Tag: பறவைகள்

  • சின்னான்

    சின்னான்

    என் ஜன்னலுக்கு அருகே சின்னான் (செங்குதக் கொண்டைக் குருவி), சற்றே இளைப்பாறியது. செங்குதம் என அழைப்பதற்கு ஏற்ப, அதன் வாலடி இரத்தச் சிவப்பாக இருப்பதைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 6

    அண்ணாகண்ணன் காணொலிகள் 6

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    பவழமல்லி பூத்தது

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் பவழமல்லி பூத்துள்ளது. மகிழ்ச்சி.

    வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி

    இட்லிப் பூ என அழைக்கப்படும் வெட்சிப் பூவில் வண்ணத்துப்பூச்சி தேனருந்தும் அற்புதக் காட்சி.

    பொன்முதுகு மரங்கொத்தி

    பொன்முதுகு மரங்கொத்தியை இன்று முதல் முறையாகக் கண்டேன். நம் வீட்டு வேப்பமரத்தில் சிறிது நேரம் இளைப்பாறியது.

    Loten’s Sunbird | Purple Sunbird 2

    நம் தோட்டத்தில் இன்று கண்ட ஊதா தேன்சிட்டு.

    Black Drongo

    கரிச்சான் | இரட்டைவால் குருவி | கரிக்குருவி | ஆனைச்சாத்தன்

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 4

    அண்ணாகண்ணன் காணொலிகள் 4

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் பார்வைக்கு. பாருங்கள், கருத்துகளைப் பகிருங்கள்.

    Ponvandu | பொன்வண்டு | Sternocera

    இன்று கண்டேன் ஒரு பொன்வண்டு

     

    ஒரு ஜோடி தவிட்டுக் குருவிகள்

    இந்த ஜோடி என்ன செய்கிறது என்று பாருங்கள்.

     

    இரையைக் கொத்தும் இளம் கொக்கு

    ஓர் இளம் இந்தியக் குளத்துக் கொக்கு (மடையான்), புல் மீது அமர்ந்தபடி, இரையைக் கொத்தி உண்ணுகிறது. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து என்ற குறளுக்கு இணங்க, இந்த இந்தியக் குளத்துக் கொக்கு காத்திருந்து கொத்துகிறது. அதன் கழுத்து எவ்வளவு நீளும் என்பதையும் இந்தப் பதிவில் பார்க்கலாம்.

     

    தாழைக் கோழிகளின் சண்டை

    இரண்டு ஜோடி தாழைக் கோழிகள், நம் வீட்டுப் பின்புறத்தில் உண்டு. அவற்றுக்குள் ஏதோ தகராறு. இரண்டு தாழைக் கோழிகள், பல முறைகள் அடித்துக்கொண்டன. வெவ்வேறு இடங்களில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. நடுவில் ஒரு தாழைக்கோழி தடுக்கப் போய், அதற்கும் நாலு சாத்து விழுந்தது. அந்தப் பரபரப்பான சண்டைக் காட்சியை இங்கே பாருங்கள்.

    Six birds | ஆறு பறவைகள்

    ஒரே வரிசையில் ஆறு பறவைகள் (மடையான், மைனா, உண்ணிக் கொக்கு)

     

    Evening sky at Chennai – 16

    Male Cuckoo

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் காணொலிகள் 1

    அண்ணாகண்ணன் காணொலிகள் 1

    அண்ணாகண்ணன்

    இன்றைய என் காணொலிகள், இதோ உங்கள் விழிக்கு விருந்தாக. பார்த்துக் கருத்துகளைப் பகிருங்கள்.

    வெண்தொண்டை மீன்கொத்தி

    நம் வீட்டு வேப்ப மரத்தில் வீற்றிருக்கும் மீன்கொத்தி. இடம்: தாம்பரம், சென்னை.

     

    மீன்கொத்தியும் பெண்குயிலும்

    மீன்கொத்தியும் பெண்குயிலும் நம் வீட்டு வேப்ப மரத்தில் எதிரெதிரே அமந்து காற்று வாங்கும் காட்சி.

     

    The walking Myna

    இன்று காலையில் நம் வீட்டெதிரே நடைபழகிய மைனா.

     

    Cute kitten fight on tree

    மரத்தின் மீது இரு பூனைக்குட்டிகள் போடும் செல்லச் சண்டையைப் பாருங்கள்.

     

    Cattle Egret is walking

    உண்ணிக் கொக்கு உன்னிப்பாக நடக்கிறது!

     

    மூன்று புறாக்களும் ஒரு காக்கையும்

    மூன்று புறாக்களும் ஒரு காக்கையும் இரையுண்ணும் போது…

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பறக்கும் நாரைகள்

    பறக்கும் நாரைகள்

    வரிசையாக அமர்ந்திருக்கும் மூன்று நாரைகள் (நத்தை குத்தி நாரைகள்) ஒன்றன்பின் ஒன்றாக, மேலெழுந்து உயரப் பறக்கும் காட்சி, இன்றைக்குப் பார்க்கக் கிடைத்தது.

    இதில் ஒரு நாரை, மெல்ல நடந்து, பக்கத்தில் இருந்த உண்ணிக் கொக்கைத் தன் பேரலகு திறந்து சிரித்துக்கொண்டே விரட்டிவிட்டது ஓர் அழகான நாடகம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் என்கிற செங்குதக் கொண்டைக்குருவி

    சின்னான் (செம்புழைக் கொண்டைக்குருவி; Red-vented Bulbul, Pycnonotus cafer), மரங்களில் அடையும் பறவைகளுள் ஒன்றாகும். இது கொண்டைக்குருவி, கொண்டைக்கிளாறு போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    செம்மீசைக் கொண்டைக்குருவி, செங்குதக் கொண்டைக்குருவி என இரு வகைகள் உண்டு. இவற்றுள் செங்குதக் கொண்டைக்குருவி என்று அழைக்கப்படும் சின்னானின் கொண்டை சற்றே சிறியது. இதைச் சமவெளிகளிலும் வீடுகளுக்கு அருகிலும் சிறு குன்றங்களிலும் காணலாம். இவ்விருவகைக் குருவிகளுக்கும் கொண்டை கருத்து, உடல் கபில நிறத்தில் இருக்கும்; வாலடி இரத்தச் சிவப்பாக இருக்கும். உற்சாகமான குரலில் பரபரப்புடன் இவை கூவும். செங்குதக் கொண்டைக்குருவியை நம் வீட்டருகே அடிக்கடி காண்கிறேன். இன்று காலையில் நம் வீட்டுக் கொய்யா மரத்தில் அமர்ந்த சின்னான் பாடுவதைக் கேளுங்கள்.

     

    முகப்புப் படத்துக்கும் விவரங்களுக்கும் நன்றி: விக்கிப்பீடியா

    Photo By J.M.Garg – சொந்த முயற்சி, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2994302

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • நீலவால் பஞ்சுருட்டான்

    நீலவால் பஞ்சுருட்டான்

    இன்று காலை இந்தப் பறவையைப் பார்த்தேன். கூரிய அலகுடன் தலையைத் திருப்பிக்கொண்டே இருந்தது. முதலில் மீன்கொத்தியைப் போன்று இருந்தது. பிறகுதான் தெரிந்தது, இதன் பெயர், நீலவால் பஞ்சுருட்டான். இது, ஒருவகைப் ஈப்பிடிப்பான் பறவை. குளம் குட்டை போன்றவற்றின் கரைகளில் காணப்படும். நான் பார்த்தபோது இது, மூங்கில் கழியில் அமர்ந்திருந்தது.

     

    படத்திற்கு நன்றி – By A.Savin (Wikimedia Commons · WikiPhotoSpace) – சொந்த முயற்சி, FAL, https://commons.wikimedia.org/w/index.php?curid=89642206

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share