இலக்கியம்

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (17)

பவள சங்கரி கொட்டும் பனியின் வெட வெடக்கும் குளிரும், ஆளையே அசத்தும் பனிப் புயற் காற்றும் எல்லாம் ஓய்ந்து சுகமான வசந்த காலம் ஆரம்பமாகி விட்டதை உணர்த்தும் பசுமையான புல் வெளிகளில் அழகிய புள்ளினங்களின் சுகமான ராகங்கள்! புதிய மலர்கள் புத்துணர்வுடன் துளிர்க்கும் அழகு! வ்சந்தம் மலர்ந்ததை பறைசாற்றும் டேஃபோடில் மற்றும் அரோரா மலர்களின் அணி வகுப்பு. வசந்த காலப் பறவைகளின் இன்ப நாதம். இயற்கையின் இந்த இன்பத்தை அனுபவிக்கத் தயாராகும் மக்கள்,  உலகிலேயே தாங்கள்தான் மிக மகிழ்ச்சியான மனிதர்கள், சொர்க்க லோகத்தில் வாழ்பவர்கள் ...

Read More »

அன்புடன் ஒரு மடல்

அமைதிச் சாரல்   உனதும் எனதுமாய் பிரிந்து நின்ற நம் எண்ணங்கள், நமதானபோது பிரிவென்னும் சுனாமி புரட்டிப்போட்டது நம்மை.. ஓருயிராயிருந்த ஈருடலிலொன்று.. விட்டுச்சென்ற வெறுங்கூட்டில், சடசடத்தடங்கும் எண்ணப்பறவைகளின் சிறகுகள் வருடிக்கொடுக்கின்றன குருதியொழுகும் நினைவுத்தழும்புகளை.. வண்ணமிகு எனதுலகின் அத்துணை ஜன்னல்களிலும், இருட்டின் வாசம் வீச விட்டுவிட்டு,..   உன்னில் நானடக்கமென்பதை சொல்லாமல் சொல்கிறதடா நம்பெயர் என்று, இன்னொரு கத்தியை செருகிச்செல்கிறாய் காயத்துக்கு மருந்தாக.. நாளை வரை காத்திருக்க நானொன்றும் ராமனல்ல; வந்துவிடு சீக்கிரம்… படத்திற்கு நன்றி

Read More »

இசையத் தூண்டுகிறது

மதுமிதா   இசையத் தூண்டுகிறது இசையின் நுட்பத்துடன் உன்னை இணையும் உத்வேகமளித்து இசையை எழுப்பிய வண்ணம் இலைகளின் இடையே இசைந்து இசைத்துச் செல்லும் காற்று சந்தித்திருக்கக் கூடாது உன்னை அல்லது ’செம்மணி வளையல்’ வாசித்திருக்கக்கூடாது   படத்திற்கு நன்றி.

Read More »

நிர்வாண நேனோ செகண்ட்ஸ்… – 6

ரிஷி ரவீந்திரன்   ஐஐடி. கெளஹாத்தி. பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினர்கள். சோடா புட்டிக் கண்ணாடிகளில் மொசைக் தலை விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்கள். கெளஹாத்தி ஐஐடியின் இயக்குனர் பேரா.கவுதம் பருவா சந்தன நிற ஜிப்பாவினுள் ஐக்கியமாகி நீண்ட துண்டு ஒன்றினைத் தன் முழங்காலினைத் தொடும்படித் தொங்க விட்டிருந்தார். அரங்கம் இருட்டாக்கப்பட்டு மேடையின் மீது ஒளிக் குவிப்பான் விளக்குகளை ஒளிர விட்டு ப்ரஜக்ட்டர் ஓட விடப்பட்டது. புரஜக்டரில் பட்டம் வாங்கும் மாணவர்களின்  பெயரினையும் துறையினையும் ஓட விட்டனர். ஒவ்வொரு மாணவனாய் பட்டம் பெற்று ...

Read More »

மேலங்கி

ஸ்ரீஜா வெங்கடேஷ் ஒரு ஆரவாரமற்ற அழகிய கிராமத்தின் அரசு மருத்துவமனை. தூய வெண்மையான மேலங்கியில் தேவதை போல் நின்றிருந்தார் மருத்துவர் மாலதி. சிக்கலான கேஸ்களை எல்லாம் குணப்படுத்திவிடும் கைராசிக்காரி என்ற பெயர் பெற்றிருந்தார் அவர். வெள்ளைக் கோட்டில் கம்பீரமாக இருந்த அவரை ஒரு குடும்பம் சூழ்ந்து கொண்டு “அம்மா நீங்க தான் தாயீ எங்க குல தெய்வம். எல்லா டாக்டருங்களும் கைவிட்ட என் புள்ளய பத்து காசு செலவில்லாமே காப்பாத்திக் கொடுத்துட்டீங்க அம்மா. உங்களுக்கு நாங்க என்ன கைம்மாறு செய்வோம் தாயீ” என்று உணர்ச்சி ...

Read More »

எம் உறவுகள்…

அருண் காந்தி லேசான காற்றுக்கே நீள் கிளைகள் முறிகிறது கனமான மழைநேரம் அடிவேரே சாய்கிறது-இருந்தும் லேசான தூறலிலே சிறு அரும்புகளாய் துளிர்விட்டு பின் மெலிதான வெயிலினிலே மீண்டும் கிளைவிடும் அந்த முருங்கை மரமாய்-எம்முடன் எம் உறவுகள்…     படத்திற்கு நன்றி

Read More »

அந்தக் கட்டைவிரல்!

துரை.ந.உ குருதட்சணை என்றபெயரால் குரூரமாய்க் குறிவைத்து வெட்டி எறியப்படுகிறது கட்டைவிரல் ஒன்று …….. கற்றுத்தர மறுத்த குருவின் தேவையை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் திளைக்கிறார் விரலை வெட்டிக் கொடுத்தவர்… தானே கற்றறிந்த மாணவனின் கலையை வேரறுத்த களிப்பில் மிதக்கிறார் விரலைக் கேட்டுப் பெற்றவர்… குருதட்சணை கொடுப்பதற்கென்று… அந்தத் துரோணரின் தலைக்குக் குறிவைத்துக் காத்திருக்கிறேன்….. ஏகலைவனை குருவாகக் கொண்டு வித்தை பயின்று கொண்டிருக்கும் நான்……..!

Read More »

காலம் மாறிப் போச்சு

திவாகர் என்ன சொல்லி எப்படிப் புரிய வைத்தால் இவளுக்குப் புரியவைக்கமுடியும் என்பது புரியாமல் முழிக்கிறேன்.. யார் மூலமாவது இவளுக்கு விளக்கிச்  சொல்லமுடியுமா என்றால்.. யார் மூலம் சொல்வது.. அப்படியே யாராவது போய் சொன்னாலும், சொன்னவர்களை வெகு எளிதாக தன் வழிக்குக் கொண்டுவந்து விடும் சாமர்த்தியம் உள்ளவள் மாதுரி. இத்தனை புத்திசாலி இப்படி ஒரு முடிவு எடுப்பாளா.. யானைக்கும் அடி சறுக்கும்  என்பார்களே.. அது இதுதானோ.. இருக்கலாம். இல்லாவிட்டால் இப்படியே ஒரு வாரகாலமாக சொல்லிக் கொண்டே இருப்பாளா.. ‘நீங்க எல்லாரும் சேர்ந்து இப்ப பாத்திருக்கற சம்பந்தம் ...

Read More »

பறவைகளுக்கும் உணர்ச்சி உண்டா?

ஷைலஜா காக்கா!  காக்கா! கண்ணுக்கு மை கொண்டு வா! குருவி! குருவி!  கொண்டைக்குப் பூ கொண்டு வா! கிளியே! கிளியே! கிண்ணத்தில் பால் கொண்டு வா….! இப்படியெல்லாம் பாட்டுப்பாடி பறவைகளை அழைத்த காலமெல்லாம் கனவாகிப் போய்விடும் அபாயச் சூழ்நிலையில்  இருக்கிறோம். ’நாம் பெரும்பாலும அழகானவற்றை ஏற்றுக்கொண்டு மிகவும் உபயோகமானவற்றை  கைவிட்டு விடுகிறோம்’ என்னும் பிரெஞ்சுப் பழமொழிக்கு ஏற்ப வாசலில் இருக்கும் மரங்களை வெட்டிவிட்டு  வரவேற்பறையில் ப்ளாஸ்டிக் செடிகளை கொண்டு வைக்கிறோம்.  மரத்தை வளர்க்கத் தெரியாத மனங்களுக்கு பிளாஸ்டிக் தாவரங்களில் படிந்த தூசியை துடைக்கத் தெரிந்திருக்கிறது.  ...

Read More »

விறைப்பு!

கார்த்திக்.எல். காட்டன்தான் அவளின் விருப்பம் அவள் சொற்களும் விறைப்பானவைதான் – புடவையைப் போல … புடவையின் ஓரங்கள் முகத்தில் அறைந்திருந்தும் வலித்ததில்லை – இன்று அவள் சொற்கள் வலித்தது போல ..       படத்திற்கு நன்றி  

Read More »

வெண்ணிலவில் ஒரு கருமுகில்!(16)

பவள சங்கரி திருநாவுக்கரசு   சென்னையின் காலை நேரம் மிகச் சுறுசுறுப்பான அவசர நேரம்…. இடைவெளியே இல்லாமல் செவ்வெறும்பின் வரிசை போல வாகனங்களின் அணிவகுப்பு. அதிலும் லாவகமாக வளைந்து நெளிந்து உட் புகுந்து வெளிவரும் மூன்று சக்கர வாகனம்.(ஆட்டோ) ஆக மக்கள் அனைவரும் ஏதோ கோட்டையைப் பிடிக்கப் போகும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்! இன்றாவது சரியான நேரத்தில் அலுவலகம் சென்று சேர வேண்டுமே என்ற கவலையுடனான பரபரப்புடன் தலையில் தலைக்கவசத்தின் பாரமும் கசகசப்பும் சேர்ந்து கொள்ள எரிச்சலுடன் இரு சக்கர வாகன ஓட்டிகள்! பள்ளிக் ...

Read More »

மரணத்தின் வண்ணம்!

ஐயப்பன் கிருஷ்ணன் கருவண்டின் கண்ணொத்த கருஇருளை வழித்து மனதில் பூசிக் கொண்டாயிற்று இனியவள் வரலாம்… கரும்பூச்சில் இனி தெரியாது அவள் முகம்… மெல்லத் தின்று கொண்டிருக்கிறது கருநீலம் என்னை. செந்தீப் பிழம்புகளும் பின்பு என்னை விழுங்கும் நாளையும் அவள் வரலாம் வெண்சாம்பல் தனைப் பார்க்க மனதோடு வெந்து சாம்பலாக   படத்திற்கு நன்றி

Read More »

இப்படியும் சில ஆண்கள்…

ரேவதி நரசிம்ஹன் அன்புள்ள வல்லமை ஆசிரியர் அவர்களுக்கு, சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்று என்னை மிகவும் பாதித்தது. அதை உங்களுக்கு எழுதி அனுப்புகிறேன். ஏற்புடையதாக இருந்தால் பிரசுரிக்கவும் , என்ற கோரிக்கையோடு வந்த அனுபவக் கடிதம் இது.  சில ஆண்களின் போக்கு பற்றிய அறச் சீற்றம் அந்தக் கடிதத்தில் தொனித்தது. அதில் இருந்த பிழைகளை நீக்கி , சிறிது சுவை சேர்த்து இதோ பிரசுரிக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்னால் நாங்கள் (வாசகர் ரேவதி நரசிம்மனும் , அவர் கணவரும்)  ,  எங்கள் மகனோடு ஸ்விட்சர்லாந்தின் ...

Read More »

சுங்கூத்தாங்குழல்

ஓம் வெ.சுப்பிரமணியன்   சுங்கூத்தாங்குழல் என்று நச்சுக்குழல் பற்றி கீழ்க்காணும் பாடலில் காணலாம். புலவர் ஒருவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக அவருக்கு பரிசில் ஏதும் கிடைக்கவில்லையெனில் அவர் மனம் அடையும் கொதிப்பினை சுட்டுமுகத்தான் இப்பாடல் அமைந்துள்ளது. காடுபோன்று காட்சியளிக்கின்ற கதலிவாழைத்தோட்டங்களில் தளிர்விட்டு நிற்கும் பசுங்குருத்துக்கள் சுழன்றுகுழல்போல் தோற்றமளிப்பதைக் கண்டு, அவை நச்சுக்குழலாகவிருக்குமோ?(சுங்கூத்தாங்குழல்) என்று அச்சம் கொண்டு, அழகிய சொற்களைப் பேசும் கிளிகள் தன் கூட்டினை விட்டு வெளியே செல்லாமல் உள்ளேயே தங்கியுள்ளன அந்த பூமிக்கு அதிபதியான சோழ சிங்கமே! திடமான மதம்பொழி யானைகள் உகைத்த தேவனே!கேள்! ...

Read More »

ஜன் லோக் பால் – வரைவு மசோதா – அரசு ஆடும் கண்ணாமூச்சி!

கேப்டன் கணேஷ் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கியது, அவரை அமைச்சர்கள் குறைத்து எடை போட்டு எள்ளி நகையாடியது, போராட்டத்தின் வேகத்தையும், மக்களிடத்தில் எழுந்த ஆதரவையும் கண்டு அரசு பணிந்தது, இவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே! லோக் பால் மசோதா சட்டமாக்கப்பட்டால், ‘லோக் பால்’ என்ற அமைப்பு உருவாக்கப்படும். இது ‘இந்திய தேர்தல் ஆணையம்’ போல தன்னிச்சையாக செயல் படும் அமைப்பாகத் திகழும்.  இதன் முக்கிய பணியாவது, ஆட்சி மற்றும் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகள் பற்றிய புகார்களை விசாரித்து, ...

Read More »