ராஜசேகர். பா

குமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தை அடுத்த வீயன்னுரில் 1969-இல் பிறந்த நான் குடும்ப சூழ்நிலை காரணமாக +2 வரை படிக்க முடிந்தது. இருந்தாலும் தமிழ் மேல் உள்ள அளவிட முடியாத ஈர்ப்பால் என்னுடைய 13 வயதிலிருந்தே பத்திரிக்கைகளில் துணுக்கு , சிரிப்பு ,கவிதை ,கட்டுரைகள் எழுதி வருகிறேன் ,1989-இல் பாக்யா-வில் கதாசிரியன் என்ற தலைப்பில் முதல் கவிதை வெளியாயிற்று,தொடர்ந்து பிரபல முன்னணி பத்திரிகைகளில் எழுதியிருக்கிறேன் ,என் எழுத்துகள் மூலம் நல்ல கருத்துகளை பதிவு செய்யவே விரும்புகிறேன். தற்போது முகநூலில் rajasekhar rajasekhar என்ற id இல் தொடர்ந்தது என் கவிதைகளை பதிவு செய்து வருகிறேன் . வருங்காலத்தில் என் கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட விரும்புகிறேன் .இறைவன் அருளாசிகளுக்காகக் காத்திருக்கிறேன் .