Tag Archives: ஷைலஜா

மணமுள்ள மரபுக்கவிதைகள்!

    ஷைலஜா ஏப்ரல் 18ஆம் நாள், உலக மரபு தினமாகக் கொண்டாடப்படுகிறது! இதற்காக, பழைய நினைவுச் சின்னங்கள், புதையல்கள், பொக்கிஷங்கள் இவற்றைப் போல பெயரிலேயே மரபினைக் கொண்ட மரபுக் கவிதைகளையும் நாம் நினைத்துப் பார்க்கலாம். முன்பெல்லாம் அரங்க சீனிவாசன், திருலோக சீதாராம், சக்தி சரணன், மீ.ப.சோமு, மஹி, நா.சீ.வரதராஜன் இவர்களுடன் இங்கு குறிப்பிடத்தவறிய பலமரபுக் கவிஞர்கள் தமிழ்ப் பத்திரிகையுலகைத் தங்களின் இலக்கணம் சார்ந்த மரபுக் கவிதைகளால் பெருமைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இப்போதும் சில நேரங்களில் தீபாவளி மலர்களில் மரபுக் கவிதைகளைப் பிரசுரிக்கிறார்கள். சௌந்தரா கைலாசத்தின் ...

Read More »

வண்ணங் கொண்ட வண்ணாத்திப்பூச்சியே!

திருமதி.ஷைலஜா. வண்ணாத்திப் பூச்சிகள் பார்க்க அழகானவை என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பட்டாம்பூச்சி என்றும் இதை சொல்கிறார்கள்.வண்ணாத்துப்பூச்சியா?வண்ணாத்திப்பூச்சியா?எது சரி.’வண்ணாத்திப்பூச்சி வயசென்ன ஆச்சி’என்ற திரைப்பாடல் நினைவுக்கு வருகிறது. ‘பூப்பூவா பறந்து செல்லும் பட்டுப்பூச்சி அக்கா’  என்ற பாட்டு, ‘ஓ..பட்டர்ஃப்ளை விரித்தாய் சிறகை’  இப்படி சில பாட்டுக்களும் நினைவுக்கு வரணுமே! வண்ணாத்திப் பூச்சிகள் எப்போதும் தோட்டங்களில் சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும். அவற்றை சில இடங்களில் கூட்டம் கூட்டமாகத் தரையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம்.  அவை ஏன் அப்படி உட்காருகின்றன தெரியுமா?  தங்கள் உடலுக்குத் தேவையான உப்பினை உறிஞ்சி எடுத்துக் கொள்வதற்காகத் ...

Read More »

மௌனத்தின் அர்த்தங்கள்.

ஷைலஜா கிருஷ்ணராஜபுரம் நெருங்க நெருங்க எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்தது.  சின்ன உதறலுடன் டாய்லெட் பக்கம் நழுவினேன். ரயில் அந்த ஸ்டெஷனை விட்டுப்புறப்படுகிறவரை டாய்லட் கண்ணாடியில் வழுக்கைத் தலையை விரல்களால் வாரிக்கொண்டு, பல் வரிசையை அழகு பார்த்துக் கொண்டு , அழகு காட்டிக் கொண்டு என்னவோ செய்து கொண்டு, இருந்தேன். ‘அம்மாடா தப்பினோம்’ என்று வெளியே வந்தால்…. “ஹலோ ஸார்!” ரதனசாமி நிற்கிறார்! அசடு வழிந்தது எனக்கு. யாரிடமிருந்து தப்ப வேண்டும் என்று நினைத்தேனோ அவரிடமே மாட்டிக்கொண்டுவிட்டேன். “ஸார்! வண்டி இன்னிக்கு மூணு ...

Read More »

பறவைகளுக்கும் உணர்ச்சி உண்டா?

ஷைலஜா காக்கா!  காக்கா! கண்ணுக்கு மை கொண்டு வா! குருவி! குருவி!  கொண்டைக்குப் பூ கொண்டு வா! கிளியே! கிளியே! கிண்ணத்தில் பால் கொண்டு வா….! இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப் போய்விடும் அபாயச் சூழ்நிலையில்  இருக்கிறோம். ’நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டு விடுகிறோம்’ என்னும் பிரெஞ்சுப் பழமொழிக்கு ஏற்ப வாசலில் இருக்கும் மரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம்.  மரத்தை வளர்க்கத் தெரியாத மனங்களுக்கு பிளாஸ்டிக் தாவரங்களில் படிந்த தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.  ...

Read More »

உறவுக்குக் ‘கர’மளிக்கும் புத்தாண்டே வருக!

ஷைலஜா வரமாகி உரமாகி உறவுக்கு நற் கரமளிக்கும் புத்தாண்டே வருக! வாழ்க! தரமான வாழ்வை என்றும் மக்கள் தாராளமாய்ப் பெறத் தயக்கமின்றி தருக! சொத்தாகி சுகமாகிப் பொருளை அள்ளிச் சுற்றமெல்லாம் களிக்கச் சுவையாய் வருவாய்! கொத்தாகிக் குலையாகிப் பூக்கள் பூக்கும் கோடையிலே பூத்திடவே கர ஆண்டே வருக! வருக! இயற்கைத்தாய் சீறிடாமல் எம்மைக் காப்பாய்! இவ்வுலக உயிரினங்கள் தம்மைக் காப்பாய்! அயர்வின்றி பெருகிடவும் மனித நேயம் அருகுபோல் வேருன்றி உலகம் எங்கும் வியனுறவே வளர்ந்திடவே செய்வாய் தாயே! வேற்றுமைகள் போக்கிடவே வளங்கள் சேர்ப்பாய்! செயற்கைக்கோள் ...

Read More »

காந்தியமும் வள்ளுவமும்!

(பேராசிரியர் இல. ஜானகிராமன் எழுதியதிலிருந்து ஒரு பகுதி) வ.வே.சு. ஐயரின் நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி ஆசிரமத்தில் நடைபெற்றது. கவியோகி சுத்தானந்த பாரதியும் வவேசு ஐயரின் புதல்வர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தியும் கலந்துகொண்டார்கள். அந்த விழாவில் வ.வே.சு. ஐயரின் உடைமைகளைக் கண்காட்சியாக வைத்திருந்தார்கள். அதில் ஐயர் வைத்திருந்த துப்பாக்கி, பெரிய வெட்டரிவாள் முதலியன இருந்தன. அவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்த கவியோகி, ஒரு விஷயத்தைச் சொன்னார். மகாத்மா காந்தி, கண்ணன் காட்டிய வழியில் நடந்து வெற்றி கண்டவர். ‘எனக்கு மனக் கலக்கம் ஏற்பட்ட போதெல்லாம் நான் கீதையை நாடுவேன் ...

Read More »

வார்த்தையால் ஆன உலகம்

ஷைலஜா வார்த்தை வாளாகும், வருடும் மயிலிறகாகும். யாழையும் குழலையும் ஓரங்கட்டிவிடும் மழலையின் சொல்லாகும். இதன் வழிகள் மூன்று. கனியும்; காதலாகிக் கசியும்; கடிந்தும் மிரட்டும் என சிறுவாசல் கொண்ட விழிவழி முதல்வழி. தொலைவில் இருந்தாலும் குரல் அடையாளம் காட்டும். உணர்வுக்கு ஏற்றபடி ஒலி வடிவத்தை மாற்றித் தரும். சாமரமும் வீசும் சாட்டையாய் அடிக்கவும் செய்யும் நாவின் துணையோடு வரும் இதழ்வழி, இதன் இரண்டாம் வழி. முதலிரண்டையும் முட்டாளாக்கிவிடும் முழுமையான உணர்வுகளை முக்கியமாய் தெரிவிக்கும் தொடுகைவழி அதுவே மூன்றாம் வழி. அரிசி சிந்தினால் அள்ளிவிடலாமாம் இது ...

Read More »

தொடாமலே ஒரு தொடுகை

ஷைலஜா தோழியின் திருமணத்தில் அவள் கணவனின் நண்பனாயிருந்த நீ அறிமுகப்படுத்தியதுமே எனக்குக் கை கொடுத்திருக்கலாம் தாம்பூலப்பை கொடுக்கும் சாக்கில் தயங்கியாவது விரல் உரசி இருக்கலாம். சாப்பாட்டுப் பந்தியில் பரிமாறவந்த பாயசத்தை மீண்டும் கேட்டு கண்களை மோத விட்டிருக்கலாம். கல்யாணக் கும்பலுடன் கோவிலுக்குப் போனபோது சாமி குங்குமத்தை யாரும் பார்க்காதபோது என் நெற்றியில் இட்டிருக்கலாம். கேலிச் சீண்டல் பேச்சில் தெறித்த கோபத்தை செல்லமாய் என் கன்னத்தைக் கிள்ளியாவது தெரிவித்திருக்கலாம். முதலிரவுக் கட்டிலில் முல்லைப்பூ தூவும்போது முகப்பூவாய் அருகில் நின்றவளை அள்ளி அணைத்திருக்கலாம். இத்தனை வாய்ப்புகள் இருந்தும் ...

Read More »

வேர்களுக்கு ஒரு விழா!

ஷைலஜா ஆசிரியர் தினம் வருவதற்கு முன்பே சிறந்த ஆசிரியர்களுக்கான விருதை வழங்கிக் கௌரவித்திருக்கிறது ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ். சென்னையில் நடந்த ‘அன்புள்ள ஆசிரியர்க்கு’ என்ற இந்த நிகழ்ச்சியில் விருது வாங்கிய 14 ஆசிரியர்களில் 7 பேர் பெண்கள் என்பது இன்னொரு சிறப்பு! இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள். இவர்கள் கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்கு இணையாக 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி சதவிகிதத்தைச் சாதித்துள்ளார்கள். ஆசிரியர்களைக் கௌரவப்படுத்துவதில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவதாகச் சொன்ன ஸ்ரீகிருஷ்ணா ...

Read More »

செல்லாக் காசு

ஷைலஜா ‘நல்லது தனியாக வரும்; கெட்டது சேர்ந்தாற் போல் வரும்’ என்பது தனது சொந்த அனுபவத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறான் விட்டல். எல்லாம் ஒரிரு வருடங்களில் நடந்து முடிந்துவிட்ட துயரச் சம்பவங்கள். அப்பாவிற்குக் கண் பார்வை, நீரிழிவு நோயால் அறுபது வயதிற்குள்ளேயே பறிபோனதும், அம்மாவிற்கு அடிக்கடி நெஞ்சு வலி வந்து டாக்டரிடம் காட்டியதில் ‘இதயத்தில் அடைப்பு, ஆபரேஷன் சீக்கரம் செய்வது உத்தமம்’ என்றதும், அக்கா கணவனை இழந்து கைக் குழந்தையுடன் வீடு வந்ததும் என்று அடுக்கடுக்காய் அதிர்ச்சிகளைத் தாங்கி வரும் ...

Read More »

இன்றோ திருவாடிப்பூரம்!

ஷைலஜா இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் – குன்றாத வாழ்வான, வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து, ஆழ்வார் திருமகளா ராய்! உபதேச ரத்தின மாலையில் மணவாள மாமுனிகள் இப்படிக் கொண்டாடுகிறார் திருமால் தனது  ஒரு அவதாரத்தின் போது யாரைத் தன் தகப்பனாராக வரிக்கலாம் என யோசித்தாராம். தான் வணங்கும்படியாக உயர்ந்தவர்  யாரென்று கண்டுபிடித்துத் தசரதனைப் பிடித்தாராம். அதுமாதிரி பூமிதேவி அவதரிக்கு முன்பாக யாரைத் தன் தந்தையாக ஏற்கலாம் என யோசித்து  அதற்குச் சகல விதத்திலும் சரியானவர் பெரியாழ்வாரே எனத் ...

Read More »

உறவுகள்

ஷைலஜா “அட! நீங்… நீ… ர…. ரங்கப்ரியா தானே?’’ திகைப்புடன் ராதிகா கேட்டபோது புன்னகையுடன் தலையாட்டியவளைப் பார்த்து மேலும் சொன்னாள். “நெனச்சேன்; அந்த உதட்டு மச்சமும், சுருட்டை மயிரும் உன்னை ரங்கப்ரியாவே தான்னு சத்தியம் பண்றதுடி! வாட் எ பிளெசெண்ட் சர்ப்ரைஸ்!” பதினைந்து வருடங்கள் கழித்து தனது பழைய சிநேகிதியை நேரில் பார்த்த உற்சாகத்தில் கூவினாள் ராதிகா. “அம்மா! அம்மா!’’ தனது கால்களைக் கட்டிக்கொண்ட மகன்களைச் சேர்த்து அணைத்தபடி நின்றவளை ரங்கப்ரியாவும் ஏறிட்டாள். முப்பத்து ஐந்து வயதில், கூட பத்து வயசு மதிக்கலாம் போலிருந்த ...

Read More »

அரங்க பவன் – ஷைலஜா

நீண்ட நாளாய் ஓர் ஆசை. சொன்னால் சிரிப்பீர்கள். அதனாலேயே மனைவி, மகனிடமும் ’தெற்கு வாசல்’ வரை போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்து விட்டேன். ஏனென்றால் நீங்களெல்லாம் என் ஆசை என்னவென்று கூறிச் சிரித்துவிட்டுப் போய் விடுவீர்கள்.  ஆனால், என் மனைவி ஆனந்தியும் மகன் பரத்தும் மானம் போய்விட்ட மாதிரி கூச்சல் போடுவார்கள். “உங்கப்பாக்கு ரிடையர் ஆனதும் புத்தி கெட்டுப் போயிடுத்துடா பரத்! ஊர் சுத்திப் பாக்க வந்த இடத்தில் இவர் ஆசையைப் பாரேன்.  கர்மம், கர்மம்!’’ என்று கண்டிப்பாய் தன் ’டை’ ...

Read More »