மாதவ. பூவராக மூர்த்தி

இவர் மயிலாடுதுறையில் 29.10.1953 பிறந்தார். அ.வ.அ.கல்லூரியில் முதுகலைப் (பொருளாதாரம்) பட்டம் பெற்றவர். கல்லூரி நாட்களில் கவிதை, பட்டி மன்றம், நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வமும்,ஈடுபாடும் கொண்டவர். கல்லூரி நாடகங்களில் பங்கேற்றார் வங்கிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர், சென்னையில் கலைமாமணி.பூர்ணம் விசுவநாதன் துவக்கிய பூர்ணம் நியூ தியேட்டரில் இணைந்தார். அவரிடம் நாடகத்துறையின் பல்வேறு துறைகளில் பயிற்சி அடைந்தார். 1979ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கிய இக்குழு திரு. சுஜாதா அவர்களின் நாடகங்களை அரங்கேற்றியது. குறிப்பாக அடிமைகள், டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு,ஊஞ்சல்,சிங்கமய்யங்கார் பேரன் ஆகியவை நாடக உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1995 ஆம் ஆண்டு குருகுலம் (தி ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 95. நாடகக்குழு நண்பர்களுடன் இணைந்து தொடங்கப் பட்டது. இக்குழு இதுவரை 22 நாடகங்களைத் தயாரித்துள்ளது. இவர் இதுவரை 12 நாடகங்கள் எழுதியுள்ளார். 18 நாடகங்களை இயக்கியுள்ளார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் நடத்தும் கோடை நாடக விழாவிலும், மயிலாப்பூர் அகடமியிலும் நடிகர், இயக்குநர்,கதாசிரியருக்கான பரிசுகளைப் பெற்றுள்ளார். நகரத்தில் இயங்கும் பல நாடகக்குழுவில் நடித்திருக்கிறார். 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடரில் நடித்திருக்கும் இவர் 4 திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். டி.கே.எஸ் சங்கரதாஸ் ஸ்வாமிகள் அளித்த “நாடகச் செல்வம்” விருது தேவன் அறக்கட்டளை விருது, விஸ்டம் பத்திரிக்கை அளித்த கதாசிரியர் விருது இவை சமீபத்திய சந்தோஷங்கள். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு “சிரிக்கலாம் வாங்க” கங்கை புத்தக நிலையத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளது.