Author Archives: பி.தமிழ்முகில்

இயற்கை

    பி.தமிழ்முகில் நீலமேகம்   இறைவனின் திறமையில் உருவான கற்பனை  ஓவியம் …….. உலகம்…. இறைவன் தன் எண்ணற்ற திறமைகளை தனது உலக ஓவியத்தில் தீட்டி வைத்துள்ளான்………. நீரோடையென……..கடலென …… மலையென…… நிலமென …….. நீரென…..காற்றென….. அந்த வண்ண ஓவியத்தில் நாமும் நடமாடும் கதாபாத்திரங்கள்…… நாம் இருக்கும் அழகான ஓவியத்தை/ புகைப்படத்தை பொக்கிஷமாய் காப்போம் அன்றோ??? காத்திடுவோம் – இறைவன் நமக்களித்த இயற்கையை……. நம் பொக்கிஷமென…… விட்டுச் செல்வோம் – நம் சந்ததிக்கு   வளமான இயற்கையை வரமாய்…….. படத்திற்கு நன்றி: http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

Read More »

முரண்

    பி.தமிழ்முகில் நீலமேகம்   ஆதவன் கூட தூக்கக் கலக்கத்தினின்று விடுபடாத இந்த கருக்கலில் எங்கோ அவசரமாய் எதையோ தேடி ஓடுகிறீர்களே….. எனதருமை மானிடர்களே… சற்று நில்லுங்கள்!!! எங்கே செல்கிறீர்கள்? உங்களது இல்லத்திற்கா? அல்லது… அலுவலகத்திற்கா?? இரவெல்லாம் கண்விழித்து பகலெல்லாம் கண்ணயரும் அதிசயம் உங்களிடம் மட்டும் தான் காண்கிறேன்… அதுவும்…. சில காலமாய்த்தான்… சுறுசுறுப்பாய் செயல்பட  பகலையும்…. இளைப்பாறித் துயிலுற இரவையும் இறைவன் காரணமின்றிப் படைத்திருக்க மாட்டான்!!! ஆனால் …..  இன்றோ….. அனைத்தும் தலைகீழாய்…. ஏனிந்த முரணான மாற்றம்???? படத்திற்கு நன்றி: http://www.prelovac.com/vladimir/beautiful-nature-pictures

Read More »

மின்வெட்டு !!!

  பி.தமிழ்முகில் நீலமேகம்   ஏர் கண்டிஷனும்  ஃபேனும்  தான் உதவாமல் போய்விட கைகொடுப்பது பனையும் தென்னையும்  தான் – விசிறிகளாய் !!!   கிரைண்டரும் மிக்சியும் ஓரமாய் படுத்துறங்க -மீண்டும் துள்ளியோடி வந்து வாசலை அலங்கரிக்குது – அம்மியும் ஆட்டுரலும் !!!   குளிர்ந்த நீருக்காக ஃப்ரிட்ஜ் அருகே காத்திருந்த காலம் மாறி கண்ணுக்கு அழகாய் கைக்கடக்கமாய் ஆரோக்கியத்துடன் – மண்பானைகள் !!!   டிவியில் லயித்து – உலகை மறந்திருந்தோர் இப்போது சுற்றியிருப்போரின் முகங்களில் சிரிப்பினைப் பார்க்கவும் பழகியிருக்கிறார்கள் !!!!   ...

Read More »

தொலைதூரக் காதல்

    பி.தமிழ் முகில் நீலமேகம்   உன் நினைவுகளில் நானும் என் நினைவுகளில் நீயும் நீங்காது நிலைத்திருக்க தூரமும் தொலைவும் தான் காதலை பிரித்திடுமா என்ன ???   அருகாமையும் அரவணைப்பும் உணர்த்தாத காதலை பிரிவும் தொலைவும் தெள்ளத் தெளிவாய் படம் பிடித்துக் காட்டிடாதோ ???   அனுதினமும் வளர்ந்திடுமே அளவிலா   காதலும் …. பிரிவதுவும் ஏற்படுத்துமே ஆழமான வலுவான அன்பின்  அஸ்திவாரம் !!!   உந்தன் அன்பின் அருமையை எனக்கும் ……எந்தன் – காதலின் வலிமையை உனக்கும் ……உணர்த்திடாதோ ??? இந்த தொலைதூரக் ...

Read More »

இனி ஒரு பிறவி வேண்டாம்…!

    பி.தமிழ் முகில் நீலமேகம்   செய்நன்றி தனை மறந்து முகத்துக்கு முன் துதியும் முதுகுக்குப் பின் மிதியடியும் மலிந்து விட்ட சமூகத்தில் – இனியும் வேண்டாம் ஒரு பிறவி !!!   பெயரளவில் பெண்ணுரிமை என்றுரைத்து விட்டு வழக்கமான கடிவாளங்களை பொன்னால் பூட்டும் உலகில் இனியும் ஒரு பிறவி – வேண்டவே வேண்டாம் !!!   உழைப்பவன் செவ்வனே உழைக்க எவனோ ஒருவன் – அட்டையென உழைப்பை உறியும் கேடு கெட்டோர் மத்தியில் இனியும் வேண்டாம் – ஐம்புலன் மூடி வாழும் ...

Read More »

ப்ரைவசி

பி.தமிழ்முகில் நீலமேகம்               ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல் காரணமாய் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரத்திலிருந்து, பென்சில்வேனியாவிலிருந்த ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்திற்கு புதிதாய் வந்திருந்தார்கள். சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து அருகிலிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஏதேனும் காலி மனைகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுகந்தனின் அலுவலகம் இருக்கும் சாலையிலேயே அவர்களுக்கு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அந்த வார இறுதியில் குடியேற முடிவு செய்து அப்பார்ட்மென்டில் ஏதேனும் ...

Read More »

சில மலர்கள் இரவில் மலர்வது ஏன்?

  பி. தமிழ்முகில் நீலமேகம் சில மலர்களில் மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் ஏற்படுகின்றது.அத்தகைய மலர்கள் இரவில் மட்டுமே மலர்கின்றன. அம்மலர்களின் வாசனை அபாரமாக இருக்கும்.மேலும், இரவில் மலரும் மலர்கள் வெண்மை நிறத்திலேயே இருக்கின்றன.இது அவற்றின் மரபணு தனிப்பண்பு ஆகும்.பகலில் மலரும் மலர்கள் பல்வேறு வண்ணங்களில் இருக்கின்றன.அதனால், வண்டுகள்,தேனீக்கள் போன்றவை அவைகளால் எளிதில் கவரப்படுகின்றன.வெண்ணிற மலர்கட்கு பகலில் வண்டுகள்,வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை குறைவு. எனவே, அவை இரவில் மலரும் தழுவலைப் (adaption) பெற்றுள்ளன. வெண்மை நிற மலர்கள் இருளில் நன்கு தெரிவதால், அவை பூச்சிகள்,வௌவால்கள் ...

Read More »

குப்பை

  தமிழ்முகில்                                        அதிகாலையில் எழுந்து, கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்து விட்டு வந்த ராமாயி, அடுப்பு மேட்டில் இருந்த முந்தின நாள் சாதத்தில், சிறிது மோர் கலந்து அவசர அவசரமாய் குடித்து விட்டு, ஒரு  கலயத்தில், தன் மகனுக்கும் எடுத்து வைத்தாள். சுவற்றோரமாய், குளிருக்கு இதமாய், போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான், அவளது பத்து வயது மகன், மணிமாறன். அவனிடம்,                   “ அப்பா, மணிமாறா, நான் வேலைக்கு கிளம்பறேன். உனக்கு கலையத்துல பழையது எடுத்து வெச்சிருக்கேன், சாப்டுட்டு, ...

Read More »

கரைசேரா ஓடங்கள்

  தமிழ்முகில்                     கண்ணின் இமையென பாதுகாத்து நின்ற தாயும் நினைவிற்கு வரவில்லை !!! உந்தன் உயர்வே எந்தன் மனக்கனவு என்றிருந்த தந்தையும் மனக்கண் முன் தோன்றவில்லை !!! உனக்கு விட்டுக் கொடுக்கவே எனது இந்த  அவதாரம் என்றுரைத்த உடன் பிறப்பும் மறந்து போய்விட்டது !!! ஏனோ ??   காதல் – கண்ணை மறைத்து விட்டது !!! வாழ்க்கை சமுத்திரம் கடக்க காதல் ஓடம்  ஒன்றே போதுமென்றெண்ணி விட…. ஓடமும் தான் ...

Read More »

துளிர்!

  தமிழ்முகில் பிரகாசம்   கையிலிருக்கும் அட்சயப்  பாத்திரத்தின் பெருமை உணராது – அலட்சியமாய்  ஒடித்தெறிந்து விட இன்றோ – பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கிறோம் !!! மரங்களை வெட்டி எறிந்தோம் – தூய்மையான சுவாசக் காற்றைத் தேடி யாசகர்களாய் அலைகிறோம் !!! பாவிகளை இரட்சிக்கும் தேவ தூதன் என – நமக்காய் மீண்டும் மண்ணில்  – புத்தம் புது துளிராய் !!! புது நம்பிக்கையுடன் ………… புது உற்சாகத்துடன் …….. தன்னலமில்லா மனத்துடன்  ஓர் புத்துயிரின் ஜனனம் !!!!  

Read More »

பாசம்

  தமிழ்முகில் நீலமேகம்.. வழக்கமாக விளையாட  வரும்போதெல்லாம், தன் நண்பர்கள்  பட்டாளத்துடனே அந்த மைதானத்திற்கு  வரும் இராசேந்திரன், அன்று  சற்று முன்னதாகவே வந்து  விட்டான். அந்த பசுஞ்சோலை கிராமத்தில், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் பொழுதைக் கழிக்கும் விளையாட்டு மைதானமாகத் திகழ்ந்தது, ஊருக்கு எல்லையாக இருந்த அந்த பொட்டல் காடு தான். இராசேந்திரன், வீட்டிலிருந்து சந்தோஷமாய் குதித்து விளையாடியபடி அந்த பொட்டல் காடு நோக்கி வந்து கொண்டிருந்தான். வழியில், அவனைக் கண்ட பக்கத்து வீட்டு சிவகாமி பாட்டி “என்னப்பா, விளையாட கிளம்பிட்டியா ? பாத்து பத்திரமா போய்ட்டு வா“ என்றவரிடம் “சரி பாட்டி“ ...

Read More »