின் அபிப்பிராயமாகும்.

    இது ஒருவகையில் சரியான அபிப்பிராயமாக இருந்தாலும் முற்றிலும் உண்மையான கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது.

    சாதரணக் குடிமக்களுக்கிடையில் எந்த வித பாரபட்சமுமின்றிக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலும் அனைத்தும் அனைவர்க்கும் பொதுவாகக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது.

    நான் முதன் முதலில் இங்கிலாந்தில் கால் எடுத்து வைத்த போது கொண்ட அபிப்பிராயத்திற்கும், நாற்பது வருடங்களின் பின் கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் பல இடைவெளி உண்டு.

    அதற்கான காரணங்கள் பல. அப்போதைய எனது தேவைகளும் இப்போதைய எனது தேவைகளும் அதிக அளவில் வித்தியாசப்படுவது ஒரு காரணம்.

    அன்று நான் பிறந்து வளர்ந்த எனது தாய்மண்ணின் வளர்ச்சிக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமும் மற்றொரு காரணம்.

    மாணவனாக அன்று எனக்கிருந்த உடனடித் தேவை எனது எதிர்கால வாழ்வின் உத்தரவாதத்திற்கான கல்வித்தகமை மட்டுமே. கல்வித்தகமையை அடைந்ததும் நான் வாழ்ப்போவது இங்கிலாந்திலா? அன்றி எனது தாய்மண்ணிலா என்று முடிவு எடுத்திராத ஒரு நிலையில் இங்கிலாந்து வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளோடு எனது அடிப்படைத் தேவைகள் ஒன்றிப்போகாத ஒரு நிலை.

    தேசியச் சுகாதாரச் சேவை பற்றியப் பூரண புரிந்துணர்வோ அன்றி வேலை வாய்ப்புகள் பற்றிய அறிதலோ எனக்குத் தேவைப்படாத ஒரு காலமாக அது இருந்தது.

    ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறுபட்டது. கல்வியை முடித்து ஏறத்தாழ 35 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் பணிபுரிந்து ஒரு இங்கிலாந்து குடியுரிமை பெற்றவனாக வாழும் போது வாழ்வின் மற்றைய அனைத்துத் தேவைகளும் அத்தியாவசியமாகிறது.

    என்னடா இந்த மடல் எங்கே எம்மை இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் உங்களுக்கு எழுவது இயற்கை.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.பி.ஸி தொலைக்காட்ச்சிச் சேவையில் ஒரு நிகழ்ச்சியை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதில் கண்ணுற்ற ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

    இதற்கான முக்கியக் காரணம் எமது பின்புல நாடுகளில் மட்டும் தான் வாழ்க்கை வசதிக்குறைவுகள் உண்டு எனும் கருத்துக்குப் புறம்பாக இங்கிலாந்து போன்ற முன்னேற்றமடைந்த நாடுகள் என்று கருதப்படும் நாடுகளில் கூட அவைகளின் அளவுகளிலும் மக்களின் வாழ்க்கை வசதிகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன எனும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதே !

    126.2உங்களில் பலர் “அல்சைமர்ஸ்” (Alzheimer’s) எனும் ஒரு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

    இது ஒருவகையில் ஞாபகமறதியோடு சம்மந்தப்பட்ட ஒரு வியாதியாகும். ஆனால் சரியான சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவகையில் பாதுகாக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலையை நோயாளிகள் விரைவில் அடைந்து விடுவார்கள்.

    இதனைப் பூரணமாக குணமாக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் இது தீவிரமாகும் துரிதத்தை மட்டுப்படுத்தவே உபயோகிக்கப்படுகின்றன.

    இங்கிலாந்து அரசினால் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி 2015ம் ஆண்டில் இங்கிலாந்தில் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 520,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    126.1இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வியாதியில் பீடிக்கப்பட்ட இருவரை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் இங்கிலாந்தின் ஒரு பகுதியிலும், மற்றொருவர் இங்கிலாந்தின் மற்றொரு பகுதியிலும் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இந்நோய் இருப்பது விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

    ஆனால் மற்றவருக்கோ இவ்வியாதி இருப்பதைக் கண்டுப்பிடிப்பதற்கே மூன்று அண்டுகள் பிடித்தது. அதன் காரணமாக அவரது நோய் மேலும் மூன்று ஆண்டுகளுக்குண்டான தீவிரத்தை எட்டி விட்டது.

    சரி இங்கே எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி என்ன ?

    ஒரே நாடு, ஒரே அரசாங்கத்தின் கீழே இயங்கும் நாடு, வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களின் தேசிய சுகாதரச் சேவையின் நிர்வாகங்களின் கீழ் ஒரே வியாதிக்கான நிவாரணங்கள் மட்டும் ஏன் வித்தியாசப்படுகின்றன ?

    126.3அப்படிப்பார்க்கும் போது, அவர்களது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளின் தாக்கம் வித்தியாசப்படுவது இத்தகைய முன்னேற்றமடைந்த , ஜனநாயகத்தின் உச்சம் என்று கருதப்படும் பாராளுமன்ற முறையக் கொண்ட நாட்டில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கக் கூட முடிகிறதா ?

    ஒரு மனிதன் ஒரு நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்கிறான் என்பது அவனது வாழ்க்கைக் காலத்தை நிர்ணயிக்கிறதா ? எனும் கேள்வி எழுகிறது.

    இப்படியான நிகழ்வுகள் எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் வசதிகள் நிறைந்த நாடு என்று கருதப்படும் நாடுகளிலும் நடைபெறுகிறது என்பதுவே யதார்த்தம்.

    ஏன் இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறேன் ? ஓ …நானும் ஐம்பதுகளின் முடிவில் நிற்கிறேனோ ?

    மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை…
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(125)

    சக்தி சக்திதாசன்.

    magna  carta
    அன்பினியவர்களே !
    இதோ அடுத்தொரு மடலில் உங்களின் முன்னே. அனைத்து உள்ளங்களும் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு பகிர்தலைத் தொடர்கிறேன்.

    ஒரு நாடு எத்தனை தூரம் நாகரீகமடைந்திருக்கிறது என்பதற்கு அந்நாட்டினுடைய சட்ட திட்டங்களை எடுத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

    மனைதர்களை மனிதர்களாக மதிப்பதும் அவர்களுக்குரிய அடிப்படை மனித உரிமைகள் சட்டவிதிகளின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளதா? என்பதன் மூலமே அந்நாடு எத்தகைய சமூக முன்னேற்றத்திற்கு  தன்னை உள்ளாக்கியிருக்கிறது எனும் உண்மை தெளிவாகிறது.

    இன்று காலை தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது அதிலே கூறப்பட்ட ஒரு விடயம் என்னை வெட்கப்படவைத்தது.

    அட! அது என்னப்பா விடயம்? நாமும் தெரிந்து கொள்ளலாமே எனும் ஆவல் உங்களுக்கு எழுவது இயற்கை.

    அவசரப்படாதீர்கள், ஆர்வமிகுதியால் பரபரப்படையாதீர்கள், இதோ விடயத்திற்கு வருகிறேன்.

    இங்கிலாந்தில் ஏறத்தாழ 40 வருடங்கள் வாழ்ந்த நான் இந்நாட்டின் சட்ட அமைப்புகளின் அடிப்படையை இதுவரைகாலமும் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து விட்டேனே எனும் எண்ணம் தான் என்னை நாணித் தலைகுனிய வைத்தது.

    Magna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106)ஆமாம் தொலைக்காட்சியில் “மக்னா கார்ட்டா (Magna Carta)”  எனும் ஒரு பத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதன் உண்மையான அறுதியான பிரதி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படப் போகிறது எனும் கருத்துப் பரிமாறப்பட்டது.

    பல சமயங்களில் இந்த “மக்னா கார்ட்டா”(Magna Carta) எனும் பெயர் கூறப்படுவதைக் கேட்டிருந்த போதும் அதன் உண்மையான விளக்கத்தைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன்.

    இந்த 40 வருட காலமும் எனது வாழ்க்கைக்கு அச்சாரமாகவிருந்த இந்நாட்டின் சரித்திரத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய ஆவணத்தைப் பற்றி நான் அறியாமல் இருந்தது இந்நாட்டினை என் நாடாக நான் கருதாத காரணத்தினாலோ?

    சரி, இனியாவது இதைப்பற்றிச் சிறிது கொள்ளலாம் எனும் நோக்கத்தோடு நான் அறிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மடலாக இம்மடல் அமைகிறது.

    கி.பி 1209ம் ஆண்டளவில் இங்கிலாந்தின் அரசனாக ஜோன் என்பவர் அரசாண்ட காலம். அன்றைய காலத்தில் அரசருக்கெதிராக கிளர்ச்சி செய்வோர்கள்; இல்லை, அரசனின் பார்வையிலோ அன்றி அரசனின் ஆதரவாளரின் பார்வையிலோ அரசனுக்கு எதிராக செயற்படுவோர்; அன்றி எதிர்க் கருத்துகளைக் கொண்டுள்ளோர் எனக் கருதப்படுவோர் எவ்வித விசாரணைகளுமின்றித் தண்டிக்கப்பட்ட காலம்…

    125.2அப்போதய நிலப்பிரபுக்கள் பலர் இச்செய்கையால் அதிருப்தி அடைந்திருந்தனர். அது மட்டுமின்றி அரசன் விதித்த  அதிகமான வரிகள், அத்துடன் அரசனால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த போர்கள் எனப் பல காரணிகள் இந்நிலத்துவ பிரபுக்களுக்கு அரசன் மீதும் அவன் கொண்டிருந்த தன்னிச்சையான அதிகாரத்தின் மீதும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

    அப்போதைய கத்தோலிக்க போப் ஆண்டவராக இருந்த “போப் இனொசன்ட் 3 (Pope Innocent III) என்பவரோடு அரசன் ஜானுக்கிருந்த உறவின் அதிருப்தி கூட இவ்வரசனின் மீதான வெறுப்புக்குக் காரணமாகவிருந்தன.

    இப்பிரச்சனைகளின் காரணமாக இந்நிலப்பிரபுக்கள் இவ்வரசனுக்கெதிரான கிளர்ச்சியை 1209ம் ஆண்டிற்கும் 1212ம் ஆண்டிற்குமிடையில் பலமுரை நிகழ்த்தினர்.

    அக்காலகட்டத்தில் மக்கள் ஆதரவில்லாத அரசர்களை இப்பிரபுக்கள் வேறு சிற்றரசர்களின் ஆதரவோடு வீழ்த்துவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை இக்கிளர்ச்சி வேறு வடிவமெடுத்திருந்தது…

    இம்முறை இக்கிளர்ச்சியின் நோக்கம் அவ்வரசனைப் பதவியிலிருந்து இறக்குவது என்பதில்லாமல், இப்பிரபுக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை அரசன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

    அரசன் ஜானினதும் , போப் ஆண்டவரின் பல இழுத்தடிப்புகளுக்கும் பின்னால் தமது கோரிக்கைகளைச் சாசனமாக்குவதில் நிலத்துவ பிரபுக்கள் வெற்றி கண்டனர்.

    இவர்களது வெற்றிக்கு அப்போதைய பிரான்சு மன்னன் லூயியினதும், ஸ்கொட்லாந்து மன்னன் அலெக்ஸ்சாண்டரினதும் ஆதரவு இருந்ததே காரணம் என்று சொல்லப் படுகிறது.

    இச்சாசனம் அப்போது “சுதந்திரச் சாசனம்” என்றழைக்கப்பட்டது. இதன் அடிப்படை சாராம்சமாக தனிமனித உரிமைகள் பாதுக்கக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிற்கென நீதிமுறைச் சட்டங்கள் வகுக்கப்பட்டு அதன் முன்னால் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலே ஒழிய மக்கள் யாரும் தண்டிக்கப்படமுடியாது என்பவை வலியுறுத்தப்பட்டன.

    25 நிலப்பிரபுக்களைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டு அச்சபை இச்சாசனத்தை அங்கீகரித்தது. இச்சாசனத்தின் படி இதற்கு எதிராக அரசன் செயற்படுகிறார் என்று கண்டறியும் பட்சத்தில் அரசனின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

    தனது உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்த அரசன் ஜானுக்கும் நிலப்பிரபுக்களுக்கிடையிலான வேறுபாடு வலுவடைந்தது.

    அரசனுடன் தமக்கு ஏற்பட்ட வேறுபாடுகள் தீர்க்கப்படமுடியாது என உணர்ந்த பிரபுக்கள் அரசனுக்கெதிரான உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டார்கள். இப்போர் “முதலாவது பிரபுக்கள் யுத்தம் (First Barons War) “ என்றழைக்கப்பட்டது…

    125.1இதுவரை மன்னனின் உரிமைகளை வறையறுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்த பிரபுக்கள், இப்போது அரசனை பதவியிலிருந்து இறக்குவதை நோக்கமாகக் கொண்டு இங்கிலாந்தின் முடியை அப்போதைய பிரான்சு மன்னன் லூயி இடம் தாரைவார்த்தார்கள்.

    ஆனால் அவர்களது சாசனத்தின் அவ்காசம் மூன்று மாதமே நீடித்தது. அப்போது 1216ம் ஆண்டு அரசன் ஜோன் இறந்தான்.

    அதன் பின்னே இச்சாசனம் சட்டமூலமாக்கப்பட்டது. இச்சாசனமே “மக்னா கார்ட்டா” (*Magna Carta) என்றழைக்கப்பட்டது. இது ஒரு லத்தீன் சொல்லாகும் இதன் அர்த்தம் “சிறந்த சாசனம்” ஆகும்.

    சரி, அப்படிப் பெருமையாக இத்தனை காலம் கழித்துப் பேசப்படும் இச்சாசனத்தைப் பற்றி நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய் என்கிறீர்களா?

    இன்றைய இங்கிலாந்தின் அரசாங்க அரசியலமைப்பின் அடிப்படையே இச்சாசனம் தான். “குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை அனைவரும் நிராபராதிகளே ” என்று கூறப்படும் சட்ட தாரக மந்திரத்தின் பிறப்பிடமே இச்சாசனம் தான்.

    பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடுகளாக இருந்த பெரும்பான்மையான நாடுகளின் அரசியலமைப்பும், சட்டமூலங்களும் இதன் பின்னனியில் தான் அமைந்திருக்கின்றன.

    அடடா ! இதை அறிந்து கொள்ள எனக்கு சுமார் 40 வருடங்கள் எடுத்திருக்கின்றதா ?

    போச்சுடா !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    * Magna Carta (Latin for Great Charter), also called Magna Carta Libertatum or The Great Charter of the Liberties of England, is an Angevin charter originally issued in Latin. It was sealed under oath by King John at Runnymede, on the bank of the River Thames near Windsor, England, on 15 June 1215.[Wikipedia]

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(124)

    சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    cameron confஇனிய வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் இணைவதில் மகிழ்கிறேன்.

    வசந்தகாலம் வந்த சுவடு தெரியாமல் மறைந்ததும் அடுத்து வந்த கோடைக்காலம் காற்றோடு காற்றாக மறைந்ததும் இதோ கண்முன்னே இலையுதிர் காலம் சதிராடுவதும் பச்சைப் புற்தரையை பொன்னிறக் கம்பளம் கொண்டு மூடியதைப் போல புற்களை உதிர்ந்த பொன்னிற இலைகள் மூடி நிற்பது எமக்கு உணர்த்துக்கிறது.

    ஆமாம் இங்கிலாந்திலே இலையுதிர்காலத்தில் எது நடக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சிகளின் வருடாந்த மாகாநாடு தவறாமல் நடந்தேறி விடும்.

    இதுவரை இங்கிலாந்து அரசியல் தளத்தினில் நடக்கும் அரசியல் போராட்டம் மும்முனைத் தாக்குதலாகத்தான் இருந்தது.

    ஆமாம் கன்சர்வேடிவ் கட்சி , லேபர் கட்சி, லிபரல் டெமகிரட்ஸ் கட்சி என இவை மூன்றுமே அரசியல் களத்தில் முக்கியமாக மோதிக் கொள்ளும் கட்சிகளாக இருந்தன.

    ஆனால் கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையை எந்தக் கட்சியும் அடையாததினால் அதிகூடிய இடங்களைக் கைப்பற்றிய கன்சர்வேடிவ் கட்சி ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வதற்காக லிபரல் டெமகிரட்ஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டரசாங்கம் அமைத்ததும் இப்போராட்டக்களத்தில் இரண்டு கட்சிகளின் மோதல்களே பெருமளவில் இடம்பெற்றன.

    ஆனால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஐக்கிய இராச்சியத்தையும் விட்டுவைக்காத காரணத்தினால் பதவிக்கு வந்த கூட்டரசாங்கம் எடுத்த மிகவும் சிக்கலான செலவுக் கட்டுப்பாட்டுத் திட்டங்களினால் மத்தியதர, அடித்தர மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டது.

    இப்பாதிப்போடு ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாட்டால் பொதுவாக மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள எதிர்மறையான பாதிப்பினாலும் , ஐரோப்பிய ஒன்றியத்தில் சமீப காலத்தில் இணைந்த கிழக்கு ஐரோப்பிய நாட்டிலுள்ள பலர் ஐக்கிய இராச்சியத்தினுள் இலகுவாக நுழைந்து இந்நாட்டின் உதவித் தொகைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள் எனும் பொதுக் கருத்தின் பாதிப்பினாலும் இவைகளை எதிர்க்கிறோம் என்று தொடங்கப்பட்ட யூகிப் எனும் அரசியல் கட்சியின் ஆதரவு பலமாகியது.

                                      milliband confFarage confclegg conf

    அந்தக் கட்சியின் தலைவரான மைக்கல் ப்ஃராஜ் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினராகவிருந்தவர்.  தமது கட்சி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் தனதும் தன்னைப் போன்ற மற்றைய உறுப்பினர்களினதும் கொள்கையை முன்னெடுக்கத் தயங்கியதால் அக்கட்சியிலிருந்து வெளியேறி யூகிப் எனும் கட்சியை அரம்பித்தார்.

    ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருப்பதை விட அதனிலிருந்து வெளியேறுவதே ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்பதே இக்கட்சியின் பிரதானக் கொள்கையாகும்.

    இக்கட்சியின் ஆதரவு பெருகி இப்போது இக்கட்சி கருத்துக்கணிப்பில் இதுவரை மூன்றாவது பெரிய கட்சியான லிபரல் டெமகிரட்ஸ் கட்சியை விட முன்னனியில் நிற்கிறது.

    அதுதவிர சமீபத்தில் இரண்டு கன்சர்வேடிவ் கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமாச் செய்து விட்டு யூகிப் கட்சிக்குத் தாவி இடைத்தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடுடப்போவதாக அறிவித்திருக்கிறார்கள்.

    இது ஆளும் கட்சிகளில் முக்கியமான கன்சர்வேடிவ் கட்சிக்கும் அதன் தலைவர் பிரதமர் டேவிட் கமரனுக்கும் தலையிடியைக் கொடுத்துள்ளது…

    இந்நிலையில் தான் 2014ம் ஆண்டு அரசியல் மகாநாடுகள் நடந்து முடிந்துள்ளன. முதலில் நடந்த லிபரல் டெமகிரட்ஸ் கட்சியின் மாநாடு சோபிக்கவில்லை. அவர்கள் கொள்கையில் தமக்கு நேர் எதிரான கன்சர்வேடிவ் கட்சியோடு கூட்டரசாங்கத்தில் இணைந்தது அவர்களுக்கு செல்வாக்குச் சரிவையே ஏற்படுத்தியுள்ளது.

    அடுத்து நடந்து முடிந்த யூகிப் கட்சியின் மநாடு அனைவருக்கும் ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அரசியலில் புது அதிர்வலையை ஏற்படுத்தியவர்களின் மற்றைய கொள்கைகள் ஏதுவாயிருக்கும் எனும் எதிர்பார்ப்பே அதற்குக் காரணம். ஆயினும் இதுவரை பராளுமன்றக் கதிரையையேக் கண்டிராத இக்கட்சியினர் பதவியிலமர்ந்ததும் அவர்களது நடவடிக்கை எப்படியிருக்கும் என்பதுவே அனைவரினதும் கேள்விக்குறி.

    எதிர்க்கட்சி ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் லேபர் கட்சியினரின் மாநாடு அவர்களின் அரசியல் அந்தஸ்திற்கேற்ப எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பேடுகள் எதுவுமின்றி 80 நிமிடங்கள் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட், தான் குறிப்பில்லாமல் பேசுகிறேன் என்பதில் கவனமாக இருந்து முக்கியமான கொள்கைகள் இரண்டைப் பற்றிப் பேச மறந்து விட்டார்.

    அட இவரா? பிரதமர் பதவிக்கு போட்டியிடப் போகிறார் போச்சுடா ! எனும் வகையில் பல ஊடகங்கள் இப்பவே அவரது தோல்வியைக் கங்கணம் கட்டிக் கொண்டு விட்டன.

    கடைசியாக நேற்று நடந்து முடிந்த பதவியிலிருக்கும் கட்சியின் மாநாடு கொஞ்சம் விவாதங்களைக் கிளப்பி விட்டிருக்கின்றன. நாட்டின் உண்மையான நிதி நிலைமையையயும் அதைச் சீர் செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அப்படியே மக்களுக்குப் புட்டு  புட்டு வைக்கிறேன் என்று மத்தியதரக் குடும்பத்தினர் பலரை கவலை கொள்ள வைத்த நிதியமைச்சர் ஒருபுறம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? எனும் பொதுக்மக்களின் சர்வஜன வாக்கெடுப்பை 2017ல் நடத்துவோம் என்று மக்களுக்குக் குரல் அளிக்கும் அதிகாரத்தை எமது கட்சியை விட வேறெந்தக் கட்சியும் நடத்துவதாக உறுதியளிக்கவில்லை என்று மார்தட்டிய பிரதமர் மறுபுபுறம்.

    ஆரவாரம் ஓய்ந்ததும் இலைகள் உதிரவும் சரியாகத்தான் இருக்கின்றது.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது என்பது என்னவோ உண்மைதான் !

    ஆனால் வசந்தத்தின் முடிவில் கோடையின் நுழைவாசலில் வரப்போகும் 2015ம் ஆண்டுத் தேர்தல் என்ன மாறுதலைக் கொண்டுவரக்கூடும் ?

    ஒரு வித்தியாசம் மூன்று கட்சிகளுக்கிடையில் அல்ல நான்கு கட்சிகளுக்கிடையில் நடக்கும் அரசியல் போராட்டம் மக்களுக்கு என்ன மாறுதலைக் கொண்டுவரும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டுமோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(123)

    சக்தி சக்திதாசன்.

    scotlandஅன்பினியவர்களே !

    மற்றொரு வாரமடலில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.

    இவ்வாரம் இம்மடலை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.

    அட என்ன இது? எதைப் பற்றிய கருத்தாடல் இது என்று எண்ணுகிறீர்களா?

    செப்டெம்பர் மாதம் 18ம் திகதி வியாழக்கிழமை ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியான ஸ்காட்லாந்து நாடு தனது எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடந்து முடிந்து இருக்கும்.

    அதன் முடிவு என்னவாயிருக்கும் என்பதை அறியாமலே தான் நான் இந்த மடலை வரைகிறேன்.

    ஸ்காட்லாந்து நாடு ஐக்கிய இராச்சியத்தினின்றும் நீங்கி தனியான நாடாக இயங்க வேண்டும் என்று ஒரு பகுதியினரும், இல்லை ஸ்காட்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைந்திருப்பதே ஸ்காட்லாந்து நாட்டிற்கு மிகவும் உகந்தது என்று மற்றொரு பகுதியினரும் பலகாலமாக வாதாடி வந்தனர்.

    2010ம் ஆண்டு தேர்தலில் அதிகப்படியான இடங்களைக் கைப்பற்றி கூட்டரசாங்கம் அமைத்துக் கொண்ட கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமருமான டேவிட் கமரன் அவர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் பிரகாரம் ஸ்காட்லாந்து நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க ஸ்காட்லாந்து நாட்டு மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்து அதற்கான திகதியையும் குறித்துக் கொடுத்தார்.

    Scotland1ஸ்காட்லாந்து நாட்டின் மாநில அரசான ஸ்காட்லாந்து தேசியக் கட்சி தமது நீண்டகால அபிலாஷையான ஸ்காட்லாந்து நாட்டின் பிரிவினையை நனவாக்கிக் கொள்லும் முயற்சியில் அதற்கான பிரசாரத்தில் இறங்கினார்கள்.

    அதேநேரம் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளும், இப்பிரிவினை ஐக்கிய இராச்சியத்தின் எஞ்சிய பகுதிகளுக்கோ அன்றி ஸ்காட்லாந்து நாட்டிற்கோ பயன் தரப்போவதில்ல்லை எனும் நிலைப்பாட்டில் இப்பிரிவினையை எதிர்த்தார்கள்.

    அவர்களின் சார்பில் பிரச்சாரத்தை முன்னை நாள் லேபர் அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தவரும், ஸ்காட்லாந்தை பிறப்பிடமாகக் கொண்டவருமான அலிஸ்டர் டார்லிங் முன்னெடுத்தார்.

    அவருக்கு உதவியாக முன்னைய லேபர் அரசாங்கப் பிரதமராகவிருந்த கோர்டன் பிரவுன் அவர்கள் செயற்பட்டார்.

    கடந்த இருவாரங்களுக்கு முன்னால் மட்டும் இப்பிரிவினை வாதத்திற்கு எதிராகவே ஸ்காட்லாந்து மக்களின் பொது வாக்கெடுப்பின் முடிவுகள் இருக்கும் என்றே பொதுவான கருத்துக் கணிப்பாக இருந்தது.

    ஆனால் இவ்வாக்கெடுப்பின் திகதி நெருங்க நெருங்க பிரசாரம் தீவிரமடைந்தது. இரண்டு பிரிவினர்களின் தலைவர்களுக்கு மத்தியில் தொலைக்காட்சியில் பகிரங்க விவாதங்கள் நடைபெற்றன.

    இவற்றின் விளைவாக மக்கள் மத்தியில் இவ்வாக்கெடுப்பின் முக்கியத்துவம் துலங்கத் தொடங்கியது.

    என்னே ஆச்சரியம் பிரசாரம் தொடங்கிய காலம் முதல் இப்பிரிவினைக்கெதிராகவே மக்கள் தீர்ப்பு இருக்கும் எனும் நிலை மாறி பிரிவினையை ஆதரிப்போர் விகிதாசாரம் முதல்முறையாக உயர்ந்தது.

    scotland3தூக்கத்திலிருந்து விழித்தவர்கள் போல பிரதமர் டேவிட் கமரன், துணைப்பிரதமர் நிக் கிளேஹ், எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் மில்லிபாண்ட் என மூன்று முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றாக ஸ்காட்லாந்து நாட்டிற்கு படையெடுத்தார்கள்.

    மூலைமுடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார்கள். பிரிவினை என்பது இலேசான விடயம் அல்ல அதன் பக்க விளைவுகளும், பின்விளைவுகளும் ஸ்காட்லாந்து நாட்டினருக்கும், எஞ்சிய ஐக்கிய இராச்சியத்திற்கும் பாதகமாகவே அமையும் என்பதைப் பறைசாற்றினார்கள்.

    ஐக்கிய இராச்சியத்தின் முன்னனி வியாபார ஸ்தாபனங்களின் நிர்வாகிகள் இப்பிரிவினை இடம்பெற்றால் தமது வியாபார ஸ்தலங்களின் ஸ்காட்லாந்து நடவடிக்கைகளை ஐக்கிய இராச்சியப் பகுதிகளுக்கு மாற்ற வேண்டி வரும் என்றும் மறைமுகமாக அது ஸ்காட்லாந்து மக்களின் வேலைகளைப் பறிக்கும் என்றும் எச்சரித்தார்கள்.

    இங்கிலாந்து நாட்டின் அரச வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்து நிறுவனத்தின் முகாமையாளர் இப்பிரிவினையால் ஸ்காட்லாந்து நாட்டின் நிதிநிலைமைகள் பாதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

    விளைவாக கருத்துக் கணிப்புகள் இப்பிரிவினைக்கு எதிரானவர்களின் வெற்றியை நோக்கித் திசை திரும்பியுள்ளது.

    பிரிவினைப் பிரசாரத்தை முன்னெடுக்கும் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சரோ… சே! இதெல்லாம் வெறும் பூச்சாண்டி! இப்பிரிவினைக்கெதிரானவர்களின் தூண்டுதல்களினால் இத்தகைய பயமுறுத்தல்கள் மக்களின் நோக்கத்தைத் திசைதிருப்ப விடுக்கப்படுகின்றன என்கிறார்.

    இம்மடலை நான் வரைந்து கொண்டிருக்கும் இன்றுதான் பிரச்சாரத்திற்குரிய கடைசிநாள். நாளை பொது வாக்கெடுப்பு.

    இதிலிருந்து எமக்கு உறுதியாகத் தெரிவது என்னவென்றால் , இவ்வாக்கெடுப்பின் முடிவு எதுவாக இருந்தாலும் ஐக்கிய இராச்சியத்தின் வரலாற்றில் ஒரு புது அத்தியாயம் எழுதப்படத்தான் போகிறது.

    எப்படி என்கிறீர்களா ?

    scotland2ஸ்காட்லாந்து பிரிவினையை ஆதரித்து அம்மக்கள் வாக்களித்தால் அம்மாற்றம் ஸ்காட்லாந்து மட்டுமல்ல ஏனைய ஐக்கிய இராச்சிய பகுதிகளையும் மிகவும் பாதிக்கும்.

    ஐக்கிய இராச்சியத்தின் தேசியக்கொடி மாற்றப்பட வேண்டும்.

    இப்பிரிவினைய எதிர்த்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்து அங்கம் வகிக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் தீர்மானித்தால் ஐக்கிய இராச்சியத்தின் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளின் படி ஸ்காட்லாந்து நாட்டு மாநில அரசுக்கான அதிகாரப்பரவலாக்கல் மேலும் விஸ்தரிக்கப்பட் வேண்டும்.

    இதை நடைமுறுத்த வேண்டுமானல் ஏனைய மாநில அரசுகளான “வேல்ஸ்”, “வட அயர்லாந்து” ஆகிய மாநில அரசுகளின் அதிகாரங்களும் இதற்கு இணையாக பரவலாக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் “இங்கிலாந்து” எனும் மாநில அரசு ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும்.

    இவைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானல் ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் சாசனம் மாற்றி எழுதப்பட வேண்டும்.

    சில வாரங்களுக்கு முன்னால் பிரபல ஊடகவியலாளர் அண்ட்ரூ நீல் அவர்களினால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் இவ்வாக்கெடுப்பின் முடிவினால் ஏற்படும் பாதிப்புகள் விரிவாக விளக்கப்பட்டது.

    ஸ்காட்லாந்து மக்கள் பிரிந்து போனால் போகட்டும் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம் என்று இதனை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஏனைய ஐக்கிய இராச்சியப் பகுதி மக்கள் அனைவரும் அவதானமாக பார்க்க வேண்டிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சி இது.

    இதன் பாதிப்புகளின் ஆழம் நாமனைவரும் இதனைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதவாறு அமைந்துள்ளது.

    இதைப்பற்றி விரிவாக மற்றொரு மடலில் பார்ப்போம்.

    எது எப்படியாயினும் ஐக்கிய இராச்சியத்தின் முன்னூறு ஆண்டுகால அரசியல் வரலாறு, அதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படுவது நிச்சயமாகிறது.

    சரி ஸ்காட்லாந்து மக்கள் தமது விதியை நிர்ணயிக்க வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது, அதனால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்லவே ஏனைய ஐக்கிய இராச்சிய மக்களுமல்லவா ?

    அப்படியாயின் அவர்களின் எண்ணப்பிரதிபலிப்புகளை நிர்ணயிக்க அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இல்லையா ?

    அர்த்தமிகுந்த கேள்வி காலம் விடை பகருமா?

    மீண்டும் அடுத்த மடலில்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share