Category: மொழிபெயர்ப்பு

  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29

    மூலம்: எமிலி டிக்கின்சன் 
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் – 29:புல்லில் போகும் பாம்பு 

    ஒடுங்கிய பாம்பு ஒன்று புல்தரையில்
    ஊர்ந்து செல்லும் எப்போ தாவது
    எதிர்வரக் காண்பாய் நீ, இல்லையா ?
    நடுக்கம் தரும் ஓர் திடீர் காட்சி அது !

    A narrow fellow in the grass
    Occasionally rides;
    You may have met him—did you not
    His notice sudden is,

    புல்தரையைப் பிரிக்கும் சீப்புபோல்
    புள்ளித் தண்டு நெளிவது தெரியும்
    பிறகு காலைப் பின்னிக் கொண்டு
    உதறினால் அவிழ்ந்து முன் நழுவும்.

    The grass divides as with a comb,
    A spotted shaft is seen,
    And then it closes at your feet,
    And opens further on.

    ஈரமுள்ள தளம் அதற்குப் பிடிக்கும்
    பேரளவு குளிர்த் தரையும் பிடிக்கும்
    சிறுவன் என் வெறுங் காலைப் பன்முறை
    தொட்டுச் செல்லும்  பட்டப் பகலில்.

    He likes a boggy acre,
    A floor too cool for corn,
    But when a boy and barefoot,
    I more than once at noon

    விலகிப் போன தென நினைத்தேன்
    வெய்யிலில் அது மெதுவாக நகரும்.
    காத்திட அதைப் பிடிக்கக் குனிந்தேன்
    சுருண்டு கொண்டு பிறகு போனது.

    Have passed, I thought, a whip lash,
    Unbraiding in the sun,
    When stooping to secure it,
    It wrinkled and was gone.

    இயற்கை ஜீவன் பற்பல அறிவேன்
    என்னையும் நன்கு  அறியும் அவை.
    கவலை கொள்வேன் மெது நகர்ச்சிக்கு
    கனிவுடன் அவற்றை நான் விலக்குவேன்

    Several of nature’s people
    I know, and they know me;
    I feel for them a transport
    Of cordiality.

    அதன்பின் பார்க்க வில்லை அதனை
    சேர்ந்தோ அல்லது தனியா கவோ
    அச்ச மின்றி, பெருமூச் சின்றி,
    நச்சு ஜீவனை  உணர்வு எலும்பின்றி.

    But never met this fellow,
    Attended or alone,
    Without a tighter breathing,
    And zero at the bone.

    Share
  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் -28

    மூலம்  எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா

    வசந்த காலத்தில் தோன்றும் ஒளி -28:  வசந்த காலத்தில் தோன்றும் ஒளி

    வசந்த காலத்தில் தோன்றும் ஒளி
    வருடத்தில் வரும், அது உள்ள தன்று!
    தருணம் ஏதேனும் இருக்கும், கால்
    தடம் வைத்தது போலிருக்கும், மார்ச்சு.

    A light exists in spring
    Not present on the year
    At any other period.
    When March is scarcely here

    எழும் ஒரு நிறம் ஓங்கி நிற்கும்
    ஏகாந்தக் குன்றுகள் மேலே!
    விஞ்ஞான விளக்கம் மீறும்.
    ஆயின் மனித வியல் உணரும்.

    A color stands abroad
    On solitary hills
    That science cannot overtake,
    But human nature feels.

    முற்றப் புல்லில் ஒளி காத்திருக்கும்
    தூரத்து மரக்கிளை ஊடே நுழையும்!
    தூரத்து மலைச் சரிவு மேலே படியும்.
    என்னோடு பேச வருவதாய் புரியும்.

    It waits upon the lawn;
    It shows the furthest tree
    Upon the furthest slope we know;
    It almost speaks to me.

    அந்திப் பொழுது வந்த போது,
    அனுதினப் பகல் கடந்த பிறகு
    ஊழ்விதி ஓசையிலாது இயங்கும்
    ஒளி மறையும், நாம் வாழ்வோம்.

    Then, as horizons step,
    Or noons report away,
    Without the formula of sound,
    It passes, and we stay:

    அது எனக்கோர் பண்பிழப்பு
    பாதிக்கும் நமது நிறைமையை!
    வணிகம் திடீரென முறிந்தி ருக்கும்,
    புனித நிலை ஒன்றின் மீதிருக்கும்.

    A quality of loss
    Affecting our content,
    As trade had suddenly encroached
    Upon a sacrament.

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 27

    மூலம் : எமிலி டிக்கின்ஸன் 
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன் -27

    நடக்கக் கூடியதைச் சிந்திப்பேன்
    விளக்க உரை விட வியப்பு வீடு.
    தேவைக்கு மிஞ்சிய ஜன்னல்கள்
    மேல் தரக் கதவுகள் அமைப்பு.

    I dwell in Possibility –
    A fairer House than Prose –
    More numerous of Windows –
    Superior – for Doors –

    தேக்கு மரத்தால் கட்டிய வீடுகள்
    தகர்க்க முடியாதவை கண்களால்
    நிரந்தர மான கூரை அமைப்பு
    இருபுறத்திலும் தணிவான சரிவு.

    Of Chambers as the Cedars –
    Impregnable of eye –
    And for an everlasting Roof
    The Gambrels of the Sky –

    மனை சுற்றிப் பார்க்க வருவோர்
    தொழிலுக்கு ஏற்றவர் தான்
    விரிந்தென் சிறு கரங்கள் அகண்டு
    சொர்க்க புரி மனை விளக்கும்.

    Of Visitors – the fairest –
    For Occupation – This –
    The spreading wide my narrow Hands
    To gather Paradise –

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதை – (26)

    எமிலி டிக்கின்ஸன் கவிதை – (26)

    மூலம்: எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    How Happy I Was If I Could Forget -26

    எத்தகை மகிழ்ச்சி என்னால் மறக்க முடிந்தால்,
    எத்தகைக் கொடிய துயர் நினைத்தி ருந்தால்,
    அத்தகைய காலக் கேடு தாழ்வு நிகழ்ச்சி
    ஆயினும் மீண்டு புலரும் அரும் மலர்ச்சி

    How happy I was if I could forget
    To remember how sad I am
    Would be an easy adversity
    But the recollecting of Bloom

    கனத்துப் போகும் நவம்பர் மாதம்
    மனத்து உறுதி எனக்கு மீளும் வரை,
    சிறுமி போல் செல்வழி தவறினேன்,
    பனிக்குளிரில் மரண எதிர்பார்ப்பு.

    Keeps making November difficult
    Till I who was almost bold
    Lose my way like a little Child
    And perish of the cold.

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (24 & 25)

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (24 & 25)

    ஆங்கில மூலம்: எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம்:  சி. ஜெயபாரதன், கனடா

    தின்று விழுங்கினான் முக்கிய சொற்களை -24

    தின்று விழுங்கினான் முக்கிய சொற்களை
    ஆயின் மனக் கிளர்ச்சி வலுத்து உயர்ந்தது,
    ஏழை என்பதை அவன் அறியான், அடுத்து
    பாழடைந்து போய் விட்டது  உடற் கட்டு.

    He ate and drank the precious words,
    His spirit grew robust;
    He knew no more that he was poor,
    Nor that his frame was dust.

    நடனம் ஆடுவான் வேலை யற்ற நாட்களில்
    கற்பனை  அவனது இறக்கைகள், வெறும்
    ஒரு புத்தகம் தரும், எத்தகை விடுதலை
    கிடைக்கும் அவிழ்ந்த மனக் கிளர்ச்சிக்கு !

    He danced along the dingy days,
    And this bequest of wings
    Was but a book. What liberty
    A loosened spirit brings!

    **************************************

    புகழ்ச்சி ஒரு தேனீ – 24

    ஓங்கும் புகழ் தேன் திரட்டும் ஒரு தேனீ
    ரீங்காரக் கானம் ஒன்றுளது அறிவிக்க,
    கொட்டும் கொடுக்குளது நெருங்கின்
    நீங்கிச் செல்ல உள்ளது இறக்கை

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (23)

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (23)

    ஆங்கில மூலம்; எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம்;  சி. ஜெயபாரதன், கனடா

    ஏன் உன்னை நேசிக்கிறேன்  இறைவா ? – 23

    ஏன் உன்னை நேசிக்கிறேன் இறைவா?
    என்ன காரண மென்றால்
    புயல் விரும்புவ தில்லை, புல்லை
    அதன் விளக்கம்: புயல் எங்கெங்கு வீசினும்
    பெண் தன்னிடத்தில் நிற்க இயலாது.

    “Why do I love” You, Sir?
    Because—
    The Wind does not require the Grass
    To answer—Wherefore when He pass
    She cannot keep Her place.

    காரணம் இறையே அறியும், மேலும்
    பெண் நீ அறிய மாட்டாய்
    நமக்குப் புரிவ தில்லை
    நமக்குப் போது மானவை பற்றி
    அப்படி இருப்பது  ஞான  இயல்பு

    Because He knows—and
    Do not You—
    And We know not—
    Enough for Us
    The Wisdom it be so—

    மின்னல் அடித்தால், விழிக்குச் சொல்லாது,
    சட்டென மூடுமவை  எதிரே அடித்தால்.
    இறைவன் அறிவான் விழிகள் பேசாவென,
    காரணம் கூறப்பட வில்லை, எவராலும்.

    The Lightning—never asked an Eye
    Wherefore it shut—when He was by—
    Because He knows it cannot speak—
    And reasons not contained—
    —Of Talk—
    There be—preferred by Daintier Folk—

    சூரிய உதயம், இறை அழுத்தும் என்னை
    கடவுள் பொழுது புலர்ச்சி, என் காட்சி
    ஆதலால் அதன் பின்,
    காதலிக் கிறேன் இறைவா நின்னை.

    The Sunrise—Sire—compelleth Me—
    Because He’s Sunrise—and I see—
    Therefore—Then—
    I love Thee—

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (21 -22)

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் (21 -22)

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    மூளை வானை விட அகண்டது – 21

    மூளை வானை விட அகண்டது
    அருகே வைத்து  விட்டால் அவை
    ஒன்றை ஒன்று  விழுங்கி விடும்.
    அண்டையில்  நீ சும்மா நின்றாலும்

    மூளை கடலை விட ஆழமானது.
    வானுக்கும் ஆழிக்கும் இடையே
    மானிட மூளையை வைத்தால்
    ஒன்றை ஒன்று உறிஞ்சி விடும்

    வாளி நீரைப் பஞ்சு போல்.
    மனித மூளை கடவுள் அளவு
    எடைக்கு எடை  பளு பார்த்தால்
    சொல்லுக்கும் உச்சரிப்புக்கும்
    உள்ள வேறுபா டாய் இருக்கும்.

    The Brain – is wider than the sky
    For-put them side by side-
    The one the other will contain
    With ease-and You-beside-

    The Brain is deeper than the sea-
    For-hold them-Blue to Blue-
    The one the other will absorb-
    As Sponges-Buckets-do-

    The Brain is just the weight of God-
    For-Heft them-Pound for Pound-
    And they will differ-if they do-
    As Syllable from Sound-

    ******************

    ஆகா நிலா, வெள்ளி -22

    அதோ நிலா, அந்த வெள்ளி
    அதிக தூரம் அவற்றி்டை, ஆனால்.
    நீ  போல் தொலைவில்
    வேறு எதுவும் இல்லை.
    வான்வெளித் தொலைவோ
    அன்றி முழங்கை அளவோ
    என்னை நிறுத்துமா !

    Ah, Moon—and Star!
    You are very far—
    But were no one
    Farther than you—
    Do you think I’d stop
    For a Firmament—
    Or a Cubit—or so?

    குயிலின் மென் சிறகை
    கடனாய் வாங்கி
    கெமாய்ஸ் பூட்ஸ் அணிந்து
    உன்னோடு இருப்பேன்,
    இன்றிரவு.

    I could borrow a Bonnet
    Of the Lark—
    And a Chamois’ Silver Boot—
    And a stirrup of an Antelope—
    And be with you—Tonight!

    நிலாவும் வெள்ளியும்
    தூரத்தில் இருந்தாலும்
    உனக்கு வெகு தூரத்தில்
    உள்ளது ஒன்று, அது .
    வானிலும் பெரியது
    எனக்கும் தூரம், ஆதலால்
    நானும் ஏக இயலாது.

    But, Moon, and Star,
    Though you’re very far—
    There is one—farther than you—
    He—is more than a firmament—from Me—
    So I can never go!

    Share
  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் (19 -20)

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் (19 -20)

    மூலம்: எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    A Day (I’ll tell you how the sun rose)  – 19

    சூரியன் எப்படி எழுமெனச் சொல்வேன்
    கதிர்  நாடா ஒன்று ஒருதரம் சிதறும்.
    ஆலயக் கோபுரம் கதிரொளி மேவும்
    செய்தி அணில்கள் போல் விரையும்.

    I’ll tell you how the sun rose, —
    A ribbon at a time.
    The steeples swam in amethyst,
    The news like squirrels ran.

    குன்றுகள் சிகரம் அவிழ்ந்து விடும்
    குயிலின்  கூவல்கள் துவங்கி விடும்
    எனக்குள் முணு முணுப்பேன்  நான்
    அது தான் கதிரவன் செயலெனக் கண்டு.

    The hills untied their bonnets,
    The bobolinks begun.
    Then I said softly to myself,
    “That must have been the sun!”

    சூரியன் மறைவ தெப்படி அறிந்திலேன்
    அங்கோர் பழுப்பு மண் மேடு தெரியுது
    பன்னிறச் சிறுவர், சிறுமியர்  எப்போதும்
    ஏறிச் சுவர் தாண்டு வதைக் காண்பேன்.

    But how he set, I know not.
    There seemed a purple stile
    Which little yellow boys and girls
    Were climbing all the while

    அடுத்த பக்கம் ஏறி அவர்   இறங்கவும்
    அதிகாரப் போதகர் சாம்பல்  உடையில்
    மெல்ல மாலை சட்டம்  சபை கூடி
    சேய்கள் செல்ல வழி வகுப்பார்.

    Till when they reached the other side,
    A dominie in gray
    Put gently up the evening bars,
    And led the flock away.

    *****************

    After great pain, a formal feeling comes  – 20

    பெரு வலிக்கு பிறகோர்  உணர்வு வந்திடும்.
    நரம்புகள் முறிவு சமாதிபோல் தங்கிடும்.
    நெஞ்சு கேட்கும் இறுகி, தாங்குவது  ஈசனா ?
    நேற்று நிகழ்ந்த நேர்வா, நூறாண்டு முன்னதா ?

    After great pain, a formal feeling comes –
    The Nerves sit ceremonious, like Tombs –
    The stiff Heart questions ‘was it He, that bore,’
    And ‘Yesterday, or Centuries before’?

    பாதங்கள் யந்திர மாய்ச் சுழற்சி
    மரக் கால்கள் போல் ஓர் உணர்ச்சி
    தரைமேல், அல்லது  ஆகா யத்தில்
    ஏதோ ஒன்றாய் மேலாய் இருப்பினும்
    சாதா கல்போல் இருக்கும் திருப்தி.

    The Feet, mechanical, go round –
    A Wooden way
    Of Ground, or Air, or Ought –
    Regardless grown,
    A Quartz contentment, like a stone –

    இந்த தருணம் ஈய மய மானது
    நினைவில் கொள்வது அது நீடித்தால்
    குளிரில் உறைவோர்  பனிப்பூ காண்பர்
    முதலில் குளிர்ச்சி, பின் விந்தை நிகழ்ச்சி
    அதற்குப் பிறகு மரண விடுவிப்பு.

    This is the Hour of Lead –
    Remembered, if outlived,
    As Freezing persons, recollect the Snow –
    First – Chill – then Stupor – then the letting go –

    Share
  • நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    நெடும்பாவில் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
                        உதவிப்பேராசிரியர்
                        ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

    ’எச்’ தாலுக்காவின் ஐம்பதாம் எண் வாக்குச்சாவடி எதுவென்று தெளிவானது. நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள நெடும்பாவில்

    “கலெக்டரின் கணினியில் இத்தனை நாட்களாக பாதுகாத்து வைத்திருந்த மிகப்பெரிய இரகசியங்களில் ஒன்று இதுதான்” என்பதை முதலாவது சாவடியின் ஆபிஸர் சிவப்பட்டேரிக் கூறினார். உயர் இரத்த அழுத்தத்தைக் காரணம் காட்டி தன்னை தேர்தல் வேலையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

    பழக்கப்பட்ட தாலுக்கா ஆபிசின் வாசிலில் நானும் மூன்று வாக்குச்சாவடி அலுவலர்களும் ஒரு வாக்குச்சாவடி அசிஸ்டெண்டும் உடன் இருந்தனர். நாங்கள் தேர்தல் சம்பந்தப்பட்ட பொருள்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டிருந்தோம்.

    அதற்கிடையில் ஒரு பழக்கமில்லாதவன் எங்க பக்கத்தில் வந்தான்.

    ”இங்க எங்கே…….?” அவன் நலம் விசாரித்தான்.

    ”நெடும்பாவிற்கு” நான் சொன்னேன்.

    ”ஹா! நெடும்பா!

    நல்ல இடம்…… .நா பல தடவ அங்க போயிருக்கேன்”  அறிமுகமில்லாதவன் இனம் புரியாத சிரிப்புடன் கூறினான். அவனின் கண்கள் ஜொலித்தது. நான் கொஞ்சம் சந்தேகத்தோடு சிவப்பட்டேரியின் முகத்தைப்பார்த்தேன்.

    ”அங்கே சௌகர்யமா இருக்குமா?”

    சிவப்பட்டேரி அவனுக்கு நேராகத் திரும்பினான்.

    சாரே என்ன சௌகர்யம் வேணும்? நல்ல காட்டுப்பூனை போல இருக்கிற பொம்பளங்க இருக்கற ஊருதா. வெளியிலிருந்து வர்ற ஆளுங்களப் பார்த்தாலே குதித்து விழுவாங்க. கறுப்பா இருந்தா என்ன? தேகத்தோட ஒரு வடிவமிருக்கே? போதாக்குறைக்கு பச்ச மருந்துகளோட மணமும்; அறிமுகமில்லாதவன் இவ்வளவும் கூறி, கூடுதலாக வேறெதுவும் கேட்க இடந்தராமல் கூட்டத்தில் கலந்தான்.

    மதியவேளை. ஜீப் அதிகவேகமாகப் பாய்ந்தது. நான் ரூட் ஆபிசர்க்கும் டிரைவருக்குமிடையில் அமர்ந்திருந்தேன். சிவப்பட்டேரியும் மற்றுள்ளவர்களும் பின்னால் அமர்ந்திருந்தனர்.  பின்னால் அவர்களுக்கு நடுவில் இரண்டு வாக்கு பெட்டிகள். எண்ணி அடுக்கப்பட்ட எண்ணூற்றி முப்பது வாக்கு காகிதங்கள். திருத்தப்பட்ட தேர்தல் அட்டவணை அழியாத மை. அரக்கு. முத்திரை. காடாத்துணிப் பைகள் முதலியவை. ஜீப் பின்னுக்குத் தள்ளப்படுகின்ற நகரக்காட்சிகளில் ஆங்காங்கே காமசூத்ராவின் விளம்பரங்கள். அவை படிப்படியாக இல்லாமல் போனது. வெளிக்காட்சிகள் மாறியது.

    காய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்ட செருப்புகளும், தொங்க விடப்பட்ட தோல் சுருளுகளும், நாங்கள் கடந்து செல்வது செருப்பு தைப்பவர்களின் கிராமம் வழியாக என்பதை வெளிப்படுத்தியது.

    வரண்ட உற்சாகமற்றச் சற்றுப்புறங்கள். ஏதோ பழமையான ஒரு கடவுளின் கோயிலுக்கு முன்னால் சில சிறுவர்கள் அம்மணமாக அசைவற்று நின்று கொண்டிருந்தார்கள். நிழல்களில் சாய்ந்து படுத்துக் கொண்டிருக்கும் வயதானவர்கள்.

    ”இனியும் ரொம்பகாலத்துக்கெல்லாம் இவங்க  செருப்பு தயாரிக்க மாட்டாங்க” வயதானவர்கள் மேலிருந்த பார்வையை நகர்த்தி ரூட் ஆபிஸர் கூறினார்.

    ”அது ஏ அப்படி?” டிரைவர் அந்த காரணத்தை அறிய விருப்பம் காட்டினார்.

    ”மிருக வதை நிறுத்தப் போறாங்க இல்லையா?. அப்பறம் இவங்களுக்கு தோல் எப்படிக் கிடைக்கும்” ரூட் ஆபிஸர் கம்யூனிசக் கண்ணோட்டத்தோடு கூறினார்.

    ஜீப் போய் கொண்டிருந்தது.   காய்ந்த கிளைகளுள்ள மரங்களுக்கிடையில் வெயில் மின்னியது. நான் கண்களை மூடினேன். பிறகெப்போதோ குயவர்களின் ஊர் வந்தது. வரிசை வரிசையாக மண்பாண்டங்கள்.

    ”நாம இனியும் அந்த எடத்துக்குப் போகல இல்லையா?” பின்னாலிருந்து மூன்றாம் ஆபிஸரான அரபி  மொழியாசிரியர் கேட்டார்.

    ”பாதி தூரம்தான் ஆயிருக்கு” ரூட் ஆபிஸர் கூறினார். சுவர் விளம்பரங்களோ வெளியில் எங்கும் காணவில்லை. ஒரு பாலைவன பூமி போன்ற இடம் வழியாக ஜீப் நகர்ந்தது.

    முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மஞ்சள் கட்டிடத்தின் முன்பாக ஜீப் தனது பயணத்தை முடித்தது. அரசு அலுவலகம் என்று சுவரில் கறுப்பு நிற எழுத்தால் குறிக்கப்பட்டிருந்தது. நான் வெளியிலிறங்கிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். செம்மண் மைதானத்தின் ஓரங்களில் கறுப்பு நிறப் பாறைகளும், நரைத்த முடி போன்ற ஒரு வகை புல்லும், வடக்குப் பக்கத்தில் ஒரு பெரிய காற்றாடி மரமும் அசையாமல் நின்றது.

    ”இங்கேயெல்லாம் யாரையுமே காணோமே” சிவப்பட்டேரி சொன்னான்.

    ”ஆளுக எல்லாம் அங்கக் கீழே இருப்பாங்க. ரூட் ஆபிஸர் காற்றாடி மிஷினுக்கு நேராக கை காண்பித்தார்.

    போலிங் அசிஸ்டெண்டும், மற்ற இரண்டு சாவடி ஆபிஸர்களும் ஜீப்பிலிருந்து தேர்தல் அறைக்கான பொருட்களைக் கீழே இறக்கினர். ரூட் ஆபிஸர் கட்டிடத்தைத் திறந்தார். அதற்குள்ளிருந்து நாற்றம் வந்தது.

    “நாசம் புடிச்ச எலிங்க. நேத்துதா அத்தன எலிப்பீயையும் எடுத்து வீசினேன்” ரூட் ஆபிஸர் கோபப்பட்டார்.

    எலிகளை எங்கும் பார்க்க முடியல ஆனால் நாங்கள் இருக்கிறோம் என்கிற சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தன.

    ”பாத்துக்கோ இன்னைக்கு இங்க ஆளிருக்கு. தோட்டாக்கள் நிறைத்த துப்பாக்கியும்  புடிச்சு ஒரு போலீஸ்காரணும் நிப்பா” ரூட் ஆபிஸர் எலிகளை மிரட்டினார். அவைகளோ அவரின் மிரட்டலை ஏற்றுக்கொண்டது போல மேலும் சத்தமிட்டது.

    “பரவால்லே” ரூட் ஆபிஸர் தனது வேலையில் ஈடுபட்டார். அவருக்கு அவசரமாகத் திரும்பிப்போக வேண்டியிருந்தது.

    ”கீழே ஐயா என்கிற ஆளோட டீக்கடை இருக்கு. சாப்பாடு அங்கே கிடைக்கும். தண்ணிக்கும் பிரச்சனையில்லை. இதுக்கு மேலே ஒரு சௌகர்யம். இந்த மாதிரி இடத்தில எதிர் பார்க்கக் கூடாது இல்லையா?”. அவர் அலுவலகத்தின் சாவியை என்னிடம் கொடுத்துவிட்டு ஜீப்பிற்கு நேராக நடந்தார்.

    நாங்க வேலை தொடங்கினோம். நெடும்பாவில் வெயில் மங்கத் தொடங்கியது. இருட்டறதுக்கு முன்பு நிறைய வேலைகள் முடிக்க வேண்டியிருக்கு. அதிகாலைல எழுந்திருக்க வேற செய்யணும். போலிங் ஏழு மணிக்கே ஆரம்பிக்க வேண்டும். திடீரென என்னமோ மேலிருந்து வந்து எங்களுக்கு நடுவில விழுந்தது.

    நான் ஜன்னலுக்குப் பக்கத்தில் ஓடினேன். வெளியில் கறுப்புநிறச் சிறுவன். அவனுடைய கண்களில் விசித்திரமானப் பார்வை தெரிந்தது. ஒன்று ரெண்டு நிமிடங்கள் அவன் அப்படியே நின்றுவிட்டு வேகமாக ஓடினான்.

    ஒரு கல்லில் பொதிந்து எதையோ அவன் எங்களுக்கு நடுவில் எறிந்த செய்தியை அதற்குள் அனைவரும் வாசித்திருந்தனர்.

    ”ஒ. இது கொடூரம் தான்” அரபி மொழியாசிரியரின் முகம் வெளிறியது.

    ”நாம என்ன பண்றது”?. ரெண்டாம் போலிங் ஆபீஸரான ஓவிய ஆசிரியர் பயத்தோடு கேட்டார்.

    வெளியில் ஒரு வாகனத்தின் சத்தம் கேட்டது. எங்களது கவனம் அங்கே திரும்பியது. கரும் நீல நிற வாகனம் ஒன்று மைதானத்திற்கு அருகில் நின்றது. யூனிஃபோம் அணிந்த ஒரு போலீஸ்காரன் கையில் மூங்கில் தடியும் மற்றொரு கையில் பையுடன் இறங்கினான். பையை கீழேவைத்துவிட்டு மூங்கில் தடியை இடது தோளில் சொருகிவிட்டு வாகனத்தின் முன்சீட்டில் இருக்கும் மேலதிகாரியை அதிகாரப்பூர்வமாக வணங்கினார். வாகனம் திரும்பிச் செல்லும்வரை அவர் அதே நிலையில் நின்றார்.

    ”அப்பாடா! சரியான நேரத்துக்கு போலீஸ்காரர் வந்தாரே” போலிங் அசிஸ்டெண்ட் ஆபிஸர் நிம்மதியடைந்தார்.

    ”ஒவ்வொரு கல்லையும் நான் அசைத்து பார்ப்பேன். நெடும்பாவில் இருக்கிற ஒவ்வொரு கல்லையும்” போலீஸ் ஆபிஸர் நெடும்பாவில் கிராமம் வழியாக நடக்கும்போது என்னுடன் வந்த அவர் சத்தம்போட்டுக் கூறினார்.

    ”யாரு அந்த பையன்? பதுங்கி நிக்காம சீக்கிரமா வெளில வர்றதுதான் நல்லது”. அவர் புல்தரையில் நின்றுகொண்டு சத்தமிட்டார் பதிலொன்றும் எழவில்லை

    ”எல்லோரோட முட்டியயும் அடிச்சு ஒடச்சிருவேன். வாடா வெளில” அவர் ஷூக்களணிந்த வலது காலை நிலத்தில் ஓங்கி அடித்தார்.

    ”சார் இங்க நில்லுங்க, நானொரு கை பாக்கறே” அவர் ஒரு வேட்டைநாயைப்போல இருப்பக்கங்களிலும் கவனமாகப்பார்த்துக் கொண்டு ஒரு வைக்கோல் போருக்குப்பின்னால் மறைந்தார். சிறிது நேரம் கழிந்து வெற்றியரவத்தோடு அவர் வெளியில் வந்தார். அவருடன் கூனிக்குறுகி நடுங்குகின்ற ஒரு கிழவனுமிருந்தார்.

    ”நானிந்த ராஸ்கலைப்  வைக்கோலுக்குள்ளிருந்துதான் புடிச்சேன். போலீஸ்காரன் அவரை எனக்கு முன்னால் நகர்த்தி நிறுத்தினார்.

    வயதானவரின் கண்களில் வெண்மைநிற அடையாளம் இருந்து.

    ”சொல்லடா. உன்னோட பேரு என்னான்னு?” போலீஸ்காரர் கர்ஜித்தார்.

    ”சௌக்கார்” கிழவன் கூறினான்.

    ”அந்த திமிரெடுத்த பையன் உன்னோட யாரு?

    கிழவன் பேசவில்லை. அதற்குள் மறைவிடங்களிலிருந்து பலரும் வந்தனர். கறுப்பு நிற சிலை போன்ற முகங்கள்.

    ”ஓ ஒளிஞ்சிருந்தீங்களா? போலீஸ்காரன் ஏளனமாகக் கேட்டு மற்றுள்ளவர்களுக்கு நேராக நகந்தார். அவர்கள் யாரும் அசையவில்லை. உறைந்தக்காட்சிகள்.

    ”பரவாயில்ல. இங்க உங்கக் கூட்டத்தில நிறைய அழகிக இருக்காங்கனு கேள்விப்பட்டேனே. அவங்க எல்லா எங்கே? பச்ச மருந்துகளோட வாசனை தானே அவங்களுக்கு”?

    போலீஸ்காரர் தன்னை உற்றுப்பார்க்கின்றவர்களுக்கு முன்னால் மூங்கில் தடியை வாயுவில் சுழற்றிக்கொண்டு நடந்தார்.

    “காட்டுப்பூனைகளோட அறிவு. பச்சை மருந்துகளோட வாசம்.

    ”நானிங்க வந்ததே அதையும் மனசில வெச்சுதா. ட்யூட்டி மட்டும் வேணும்னா எனக்கு வேற ஏதாவது இடத்தில வாங்கியிருக்கலாம்” போலீஸ்காரன் சிரித்தான். அவருடைய மூங்கில் தடி அப்போது வலது கை தொடையில் தொங்கிக்கொண்டிருந்தது.

    “சார் நமுக்குப் போகலாம்” நான் அவரை அழைத்தேன்.

    “உம். ஆனா நா இங்க வருவே. எனக்கு வேண்டியது நல்ல பரங்கி மாங்காய் வற்ற வெச்ச சாராயமும், ஒரு கோழியும், ரெண்டு பொம்பளைகளும். புரிஞ்சுதா? ” அவன் என்னுடன் நடந்தார்.

    நான் திரும்பி பார்த்தபோது. பார்வை, துணுக்கு செய்தி அனுப்பின சிறுவனை எங்களுடைய கண்கள் அடைந்தது. ஒரு நிமிடம் நான் திகைத்துப்போனேன்.

    ”இத பாத்தீங்களா? டீக்கடை நடத்தும் ஐயா, கரிபடர்ந்த சுவரில் உள்ள ஒரு நோட்டீஸை சுட்டிக்காண்பித்தார்.

    ”நெடும்பாவில் சொல்கிறது” அதுதான் நோட்டீஸின் தலைப்பு சிவப்பு எழுத்துக்கள்.

    யாரு இத இங்க ஒட்டனாங்கனு தெரியல, ஆனா புடுங்கி வீச தைரியமில்லை”. ஐயா சொன்னார். அவர் பச்சை நிறமுள்ள அரைக்கை ஆடையும், முழங்கால் வரைக்கட்டிய துண்டும். காதில் சின்ன கடுக்கணும் அணிந்திருந்தார். அவருடைய கால் முழங்காலுக்குக் கீழே சொரிந்து வீங்கியிருந்து.

    பார்த்துக் கொண்டிருக்கவே நெடும்பாவில் இருட்டானது. எலிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. வெளியில் மைதானத்தில் சத்தமிட்டுக் கொண்டு  காற்று வீசியது. இந்த சப்தங்கள் அச்சத்தை உருவாக்கின.

    ”காற்று இப்படி ஓசையிடுவதை நான் இதுவரைக் கேட்டதே இல்லை” சிவப்பட்டேரி கூறினான்.

    தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல்கள் காற்றில் ஆடியது. உடனே வந்தர்றேன்னு சொல்லிட்டுப்போன போலீஸ்காரர் இனியும் வரவில்லை. காற்று சற்று அதிகமானது. நான் கேட்கறது போலீஸ்காரரோட அலறல்னு எனக்கு ஏதோ தோன்றியது. ஒரு வைக்கோல் போருக்கு முன் ஒரு விலங்கைப் போல நின்று அவர் அலறிக்கொண்டிருந்தார். தீ எரிந்து கொண்டிருந்து. அவரின் உருவம் தீ வெளிச்சத்தில் தெளிவானது. அவர் அம்மனமாக நின்றிருந்தார். குறிகள் தொங்கிக் கொண்டிருந்தது.

    ”நாம கூப்பிட்டுப்பார்த்தாலோ” நான் சிவப்பட்டேரிகிட்ட சொன்னேன்.

    அவர் உடனே என்னுடன் புறப்பட்டார். அவரிடம் டோர்ச் லைட் இருந்தது. நாங்க காற்றை எதிர்த்து நடந்தோம். இடைவெளி இல்லாத இருட்டில் காற்று ஆரவாரித்துச் சென்றது. புழுதி எங்களை மூடியது. பாறைகளின் வெப்பம் தணிந்திருக்கவில்லை.

    ”ஓய்”. ஒரு பாறைக்கு மேல் ஏறி நின்று சிவப்பட்டேரி கூவி விளித்தார்.

    அது இருட்டில் எங்கோ கலந்தது. மற்றொரு பாறையில் நான் ஏறி நின்றேன். நெடும்பாவின் கூரிருட்டைப் பார்த்து நான் சத்தமிட்டேன்.

    ஓய்…………….ஓய்.…………………..

    Share
  • எமிலி டிக்கின்சன் கவிதைகள் (16-18)

    எமிலி டிக்கின்சன் கவிதைகள் (16-18)

    மூலம்: எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    ஈமச் சடங்கு உறுத்துது – 16

    ஈமச் சடங்கு ஒன்று என் மூளையில் உறுத்தும்
    பாடை சுமப்போர் பாதச் சத்தம் இங்குமங்கும்
    மீண்டும்  மீண்டும் நடப்பது கேட்குது காணும்
    உணர்ச்சி பட்டென வெளிப்படும்.

    I felt a Funeral, in my Brain,
    And Mourners to and fro
    Kept treading – treading – till it seemed
    That Sense was breaking through –

    அவர்  யாவரும் அமர்ந்து கொண்ட பின்
    இரங்கல் சடங்கு  அரவம் தொடங்கும்
    மேலும்  மேலும் தொடர்வது நினைவு வரை
    மனம் எனக்கு மரத்துப் போகும் .

    And when they all were seated,
    A Service, like a Drum –
    Kept beating – beating – till I thought
    My mind was going numb –

    பிறகு அவர் பெட்டி தூக்குவது கேட்குது
    ஊடுருவிச் செல்லும் அது என் ஆத்மாவை
    பாடை சுமப்போர் தடச் சத்தம் மீளுது
    சூழ்வெளி மறைந்து போகத் தொடங்குது

    And then I heard them lift a Box
    And creak across my Soul
    With those same Boots of Lead, again,
    Then Space – began to toll,

    சொர்க்க புரி மணி அடிக்கும் போது
    கேட்க செவி தவிர எனக்கு வேறேது
    நிசப்தம், புத்தினத் தோரோடு நான்
    உயிர் பிரிந்து ஏகாந்தி யாய் நான்.

    As all the Heavens were a Bell,
    And Being, but an Ear,
    And I, and Silence, some strange Race,
    Wrecked, solitary, here –

    ஏனெனும் காரணம் புரிந்திலது எனக்கு
    கீழே வீழ்ந்தேன், கீழே படு பாதாளம்
    உலகு ஒன்றில் தடம் ஒவ்வோர்  பாய்ச்சலில்
    அறிவது முடிந்தது நிரந்தர மாகப் பிறகு

    And then a Plank in Reason, broke,
    And I dropped down, and down –
    And hit a World, at every plunge,
    And Finished knowing – then –

    **********************************

    மரணம் வருவதற்கு காத்து நில்லேன் – 17

    மரணத் துக்காக நான் காத்து நிற்காததால்
    மனங் கனிந்து எமன் வந்து நின்றான் எனக்கு.
    எங்கள் இருவர்க்கு மட்டும் ஒரு வாகனம்.
    என்றும் இறவா நிலை நோக்கிப் போகுது.

    Because I could not stop for Death –
    He kindly stopped for me –
    The Carriage held but just Ourselves –
    And Immortality.

    மெதுவாய் ஓட்டினோம்- எமனுக்கு அவசர மில்லை
    மரணத்தை தள்ளி வைத்தேன் நானும்.
    உழைப்பு, பொழுது போக்கு சேர்த்து
    எம தர்மன் மனித நேயத்துக் காக.

    We slowly drove – He knew no haste
    And I had put away
    My labor and my leisure too,
    For His Civility –

    பிள்ளைகள் கற்கும் பள்ளித் தலம் கடந்தோம்
    இடைவெளி நேரம் ,வட்டத்தில் சிறுவர்
    அறுவடை நெற்கதிர் வயலைக் கடந்தோம்
    அந்திப் பொழுதும் தாண்டிப் போனோம்.

    We passed the School, where Children strove
    At Recess – in the Ring –
    We passed the Fields of Gazing Grain –
    We passed the Setting Sun –

    இல்லை எம்மைக் கடந்தது அந்தி மாலை
    பனித்துளிக் குளிரில்  நடுங்கும் குளிர்ச்சி
    சிலந்தி வலையில் சிக்கும் என் நீள் ஆடை
    மேலங்கி, மஸ்லின் துணி மட்டும்.

    Or rather – He passed Us –
    The Dews drew quivering and Chill –
    For only Gossamer, my Gown –
    My Tippet – only Tulle –

    மேட்டில் கட்டிய ஒரு வீட்டு முன்னே
    சற்று வந்து நின்றோம்.
    வீட்டுக் கூரை சரிவரத் தெரிய வில்லை
    தரை மேல் நின்றான் வாகன  ஓட்டி.

    We paused before a House that seemed
    A Swelling of the Ground –
    The Roof was scarcely visible –
    The Cornice – in the Ground –

    அதுமுதல் ஆயிரக் கணக்கில் ஆண்டுகள் நீளும்
    ஆயினும் அது ஓர் நாளுக்கும் குறைவே
    என் முதல்  ஊகிப்பு, குதிரைத் தலைகள்
    இறவா நிலை நோக்கிப் போவது.

    Since then – ’tis Centuries – and yet
    Feels shorter than the Day
    I first surmised the Horses’ Heads
    Were toward Eternity –

    **************

    அழகின் மீது மோகம் – 18

    அழகுக்காகச் செத்தேன், ஆயினும் அது அரியது
    சமாதிக்கு ஈடிணையாய்ச் செய்து கொண்டு
    சத்தியத்துக் காகச் செத்து உடல் புதைபடும்
    பக்கம் உள்ள ஓர் அறையில்.

    I died for beauty, but was scarce
    Adjusted in the tomb,
    When one who died for truth was lain
    In an adjoining room.

    தோல்விக்கு காரணம் மெதுவாய்க் கேட்டான்
    “அழகின் மோகம்” எனப் பதில் அளித்தேன்
    சத்தியம் என் வழிநெறி. இரண்டும் ஒன்றே.
    சகோதரர் நாம் இருவரும், [அழகு, சத்தியம்]

    He questioned softly why I failed?
    “For beauty,” I replied.
    “And I for truth – the two are one;
    We brethren are,” he said.

    இரவில் சந்தித்தோம் ஓர் இனத்தோராய்
    பக்கத்து அறைகளி லிருந்தே பேசினோம்
    வாய் உதடுகள் வரை பேச்சுகள் உயர்ந்து
    மண்புழுதி மண்டி சமாதிப் பெயர்கள் மறையும்.

    And so, as kinsmen met a-night,
    We talked between the rooms,
    Until the moss had reached our lips,
    And covered up our names.

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    ஆங்கில மூலம்:  எமிலி டிக்கின்ஸன்
    தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா

    உன் செல்வீகம் கற்பிக்கும் வறுமை -14

    உன் செல்வீகம் எனக்கு வறுமை கற்பிக்கும்
    ஒரு கோடீஸ்வரி, நான் !  எனக்கு
    சிறிது சொத்து பெண்டிர் பீற்றல் போல்
    பியூனஸ் ஆரஸ்  பிரதேச விந்தை.

    நாடு மாறிப் புலம் பெயர்ந்தாய் நீ
    பெரு என்பது வேறுபட்ட நாடு.
    வறுமை யாவும் நான் மதிப்பவை
    எல்லாம்  ஆழ்ந்து நோக்கினேன்
    நல்வாழ்வுச் செல்வம் உனக்குளது.

    Stanzas One and Two

    Your Riches — taught me — Poverty.
    Myself — a Millionaire
    In little Wealths, as Girls could boast
    Till broad as Buenos Ayre —

    You drifted your Dominions —
    A Different Peru —
    And I esteemed all Poverty
    For Life’s Estate with you —

    வைரச் சுரங்கம் பற்றி சிறிது அறிவேன்
    கற்கள் பெயர் மட்டுமே  தெரியும்
    பொதுக் கற்களின் வண்ண மயங்கள்
    கிரீட வைரங் களின் அரிய காட்சி

    ராணி சந்தித்தால் நிரம்ப அறிவேன்
    ராஜாங்கப் பெரும்புகழ் அறிய வேண்டும்
    ஆயினும் அது வேறுவிதச் செல்வம்
    அதனை இழப்பின் அரசியும் ஏழையே

    Stanzas Three and Four

    Of Mines, I little know, myself —
    But just the names, of Gems —
    The Colors of the Commonest —
    And scarce of Diadems —

    So much, that did I meet the Queen —
    Her Glory I should know —
    But this, must be a different Wealth —
    To miss it — beggars so —

    உறுதி இந்திய சுக வசிப்பு அனுதினம்
    உன்னைக் கவனிப்பது அனைவரும்
    சிறு தவறின்றி, ஒரு புகாரின்றி
    செல்வீக யூத வாழ்வு எனக்குமா ?

    ஐயமின்றி அது குபேர புரி வாழ்வு
    என் ஆற்றலுக்கு எல்லை மீறியது
    சிரிப்புக் கொரு சுரங்கம் தினம் எனின்
    வைரம் ஒன்றை விடமிகச் செழிப்பு

    Stanzas Five and Six

    I’m sure ’tis India — all Day —
    To those who look on You —
    Without a stint — without a blame,
    Might I — but be the Jew —

    I’m sure it is Golconda —
    Beyond my power to deem —
    To have a smile for Mine — each Day,
    How better, than a Gem!

    தங்கச் சுரங்கம் அங்கே உளதெனத்
    தெரிந்து கொள்வது திருப்தி செய்வது.
    சரியான தருணம் நிரூபித் தாலும்
    தூரத்தை சற்று சிந்திக்க வேண்டும்

    தூரம், புதையல் சுரங்கம் ஊகிப்பாய்
    முத்து விலை மதிப்பை எண்ணிப்பார்
    நழுவிச் செல்லும் விரல் நடுவே
    பள்ளிக் கூடப் பாவை போல்.

    Stanzas Seven and Eight

    At least, it solaces to know
    That there exists — a Gold —
    Altho’ I prove it, just in time
    Its distance — to behold —

    Its far — far Treasure to surmise —
    And estimate the Pearl —
    That slipped my simple fingers through —
    While just a Girl at School.

    ****************

    பாதை தெரியவில்லை – 15

    பாதை  தெரிய வில்லை சொர்க்க புரியின்
    கதவுகள் பூட்டிக் கிடந்தன தூண்கள் சரிந்து
    பூகோளப் பாதிகள் தலைகீழாய்ப் போயின
    பிரபஞ் சத்தை தொட்டது என் கரம்.

    பின்புறம் அது நுழையும், நான் மட்டும்
    பூகோ ளத்தில்  ஒருதனிப் புள்ளி
    வட்டத்தின் சுற்றளவு விட்டு விலகி
    மணித் தண்டின் நுனிக்கு அப்பால்.

    I saw no Way—

    The Heavens were stitched—
    I felt the Columns close—
    The Earth reversed her Hemispheres—
    I touched the Universe—

    And back it slid—and I alone—
    A Speck upon a Ball—
    Went out upon Circumference—
    Beyond the Dip of Bell—

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்-8: கொடிய இரவுகள் 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    கொடிய இரவுகள் ! கொடிய இரவுகள் !
    உன்னோடு சுகிக்க இருந்தால்
    இன்ப உணர்வு இரவுகள் நமக்கு
    ஆடம்பரச் சுகம் அதுதான் !

    காற்றால்  எந்தப் பயனில்லை.
    துறைமு கத்தில் வடமிட்டு
    கட்டிய கப்பலுக்கு,
    திசைக் கருவி, வரைப் படம்
    உதவி செய்யா விடில்.

    படகு ஏடனுக்குப் போகும்
    கடல் பயணம் !
    இன்றிரவு  அதில் அடைபட்டு
    உன்னோடு  கூடல் !

    *******************

    Wild nights – Wild nights

    Wild nights – Wild nights!
    Were I with thee
    Wild nights should be
    Our luxury!

    Futile – the winds –
    To a Heart in port –
    Done with the Compass –
    Done with the Chart!

    Rowing in Eden –
    Ah – the Sea!
    Might I but moor – tonight –
    In thee!

    ************************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -9: இரவுப் பகிர்வு உன்னோடு

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நமது இரவுப் பகிர் வு தாங்குவது
    நமது காலைப் பகிர்வு அடுத்து
    நமக்கு இடைவெளி, இனிய நிரப்பு
    நமக்குப் பிரிவு, மிக மிக வெறுப்பு

    இங்கோர் தாரகை, அங்கோர் தாரகை
    அவற்றில் சில பாதை தவறி யவை.
    இங்கோர் மூடுபனி, அங்கோர் மூடுபனி.
    அதற்குப் பின் வருவது பகல்.

    **************

    Our share of night to bear—
    Our share of morning—
    Our blank in bliss to fill
    Our blank in scorning—

    Here a star, and there a star,
    Some lose their way!
    Here a mist, and there a mist,
    Afterwards—Day!

    **************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -10: நம்பிக்கை

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    “நம்பிக்கை” என்பது சிறகு முளைத்தது
    ஆத்மா வேரில் தோன்றி  எழுவது.
    இசை பாடும் ஏது சொற்கள் இன்றி !
    நிற்காது ஒரு போதும் அந்த இசை !

    மிக்க இனிப்பது புயல் வரும் போது
    புண்பட்டு புள்ளினம் தவிக்கும் போது
    நன் நம்பிக்கை  பல்லுயிர் காக்கும்.

    குளிர் நாட்டில் கேட்டுளேன் நானதை
    கொந்தளிக்கும் கடல்களில் கேட்டுளேன்
    எல்லை மீறிய நிகழ்வில் நம்பிக்கை
    எச்சிறு துண்டும் கேளாது என்னிடம்.

    *******************

    “Hope” is the thing with feathers –
    That perches in the soul –
    And sings the tune without the words –
    And never stops – at all –

    And sweetest – in the Gale – is heard –
    And sore must be the storm –
    That could abash the little Bird
    That kept so many warm –

    I’ve heard it in the chillest land –
    And on the strangest Sea –
    Yet – never – in Extremity,
    It asked a crumb – of me.

    ************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 11: வர்த்தக வாழ்வு 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    என்னைக் கொடுத்தேன் அவனுக்கு நானே
    அவனை வசீகரித்தது பண வரவுக்கு,
    அமைதி வாழ்வுக்கு அது ஓர் உடன்பாடு
    அவ்விதம் ஒப்புக் கொள்ளப் பட்டது.

    நானே ஏழைக்கு ஓர் உதாரணம்
    என் சொத்து மதிப்பு ஏமாற்றம் தருவது
    வர்த்தகன்  எதிர்பார்ப் புக்கு மாறாய்.
    காதல் மதிப்பு கண்ணை மறைப்பது.
    வர்த்தகன் குதிரை வாங்கும் வரை
    மசாலா தீவில் அது தனித்தி ருக்கும்.

    ஒருவகையில் இருவர்க்கும் பண நொடிப்பு
    சில பேர் அதிலும் ஊதியம் காண்பார்
    வாழ்வுக்கு இனிய  உடல் கொடுப்பு,
    ஒவ்வோர் இரவிலும்  கடன் கொடுப்பு
    ஒவ்வோர் பகலிலும்  பண இழப்பு.

    *********************

    I Gave Myself To Him

    I gave myself to Him
    And took Himself, for Pay,
    The solemn contract of a Life
    Was ratified, this way

    The Wealth might disappoint
    Myself a poorer prove
    Than this great Purchaser suspect,
    The Daily Own — of Love

    Depreciate the Vision
    But till the Merchant buy
    Still Fable — in the Isles of Spice
    The subtle Cargoes — lie —

    At least — ’tis Mutual — Risk —
    Some — found it — Mutual Gain —
    Sweet Debt of Life — Each Night to owe —
    Insolvent — every Noon —

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -5
    நெஞ்சே  நாம் அவனை மறப்போம்

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    நெஞ்சே ! நாமினி அவனை மறப்போம் !
    நீயும் நானும் இன்று இரவு !
    அவன் அளித்த கணப்பை நீ மற,
    நான் மறப்பேன் ஒளியை !

    மறந்த பிறகு எனக்குச் சொல் நீ
    நேரே நான்  மறக்க ஆரம்பிக் கலாம் !
    சீக்கிரம் சொல் !  நீ பின் தங்கினால்,
    மீண்டும் அவன் நினைவு வந்திடும்.

    **************

    Heart ! We Will Forget Him

    Heart! We will forget him!
    You and I—tonight!
    You may forget the warmth he gave—
    I will forget the light!

    When you have done, pray tell me
    That I may straight begin!
    Haste! lest while you’re lagging
    I remember him!

    *****************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -6
    ஓர் இதயம் முறிவதை நிறுத்து

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ஓர்  இதயம் பிளப்பதை நிறுத்த முடிந்தால்,
    நான் வாழ்ந்தது வீணாக வில்லை;
    ஒருவர்  ஏக்கத்தை குறைக்க முடிந்தால்
    அல்லது வேதனை தீர்க்க முடிந்தால்,
    அல்லது மயக்க முற்ற ஒரு குருவி
    கூட்டை அடைய உதவி செய்தால்
    என் வாழ்க்கை வீணாக வில்லை.

    *******************

    Stop one heart from breaking,

    If I can stop one heart from breaking,
    I shall not live in vain;
    If I can ease one life the aching,
    Or cool one pain,
    Or help one fainting robin
    Unto his nest again,
    I shall not live in vain.

    *************************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -7
    கனிவோடு என்னை  மதிப்பிடுவீர்

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    இதுதான் உலகுக்கு நான் எழுதும் கடிதம்
    அது ஒருபோதும் எனக்கு எழுதாது
    எனக்கு இயற்கை உரைத்த எளிய செய்தி
    கனிவு நிறைந்து மகத்துவ மானது.

    இயற்கை போதனை  கட்டுப் படுத்தும்
    நான் காண இயலாத கரங்களை.
    இனிய நாட்டாரே ! இயற்கையை நேசித்தால்
    கனிவோடு என்னை மதிப்பிடுவீர் !

    *****************

    Judge tenderly of me

    This is my letter to the world
    That never wrote to me.
    The simple news that Nature told
    With tender majesty.

    Her message is committed
    To hands  I cannot see;
    For love of her, sweet countryman,
    Judge tenderly of me.

    *******************

    Share
  • எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்

    சி. ஜெயபாரதன், கனடா

    எமிலி டிக்கின்ஸன் வாழ்க்கை [1830 -1886]

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த எமிலி டிக்கின்ஸன் அமெரிக்கக் கவிஞர்களுக்குள் ஓர் உன்னதப் படைப்பாளியாகக் கருதப் படுபவர். கல்லூரிப் படிப்பு படித்து திருமணம் பண்ணிக் கொள்ளாது தனிமையாய் வீட்டுக்குள்ளே வாழ்ந்தவர். தாயார் நோயில் கிடக்க அருகில் உறுதுணையாய் இருந்து காலம் கழித்தவர். அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கல்லூரிக்குச் சரியாகச் செல்லா விட்டாலும் சிறப்பான மாணவியாய்ப் பெயரெடுத்தவர். அவர் மனவாட்டத்தில் [Depression] வேதனைப் பட்டவர்.

    எமிலி சிறுவயது முதலே சின்னஞ்சிறு கவிதைகளை யாருக்கும் தெரியாமல் எழுதிக் கொண்டு வந்தவர். ஏராளமான எண்ணிக்கையில் அவர் எழுதிய கவிதைகள் உயிருடன் உள்ள போது சிலமட்டும் பதிவாகிப் பெரும்பான்மை வெளிவராமல் முடங்கியே கிடந்தன. அவரது முழுக் கவிதைப் படைப்புகள் 1800 எண்ணிக்கையில் செத்த பிறகே, அவரது சகோதரி கண்டுபிடித்து அச்சில் ஏற்றப்பட்டன.

    எமிலியின் கவிதைகள் அவரது ஆழ்ந்த சிந்தனைக் காவியங்களே. மிகக் கூரிய நோக்காளர். ஆழ்ந்து சிந்திப்பவர். அவரது கவிதைகளில் வரும் கற்பனை வடிவங்கள் இயற்கை, ஆத்மா, மதம், மரணம், சட்டம், சம்பிரதாயம், நேசம், பாசம்,காதல், இசை, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றில் இருந்து தோன்றியவை. பெரும்பான்மையான பாக்களில் வரும் “நான் என்பது தான்தான். அவரது கவிதைகளில் அவரே உட்கரு நாயகி. நான் என்னும் தன்னிலையில் தன்னையும் குறிப்பிடுகிறார். பிறரையும் சுட்டிக் காட்டுகிறார். தலைப்பிடாத கவிதைகளே பெரும்பாலும் எழுதி வந்தார். பாக்களின் முதல் வரியே தலைப்பாகும். சரியான சொற்கள் கிடைக்கும் வரை சொற்களை மாற்றிக் கொண்டே இருப்பார். தேன்போல் இனிக்கும் அவரது முத்துப் பாக்கள் படிக்கப் படிக்கத் திகட்டாதவை. பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் மனதில் பதிந்து விடுப்வை. எளிதில் மறக்க முடியாத கவிதைகள்.


    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -1: ஏகாந்த நிலை 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே
    உன் மார்பு மேல் தொங்கும் மாலையில் !
    சிந்திக்காது அணிந்துளாய் என்னை நீயும்
    தேவதைகள் அறியும் மற்றவை யாவும்.

    ஒளிந்துளேன் நான் என் மலருக் குள்ளே
    உலர்ந்து தேயுது அம்மலர் உன் கும்பாவில்
    உறுதியாய் நேச உணர்வு என்மீ துனக்கு
    ஏறக் குறைய ஏகாந்த நிலை எனக்கு !

    ****************

    Loneliness

    I hide myself within my flower
    That wearing on your breast,
    You, unsuspecting, wear me too—
    And angels know the rest.

    I hide myself within my flower,
    That, fading from your vase,
    You, unsuspecting, feel for me
    Almost a loneliness

    **********

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -2: யாருமில்லை நான் 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    யாரு மில்லை நான் ! யார்  நீ ?
    யாருமில் லையா நீயும் ? சரிதான்
    நாம் இருவர் எனச் சொல்லாதே !
    நாடு கடத்துவர் நம்மை, தெரிந்து கொள்.

    சிலராய் இருப்பது எப்படி அச்சம் அளிக்குது !
    தவளை போல்  வாழ்வு  பொதுவானது ?
    வாழ்நாள் முழுதும் உன்பேர் சொல்வது
    புழுதி பூசிப் புகழ்வது  போன்றது !

    ************************

    “I’m nobody! Who are you?
    Are you nobody, too?
    Then there’s a pair of us—don’t tell!
    They’d banish us, you know.

    How dreary to be somebody!
    How public, like a frog
    To tell your name the livelong day
    To an admiring bog!”

    ***************

    எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -3: வெற்றி 

    ஆங்கில மூலம் : எமிலி டிக்கின்சன்
    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    வெற்றி தேன்போல் இனிக்கும்
    தோல்வியே என்றும் அடைவோர்க்கு !
    அருஞ்சுவை தனை உணர்ந்து கொள்ள
    பெரும் புண் பட் டிருக்க வேண்டும் !

    வெற்றிக் கொடி ஏந்தும் காக்கி உடை
    வீரன் எவனும் இன்றைய தினம்
    விளக்கிச் சொல்ல இயலாது
    தெளிவாய் வெற்றி யாதென்று !

    தோற்கும் நிலையில் மடிகிறவன்
    கேளாத காதில் தெளிவாய் விழாது
    வெற்றிக்கு ஆரம்ப மெய் வருத்தம்,
    வேதனை முறிவு, மனக்கொ திப்பு.

    ******************

    Success is counted sweetest
    By those who ne’er succeed.
    To comprehend a nectar
    Requires sorest need.

    Not one of all the purple Host
    Who took the Flag today
    Can tell the definition
    So clear of victory

    As he defeated – dying –
    On whose forbidden ear
    The distant strains of triumph
    Burst agonized and clear!

    ******************

    Share
  • மாமூல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    மாமூல் (மொழிபெயர்ப்புச் சிறுகதை)

    முனைவர்.நா.தீபா சரவணன்
    உதவிப்பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

     

    சையத் ஹக்கீம் அன்சாரி சந்தைக்கு போயிருந்தார். சில பொருள்களுடன் திரும்பி வரும்போது இதுவரை கேட்கப்படாத ஒரு விசித்திரமான சத்தம் கேட்பதாக அவருக்கு  தோன்றியது. அவர் வழி ஓரத்தில் செவிமடுத்து நின்றார்.

    “என்ன இப்படி நிக்கிறீங்க?” கொய்யாப்பழ வண்டியை தள்ளிக் கொண்டு செல்கின்ற குருதாஸ் அவரிடம் கேட்டான். கொஞ்சம் பின்னால் பல பாதைகள் கூடுகின்ற இடத்தில் வைத்துதான் குருதாஸிடமிருந்து பத்து ரூபாய்க்கு கொய்யா வாங்கியிருந்தார்.

    ”எனக்கு சாகறதுக்கு நேரம் ஆச்சுனு தோணுது” அவர் மெதுவாக சொன்னார்.

    அடிக்கடி யாரோ சத்தம் விடுவது போல முழங்கிக் கொண்டு செல்கின்ற சர்வன் ரயில் வண்டியின் சப்தங்கள், டாக்ஸிகளினுடையவும் இரண்டு அடுக்கு பஸ்ஸினுடையவும் இரு சக்கர வண்டிகளினுடையவும் சத்தங்கள் வழிவாணிபக் காரர்களின் ஓசைகள் சிறுவர்களின் ஓசைகள் இவையெல்லாம் சையத் ஹக்கீம் அன்சாரியின் காதுகளிலிருந்து அகன்றது. முன்பு எப்போதும் கேட்கப்படாத ஒரு சத்தம் அசாதாரணமான விதத்தில் அவருடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தது.

    ஹௌசான்!………… அவர் சத்தமாக தனது மூத்த மகனை அழைத்தார்.

    ஹௌசான் கேட் வே ஆஃப் இந்தியாவின் எலிபன்ட் குகைகள் உள்ள வழியில் ஒரு படகில் இருந்தான். சக்தமான அலைகளில் பட்டு ஆடுகின்ற படகை கட்டுப்படுத்துகின்ற வேலைக்கிடையில் தனது உதவியாளனிடம் கூறினான்.

    ”யாரோ என்னை கூப்பிடுறாங்க..”

    அப்போது, சையத் ஹக்கீம் அன்சாரியின் இரண்டாவது மகன் இஸ்மாயில் நரிமன் பாயின்ட் வழியாக பூக்களால் அலங்கரித்த குதிரை வண்டி ஓட்டிக் கொண்டிருந்தான். பெல்ஜியத்தில் இருந்து வந்த ஒரு குடும்பம்தான் குதிரை வண்டியில்/ அலங்கரித்த தொப்பிகள் அணிந்த இரண்டு மக்களும் அவர்களுடைய பெற்றோரும். அவர்கள் நால்வரும் நகர காட்சிகளை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். குழந்தைகள் அடிக்கடி எங்கெங்கோ கை நீட்டி உற்சாகத்துடன் சத்தம் போட்டனர் அவர்களவெச்சு சவாரி செய்வது இஸ்மாயிலுக்கு அளவற்ற மகிழ்ச்சியாய் இருந்தது. அவன் அவர்கள் கேட்பதற்காக உடலை அசைத்து பாடினான்.

    அச்சி மும்பை……………… அச்சி மும்பை………………………..

    ”இஸ்மாயில்…………….. சையத் ஹக்கிம் அன்சாரி அழைத்தான்.

    பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஆச்சரியத்துடன் திரும்பினான். அவனுடைய பெயரும் இஸ்மாயில் என்பதாயிருந்தது.

    “மரணம்னா  என்னன்னு உனக்குத் தெரியுமாப்பா………”

    ”தெரியாது நான் வளர்த்த கிளி ரெண்டு நாள் முன்னாடி செத்திடுச்சு. அவன் கூறினான்.

    ”நானும் சாகப் போறேன்.” அவர் வெளிப்படுத்தினார் .

    அது இஸ்மாயிலுக்கு நம்பமுடியவில்லை.

    ”பாபா இப்போதைக்கு ஒன்றும் சாகமாட்டீங்க, பார்த்தா நோய் ஒன்றும் இல்லையே”

    ”அதனாலே இல்ல, ஒவ்வொருத்தருக்கும் இத்தனை காலம்னு இருக்கு. அது முடிஞ்சி கூடுதலா ஒரு நிமிடம் கூட அனுமதி கிடையாது. மரணத்தின் சுவை என்ன என்பதை நான் அறிந்து கொண்டு இருக்கிறேன்.”

    மரைன் டிரைவில் தாராபோரிவாலா அக்வோரியத்திற்கு  முன்பாக பெல்ஜியத்தில் இருந்து வந்த குடும்பம் இறங்கியதும் வேறு பயணிகளை எதிர்பார்க்காமல் அன்றைய வேலையை முடித்து விட்டு இஸ்மாயில் தன்னுடைய குதிரை வண்டியில் மிக வேகமாக வீட்டிற்கு திரும்பினார். அவருடைய மனதில் ஏதோ குழப்பம் நிலவியது வெள்ளைக் குதிரைகள் இரண்டும் அவனுடைய மனதை புரிந்த வண்ணம் எப்போதும் விட அதிக வேகமாக ஓடியது.

    சையத் ஹக்கீம் அன்சாரி கண்களை திறந்தார் அவர் தனது மக்களைப் பார்த்தார். இருவரும் ஒரே நேரத்தில் குனித்து நின்றனர்.

    அப்பாஜி இப்போ நல்லா இருக்கா? ஹௌசான் கேட்டான்.

    ”இது வெறும் தலைச்சுற்றல் தான். இஸ்மாயில் கூறினான்.

    ஹௌசானின் மனைவி நூர்ஜஹானும், இஸ்மாயிலின் மனைவி மும்தாஜும் மக்களை சேர்த்து பிடித்துக்கொண்டு பின்னால் நின்றனர். அப்பாஜி கண்கள் திறப்பதைப் பார்த்து கொஞ்சம் முன்னால் வந்தனர். அவர் எல்லோரையும் பார்த்தார். திறந்து வைத்த ஜன்னல் வழியாக ஒரு சிறிய வானம் தெரிந்தது மரணத்தைக் குறித்த ஒரு ஞாபகப்படுத்தலாக அவர் அதை உள்வாங்கினார். ஏதோ சொல்வதற்காக அவருடைய  நா அசைந்தது. அறைக்குள் அமைதி அதிகரித்தது. ஹௌசானும் இஸ்மாயிலும் காதுகளை கூர்மையாக்கி மிக்க கவனத்துடன் நின்றனர்.

    ”நான் செத்துப் போனா என்னை சவப்பெட்டியில் அடைத்து வைக்கக் கூடாது”……. என்று சையத் ஹக்கீம் அன்சாரி கூறினார்.

    ஹௌசானும் இஸ்மாயிலும் திடீரென உருவான பிரமிப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்தனர். மசூதியில் சித்திர வேலைப்பாடுகள் செய்த அழகான ஒரு சவப்பெட்டி இருக்கிறது. அதில் தான் பிணங்களை புதைக்க கொண்டு செல்வர்.

    ”ஒரு மஞ்சணை  உருவாக்கணும் மூங்கில் தண்டுகளால், அதில் என்னை எடுத்து படுக்கவெச்சு சிவப்புத் துணியில மூடணும். அதுக்கு மேல வெள்ளப் பூக்களை தூவி விடுங்க. நிறைய வேண்டாம்.”

    ஹௌசானும் இஸ்மாயிலும் சிறிது நேர படபடப்பை கடந்து அப்பாஜியின் ஆசையை நிறைவேற்றுவோம் என்று முடிவுக்கு தலையசைத்தனர். சையத் ஹக்கீம் அன்சாரி திருப்தி அடைந்தார்

    ”நீங்க நல்லவங்க. என்னோட எந்தவொரு ஆசையையும் நீங்க நிறைவேற்றுவீங்கனு  எனக்குத் தெரியும்.”  நிறுத்தினார்.  மீண்டும் பேசத் தொடங்கினார். ”முடியல இனிமே தா முக்கியமான ஒரு விஷயம்.”

    மக்கள் அது என்ன என அறியும் எதிர்பார்ப்போடு நின்றனர்.

    ”என்னுடைய உடலை மண்ணில் புதைக்க கூடாது, சிதை மூட்டி எரிக்க வேண்டும்.”

    பக்கத்து வீட்டுக்காரர்களான சியாம் சரணும், கஜானன் கீர்த்திகரும் நோய்வாய்ப்பட்டதை அறிந்து பேசுவதைக் கேட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தனர்.  இருவரும் திகைத்தனர் ஒரு முஸ்லிமின் உடல் எரிப்பதா? சையத் ஹக்கீம் அன்சாரிக்கு என்ன ஆச்சு!..  சிந்தனை சக்தி நஷ்டப்பட்டுருச்சா?..

    ”இதோ என்னோட ரெண்டு நண்பர்கள் இவர்களை நான் சாட்சி வைக்கிறேன். என்ன தீ மூட்டி எரிப்பீங்கன்னு நீங்க எனக்கு உறுதித் தரணும். அப்படீனாதா எனக்கு சமாதானமா சாக முடியும்” சையத் ஹக்கீம் அன்சாரி இரண்டு மகன்களையும் மாறி மாறிப் பார்த்தார்.

    தெருவின் மேற்குப் பக்கம் உள்ள மசூதியில் ஒரு வேனல் காற்று வீசி அடித்தது. அங்கே தங்கி இருப்பவர்கள் பலரும் தூசியில் இருந்து காப்பாற்றிக்கொள்ள மூக்கைப் பொத்தினர். காற்று மங்கிய சுவர்களுக்கு இடையில் சுழன்றது, சிலர் கபத்துடன் இருமினர். மேல்நிலையில் வசிக்கின்ற புறாக்கள் ஒரு விபத்தின் அறிகுறியாக முனகின. மசூதியின் கதவை அடைத்துவிட்டு மியான் அப்துல் அக்தரும், ஃபாரூக்மௌலவியும் மற்றவர்களும் தெருவில் இறங்கினர். சையத் ஹக்கீம் அன்சாரியின் வீட்டை இலக்காக வைத்து அதி வேகமாக நடந்தனர்

    ”அன்சாரி நாங்க கேள்விப்பட்டது நெஜமா? அவருடைய உடம்புக்கு நேராகக்குனிந்து நின்று ஃபாரூக்மௌலி கோபத்தோடு கேட்டார்.

    நேரம் கடந்தது.

    ”நீங்க ஏன் ஒன்னும் பேசாம இருக்கீங்க” மியான் அப்துல் அத்தர் சத்தமிட்டார்.

    ”என்னுடைய உடல் அக்னியினுடையது” சையத் ஹக்கீம் அன்சாரி கூறினார்.

    அவர் ஆச்சாரங்களுக்கு எதிரான ஒரு சடங்கை விரும்புகிறார் என்பது தெருவில் வசிக்கும் அனைவருக்கும் தெரிந்தது. அதன் உண்மையை அறிய பலரும் அவர் வீட்டிற்கு வந்தனர் எதற்காக அவர் தனது உடலை அக்னிக்குச் சமர்ப்பிக்கிறார் என சிந்தித்த போது யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. யதார்த்தமாக சில கருத்துக்கள் உயர்ந்தன. ஒரு வேலைக்கார பிராமணனை அவர் கொன்று புதைத்து விட்டார் எனவும் அந்த பாவ விமோசனத்திற்காக தனது ஆசாரங்களை எதிர்க்க பிள்ளைகளை கட்டாயப்படுத்துகிறார் என்றும் ஒரு சிலர் கூறினர். வேறு சிலர் அவர் மீது ஒரு கொலை குற்றத்தை சுமத்த விரும்பவில்லை. தக்க சூழ்நிலைக்கொப்ப அவர்கள் வேறொரு கதை உருவாக்கினர். அது இப்படி இருந்தது: சையத் ஹக்கீம் அன்சாரி தனது சிறுவயதையும், இளமைப் பருவத்தையும் காஷ்மீரில் தான் கழித்தார். அவருக்கு அன்று காஷ்மீரில் ஒரு பண்டிட் மகளுடன் மனவிருப்பம் ஏற்பட்டது. அவள் துர்மரணத்தை நேரிட்டு சிதையில் எரிந்ததன் துக்கம் தாங்காமல் காஷ்மீரை விட்டு வந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் காஷ்மீருக்கு போகவே இல்லை. இப்போது மரண நேரத்தில் அவர் அவருடைய காதலை தீவிரமாக நினைத்துப் பார்க்கிறார்.

    அது என்னமோ இருக்கட்டும் ஒரு முஸ்லிமுக்கு சேர்ந்ததல்ல சிதை.

    தெருவில் தர்பூசணி வியாபாரி நஜிமுதீன் பக்கத்து வியாபாரி குருதாசிடம்  கூறினான். மத சம்பந்தப்பட்ட காரியங்களில் நஜிமுதீன் பெரிய பண்டிட் ஒன்றுமில்லை என்றாலும் அவனுக்கு சையத் ஹக்கீம் அன்சாரியின் பிணத்தை எப்படி அடக்கம் செய்வது என்பதில் ஒரு தெளிவான கருத்து இருந்தது.

    “ஆனா அன்சாரி சாப் விரும்பறது ஒரு இந்து முறைப்படியான அடக்கத்தை”…… குருதாஸ் கூறினார்.

    ”எங்க ஆளுங்க என்ன வெறும் காசு வாங்கறவங்கனா உங்களோட நினைப்பு. நாங்க ஒரு போதும் இதுக்கு சம்மதிக்க மாட்டோம்” நஜிமுதீன் கூர்மையான குரலில் கூறினான்.

    ”சால வாயை மூடுங்க நீங்க எல்லாம் கைகட்டி பார்த்துட்டுதா இருப்பீங்க அன்சாரி சாவுக்கு நாங்க சிதை தயாரிப்போம்”. குருதாஸ் வீரத்தோடு  கூறினான்.

    “எனக்கொரு தர்பூசணி…” சின்ன இஸ்மாயில் நஜிமூதினிடம் கேட்டான்.

    அவன் அதைக் கேட்காமல் தர்பூசணி வெட்டும் கத்தியுடன் குருதாஸிற்கு நேராக குதித்தான். குருதாஸின் கையிலும் கத்தி இருந்தது. கொய்யாப்பழம் அறுப்பதற்காக பயன்படுத்தப்படும் கத்தி அவ்வளவு  பெரிதல்ல இருந்தாலும் நல்ல கூர்மையுடையதாக  இருந்தது.

    மூன்றாவது குத்து வரை இருவரின் கால்களும் உறுதியாக நின்றது. நான்காவது குத்திற்கு இருவரும் மண்ணில் சரிந்தனர். அதற்கிடையில் நஜிமுதீனின் கால்பட்டு குருதாசின் கொய்யாப் பழ வண்டி கீழே விழுந்தது. கொய்யாப்பழம் முழுவதும் நிலத்தில் சிதறியது. குருதாஸ் அவற்றுக்கு இடையில் மண்டியிட்டு அமர்ந்தான். ஒரு நிமிடத்திற்கு கொய்யாவின் மனத்தை உணர்ந்தான். அதற்குள் நஜிமுதீன் பின்னிலிருந்து அவனது கழுத்தை வெட்டினான். சின்ன இஸ்மாயில் கத்தினான். தெருவில் பலரும் சத்தமிட்டனர். சையத் ஹக்கீம் அன்சாரிக்கு  ஒன்றும் கேட்கவில்லை. அவருடைய உயிர் உடலைவிட்டு பிரிந்திருந்தது.  இனி என்ன செய்வது என்ற கேள்வியுடன் ஹௌசானும் இஸ்மாயிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, சாத்திய கதவுக்கு வெளியில் ஆரவாரம் உயர்ந்தது.

    திறங்க…………….…கதவத்  திறங்க……………….

    மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்
    Share