இலக்கியம்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்- 25

என்.கணேசன் எல்லாம் ஒரு நாள் முடியும்! இது வரை படித்த பாடங்கள் எல்லாம் வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் வாழ வழி காட்டுபவை. நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் வாழக் கற்றுக் கொடுப்பவை. இந்தப் பாடங்களைப் புரிந்து கொள்வது சுலபம். ஆனால் இவற்றை வாழ்ந்து காட்டுவது சுலபமல்ல. பெரும்பாலானோரும் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறோம். சிலவற்றிலோ பற்பல முறைகள் சறுக்கி விடுகிறோம். எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்புப் பெறுவது யதார்த்த உலகில் அவ்வளவு எளிதான விஷயமல்ல என்பதை வாழ்ந்து பார்க்கும் போது தான் நமக்குப் புரிகிறது. எல்லாப் பாடங்களையும் கற்றுக் ...

Read More »

இயற்கைத் தாலாட்டு

செண்பக ஜெகதீசன்  பனியில் நனைந்தது பட்டாம்பூச்சி.. ஈரமான இறகுடன் எங்கே பறப்பது- ஏங்கித் தவித்தது.. ஈரமான இதயத்துடன் எட்டிப் பார்த்தது காலைக் கதிரவன்.. கதிர்க் கரங்களால் தடவிட காய்ந்து போனது ஈரம்.. பாய்ந்து போனது பட்டாம்பூச்சி…!   ஓ, இதுதான் இயற்கைத் தாலாட்டோ…!   படத்திற்கு நன்றி: http://www.saratoga.com/horse-racing-blog/2009/08/mares-musings-butterflies-racehorses-and-chinese-typhoons.html

Read More »

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (11)

தி.சுபாஷிணி கற்றுக் கறவை கணங்கள்பல கறந்து குற்றமொன் றில்லாத கோவலர்தம் பூங்கொடியே! இடைமுடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமும் இனிதாய் ஏற்று ஆயர்க்கொடி ஆகினாயே! இன்றுன் பாதை நின்று நின்மனதிற்கு இனியனைப் பாடுகின்றோம்! எழுவாய்நீ நாச்சியாரே!   படத்திற்கு நன்றி : http://muruganarul.blogspot.com/2011/08/velpotri.html

Read More »

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்–பகுதி 13

அண்ணாமலை சுகுமாரன்   நல்லதொரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, எத்தனை வேண்டிய நண்பரோ, அல்லது மகளோ, மனைவியோ எதிரில் வந்து எத்தனைக் கூவிழைத்தும், காதுகளிரண்டும் திறந்தே இருக்கும் போதும் காதில் விழுவதில்லை. எத்தனையோ முறை கண்கள் இரண்டும் திறந்திருக்கும் போதிலும், ஆழ்ந்த ஒரு சிந்தனையில் தீவிரமாக இருக்கும் போது எதிரில் வந்து நிற்கும் எவரும் கண்ணில் தெரிவதில்லை.  புலன்களுக்கும் மனதிற்கும் தொடர்பில்லாது, புலன்கள் வேலை செய்வதில்லை, மனம் செயல் படவோ ஆன்மாவின் ஒளி அதன் மேல் படவேண்டியிருக்கிறது. உயிர் உடலை விட்டு நீங்கும் போது மனமோ, புலன்களோ வேலை ...

Read More »

விலைக்கு அல்ல

ஜெ. ராஜ்குமார்  பத்தினிய மணக்க பணம் ஏன் கேக்கற? உத்தமியே இல்லாத பொண்ணு கிட்ட பணம் ஏன் கொடுக்கற? ஓர் இரவோடு இல்லை வாழ்க்கை அதையும் தாண்டி இதயம் பார்த்து இணைவது வாழ்க்கை   உன் உறவோடு வருவாளே உன் சுமையெல்லாம் ஏற்பாளே உனக்காகக் கிடப்பாளே… துளிர் நெஞ்சம் அவள்தான் – துள்ளிக் குதித்தோடுவாள் உன்னோடு பள்ளியறை வாசலில் இருந்து – உன் வாழ்வு இறுதி வரைக்கும் – குறையேதும் இல்லாமல் பார்த்துக் கொள்வாள்…! உன் குழந்தையெல்லாம் – அவள் குறைகூறாது பெற்றுக் கொள்வாள் ...

Read More »

பாத யாத்திரை விரதம்

பெருவை பார்த்தசாரதி  ‘டேய் சூரி என்னடா இன்னும் வெங்கியக் (வெங்கட்) காணும்.’  ‘அவன் எப்போதுமே இப்படித்தான் கடசீ நேரத்துலே வந்து கழுத்தறுப்பான்’.  ‘ஷார்ப்பா ட்ரெய்ன் வந்துரும். டிக்கெட்டு வேறே அவங்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்குது’  ‘ஜரா(ஜெராமன்) ஓடிப்போய் ஏறு, அவன் வந்துட்டான் மூடி டைப் வெங்கி. போன வாட்டியும் இதேமாறி ஓடுற வண்டியிலதான் ஏறினான். எந்த நேரத்தில எத செய்வான்னு யாருக்கும் புரியாது’  ‘ட்ரெய்ன விட்டு இறங்கினதும், ஆறு மணிக்கு சதுரகிரி மல ஏற ஆரம்பிச்சா இரண்டு மணிக்கு மேலே போயிடலாமா?’  ‘ஏண்டா வெங்கி, ஆரம்பத்துலயே ...

Read More »

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (10)

தி. சுபாஷிணி நோற்ற நோன்பின் பயனாய் இருக்கின்றாய்!நாற்றத் துழாய்முடி நாராயணன் நல்கும்நன்மையில் நானிலம் தன்னை மறந்தாயோ!நல்கிய கும்பகர்ண நித்திரை நீங்காயோ!நந்தகோபன் நர்த்தனன் நாமம் பலவும்நவின்றே நிற்கின்றோம்! எழுவாய் நாச்சியாரே!       படத்திற்கு நன்றி : http://www.ibiblio.org/ramanuja/thiruppavai/  

Read More »

கிறிஸ்மஸ் வந்தது

ஜி. ஆனி ஜோஸ்பின் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இதைப் போன்ற ஒரு குளிர் காலத்தில் , விண்ணில் இருந்து தேவ தூதர்கள் இந்த மண்ணிற்கு வந்து கிறிஸ்து பிறந்திருக்கிறார் என்ற நற் செய்தியை இந்த உலகிற்கு அறிவித்தனர். இந்த நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் ஆடு மேய்க்கும் சாதாரணமேய்ப்பர்கள். யார் இந்த இயேசு கிறிஸ்து? ராஜாதி ராஜாவாகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து அண்ட சராசரத்தையும் படைத்த தேவனின் குமாரனாவர். தேவன் இந்த உலகத்தைப் படைக்கையில் அவருடன் இருந்த தேவகுமாரன் நம் கர்த்தராகிய இயேசு ...

Read More »

ஆப்பிள் கேக் – கிறிஸ்மஸ் ஸ்பெஷல்!

உமா சண்முகம் தேவையான பொருட்கள் மைதா மாவு -150 கிராம் வெண்ணெய் -120 கிராம் சர்க்கரை -150கிராம் பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி முட்டை -3 வெண்ணிலா எஸன்ஸ் -சில துளிகள் செய்முறை 1.வெண்ணெயும் சர்க்கரையும் நன்றாக குழைத்துக் கொள்ளவும். 2.மைதா மாவு பேக்கிங் பவுடரை இருமுறை சலிக்கவும். 3. முட்டையை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு வெண்ணெயும் சர்கரையும் குழைத்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி அடித்துக் கொண்டே இருக்கவும். எஸன்ஸ் சில துளி விட்டுக் கொள்ளவும்.சலித்த மைதா மாவை கலவையில் சேர்த்து ...

Read More »

நாச்சியார் திருப்பள்ளியெழுச்சி (9)

தி.சுபாஷிணி தூமணி மாடத்து துயில்கொண் டிருப்பவளே!தூயோமாய் வந்துன் வாசற்கடை நிற்கின்றோம்!துள்ளி ஓடும் வெள்ளை மேகங்கள்!எள்ளாது எங்கள்நிலை எடுத்து ரைப்பீர்காள்!எண்ணம் செயலனைத்தும் அண்ணலுக் கேயெனசரணாகதி எய்திய அம்மையே! ஆண்டாளே!தள்ளாது தாழ்திறக்க எழுவாய் நாச்சியாரே!           படத்திற்கு நன்றி : http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=azhvar_sujatha_andal

Read More »

கிறித்துப் பிறப்பு விழா!

பேரா. பெஞ்சமின் லெபோ வெள்ளம்! கள்ளமில்லா மக்களின் உள்ளங்களில் மகிழ்ச்சி வெள்ளம்! வீடு தோறும் வந்து நிறையும் இன்ப வெள்ளம்! ஊர் தோறும் ஒளி வெள்ளம்! உலகம் எங்கும் உவகை வெள்ளம்! இத்தனை வெள்ளப் பெருக்குக்கும் காரண ஊற்று – அவர் பிறப்பு! அவர்? ‘ஒருமொழி வைத்து’ உலகாண்ட பெரு நிலப் பேரரசர்களும் மன்னாதி மன்னர் யாவரும் மண்ணோடு மண்ணாகிப் போனதை ஊர் அறியும் ; உலகு அறியும்! பார் அறியும் ; வரலாறும் அறியும்! – ஆனால், ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பின்னும் ...

Read More »

கிறிஸ்துமஸ் பரிசு!

ஆல்பர்ட் பெர்னாண்டோ அந்தச் சாக்கடை முடைநாற்றத்தில் இவர்கள் எப்படிக் குடித்தனம் நடத்துகிறார்களோ? வானமே கூரை! பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவர்தான் ஒரே சுவர்; நான்கு பக்கச் சுவரெல்லாம் இந்தக் குடித்தனத்துக்கு கிடையாது. அந்தச் சுவரில் எப்படியோ போட்ட கள்ளத்தனமான துளையில் ஒரு குச்சியைச் செருகி பழைய கந்தல் சாக்கை ஒட்டுப்போட்டு தைத்து முன் பக்கம் நடப்பட்ட இரண்டு குச்சிகளில் இணைத்துக் கட்டியிருப்பதுதான் அவர்களுக்குரிய இடம் என்பதைத் தெரிவிக்கும் அடையாளம்! இப்போது ஓரளவுக்கு உங்களுக்கு இது யாருக்குச் சொந்தமான குடித்தனம் என்று யூகித்திருப்பீர்கள். பகல் முழுக்க ...

Read More »

நத்தார் வாழ்த்துக்கள்

சக்தி சக்திதாசன்  தேவபாலகன் பிறந்தநாள் தேவன் யேசுவின் பெருநாள் அன்பு வழியின் திருநாள் அகிலம் மகிழும் நன்னாள் முள்ளில் கீரீடம் அணிந்தே முழுமுதற் பொருளை உணர்த்தியவன் சிலுவையில் ஆணியைத் தாங்கியே சிந்தையில் நல்வழி புகுத்தியவன் மூன்று முதுபெரும் அறிஞர் முழுதாய் அவன் பிறப்பறிந்தனர் மாட்டுத் தொழுவமதில் யேசுபிரான் மாதா மடியில் தவழ்ந்தவன் கருணையின் பிறப்பிடம் அறிந்தே கவியரசர் யேசுகாவியம் படைத்திட்டார் இனித்திடும் வகையில் வாழ்க்கையை இயக்கிட இயேசு அருளினன் எதையும் தாங்கிடும் இதயம் இருந்தால் என்றும் உண்மையாய் வாழ்ந்திடலாம் இதையும் சொன்னவர் கர்த்தரே இதயம் ...

Read More »

இறை பிறப்பின் இனிய பிறந்தநாள்

ஜோசப் குரியன் இறை பிறப்பின் இனிய பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பெருவிழா இதோ நெருங்கி விட்டது, ஊர் எங்கும் விழாக்கோலம், வீடுகளில் அலங்கரிக்கப்பட்ட குடில்கள், வண்ண, வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், எங்கும், மகிழ்ச்சி, எதிலும் மகிழ்ச்சி, புதிய ஆடைகள், இனிப்புகள், சுவையான உணவு வகைகள், எல்லாம் பட்டியல் போட்டுத் தயாராக இருக்கின்றன,  கிறிஸ்துவ மக்களின் மிக முக்கியப் பண்டிகை நாளான இதை, அனைவரும் மிக மகிழ்ச்சியோடு எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.  கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவிற்கு வருவது சாண்டா கிளாஸ் எனப்படும் கிறிஸ்துமஸ் ...

Read More »

வார ராசி பலன்: 26.12.2011-01.01.2012 வரை

பிரபல சோதிடர் காயத்ரி பாலசுப்பிரமணியன் மேஷம்: புதன் 8-ல். சஞ்சலங்களை விலக்கி, துணிவுடன் செயலாற்றுவீர்கள். குரு ராசியில் இருந்தாலும், நன்மை செய்யும் வீடுகளைப் பார்ப்பதால், சுப காரியங்கள் விறு விறுப்புடன் நடைபெறும். மாணவர்கள் ஆசிரியர்கள் காட்டும் ஆதரவைத் தக்க விதத்தில் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் வளமாக இருக்கும். வெளி இடங்களில் வேலை செய்பவர்கள் வாகனங்களுக்குரிய பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம். கலைஞர்கள் தேவையற்ற பரபரப்பிற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் சிந்தனைகள் சிதறாமலிருப்பதோடு திறமையும் பிறருக்கு புலப்படும்.இந்த வாரம் பத்திரிக்கைச் செய்திகளால் நிம்மதி குறைய வாய்ப்பிருப்பதால், பொது வாழ்வில் ...

Read More »