Author Archives: டாக்டர்.சுபாஷிணி

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 100.

 வீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து முனைவர் சுபாஷிணி உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்ள பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச் சமைத்தாலும், ஒரு துளி உப்பில்லாவிட்டால் அந்த உணவே பாழ் தான். உலக மனிதர் அனைவருமே உப்பினை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடற்கரையோரங்களில் தான் உப்பளங்கள் பொதுவாக இருக்கும். ஒரு நாட்டின் மையப் புள்ளியிலே நிலத்துக்குக் கீழே 327 மீட்டர் ஆழத்தில் ஒரு உப்புச் சுரங்கம் இருக்கின்றது. அதனோடு இணைந்தார் போன்ற, உப்பினாலேயே வடிக்கப்பட்ட ஒரு ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 99

செக்போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி முனைவர் சுபாஷிணி ஜெர்மனியின் வரலாற்றில் பல முக்கிய தேதிகள் நீண்ட பட்டியலாகவே உள்ளன. மிகப் பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்த நாடு ஜெர்மனி என்பது உண்மையே. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏனைய உலக நாடுகளின் மத்தியில் கிடைத்த பிரபலம் போல ஜெர்மனிக்குக் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படி மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாகத் திகழ்வது ஆகஸ்டு 13, 1961ம் ஆண்டு. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் ஜெர்மனியைப் பாதுகாப்பதில், குறிப்பாக அதன் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 98

உடைந்த உறவுகள் – அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா முனைவர் சுபாஷிணி காதல்.. காதல்.. காதல்.. பழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா? மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா? வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர். தற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு விடுவதை மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே உணர்ந்து அனுபவித்துக் கடந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய அம்சங்களான ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 9​7

தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா முனைவர் சுபாஷிணி ​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தினைப் பற்றி இந்தப் பதிவில் சில செய்திகள் பகிர்ந்து கொள்கிறேன். கோலாலம்பூரின் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு அருகே, டாமான்சாரா சாலையில் அமைந்திருக்கின்றது மலேசிய தேசிய அருங்காட்சியகம். மலேசிய மக்கள், வரலாறு, மன்னர்கள், பேரரசுகள், காலனித்துவ ஆட்சிக்கால செய்திகள், கலாச்சாரம், அகழாய்வு என மலேசியாவைப் பற்றி பொதுவாக ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துத் ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 96

தேசிய அகழாய்வு அருங்காட்சியகம் , ஏதன்சு, கிரேக்கம். முனைவர் சுபாஷிணி கிரேக்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் எழும் அதிர்வுகள் அதன் பழமையின் பெருமையைக் குறிப்பதாகத்தான் இருக்கும். இன்றைய கிரேக்கமும் பழமையான நாகரிகத்தின் எச்சங்களைப் போற்றும், அதன் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் தான் உள்ளன. கிரேக்கத்தின் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளுமே அகழ்வாராய்ச்சி நடத்தினால் தோண்டத் தோண்ட புராதனச் சான்றுகள் கிடைக்கும் வகையில் தான் உள்ளன. அகழ்வாராய்ச்சியின் வழியாகத் தான் வரலாற்றுப் பழமை சொல்லும் சான்றுகளைத் தேட வேண்டும் என்ற வரையறை இன்றி நூற்றாண்டுகளைக் ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 95

குவா கெலாம் குகை அருங்காட்சியகம், பெர்லிஸ், மலேசியா முனைவர் சுபாஷிணி ஈய வளமுள்ள தென்கிழக்காசிய நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதை நாம் வரலாற்றுப் பாட வகுப்பில் படித்திருப்போம். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் குறிப்பாக 19ஆம் நூற்றாண்டில் பல சீனர்கள் மலேசியா நோக்கி ஈயம் கண்டெடுக்கும் பணிக்காக வந்தனர் என்பது வரலாறு. ஆண்களும் பெண்களுமாக ஈயம் தோண்டும் தொழிலில் ஈடுபட்ட தகவல்கள் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெர்லிஸ் மாநிலத்தில் காக்கி புக்கிட் பகுதியில் (இது தாய்லாந்துக்கு மிக அருகாமையில் உள்ள அடர்ந்த காடுகள் கொண்ட ஒரு பகுதி) ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 94

டனூப் நதி அருங்காட்சியகம், டோனாவேஷிங்கன், ஜெர்மனி முனைவர் சுபாஷிணி நதிகள் பார்ப்போர் மனதை அமைதி கொள்ளச் செய்யும் பண்பு கொண்டவை. நதிகளின் பிரமாண்டம் காண்போரைத் தன்னிலை இழக்கச் செய்யும் தன்மையுடையது. தமிழகச் சூழலில் தாமிரபரணி, வைகை, காவேரி, கொசத்தலை, பெண்ணையாறு போன்ற நதிகள் புகழ்பெற்றவை. ரஷ்யாவின் வோல்கா நதிக்கு அடுத்து இப்பிராந்தியத்தில் மிக நீளமான நதி என்ற சிறப்பைப் பெறுவது டனூப் நதி. ஜெர்மனியை மட்டும் எடுத்துக் கொண்டால் இங்கு பிரபலமான மூன்று நதிகளில் ஒன்று என டனூபை குறிப்பிடலாம். ரைன், நெக்கார் ஆகிய ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 93

தேசிய அருங்காட்சியகம், கிப்ரால்ட்டார் முனைவர் சுபாஷிணி ஸ்பெயின் நாட்டின் தெற்கில், ஆப்பிரிக்க கண்டத்தின் மொரோக்கோ நாட்டின் வடக்கில், அல்போரான் கடல் பிரிக்கும் இடத்தில் இருப்பதுதான் கிப்ரால்ட்டார். ஸ்பேனிஷ் தாக்கத்துடன் கூடிய அரேபிய சொல் – ஜபால் தாரிக் – அதாவது தாரிக் மலைகள் எனப்படுவது கிப்ரால்ட்டார் என வழக்கில் வந்தது. ஸ்பெயின் நாட்டின் தெற்கு எல்லையில் தொங்கிக்கொண்டிருக்கும் இப்பகுதி ஸ்பெயினுக்குச் சொந்தமானதாக இருக்குமோ என சிலர் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. இது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு பகுதி என்பது ஆச்சரியப்படுத்தலாம். ​ ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 92

தேசிய அருங்காட்சியகம் டப்லின், அயர்லாந்து முனைவர் சுபாஷிணி ​கெல்ஸ் நூல் (The book of Kells) எனப்படும் கிறிஸ்துவ கோஸ்பல் பாடல்கள் கொண்ட நூல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இது 9ஆம் நூற்றாண்டில் முழுதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நூல். எழுதிய நூல் என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நூல் என்று சொல்வது இதற்கு மிகப் பொருந்தும். இந்நூலில் இலத்தீன் மொழியில் புதிய டெஸ்டமனில் உள்ள நான்கு கோஸ்பல்கள் அடங்கியுள்ளன. இவற்றுடன் பல வாசகங்களும் ஓவியங்களும் நிறைந்துள்ள ஒரு கலைநயம் மிக்க ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 91

பீசா சாய்ந்த கோபுர அருங்காட்சியகம், பீசா, இத்தாலி முனைவர் சுபாஷிணி உலக அதிசயங்களில் ஒன்று. சரிந்து விழுந்து நொறுங்கி விடுமோ எனப் பலரும் நினைத்துத் திகைக்கும் கட்டிடம் என்று அடையாளம் காணப்படும் பீசா கோபுரம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை. பீசா சாய்ந்த கோபுரம் அடிப்படையில் ஒரு மணிக்கூண்டு என்று தான் சொல்ல வேண்டும். பீசா நகரின் தேவாலயத்தின் ஆலய மணிகள் கட்டப்பட்ட கூண்டு தான் இது. கி.பி.1152ம் ஆண்டில் பீசா தேவாலயத்தின் கட்டிடப்பணிகள் தொடங்கப்பட்டு கி.பி.1363ம் ஆண்டில் நிறைவு பெற்றது. இந்தத் தேவாலயத்தை உலகம் ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 90

அக்வின்க்கும் பண்டைய ரோமானிய நகரம், அதன் அருங்காட்சியகம் – பூடாபெஷ்ட், ஹங்கேரி முனைவர் சுபாஷிணி பண்டைய ரோமானிய பேரரசு தெற்கே மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஐரோப்பா முழுமைக்கும், இங்கிலாந்து, அயர்லாந்து என விரிந்த மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்தது. தன் ஆட்சி காலத்தில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகளில் நகரங்களை நிர்மானித்தது. பண்டைய ரோமானிய நகரங்களின் எச்சங்களை ஐரோப்பாவின் நாடுகளில் இன்றும் ஆங்காங்கே காணலாம். அத்தகைய சிதலமடைந்த ஒரு பண்டைய நகரமே ஹங்கேரியின் தலைநகரமான பூடாபெஷ்ட் நகரிலிருக்கும் அக்வின்க்கும் (Aquincum). அக்வின்க்கும் ரோமானியப் ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 89

 பிரித்தானிய அருங்காட்சியகம், லண்டன், இங்கிலாந்து முனைவர் சுபாஷிணி உலகின் மிகப் பிரசித்தி பெற்ற பத்து அருங்காட்சியகங்களைப் பட்டியலிட்டால் அதில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் அமைந்திருக்கின்ற பிரித்தானிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தினுள் நுழைந்ததும் நமக்கு ஏற்படும் முதல் எண்ணம், ஒரு நாள் போதுமா? என்பதுதான். போதாது என நம் மனம் சொன்னாலும், சில வேளைகளில் நம்மை வேறு அலுவல்கள் இழுப்பதால் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வருவது நிகழகத்தான் செய்யும். லண்டனுக்கான பயணங்களில் மூன்று வெவ்வேறு சமயங்களில் இந்த அருங்காட்சியகத்திற்குச் சென்றிருக்கிறேன். ஒவ்வொரு ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  88

-முனைவர் சுபாஷிணி டெ வாக் விண்ட்மீல் அருங்காட்சியகம், லைடன், நெதர்லாந்து விண்ட்மில் என்பவை காற்றின் மூலம் கிடைக்கக்கூடிய சக்தியைக் காற்றாடிகளின் சுழற்சியின் வழி உருவாக்கி, அதன் வழி கிடைக்கும் சக்தியை ஒரு குறிப்பிட்ட வகைப் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. பண்டைய காலத்தில் விண்ட்மில்கள் பயிர்களை அரைத்துத் தூளாக்கி மாவாக்கவும் தேங்கிய தண்ணீரை வெளியே எடுத்துக் கொட்டவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. நாளடைவில் விண்ட்மில்கள் உருவாக்கும் சக்தியை மின்சார சக்தியாக மாற்றலாம் என்பதை அறிவியல் துறை ஆய்வுகள் கண்டுபிடித்ததன் விளைவாகப் பெருவாரியாக விண்ட்மில்கள் உலகளாவிய அளவில் மின்சார ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் –  87

செயிண்ட் தோமஸ் கல்லறை அருங்காட்சியகம், சென்னை, தமிழகம், இந்தியா -முனைவர் சுபாஷிணி ஏசு நாதருடன் துணையாக இருந்த 12 இறை தூதர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் செயிண்ட் தோமஸ் அவர்கள். செயிண்ட் தோமஸ் அன்றைய ஜெருசலத்தின்  ரோமானியப் பேரரசிலிருந்து வெளியேறி ஆசிய நாடுகள் பக்கம் வந்ததாகவும், அவர் தமிழகத்தில் வந்திறங்கி வாழ்ந்து பின் மறைந்ததாகக் கிறித்துவ மதத்தினரால் நம்பப்படுகின்றது.   இன்று நமக்குக் கிடைக்கின்ற பாரம்பரியச் செய்திகளின் தொடர்பில் பார்க்கும்போது, செயிண்ட் தோமஸ் அவர்கள், அன்று தென் இந்தியாவின் மிக முக்கிய மேற்குக் கடற்கரை துறைமுகப் பட்டினமாகத் ...

Read More »

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 86

அனைத்துலக வாசனை திரவிய அருங்காட்சியகம், க்ராஸ், பிரான்சு முனைவர் சுபாஷிணி The Perfume என்ற ஒரு திரைப்படம் பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கலாம். அடிப்படையில் ஒரு நாவலைத் தழுவிய ஒரு திரைப்படைப்பு இது. இதில் பிரான்சின் க்ராஸ் நகரத்தில் நிகழும் ஒரு திகில் சம்பவத்தை கதையாக்கிக் காட்டியிருப்பார்கள். இலைகளிலிருந்தும், செடிகளிலிருந்தும், மரப்பட்டைகளிலிருந்தும் வாசனை திரவியங்களை உருவாக்கும் கலையையும் மிஞ்சியதாக அழகிய இளம் பெண்ணின் உடலிலிருந்து வாசனை திரவியம் எடுக்கும், சிந்தனை பேதலித்த ஒரு ஆராய்ச்சியாளனைப் பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தத் திரைப்படம். இந்தக்கதையின் மையக்கரு ...

Read More »