Search Results for: சக்தி சக்திதாசன்

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . . (301)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். சரித்திர நிகழ்வுகளின் முக்கியமான திருப்பங்கள் நிகழும்போது அதற்குச் சாட்சியாக இருப்பது, ஒரு அபூர்வமான சந்தர்ப்பம். இது மறுக்கப்பட முடியாத உண்மை. இன்று நான் உங்களுடன் மனந்திறந்து கொண்டிருக்கும் இம்மடல் எனது 301 வது மடலாகும். என் வாழ்வின் பெரும்பான்மையான காலப்பகுதியை இங்கிலாந்து எனும் இந்நாட்டினிலே கழித்து விட்டேன் என்பதுவே உண்மை. மாணவனாக இங்கு வாழ்வைத் தொடங்கிய நான் இன்று ஒரு பேரக்குழந்தையைக் கண்டு விட்ட நிலையிலே முதுமை எனும் வாயிலினுள் கால்கள் பதித்து நிற்கிறேன். இங்கிலாந்திலிருந்து எனது ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (300)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். காலவோட்டம் தமக்குள் எத்தனையோ நிகழ்வுகளைப் புதைத்துக் கொண்டு செல்கின்றன. அவற்றை வெறும் நிகழ்வுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாக மட்டும் நாமிருந்து விட முடிகிறதா? இல்லையே! புதையும் நிகழ்வுகளுக்குள் எமது வாழ்வினைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் அடங்குகிறதே ! சராசரி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிலையை நிர்ணயிக்கும் பல முடிவுகள் அவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பால் அவர்களின் பெயரால் எடுக்கப்படுகிறது. இதனால் பல சமயங்களில் விரும்பாமலே பார்வையாளர்களாக ஆக்கப்பட்டு விடுகிறோம். இதற்கு நியாயமாக ஜனநாயகம் எனும் முத்திரையும் குத்தப்படுகிறது. இது ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களைத் தாங்கி வருகிறது எந்தன் அடுத்த மடல். உள்ளத்தின் கதவுகளைத் திறந்து வெள்ளமாய் இருக்கும் எண்ணங்களின் சிலதுகள்களை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தமடைகிறேன். கடுகதி வேகத்தில் காற்றைப்போல் பறந்து செல்கிறது காலம். இந்தக் காலக் காற்றினுள் அகப்பட்ட சருகுகளாக அடித்துச் செலப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அத்தகைய சூறாவளிக்குள் சிக்கப்பட்ட நிலையிலும், வசதியான ஒரு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் ஒரு பக்க மக்களும், அன்றாடத் தேவைகளையே தீர்க்க முடியாமல் அல்லலுறும் உலகின் மற்றொரு பகுதி மக்களும் வாழ்கின்ற நிலை. இந்நிலையில் இவ்விரு வகையான மக்களின் ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (298)

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்த மடலில் உங்களோடு உளக் கருத்தை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். ஐக்கிய இராச்சியம், அதாவது இங்கிலாந்து, இன்று ஒரு முக்கியமான திருப்புமுனையில் நின்று கொண்டிருக்கிறது. எமது அடுத்த பிரதமர் யார்? எனும் கேள்வி அனைத்து மக்களின் மனங்களிலேயும் தொங்கிக் கொண்டிருந்தாலும் அதற்கான விடை, பெரிதான ஒரு புதிராக ஒன்றும் இல்லை. பொதுவாகப் பொதுத்தேர்தல் நடைபெறும் போதுதான் இந்தக் கேள்விக்குச் சரியான பதில், கொஞ்சம் புதிராக இருக்கும். இப்போது இது ஒன்றும் புதிர் இல்லையே! ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (297)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் மனம் திறப்பதில் மகிழ்வடைகிறேன். இவ்வுலகில் மனிதராகப் பிறக்கும் எவரும் எத்தகைய சூழலில் , எங்கே, எப்படி பிறக்கப் போகிறோம் என்று தாமே கணித்துக் கொண்டு பிறப்பதில்லை. எமது கட்டுப்பாடில்லாமல் எங்கோ ஓரிடத்தில் விழுகிறோம். விழுவது பச்சைவளமா? இல்லை பாலைவனமா? என்பதும் எமது கையில் இல்லை. வறுமையின் கோரப்பிடியில் சிக்கி அல்லலுறும் சமூகத்திலும், நீரின்றி வாடும் வறண்ட நாடுகளிலும், போரில் சிக்குண்டு சிதறியோடும் சமூகங்களிலும் வாழும் பலரின் நிலைகளை அன்றாடம் செய்திகளாகக் கேட்டும், ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (296)

சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே! அன்பான வணக்கங்கள். மனத்திலே எத்தனையோ தாக்கங்கள். சுற்றி அவ்வப்போது நிகழும் நிகழ்வுகள் உள்ளத்தில் தாக்கத்தை  ஏற்படுத்துகின்றன. அத்தகு தாக்கங்களின் எதிரொலிகள் ஏற்படுத்தும் உணர்வலைகள் அனைத்துமே என் வாசக உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆயிரம் எண்ணங்களை மலர்விக்கின்றன. ஆனால் இன்றைய இங்கிலாந்தின் உடனடி அரசியல் நிகழ்வுகள் கொடுக்கும் நாளாந்த மாற்றங்களின் தாக்கங்கள் அரசியல் களத்திலேயே நடமாட வைக்கின்றன. நடக்கும் அரசியல் மாற்றங்கள் எம் தனிப்பட்ட வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கம் எவ்வகையாக இருக்கப் போகிறது எனும் ஆதங்கம் ஒருபுறம், புலம்பெயர் வாழ்வினில் ...

Read More »

விடையறியா வினாக்கள்

-சக்தி சக்திதாசன் நான் இங்கிலாந்துக்குள் நுழைந்து நாற்பத்தைந்தாவது ஆண்டில் கால் பதித்திருக்கிறேன். இந்த 45 வருட காலத்தினுள் நான் கண்ட மாற்றங்கள் பல. இம்மாற்றங்களின் ஊடாக நான் பயணிக்கும்போது என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களும் பல. நாட்டினில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கத்தினால் என் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறம், இம்மாற்றங்களைச் சரியான வகையில் உள்வாங்கிக் கொள்ளாமல் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டதினால் என் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மறுபுறம். 18 வயது முடிவுற்று பத்தொன்பதாவது ஆண்டில் காலடி வைத்த நிலையில் மாணவனாக உள்நுழைந்த எனக்கும் ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (295)

-சக்தி சக்திதாசன். அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். நெடியதோர் இடைவேளை. சில காலம், சில வாரங்கள் மடலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு மீண்டும் உங்களுடன் இணைகிறேன். காலம் என்பது ஒரு புத்தகம் போன்றது அது யாருக்காகவும் காத்திருப்பதில்லை. தன் வேகத்தில் தனது புத்தகப் பக்கங்களை மூடிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. மூடப்படும் அந்தப் பக்கங்களுக்குள் எமக்குத் தெரிந்த, தெரியாத பல நிகழ்வுகளும் புதைபட்டுப் போகின்றன. ஆனல் நிகழ்ந்து விட்ட நிகழ்வுகள் ஏற்படுத்தும் அதிர்வுகள் தொடரும் அதன் பக்கங்களில் எழுதப்படும் பல அத்தியாயங்களுக்கு அடிப்படையாக அமைந்து ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (294)

அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். தேர்தல் ! ஜனநாயகக் கோட்பாடுகளின் அடித்தளம் தேர்தல் என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்தக் கருத்துக்கு வலுச்சேர்ப்பது அத்தேர்தலின் நடைமுறைப்படுத்தலே. நான் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்த போது எனக்கு வயது 18 இன்றோ 62 எனும் முதுமையின் வாசலில் நுழைந்து விட்டேன். நான் ஈழத்தில் அன்று பார்த்த தேர்தல்களுக்கும், இன்று இங்கிலாந்திலே பார்க்கும் தேர்தல்களுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. அன்றைய எனக்கு தேர்தல் என்பது ஒரு ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . (293)

சக்தி சக்திதாசன் அன்புள்ளம் கொண்டவர்களே ! அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்வடைக்கிறேன். இதோ 2019ஆம் ஆண்டு சித்திரைத் திருநாள் வந்துவிட்டது.  தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது என்று குதூகலமாக வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்பவர்கள் ஒரு புறமும், இது தமிழர்களின் புத்தாண்டேயல்ல. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளே. வேண்டுமானால் இதைச் சித்திரைத் திருநாள் என்று கொண்டாடுங்கள். ஆனால் இது தமிழர்களின் புத்தாண்டு அல்ல என்று வாதிடுவோர் ஒருபுறமாகவும் நின்று வாதாடும் ஒரு காலக் கட்டத்தில் நாம் இந்த நாளைக் கடந்து செல்கிறோம். நான் எனது பால்ய பருவத்தைப் ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (292)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே அன்பான வணக்கங்கள். இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் இந்நாள் ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் “முட்டாள்கள் தினம் அல்லது ஏப்பிரல் பூல்ஸ் டே ” என்று அழைக்கப்படும் தினம். முட்டாள்களைக் கொண்டாடுவதா? என்ன இது மடமைத்தனம் என்று கூட எண்ணத் தோன்றுகிறது அல்லவா? இதில் பெரிய ஆச்சரியமென்று ஒன்றுமில்லை ஒரு வகையில் பார்த்தால் நாம் அனைவருமே சில நேரங்களில் ,சில வேளைகளில் முட்டாள்களாக நடந்திருக்கிறோம் அல்லது முட்டாள்களாக்கப்பட்டிருக்கிறோம் இல்லையா?எம்மை யார் முட்டாள்கள் ஆக்கியதாக எண்ணுகிறார்களோ அவர்களும் எதோ ஒரு வகையில் எப்போதாவது ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (291)

அன்பினியவர்களே ! மிகவும் நீண்ட ஒரு இடைவேளைக்குப் பின்னால் உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். காலம் என்பது கண்மூடித் திறப்பதற்குள் கனவேகத்தில் ஓடி மறைகிறது . எதற்காக இந்த நீண்ட இடைவேளை ? எங்கே சக்தி சென்றிருப்பார் ? என்று உங்களில் சிலர் எண்ணியிருக்கலாம் , ஓ ! அதுகூட எனது நப்பாசையோ ? இருந்தாலும் இடைவெளிக்கு ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். பெப்பிரவரி 4ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை எனது வருடாந்த சென்னை விஜயத்திலிருந்தேன். மார்ச் 5ம் ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (290)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே! அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களிடையே மனந்திறக்கிறேன். நாளொரு மேடை பொழுதொரு வண்ணமாக இங்கிலாந்து அரசியல் மேடையில் பல நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வரசியல் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக மர்ந்திருக்கும் மக்களின் வாழ்வில் இவைகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே! நடைபெறும் நிகழ்வுகள் அதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றுப் புத்தகத்தில் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அத்தியாயமாக எழுதப்படப் போகிறது என்பதுவே உண்மை. ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

அன்பினியவர்களே ! இந்தப் புத்தம் புதிய 2019ம் வருடத்தில் உங்களுடன் கலந்துரையாட விழையும் முதலாவது மடலிது. 2018 அவசரமாக ஓடி தன்னை சரித்திரப் புத்தகத்தில் மூடப்பட்ட அத்தியாயம் ஆக்கிக் கொண்டது. 2019 புதிதாகப் பிறந்ததோர் குழந்தை போன்று எம்மிடையே தவழத் தொடங்கியுள்ளது. 2018 தன்னோடு முடிக்காமல் மூடிக் கொண்ட பல விடுகதைகளுக்கான விடைகளை இந்த 2019ல் கண்டெடுக்கும் ஆவலுடன் நாம் பலரும் மிகவும் முனைப்புடன் இயங்க ஆரம்பித்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள் எம் முன்னோர்கள். இந்த வழிதான் என்ன ? இதுவரை ...

Read More »

இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே ! அன்பான வணக்கங்கள். இங்கிலாந்தின் அரசியல் மேடையில் தினமொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் இவ்வாரத்தில் உங்களுடன் கருத்தாட விழைகிறேன். கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக பலதடவைகள் உங்களுடன் ப்றெக்ஸிட் எனும் நிகழ்வைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறேன். இந்நிகழ்வு மெதுவாக உருண்டு. உருண்டு இன்று இங்கிலாந்தின் அரசியல் சதுரங்கப்பலகையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றது. இங்கிலாந்தின் எதிர்கால சுபீட்சத்தையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கேந்திர நிலையை வந்தடைந்திருக்கின்றது. இங்கிலாந்துப் பிரதமரான தெரேசா மே அவர்களின் ரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுமோ ...

Read More »